#மாங்கல்யகயிறு பராமரிப்பில் கவனிக்க வேண்டியவைகள்.!!🌿 🌹*#தாலி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips

May be an image of 1 person, henna and wedding



🌹 🌿 #
பெண்கள் அணிந்துள்ள மங்கல கயிறாக இருக்கும் இந்த மஞ்சள் கயிறு எப்போதும் சேதமில்லாமல், அழுக்குகள் இல்லாமல், கருப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மஞ்சள் கயிற்றில் தினமும் மஞ்சள் தடவ சொல்வதும் இதனால் தான். மங்களத்தின் அடையாளமாக இருக்கும் இந்த மஞ்சள் கயிற்றை எந்த அளவிற்கு பராமரித்து வருகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

🌹 🌿 கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டு இருந்தால் அதில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அழுக்குகள் நிறைந்துள்ள மஞ்சள் கயிற்றை அணிந்திருக்கும் பெண்களிடம் செல்வம் நிலைப்பதில்லை. அழுக்காக இருக்கும் கயிற்றை அடிக்கடி நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தினமும் மஞ்சள் தடவி வந்தால் அதன் நிறம் மங்காமல் பாதுகாக்கப்படும். மேலும் மஞ்சள் கயிறு சேதம் அடைவதற்கு முன்பே அதை மாற்றி விட வேண்டும். எனவே நீண்ட நாட்களுக்கு ஒரே கயிற்றை பயன்படுத்த வேண்டாம்.
Changing the Thaali Kayiru (Yellow Thread) The thali's significance begins  at a wedding and continues till the end of your life. At the wedding, your  groom ties a yellow thread which will
🌹 🌿 மாங்கல்யத்தில் பழுது ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி உங்கள் மாங்கல்யத்தில் விரிசல் அல்லது பழுது ஏற்பட்டால் நீங்களாகவே சென்று அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுடைய குல வழக்கப்படி உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கலந்தாலோசித்து என்ன செய்வது? என்று முடிவு எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலிப் பெண்களை கடைக்கு கூட்டி சென்று புதிய மாங்கல்யத்தை அவர்களுடைய கைகளால் வாங்க வேண்டும். மாங்கல்ய பழுது உள்ள பெண்கள் தனியாக சென்று புதிய மாங்கல்யத்தை வாங்கக் கூடாது.
மஞ்சள் தாலி கயறு கட்டுவதன் அவசியம் தெரியுமா ?
🌹 🌿 தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது இது போல புதிய மாங்கல்யத்தை மாற்றிக் கொள்பவர்கள் அதை முறையாக மாற்றிக் கொள்வது நல்லது. எப்பொழுதும் தாலிக்கயிறு மாற்றும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும். நின்று கொண்டோ அல்லது வேறு திசையில் நின்றோ தாலிக் கயிற்றை மாற்றக் கூடாது. இதனால் கணவனுக்கோ அல்லது அப்பெண்ணுக்கு தீர்க்காயுள் என்பது குறையும்.
தாலி அணியும் முறை | Thali saradu palangal in Tamil
🌹 🌿 திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் மாங்கல்யத்தை மாற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு பின்பு, சூரியன் மறைவதற்கு முன்பு தாலிக்கயிறை மாற்றி விட வேண்டும். சூரியன் மறைந்த பிறகு மாலை நேரத்தில் மாற்றக்கூடாது அது போல ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் கண்டிப்பாக தாலி கயிறு மற்றும் மாங்கல்யத்தை மாற்றக்கூடாது. புதிய மாங்கல்யத்தை அணிபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு நடைபாதையில் அமராமல் ஓரமாக ஓரிடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மூத்த சுமங்கலிப் பெண்களின் கைகளால் உங்களுடைய மாங்கல்யத்தை மாற்றி கொள்ள வேண்டும்.
When to change Thali Kayiru : தாலி கயிற்றை எந்தெந்த கிழமைகளில் மாற்ற  வேண்டும்? சிறந்த நேரம் எது? | On Which Days Should The Mangala Sutra Rope  Be Changed What Is The Best Time |
🌹 🌿 மாங்கல்யத்தை அவர்கள் கோர்த்து கொடுக்க உங்களுடைய கணவன் அதை போட்டு விடலாம். ஒருபோதும் நீங்களாகவே புதிய மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ளக் கூடாது. மாங்கல்ய சரடு அல்லது மஞ்சள் கயிற்றில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தொங்க விடக்கூடாது. சிலர் ஊக்கு, சாவி போன்ற பொருட்களை மாட்டி வைப்பது உண்டு. இது மிகவும் தவறான செயலாகும். இதை ஒருபோதும் செய்யாதீர்கள். வெள்ளிக்கிழமையில் தினமும் மாங்கல்யத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பழகுங்கள். இவ்வாறு தாலியை பராமரித்தால் அப்பெண்ணும், அப்பெண்ணின் கணவனின் ஆயுளும் தீர்க ஆயுள் பெறும் என்பது ஐதீகம்.
தாலி அணியும் முறை | Thali kayiru palangal in Tamil
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

ஆடிமாசத்துலஏன்நல்லகாரியங்கள்செய்யக்கூடாது?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:17 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and temple

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்று பலரும் நம்புகிறார்கள். ஆடி மாதம் நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த மாதம் கிடையாது என்பதற்கான காரணங்களும் இருக்கின்றன. 

 ஆடி மாதம் என்ன செய்யலாம்...? என்ன செய்யக்கூடாது...?

ஆடி மதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்கிற அளவிற்கு விசேஷமான மாதத்தை ஏன், நல்ல காரியங்கள் செய்யக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்?உண்மையில் ஆடி மாதம் பிரமாதமான மாதம்.

ஆதியில், ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்து தான் பல சுபநிகழ்ச்சிகளை நம்முடைய முன்னோர்கள் நடத்தி வந்தார்கள். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைத்து வந்தார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதம் பிறந்த கதை சுவாரஸ்யமானது. 

ஆகஸ்டு 3 "ஆடிப்பெருக்கு" - தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் எது? | Aadi Perukku  2024!
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர். சிவபெருமானை பிரிந்து தேவி பார்வதி தவம் செய்யும் சூழ்நிலை ஒரு முறை ஏற்பட்டது. இதை அறிந்த ஆடி எனும் தேவகுலமங்கை பாம்பினுடைய உருவத்தை எடுத்து யாரும் அறியாத வண்ணம் கயிலையில் நுழைகிறாள். 

 

பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் செல்கிறாள். இவள் சிவபெருமானின் அருகில் சென்ற நேரத்தில் ஈசன் ஒரு கசப்பான சுவையை உணர்கிறார். தன் அருகில் வந்தவள் பார்வதி அல்ல என்பதை தெரிந்து கொண்ட ஈசன், தன்னுடைய சூலாயுதத்தை எடுத்து ஆடியை அழிக்க எத்தனித்தார். 

புதிய தொழில் தொடங்க உகந்த ஆடி 18.நாள்.! | Aadi 18 Naal
சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடைய செய்தது. அந்த தேவமங்கையும், சிவனை வணங்கி, 'ஒரு நிமிடமாவது தங்களுடைய அன்பான பார்வை என்மீது பட வேண்டும் எனும் நோக்கத்துடன் இப்படி நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும்' என கூறினாள். 

சிவபெருமான் அதற்கு என் தேவி இல்லாத நேரத்தில் நீ அவளை போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே நீ பூவுலகில் கசப்புடைய மரமாக பிறப்பாயாக என்றார். அதற்கு அவள் இதற்கு என்ன விமோசனம் என சிவபெருமானிடம் கேட்க, ' நீ கவலை கொள்ள வேண்டாம். நீயே கசப்பான மரமாகி போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்கு கிட்டும். சக்தியை வழிபடுவது போல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன்னுடைய பெயராலேயே ஒரு மாதமும் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த நேரத்தில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதை செய்வாய்' என்று அருளினார்.
ஆடி மாதமும் ஆலய விழாக்களும்! | Aadi month and temple festivals!
இது புராண கதையாக இருந்தாலும், ஆடி மாதத்திற்கும் வேப்பமரத்திற்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்தது தானே?பொதுவாக ஆடி மாதத்தின் ஆரம்பத்தில், பருவ நிலை மாறும். ஈக்களில் ஆரம்பித்து பல்வேறு பூச்சிகளும், கிருமிகளை வெளியில் வரத்துவங்குகிற பருவ நிலையாகவும் இருக்கிறது. இதற்கான கிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் வேப்பிலையை இந்த பருவத்தில் பயன்படுத்துகிறோம்.

குளிர் காலத்தின் துவக்கமாகவும் ஆடி மாதம் இருப்பதால் தான் உடலின் வெப்ப நிலையை சமநிலைக்குக் கொண்டு வருவதற்காக ஆடி மாதத்தில் கேழ்வரகு கூழ் ஊற்றி, அம்மனுக்குப் படைத்து குடிக்கிறோம். அற்புதமான இந்து மதத்தில் இறை நம்பிக்கையோடு, ஆரோக்கியத்தையும் கலந்து வைத்ததால் தான் இன்று வரையில் அதைப் பின்பற்றி வருகிறோம்.

பின் ஏன், ஆடி மாதத்தில் புது மணத் தம்பதியரைப் பிரித்து வைக்கிறார்கள்?...

ஆடி மாத சிறப்புகள் - 30 | aadi month amman month 30 worship tips
இதற்கும் காரணத்தைச் சொல்லி தான் நமது முன்னோர்கள் செய்து வந்தார்கள். ஆடியில் தம்பதியர் சேர்ந்தால், வெயில் கொளுத்தும் சித்திரையில் குழந்தை பிறக்கும். மருத்துவ வசதிகள் அற்ற அந்த காலத்தில், சித்திரையில் பிரசவ வலியை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான் ஆடியில் புது மணத் தம்பதியரைப் பிரித்து வைக்கிறார்கள். அதனால் ஆடி மாதம் நல்ல மாதம் தான்.
அனைவரும் *ஆடி மாதத்தில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை,* எவை எவை என்று  தெரிந்து கொள்ளுங்கள்..... ஆடி மாத வழிபாடு : ஆடி மாதம் இறை ...
நமது ஆரோக்கியத்தை காக்கும் மாதமாகவும் ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதத்தில் ஆதிசக்தியின் அம்சமாக இருக்கும் வேப்பிலைக் கொளுந்தை வாரம் ஒரு முறையாவது குழந்தைகளுக்கும் கொடுத்து, கூழ் பருகி ஆரோக்கியத்தையும் காத்து வாருங்கள்.