*நம் எண்ணமும்...நம் நட்பும்...!!*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை....*

*நம் எண்ணமும்...நம் நட்பும்...!!*

நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.

அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம். 

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். 

5 வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட. 

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே..

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர்.கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.

”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம்…தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் சிந்தித்தவன், “”தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், ””எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா?  என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.

கடைக்காரரோ,””ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால்பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை,” என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.“ உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே..

வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான்.

கடைக்காரர்,, ''நீ சொல்வது புரிய வில்லையே!”, என்றார்.

”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன்.என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது.

இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

ஆம்.நண்பர்களே..,

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும்,, நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும்.

ஒருவன் தான்செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ் பெற்றிருக்க முடியும்.

*அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும்,*
*நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.*

*💗வாழ்க வளமுடன் 💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


நன்றி இணையம்

இப்படி ஒரு தலைவனை.... #M_R_காந்தி ஜி....!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips


இதுவரை நான் கண்டது இல்லை இப்படி ஒரு தலைவனை....
#M_R_காந்தி ஜி....!!!!!

யார் இந்த #M_R_காந்தி ஜி...?

ஒரு காலத்தில் பெரிய கோடீஸ்வரர், நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள கடைகள் இவருக்கு சொந்தமானவை,
ஆனால் இன்று இவருக்கு என்று சொந்தமாக வீடு கூட கிடையாது,
தன்னிடம் உதவி என்று வருவோருக்கு இல்லை என்று கூறாத மனிதர்..
இன்று வரை..

மண்டைக்காடு கலவரம் பின்பு இந்து முன்னணி இயக்கம் தொடங்கவும், குமரியில் BJP கால் ஊற்றவும் அரும்பாடு பட்டவர்....

குமரி மாவட்டத்தில் இந்துகளுக்கு ஆதரவாக எங்கேனும் ஒரு குரல் கேட்டால் அங்கே ஒரு கருத்து சிறுத்த உருவம் தென்படும் அவர்தான்  #MR_காந்தி

அந்நிய மதத்தவரால் இந்துக்களுக்கு இழைக்கபடும் கொடுமைகளுக்கு எதிராக காவல் நிலையங்களில் நள்ளிரவு 12 மணிக்கும் ஒரு இந்து குரல் கேட்கும் அவர்தான் #MRகாந்தி

குமரி மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டங்களில் 4 பேர் இருந்தாலும் 40000 ஆயிரம் பேர் இருந்தாலும் முதல் நபராக ஒரு ஆள் இருக்கும் அவர்தான் #MR_காந்தி

குமரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு குரல் கேட்கும் அந்த குரலின் சொந்தகார்ர் தான் #MRகாந்தி

கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மதிப்பெண் குறைவாக பெற்ற ஏழை மாணவர்களுக்கு அட்மிசனுக்காக காத்திருக்கும் பெற்றோர் கூட்டத்தில் கால் கடுக்க காத்து நிற்கும் அந்த முதியவர் தான் #MR_காந்தி

இந்து இயக்கத்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்களிலோ துக்கங்களிலோ யாரும் அழைக்காவிடிலும் ஒருவர் வந்து அந்த சுக துக்கங்களில் பங்கு கொள்வார் அவர் தான் #MR_காந்தி

சாதரண தெருக்குழாய் பிரச்சினை முதற்கொண்டு அதிதீவிர பிரச்சினைகளுக்காக அடித்து கொள்ளும் நம்மவர்களிடையே சமாதானம் பேசும் மாமனிதர் தான் #MR_காந்தி

ஜனசங்க காலத்திறகு முன்பு இருந்தே இந்துத்வ வீரனாக வலம் வரும் ஒரு வயதான வாலிபர் தான் #MR_காந்தி..

 பாரத மாதா மீது கொண்ட பற்றால் பாதணி அணியாதவர்.

        எளிமையை தான் ஏற்றுக் கொண்டு இனிமையை தொகுதிக்கு தர வல்லவர்.

முன்பு விருது நகருக்கு காமராஜர் வாய்த்தது போல நாகர் கோவில் தொகுதிக்கு கிடைத்த நல்ல வரமாக திகழக் கூடியவர் திரு ௭ம் ஆர் காந்தி ஜி அவர்கள்.

       தமிழகத்திற்கு அரசியல் வழி காட்டியாகத் திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர் கோவில் தொகுதியில் இவர் வென்றால் எம் .எல் .ஏக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்பு உள்ளது.

       தனக்கென்று வாழ்க்கையோ அல்லது வரலாரோ இல்லாமல் நாட்டின் வளத்திற்க்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவர் சட்டமன்றம் செல்வது அந்த சட்டமன்றத்திறகு தான் பெருமை...
அவரை  வாக்களிப்பது சட்ட மன்றத்திற்கு அனுப்புவது  நமக்கு தான் பெருமை....நன்றி இணையம்

மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு.... ....

மணக்கால் அய்யம்பேட்டை | 7:13 PM | Best Blogger Tips20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)


போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...


இது எப்படி சாத்தியம்..???

ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..


ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...


யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...


வேறு யாருமில்லை.. 


கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 


வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.


சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...


அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...


""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""


இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...


சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..


நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....


அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க

அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..


அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...


 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...


இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..

வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..


 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???


ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 

நம் சந்ததிக்கு.... .... 

*படித்ததில் பிடித்தது*


நன்றி இணையம்

சிவபெருமானை பற்றி.....

மணக்கால் அய்யம்பேட்டை | 7:01 PM | Best Blogger Tips
சிவபெருமானை பற்றி அனைவரும்
 தெரியவேண்டுபவை 🌺🌺

1.சிவ சின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

         சிவ சிவ 🙏🙏

நன்றி இணையம்

பவுர்ணமி பர்வதமலை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:35 PM | Best Blogger Tips


முடிந்தால் சென்று  அனைவரும் ஆனந்தம் அடையுங்கள்.

*பர்வதமலை:*


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து

தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை
என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி

வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு
சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய

பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து
சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.


சிறப்புகள்:::


பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த

பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது
விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள

செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட
அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து

வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின்
கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன்
அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து

பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.
மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக்
காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள்

இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக
நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்
வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில்
உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி

ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ
சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த
மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்
என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு.   26 கி.மீ.,

சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால்
கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று
இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி

வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து
கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும்
காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு:


மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு

விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு
முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள
சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.


நன்றி 
மணக்கால் அய்யம்பேட்டை | 11:39 AM | Best Blogger Tips

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,

“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்..”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே
இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது.

சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...

ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...

அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார்.

இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.

நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

*நம்*
*எண்ணங்களும்...*
*உணர்வுகளும்...*
*சிந்தனைகளும்...*
*சொல்களும்...*
*செயல்களும்...*

*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு..*

*நல்லது செய்யுமெனில்...*

*இறைவனை*

*நாம் தேட* *வேண்டியதில்லை...*

*இறைவனே நம்மை தேடி வருவார்...*


நன்றி இணையம்

சஞ்சீவி மலையும் - ஆடிட்டர் ........

மணக்கால் அய்யம்பேட்டை | 11:53 PM | Best Blogger Tips

நான் நண்பரது வீட்டு 

விழாவிற்கு சென்றிருந்தபோது
ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது .

நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன் .


“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்ஃபுல்லானது. எங்களால்

ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் . 

வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்

கேளுங்கள் .

இராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கிறான் இலட்சுமணன் . 


அவனைக் காப்பாற்ற சஞ்சீவி

மூலிகையைக் கொண்டு வரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான் . 

அனுமன் சஞ்சீவி மூலிகையைத் 

தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான் . 

இலட்சுமணன் பிழைத்துக் 

கொள்கிறான். யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்குத்
திரும்புகின்றனர் .

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார் .

ஆனால் , அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது .

காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம் :


1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும் பயணத்திற்கு

முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை .

2. அனுமன் ஒரு 4th Grade Officer . 

எனவே அவருக்கு வான் வழிப்பயண அனுமதி இல்லை .

3. அனுமன் சஞ்சீவி பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage .

Excess luggage is not allowed .

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்

படுகிறது என்று எழுதிய ,

ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்

படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச் சொல்கிறார் .

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.


“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணிக்கப்பட்டேன் 
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா "


எனப் புலம்பிய அனுமனைத்

தேற்றிய ராமன் , கோப்பில் ,

‘please re examine ‘ என எழுதி

அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்குத் திருப்பி அனுப்புகிறார் .

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை

சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார் .

கவலையுடன் சென்ற அனுமன் 

ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப் பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை . 

இறுதியில்அனுமன்,

” இதோ பார் இந்த பயணப்படியை 
நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
என்று சொன்னவுடன் ,

சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது .


அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction

ஆகி அவருக்கு கிடைத்தது . ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் 

கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே

clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார் .

அந்த clarifications :


1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்

பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய இராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது .

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்

காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது .

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான

வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும் .

எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்படுகிறது…”


என்று கதையை நண்பர் 

சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

இங்கே நிறைய விதிகளும் அதில் ஓட்டைகளும் உள்ளன . தப்பு செய்துவிட்டு தப்பிக்க நிறைய வழிகள் இருக்கின்றன .

நன்றி

அன்புடன் 
குரும்பூர் S. ராம்குமார்