சஞ்சீவி மலையும் - ஆடிட்டர் ........

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:53 | Best Blogger Tips

நான் நண்பரது வீட்டு 

விழாவிற்கு சென்றிருந்தபோது
ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது .

நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன் .


“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்ஃபுல்லானது. எங்களால்

ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் . 

வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்

கேளுங்கள் .

இராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கிறான் இலட்சுமணன் . 


அவனைக் காப்பாற்ற சஞ்சீவி

மூலிகையைக் கொண்டு வரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான் . 

அனுமன் சஞ்சீவி மூலிகையைத் 

தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான் . 

இலட்சுமணன் பிழைத்துக் 

கொள்கிறான். யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்குத்
திரும்புகின்றனர் .

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார் .

ஆனால் , அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது .

காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம் :


1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும் பயணத்திற்கு

முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை .

2. அனுமன் ஒரு 4th Grade Officer . 

எனவே அவருக்கு வான் வழிப்பயண அனுமதி இல்லை .

3. அனுமன் சஞ்சீவி பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage .

Excess luggage is not allowed .

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்

படுகிறது என்று எழுதிய ,

ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்

படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச் சொல்கிறார் .

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.


“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணிக்கப்பட்டேன் 




அதற்குக்கூட பயணப்படி கிடையாதா "


எனப் புலம்பிய அனுமனைத்

தேற்றிய ராமன் , கோப்பில் ,

‘please re examine ‘ என எழுதி

அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்குத் திருப்பி அனுப்புகிறார் .

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை

சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார் .

கவலையுடன் சென்ற அனுமன் 

ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப் பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை . 

இறுதியில்அனுமன்,

” இதோ பார் இந்த பயணப்படியை 
நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
என்று சொன்னவுடன் ,

சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது .


அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction

ஆகி அவருக்கு கிடைத்தது . ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் 

கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே

clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார் .

அந்த clarifications :


1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்

பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய இராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது .

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்

காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது .

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான

வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும் .

எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்படுகிறது…”


என்று கதையை நண்பர் 

சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

இங்கே நிறைய விதிகளும் அதில் ஓட்டைகளும் உள்ளன . தப்பு செய்துவிட்டு தப்பிக்க நிறைய வழிகள் இருக்கின்றன .





நன்றி

அன்புடன் 
குரும்பூர் S. ராம்குமார்