உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 PM | Best Blogger Tips
உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர்.
இத்தகைய உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும். மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது தான்.
ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
வைட்டமின்
வைட்டமின் சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது

புரோட்டீன்

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் டி

உயரமாவதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது. ஆகவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும். எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கால்சியம்

எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

கனிமச்சத்து

கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் (புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு - செப்டம்பர் 26, 1893)

மணக்கால் அய்யம்பேட்டை | 2:19 PM | Best Blogger Tips

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
(புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு - செப்டம்பர் 26, 1893)
================================

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று
முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.

ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.

ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.
இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.

மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர் தான்.

எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.

தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கை இருந்தே தீரும்.

தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.

அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார்.

புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!
— 

அவரையின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips
அவரையின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்.

தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.

இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.

2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.

3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.


<<<<நலமுடன் வாழ>>>>

இன்று அவரையின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்.

தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.

இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.

2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.

3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.


via Page இன்று ஒரு தகவல். Today A Message.

இளமையின் ரகசியத்திற்கு பங்கு அளிக்கும் வைட்டமின் ஈ !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:57 PM | Best Blogger Tips


இளமையின் ரகசியத்திற்கு பங்கு அளிக்கும் வைட்டமின் ஈ !!!!

என்றும் இளமையோடு இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை.எனினும், குறைந்தபட்சம் விரைவில் உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம்.அவ்வகையில் எளிமையான சில உணவுகளை வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வாறு முதுமையை தள்ளிப்போடலாம் என்பதை காண்போம்.

பாதாம்:

பாதாம் பருப்பில் முதுமையை தடுக்கும் வைட்டமின் “ஈ” அதிக அளவில் அடங்கியுள்ளது.ஆரோக்கியமான மேனி,தலைமுடி மற்றும் நகங்களை அளிப்பதில் பாதாமின் பங்களிப்பு அபாரமானது என்கிறார்கள் டயட்டீசியன்களும்,அழகு கலை நிபுணர்களும்.பாதாமில் உள்ள வைட்டமின் “ஈ”, சூரியனின் புற ஊதா கதிர்கள்,காற்று மாசு போன்றவற்றால் நோய் எதிர்ப்பு அணுக்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.நாளொன்றுக்கு 12 பாதாம் பருப்புகளை ஒருவர் உண்ணலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அக்ரூட் பருப்பு

வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் “ஈ” சத்து நிறைந்துள்ளது.நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் அது உங்களது மேனியை மிளிர வைக்கும்.

வெள்ளரிக்காய்:

பாதாம், அக்ரூட் பருப்புகளெல்லாம் நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்து வராது என்று நினைப்பவர்கள் சல்லிசான விலையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.நீர் சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் நமது மேனியை பட்டுபோல் மென்மையாகவும்,மினு மினுப்பாகவும் வைத்துக்கொள்ள அபார பங்களிப்பை செய்கிறது.

வெண்ணெய்

உடல் முதுமை அடைவதை தடுக்கும் உணவு வகைகளில் வெண்ணெயும் ஒன்று.சோர்வை போக்கி, தோல் வறண்டு போவதை தடுத்து,மேனியை பளபளக்க வைக்கிறது.

கற்றாழை:

கற்றாழையில் பல வகை உண்டென்றாலும், வீடுகளில் வளர்க்கப்படும் சோத்து கற்றாழை ஜூஸை தினமும் அருந்தி வந்தால், என்றும் இளமையாக தோற்றமளிப்பது சர்வ நிச்சயம்.வைட்டமின் ஈ,சி மற்றும் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன.முதுமையை தடுக்கும் இந்த சோத்துக்கற்றாழையின் மடலில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது.சற்று கூடுதலான கசப்பு சுவை கொண்ட இந்த மடலை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், 35 வயது பெண்ணை கூட,”எக்ஸ்கியூஸ் மீ… நீங்க எந்த காலேஜ்ல் படிக்கிறீங்க?” என்று கேட்பார்கள்.இளமை தோற்றத்தை கொடுப்பது மட்டுமல்ல, உடல் பருமனை தடுக்கும் விதமாக கொழுப்பை கரைத்து, இருதயத்தையும் பாதுகாக்கிறது.மடலை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், இதனை சுமார் 30 மி.லி. அளவுக்கு ஜூஸ் எடுத்து, அதனுடன் 100 மி.லி. தண்ணீரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்திவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

எள்:

மளிகை கடைகளில் மிக சாதாரணமாக கிடைக்கும் இந்த எள்ளை பலவிதமாக உணவில் சேர்த்துக்கொள்வார்கள்.இதிலும் வைட்டமின் “ஈ” சத்துக்கள் நிறைந்துள்ளதால், மேற்கூறிய பலன்களெல்லாம் இதிலும் அடங்கியுள்ளது.

பெர்ரி:

பெர்ரி பழங்களில் உடலில் செல்களை புதுப்பிக்கும் ஆண்டியாக்ஸிடண்ட் அதிக அளவில் உள்ளது.நாளொன்றுக்கு ஒருவர் ஒன்று அல்லது இரண்டு கப் செர்ரி பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

பப்பாளி :

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

கிரீன் டீ:

கிரீன் டீயின் நன்மை குறித்து நாம் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டோம்.இதிலும் ஆண்டியாக்ஸிடண்ட் மட்டுமல்லாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பது வரை பல அற்புதங்கள் அடங்கியுள்ளது.

தண்ணீர்:

நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது சருமம் வறண்டு போகாமல் தடுக்கும்.
மேற்கண்ட உணவு பட்டியல் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவை என்பதால்,கொஞ்சம் நேரம் ஒதுக்கி இவற்றை உண்டு வந்தால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்காது!

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips
எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை !!

நம் நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கைக்கீரையும் ஒன்றாகும். முருங்கையை நம் வீட்டு மருத்துவர் என்றே சொல்லலாம். முருங்கைக் கீரையை ஏழைகளின் டானிக் என்கின்றனர்.எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரு
ம்

புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
இழைப்பண்டம் - 0.9%

கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் - 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி