🍑 *வெறுமையாகிப் போனது வாழ்க்கை என்பதுதான் நிதர்சனமான உண்மை..!*....
🌻என்னதான் ஊரடங்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டாலும்,
🌻நாம் ஒவ்வொருவரும், மற்றவரிடமிருந்து அன்னியப்படுத்தப் பட்டுவிட்டோம் என்பதே உண்மை..!
🌻நண்பர்களோடு குலவும் அந்த சுதந்திரம், இனிவரும் காலங்களில் தொடருமா, என்பதும் கேள்விக்குறியே..!
🌻உறவுகளின் சுபநிகழ்வு கொண்டாட்டங்கள் இனி முன்போல் சாத்தியமா என்பதும் ஐயமே..!
🌻ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருந்தவர்களின் பொருளாதார நிலையினைவிட, மன அழுத்தம் மிக பாரம்.
🌻என்றாவது ஒருநாள், வீட்டிலேயே அமர்ந்து, நினைத்ததையெல்லாம் திருப்தியாக சாப்பிட முடிகிறதா ?, என அன்றொருநாள் அலுத்துக் கொண்டிருந்த நாம்,
🌻இன்று வீட்டிலேயே இருந்தும், உணவின் பக்கம் மனம் செலுத்த இயலவில்லை என்பதும் நிதர்சனம்.
🌻நெருங்கிய உறவுகளின் உயிர் இழப்புகள் தந்த அழுத்தம் நீங்குவதற்குள்,
🌻அடுத்தடுத்து என ஆயிரம் அதிர்ச்சிகள் வரிசைகட்டி காத்திருக்கின்றன, எதிர்காலம் பற்றிய எண்ணத்தில்.
🌻பள்ளிக்குச் செல்லாமலே தேர்ச்சியடையும் மாணவர்கள் முகத்தில், மகிழ்ச்சியினை தேடவேண்டித்தான் உள்ளது.
🌻வீட்டிற்குள், வார்த்தைகள் குறைந்துபோய், அலைபேசிகள் ஆக்கிரமித்துக் கொண்டன.
🌻முகம் பார்த்து பேசுவதைக் கூட, முடிந்தவரை தவிர்த்து விடுகிறோம் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும்.
🌻 *நான்கு சுவர்களுக்குள் நாற்பதுவித சிந்தனைகள்.*
🌻உண்பதும், உறங்குவதும் மட்டுமே வாழ்க்கை என்றாகி விடாது.
🌻தினம் ஒரு போராட்டத்தினை, பிரச்சினைகளின் வடிவில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது,
🌻உடனிருந்த அந்த தெம்பும், உற்சாகமும், இன்று எது பிரச்சினை என்பதை யோசிப்பதிலேயே காணாமல் போய்விட்டன.
🌻வீசும்போதுதான் காற்று அழகு.
கொட்டும்போதுதான் அருவி அழகு.
🌻பயணமோ, பணியோ, தேவையோ என ஏதாவது ஒன்றின் பொருட்டு இயங்கிக் கொண்டிருக்கும் வரைதான், மனித வாழ்க்கை அழகு.
🌻ஒரு பெருந்தொற்று நோயால் முடக்கப் பட்டிருக்கிறோம், நாளை எப்படியும் நகர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்.
🌻முதல் அலையில் முடிந்தவரை சமாளித்தோம்.
🌻இரண்டாம் அலையில், இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சந்தித்து விட்டோம்.
🌻மூன்றாம் அலையில் முழுமையாக முடங்கிப் போகாமல் இருப்பது, நமது கையில்தான் உள்ளது.
🌻தளர்வுகள்தான் அறிவிக்கப் பட்டுள்ளதே தவிர, நோயாளிகளின் எண்ணிக்கைதான் குறைந்துள்ளதே தவிர, நோயின் தீவிரம் அல்ல.
🌻கவனத்தோடு இருக்கச் சொல்வது, நாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.
🌻நாம் படைக்கப்பட்டதன் காரணத்தினை, நமக்கான கடமைகளை, முழுமையாக முடிக்கவும்தான்.
🌻வெறுமையான, விரக்தியான பார்வையே, வாழ்வில் நிரந்தரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்..!
🌻அவரவர் மனம் அறியும்,
அழுத்தத்தினையும், வெறுமையினையும்..!
🌻வாய்விட்டு சிரித்தது கடைசியாய் எப்போது என்றொரு கேள்விக்கான பதிலை மட்டும் தேடுங்கள், போதும்..!
நன்றி இணையம்