பலாக்காய்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:27 PM | Best Blogger Tips
பலாக்காய்.

பலாக்காயைக் கூட்டாகவும், தேங்காயை சேர்த்து சொதியாகவும், காரமிட்டு பொரியலாகவும் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம். உணவு செரிமாணம் ஆகாமல் பசியைக் கெடுக்கும்.

இதனை உண்பதால் மந்தம், செரியா மந்தம், அக்கினி மந்தம், பசியின்மை, ருசியின்மை, அஜீரணம், வாதம், மகாவாதம், பக்கவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், பிடிப்பு, பாதவலி, இடுப்புவலி, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, வாதக்கடுப்பு, வாதக்குடைச்சல், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல், அசதி, உளைச்சல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், மந்தாரகாசம், மூக்கடைப்பு, ஜலதோஷம் இவைகளை உண்டாக்கும். ஸ்கலிதம், துரித ஸ்கலிதம், சொப்பன ஸ்கலிதம், நீர் போலவும் மோர் போலவும் விந்து நீர்த்துப்போதல் இவை நீங்கும். சுக்கில பலமும் தாதுவிருத்தியும் உண்டாகும்.

’’உண்ணின் மிகுமந்த முறுதியாம் வாதநோ
யண்ணி யிளைப்பிரைப்புமண்டுங்காண் - வண்ணப்
பலாக்காய்க்கு விந்துவுமாம் பாரிலுவமை
சொலாக்காம வாரிதியே சொல்’’

- பதார்த்த குணபாடம், பாடல் எண் - 737.

Thanks FB சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
 
"உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்."

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips
"உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்."

-சுவாமி விவேகானந்தர்.

மன உறுதியின் உச்சத்தை தொட்டவர்களில் இவரும் ஒருவர். இவரது வாழ்க்கையில் நடந்த அற்புதச் சம்பவங்களில் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்..

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

"சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips

இலவங்கப்பட்டை

உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்ததொரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை ஆகும். ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பினை விரைவாக செரிக்கச் செய்கிறது.

இஞ்சி

இஞ்சியானது இரத்தத்தினை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது.

ஏலக்காய்

ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.

மஞ்சள்

மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

அகாய் பெர்ரி (Acai Berry)

பிரேசில் நாட்டில் விளையும் ஒருவகை கருமை வண்ண பழம் தான் இது. பனை வகையைச் சேர்ந்தது. இதன் ஜூஸ் அல்லது இப்பழத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் பொடிக்கு உடல் எடையைக் குறைக்கும் வல்லமை உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கின்றன. உடலுக்கு சக்தியை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இப்பழத்திற்கு உண்டு.

நெட்டில் இலை (Nettle leaf)

இது ஒருவகை கண்டங்கத்திரி செடியின் இலை போன்ற இலையைக் கொண்டது. இவ்விலையில் உடலுக்கு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்தத்தை சுத்திகரித்து கொழுப்புக்களை எரிக்க உதவுகின்றது

குவாரனா (Guarana)

இது பிரேசில் நாட்டில் காணப்படும் காப்ஃபைன் நிறைந்த ஒரு ஆற்றல் தரும் பழமாகும். இது சிறுநீரை பிரிக்கும் சக்தி நிறைந்தது. எடை குறைப்பில் மிக உதவுகிறது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மன அழுத்தத்தினாலும், வெறுப்பினாலும் அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது.

வரமிளகாய் (Cayenne pepper)

இதில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டினை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.

சீரகம்

ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டினைத் தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது

ஜின்செங் (Ginseng)

வட அமெரிக்கா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளில் விளையும் ஒரு தாவரம் தான் இது. இந்த ஜின்செங் உடலின் ஆற்றல் நிலைகளை தூண்டுவதற்கும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

கருப்பு மிளகு

நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.

டான்டேலியன் (Dandelions)

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை மலர் தான் டான்டேலியன். இதற்கு நமது உடலை சுத்தப்படுத்தும் திறன் மற்றும் ஜீரண வேகத்தை மட்டுப்படுத்தும் திறன் உண்டு. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் இருக்கச் செய்யும் திறன் உண்டு. நிறைய சத்துக்கள் மிகுந்தது. குறிப்பாக உடல் எடை குறைய, இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆளி விதை (Flax seeds)

ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.

கொத்தவரங்காய் (Guar gum)

கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.

கார்சினியா (Garcinia)

இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது.

கடுகு

உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.

தேங்காய் எண்ணெய்

உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

சோம்பு

உணவு செரிப்பதற்கு இது சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

சைலியம் (Psyllium)

இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும். அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும்.

செம்பருத்தி

உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது தான் இம்மலர்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

IP Address என்றால் என்ன ?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:40 AM | Best Blogger Tips
IP Address என்றால் என்ன?
**********************
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது. 

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது. இதனை ஆங்கிலத்தில் Uniqueness எனப்படுகிறது. இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முக வரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.

இது ஒரு தற்காலிக மான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும்.அதே வேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும். ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதி களும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொ ரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்க லாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்க ளைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவா க்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்.

Via FB மைலாஞ்சி ( Mylanchi )