ஜென் துறவி "லீன்ஸீ" படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர்!!
அவரிடம் சீடர்களால் வழங்கப்பட்ட
ஒரு படகு இருந்தது. மடத்திற்கு அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார்!!
சில வேளைகளில் தியானம் செய்வது கூட, அந்த படகில் இருந்தபடிதான்!!
ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்தபோது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.
தியானத்தில் இருந்த அவருக்கு அதிர்ச்சியினால் சற்று கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தன் படகில் மோதி தனது தியானதிற்கு இடையூறு செய்துவிட்டதாக எண்ணி, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டார்.
என்ன ஆச்சர்யம்!! அங்கு பார்த்தால்
காலிப் படகு ஒன்றுதான்[ அவர் படகின் அருகில் மிதந்து நின்று கொண்டிருந்தது
"என் கோபத்தை அந்த காலிப்படகின் மீது காட்டிப் பயன் இல்லை.....
மௌனமாகத்தான் நான் ஞானம் பெற்றேன்!!
அந்த வெற்றுப் படகு
(empty boat) எனக்கு குருவாக இருந்தது!!
இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன், இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது!!
என்று எனக்குள் கூறிக்கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது".... என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.
அனைத்தும் அதனதன் சுயத்திலிருந்தே இயங்குகின்றன!! ஆழமாகப் பார்த்தால் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல!!
குரு லீன்ஸீ கூறியது போல் இங்கு அனைவருமே "வெற்றுப் படகுகள்தான்"!!
ஒருவகையில் அறியாமையும்
இன்பம்தான்!! அங்குதான்
கடந்து செல்வதற்கு பாதை மிச்சம் இருக்கும்!!
படகு கரையில் நிற்பது பாதுகாப்பானது!!
ஆனால் படகு அதற்காக உருவாக்கப் படுவதில்லை!! படகின் இருப்பு பயணம் செய்வதற்காகத்தான்....
தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.... எப்பொழுது வேண்டுமானாலும் "வெற்றுப் படகுகள்" நம் படகின் மீது இடிக்கலாம் என்கிற எண்ணத்துடனேயே!
~~ஓஷோ