பாகற்காயின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips
பாகற்காயின் மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

குளிர்காலத்தில் உதட்டை பராமரிக்கனுமா??

மணக்கால் அய்யம்பேட்டை | 1:18 PM | Best Blogger Tips
குளிர்காலத்தில் உதட்டை பராமரிக்கனுமா??

குளிர்காலம் என்றாலே உதடுகள் விரைவில் வறட்சியடைந்துவிடும். அதிலும் இந்த உதடுகள் மிகுந்த சென்சிட்டிவ் ஆன ஒரு பகுதி. அதனால் பேசுவதற்கு, சாப்பிடுவதற்கு மற்றும் சிரிப்பதற்கு பயன்படுத்தும் உதடுகளில் எளிதில் வெடிப்புகள், இரத்தம் வடிதல் மற்றும் சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும்.

மேலும் எப்படி சருமம் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸால் ஆனதோ, அதேப்போல் தான் உதடுகளும் அவற்றால் உருவானது. அத்தகைய உதட்டில் மற்ற பகுதியில் இருக்கும் முடி அல்லது வியர்வை சுரப்பி போன்றவை ஏதும் கிடையாது. ஆகவே அத்தகை பாதுகாப்பு படலங்கள் இல்லாததால், உதடுகள் விரைவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிப்படைந்து விடுகின்றன. எனவே குளிர்காலத்தில் உதடுகளில் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா!!!

குளிர்காலத்தில் உதடுகளுக்கு எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீம் அல்லது லிப் பாம் போன்றவற்றை வெளியே செல்லும் போது உதடுகளில் தடவிக் கொண்டால், எந்த ஒரு பாதிப்பும் உதடுகளுக்கு ஏற்படாமல் இருக்கும்.

என்னதான் எச்சிலை அடிக்கடி உதடுகளில் படச் செய்தாலும், அவை விரைவில் காய்ந்துவிடும். மேலும் சிலருக்கு அடிக்கடி உதடுகளில் எச்சில் படும்படி செய்வது பழக்கமாக இருக்கும். அத்தகையவர்கள் ஏதேனும் பிடித்த ப்ளேவரால் செய்யப்படும் லிப் பாமை பயன்படுத்துவது நல்லதாக இருக்கும்.

எப்போதும் சுவாசிக்கும் போது வாயால் சுவாசிக்காமல், மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டும்.

ஏதாவது அழகுப் பொருட்கள் அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவது போல் இருந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். முக்கியமாக குளிர்காலத்தில் தவறாமல் குடிக்க வேண்டும்.

அடிக்கடி உதட்டைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டால், உடலில் வைட்டமின் பி2 குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே தினமும் வைட்டமின் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஒருசில நல்ல தரமான லிப் பாம்களில் ஜொஜோபா எண்ணெய், வெண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி சூரியகதிரினால் உதட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் சன்ஸ்கிரீன் SPF6 இருக்கும்.

புகைப்பிடித்தால் உதடுகளில் விரைவில் சுருக்கங்களும், அதே சமயம் ஆல்கஹால் பருகினால் உதடுகளில் அதிக வறட்சியும் ஏற்படும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

உதடுகளில் ஏதேனும் வெடிப்புகள் ஏற்பட்டால், அவற்றை மறைக்க லிப்ஸ்டிக் போட வேண்டாம். ஏனெனில் அவை உதட்டில் உள்ள வெடிப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
எனவே மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு நடந்து வந்தால், குளிர்காலத்தில் உங்கள் உதட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

உடல் எடையை குறைக்கனுமா?? இத ட்ரை பண்ணுங்க!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:17 PM | Best Blogger Tips
உடல் எடையை குறைக்கனுமா?? இத ட்ரை பண்ணுங்க!!!

உடல் பருமம் இன்று அனைவரையும் பாடாய்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம்.

• அதிகாலையில் மூச்சு பயிற்சி

• திட்டமிட்ட சரிவிகித உணவு

• நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

• சர்க்கரையை தவிர்க்க வேண்டும்

• ஒரு நாளைக்கு குறைந்த அளவிலான சாப்பாடு 6 அல்லது 7 முறை சாப்பிட வேண்டும்

• கூட்டு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்

• புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்

• சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்

• நார்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்

• வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்

• உடல்பயிற்சி செய்ய வேண்டும்

• வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது

• நாளைக்கு ஒரு முறையாவது கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.

• உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

• தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது

திருநீறு அணிவது ஏன்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips
திருநீறு அணிவது ஏன்

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.