இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
நன்றி
வணக்கம்
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005
சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.
“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்.
நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.
அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்.
“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்.
பல ஆண்டுகள் கழிந்தன.
மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்.
“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்.
அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்.
கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்.
அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.
அதுவும் வெறும் சாதாரணத் திருடர்களிடம்
வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்.
“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்.
"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது.
இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.
அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.
மேலும், “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்.
ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.
அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்.
இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட, அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது.
இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”
( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.
நன்றி
வணக்கம்
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005
🌺 தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா?
தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜாராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். இங்கு வாராகி அன்னை தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். வாழைப்பழம் படைக்கலாம். மாலை நேரத்தில் வாராகி அம்மனுக்கு கிழக்கு வகைகளை படைத்து வழிபடு சிறப்பானது. சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் வாராகி பீடமாக போற்றப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் வரம் தரும் வாராகி அம்மனை பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன். திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும் கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத்தடைகள் விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.
காசி நகரத்தில் வாராகி அன்னைக்கு மிகப்பெரிய கோவில் உள்ளது. இங்குள்ள வாராகியை நேரடியாக தரிசிக்க முடியாது துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும்.
திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும்.
வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர
செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம்.
கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம்.
குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம்.
வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
அன்பான அன்னை வாராகி
சப்த மாதர்களில் வாராகி அம்மன் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவள். வாராகி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வணங்கினால் கேட்ட வரங்களை கொடுப்பவள். வாராகி அம்மன் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
அஷ்ட வாராகி
மகா வாராகி, ஆதி வாராகி, ஸ்வப்னவராகி, லகு வாராகி, உன்மத்த வாராகி, சிம்ஹாருடா வாராகி, மகிஷாருடா வாராகி, அச்வாருடா வாராகி என எட்டு வாராகிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு கோயிலையும் உள்ளடக்கிய அஷ்டவராகி கோயில் சாலாமேட்டில் அமைந்துள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாக கருதப்படுகிறது. இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
இழந்த செல்வம் திரும்ப வரும்
வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே வராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை பெறலாம்
வேண்டிய வரம் கிடைக்கும்
ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி வழிபாட்டின் போது பஞ்சமி திதியில் வாராகி தேவியை வழிபடலாம். மாத பெளர்ணமி, அமாவாசை மிகவும் மிகவும் சிறப்பானது. வாராகி மாலை படித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு அகலும். இரவு 10 அல்லது 11 மணியளவில் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும் வாராகியை மனம் உருகி வேண்டினால் கேட்பவை அனைத்தும் கொடுக்கும் தெய்வமாக நின்று துணை நிற்கும்
வெற்றி தரும் நாயகி
வராகி அம்மன் வீரநாரி, மகாசேனா, பஞ்சமி என பல பெயர்களை கொண்ட இவள் துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெற்றியை மட்டுமே ஈட்டியவள். இந்த அன்னைக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை தரக்ககூடியவள்.
வராகி காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மத்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
நன்றி இணையம்
🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
19 டிசம்பர், 1928, நள் இரவு,, லாகூர்.. அந்த பங்களாவின் திட்டி வாசல் போன்ற ரகசிய கதவு , சங்கேத மொழியில் தட்டப் படுகிறது.. ...
கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில் குழந்தையுடன்.. வந்த நால்வரையும் பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது. ,
வந்தவர்கள் எல்லோரும், இளைஞர்கள் HSRA (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
உள்ளே அழைத்து உணவு பறிமாறுகிறாள்.. . தாழ்ந்த குரலில் பேசிய படி.
என்ன பிரச்சினை? அவர்களை இன்றைய தேதியில் லாகூரில் 500 போலீசார் வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்... ,
காரணம்? இரண்டு நாட்கள் முன் தான் இந்த நால்வரும் லாகூரின் டெபுட்டி போலீஸ் சூப்பிரன்டென்டன்ட் John P Saunders மற்றும் ஒரு தலைமை கான்ஸடேபிளை சுட்டுத் தள்ளி கொன்று விட்டு.. தப்பியவர்கள்... . .
( அவர்கள் குறி வைத்தது என்னமோ பஞ்சாப் சிங்கம் லாலா லஜ்பத் ராய் அவர்களின் வீர மரணத்திற்குக்கு காரணமான போலீஸ் சூப்பிரன்டென்டன்ட் "ஜேம்ஸ் A. ஸ்காட்டுக்கு" குறி தப்பியது, "Mistaken identity, அதனால் ஜான் Saunders" )
நால்வருக்கும். லாகூர் இப்போது HOT POT.. ... இங்கிருந்து தப்பியே , ஆக வேண்டும்...
இருக்கும் ஒரே எஸ்கேப் ரூட் விடியற்க் காலை கிளம்பும் "லாகூர் -via "லக்னோ / கான்பூர் டிரைன்" தான், "
திட்டம் தயார்.. இளைஞர்களில் ஒருவரான" பகத் சிங் "தன் தாடி மீசை எடுத்து விட்டு ஒரு பணக்கார பிரபு வேஷத்திலும் , மற்றொரு வரான ராஜ்குரு ..அவருடைய வேலைக்காரன் போலவும்... ,
போலீசை ஏமாற்ற.. அவர்களால் மரியாதையாக துர்கா Bhabhi . என அழைக்கப்பட்ட இளம் பெண் (துர்காவதி தேவி) பகத் சிங்கின் மனைவி, போல் கை குழந்தை சச்சின் வோரா உடனும்....
மற்ற இளைஞர்கள் சந்திரசேகர ஆசாத், ராஜ் குரு தங்கள் சஹா வான சுக் தேவின் தாய், மற்றும் தங்கையை காசிக்கு புனித யாத்திரை அழைத்தப் போகும் சன்யாசி வேஷத்தில்.... .
கான்பூருக்கு .போய்.. . அங்கிருந்து பகத் சிங் போலி தம்பதி, குழுவினர் கல்கட்டாவிற்கு... ஆசாத், குழுவினர் காசிக்கு ரயில் மாறி நழுவி விட வேண்டும்
இதற்க்கு தேவையான,மாறு வேட உடைகள் போதுமான (5000 ரூபாய் ) , பணம... தேவையானால் பயன் படுத்த துப்பாக்கிகள் (துர்கா Bhabhi க்கு உட்பட ) .. எல்லாம் துர்கா Bhabhi தயாராக வைத்திருந்தார் .....
ஏன் கல்கட்டாவிற்க்கு,? அங்குதான் துற்கா. Bhabhi யின் 26 வயது, கணவர் "பகவதி சரண் ஓரா" ,BA, செல்வந்தர், HSRA இயக்கத்தின் முக்கிய ரகசிய நபர், , இயக்கத்தின் மீட்டிங்கில் கலந்து கொள்ள போய் இருக்கிறார்...
துர்கா Bhabhi யே தன் கைப் பட தயாரித்து கொடுத்து அனுப்பியுள்ள ஒரு வெடி குண்டுடன்.(அதில் அவர் ஒரு நிபுணர்) அடுத்த தாக்குதலுக்கு....
, திட்டம் அச்சு பிசகாமல் ,. நடந்தேறுகிறது, பறவைகள் லாகூர் விட்டு சிட்டாக பறந்து விடுகின்றன. (இது பற்றிய என் பதிவு ஒன்று உண்டு)...
கல்கட்டாவில், மனைவியை சந்தித்த ஓரா, அவருடைய தீரச் செயலை கேட்டு மகிழ்ந்து, எல்லோர் முன்பும் கை குலுக்கினாராம், இவர் முகம் சிவக்க.
சில நாட்கள் கழித்து ஒரு ஏழை பெண் வேஷத்தில் அதே டிரைனில் குழந்தையுடன் இரண்டாம் பேர் அறியாமல் லாகூர் திரும்பி விடுகிறார் துர்கா Bhabhi.
வந்து, வழக்கம் போல் அவர்கள் நடத்தும் ஹிமாலையன் ஸ்டோரஸ். என்ற கடையின் வியாபரத்தை கவனிக்கிறார்.
உண்மையில்... ஹிமாலையன் ஸ்டோரஸ் ஒரு திரை தான், அதன் திரை மறைவில் இயங்குவது ஒர் வெடிகுண்டு தொழில் சாலை. அதன் Chieh Technician துர்கா Bhabhi தான்...
1929 டிசம்பர் இல் வைசிராய் லார்ட் இர்வின் பிரயாணம் செய்த ரயிலின் அடியில், கணவர் ஓராவினால் வைக்கப்பட்டு வெடித்த குண்டு இவர் கையால் செய்யப்பட்டது தான்.
கல்கட்டாவில் இருந்து திரும்பி வருகிறார் கணவர் ஓரா.
ஓரா, பின்னாலேயே அந்தச் செய்திகளும் , வருகின்றன... சுக் தேவ், ராஜ் குரு, பகத் சிங், அசெம்பிளி யில் குண்டு வீசியது. (Smoke bomb) பின் அவர்கள் பிடி பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு லாகூர் சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதலியன....
ஓரா தம்பதியினரும்.. HSRA இயக்கமும் சிறைப்பட்ட புரட்சியாளர்களை சிறை மீட்கக் சிறையை வெடி குண்டு வைத்து தகர்க்க திட்டம் இடுகின்றனர், மாதிரி வெடி குண்டு ஒன்றை துர்கா Bhabhi தயாரிக்கிறார் .
ஆனால் என்ன துர் அதிஷ்ட்டம் ... மாதிரி குண்டை ரவி நதிக்கரையில் பரிசோதிக்க ஓரா முயலும் போது, அது எதிர் பாராமல் சீக்கிரமே வெடித்து, ஓரா இறந்து விடுகிறார்... வயது 26 தான்.
துர்கா Bhabhi தன் 23ம் வயதிலேயே கைம்பெண்... மனம் உடைத்தாலும் அவர், "தன் நம்பிக்கை" , "தேசபக்தியை" இழக்க வில்லை.
அரசாங்கம் லாகூர் சதி வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது, குற்றவாளிகள் 24 வயது கூட நிரம்பாத ததால் அவர்களின் இளமை கருதி அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என சட்ட, வீதி போராட்ட ங்கள் வெடிக்கின்றன.
ஆனால் , பஞ்சாப் கவர்னர் லார்ட், ஹெய்லி தூக்கு தண்டனையை உறுதி செய்ய கடும் முயற்ச்சி எடுக்கிறார்... கூடக் குரல் கொடுப்பது யார்? அட, அது, நம். காந்தீஜீ,
துர்கா Bhabhi தன் நகைகளை விற்று, (4000 ரூபாய்) குற்றவாளிகளின் தண்டனை குறைப்பதற்கு சட்டப் போராட்டம்... பலன் இல்லை,
அவர்கள் . மூவரும் 23 rd மார்ச் 1931 அன்று சிறை வளாகத்தில் தூக்கில் இடப்படுகிறர்கள.
கொதித்து எழுகிறார் துர்கா Bhabhi , பழிக்கு, பழி, பஞ்சாப் கவர்னர் பழி வாங்கப்பட வேண்டும்.. ...... அன்று கவர்னர் மாளிகை அருகில் மறைந்திருந்து.. , கவர்னர் வெளிவரும் போது துப்பாக்கியால் சுட ( நான்கு ரவுண்டு ) துர் அதிஷ்ட வசமாக?? அந்த நேரத்தில் குறுக்கே வந்த வேறு இரு பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டு கவர்னர் தப்பி விடுகிறார்...
துர்கா Bhabhi கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது, ஆனல் பஞ்சாப் மக்களின் வீதி, சர்தார் படேலின் சட்டப் போராட்டம் , அவருடைய இளம் வயது,... குழந்தை என்ற காரணங்களினால் , தண்டனை ஐந்தாண்டு காலமாக குறைக்கப் பட்டு, பின் விடுதலை..
விடுதலை ஆன பிறகும் அவருடைய உதவி, பங்களிப்பு தீவிரவாத விடுதலை போராளிகளுக்குத் தொடர்கிறது...
குறிப்பாக, 1926 . இல்... அவர் HSRA போராளி, தியாகி கத்தார் சிங் அவர்களின் நினைவு நான் அனுசரிப்பில் அவர் பெரும் கூட்டத்திற்க்கு. லாகூரில் தலைமை தாங்கியது....
மற்றொன்று
போராளி ஜித்ரேந்ததிர நாத் தாஸ் சிறையில் 65 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, இறந்தபோது, அவருடைய இறுதி உர்வலத்திற்க்கு லாகூரில் இருந்து , கல்கட்டா வரை ரயிலிலும். நடந்தும் தலைமை தாங்கியது... , பின் தொடர்ந்த மக்கள் கூட்டம் 4 /5 மைல் நீளம் இருந்ததாம்..
15. ஆகஸட் 1947, இந்தியாவிற்கு சுதந்திரம்...
ஏராளமானவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் என்று, பட்டம், பதவி, பணம், செல்வாக்கு, நிலம் பெற்றனர்,
சரோஜனி நாயுடு, அருணா ஆசப் அலி, விஜயலட்சுமி பண்டிட், ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகள் உட்பட...
துர்கா Bhabhi போன இடம் தெரிய வில்லை.... அரசுக்கு எந்த துப்பும் இல்லை, அரசை எந்த விதத்திலும் அவர் நெருங்க வும் இல்லை,
சில வருடங்கள் கழித்து அவர் கஸியாபாத்தில் இருப்பதாக கேழ்விப்பட்டு. சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அவரை சந்தித்து அரசு உதவி, பதவி ஏற்க்க கெஞ்சிய பண்ணிய போது, மறுத்து விட்டாராம்.
நேருஜி மாமாவை அவர் சந்திக்க கூட. மறுப்பு
பிற்க்காலத்தில் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டது....
"பாரத்தின் சுதந்திரத்திற்க்காக தன் உடல், பொருள், ஆவி, இளமை,, எல்லாவற்றையும் மனப்பூர்வமாக, என் கணவர் போல் தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன்.. . அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை... அதை காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பாது .. ,
அந்த வீரர்கள் புகழ் பரப்புவது,... நினைவை போற்றுவது தான் என் பணி. " என்றார்
தன் சொத்துக்களை விற்று லக்னோவில் ஒரு பெண்கள் பள்ளி ஆரம்பித்து , அதே பள்ளியில் ஒரு சதாரண ஆசிரியை ஆகவே இறுதி வரை பணி ஆற்றுகிறார் ....
1907 ¶இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் பெற்றோரை இழந்து, சித்தியால் வளர்க்கப்பட்டு,படித்து, ,பகவதி சரண் வோரா என்ற படித்த, பணக்கார பிராமண இளைஞ்ஞரை 13 ம் வயதில் கைபிடித்து.. அவருடைய சுதந்திர போராட்ட, காரியம் யாவிலும் கை கொடுத்து, ஒரு குழந்தைக்கு 18 ம் வயதில் தாயாகி, 23ம் வயதில் கணவரை இழந்து, துப்பாக்கி பிடித்து நாட்டு விடுதலைக்காக போராடி, அப்பழுக்கற்ற வீர தேசபக்தி/தியாக வாழ்வு வாழ்ந்து.. தன் 92ம் வயதில் 1999 இல் கஸியாபாத்தில் மறைந்தார்.
அவர் இறுதி விருப்பம். அவர் மறைவிற்க்குப் பின் அவர் நிறுவிய அந்தப் பள்ளிக்கு அவர் பெயரோ , அவர் கணவர் பெயரோ,, குடும்ப பெயரோ .வைக்கக் கூடாது. .
அந்தப் பள்ளி இன்றும் உள்ளது பெயர், வெறும் "பெண்கள் பள்ளி "
இதுவல்லவோ, வீர, தீர, தியாக வாழ்வு
வாழ்க அவர் புகழ்.. வந்தே மாதரம்,
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.
இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.
கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.
இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.