சிந்திக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 One day, those “I'll visit next week” plans run out of next weeks. ❤️ It  hits you out of nowhere. The stories you've heard a hundred times. The  phone calls you rushed

அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர், தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ஒரு பெரிய கடையின் முன், தன் காரைநிறுத்துகிறார்
பிரபலமான பூக்கடை அது..
 
எவ்வளவு விலை சார் இது"
 
" 250 டாலர்"!!.
 
இதைவிட அருமையான பூ காண்பிக்க முடியுமா?
வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது....
 
இது "ஆர்கிட்"வகைப் பூ. மிக அருமையா இருக்கும். ஒரு வாரம் வரை வாடாது"
 
"500 டாலர்"!!
சரி, இதையே , 'பேக் செய்யுங்க...
 
"உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா?
 
கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் அதற்கு ஒரு 100 டாலராகும்.
 
"வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்' பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்....
 When you ask a mother to tell you about her son, you will see the emotions  she feels as she describes just how incredible he was. There's a deep bond  between a
ஒன்று செய்யுங்க..ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து, இந்த பூங்கொத்தை, இன்றே என் தாயிடம் இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.
 
ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்து விடும்.,அதற்கும் சேர்த்து 500 டாலர்.
 
நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர்.
 
மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல், பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறபோக
ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள் குழந்தை ஏன் அழறே?
அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?
ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்கு பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?
'நோ அங்கிள் " எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று ...
 
நான் வருடா,வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்...என்னிடம்
பணம் இல்லை......நீங்க ஒரு டாலர்
கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்.
 
அம்மா எனக்காக வெயிட் டிங்'.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?
 
பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா...10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...
வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும். என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி.
 
ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.
 
ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்.
 
மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி' பூ வை எடுத்தபடி ஓட..அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.
 
சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..
 
பல வளைவுகளை, தெருக்களை கடந்து, ஓடும் அவள் போய் நிற்கும் இடம் சமாதி.. ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,....
பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .
 
"சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு... டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை, வீட்டிற்கு போக சொன்னார்.
 
பெரிய கார் தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ?என பார்க்க ....
 One of a mother's greatest joys isn't raising her son... it's never losing  the bond with him. ❤️ Life changes. Children grow up, build their own  families, chase their dreams, and create
அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்......
உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!!
 
அம்மா ,"அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.
உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்.
 
நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?...அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன்
 
"உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து,பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது? மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.
 The truth is that no matter how old we are, as long as our mothers are  alive, we want our mother."
தாய், தந்தை இருப்பவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்
 
அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.
உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து,மகிழ்ந்து ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்.....
 
எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம்
 
சந்தோஷத்தில்,...மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்..!
 
Thanks & Copy from P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
 

டாஸ்மாக் என்ற ஆயுதத்தால் வீழ்ந்து விட்டோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:07 AM | Best Blogger Tips

 May be an image of one or more people

என்னோட வீட்டுக்கு அருகில் OMR ரோட்டில் ஓரத்தில் பிளேட் பார்த்து அருகில். 1x1 இல் ஒரு பானி பூரி கடைக்காரன் பையன் பாணி பூரி விற்றுக்கொண்டு இருப்பான் ..
 
வருஷம் 365 நாளும் அங்கே நிற்பான் ...
 
நானும் என் மகளும் அவனிடம் பலமுறை பாணி பூரி சாப்பிட்டு இருக்கோம் ....
 
.... அவன் ஒரு பெரிய கூடை நிறைய பானி பூரி கொண்டுவந்து முழுசும் காலி செய்துவிட்டு தான் வீடு செல்வான் ..
 
எவ்வளவு சம்பாதிப்பாய் என்று கேட்டேன் ..
 
தினமும் ஒரு 4000 ரூபாய் என்று சொன்னான் ..
வாய்ப்பே இல்லை ....
 
நான் பொறாமை படுவேன் என்று குறைவாக சொல்கிறான்..
 
நிச்சயமாக 10000 தாண்டும் ,
 
ஏனென்றால் நான் சென்ற ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன் ..
 
ஒரு 10 நிமிடத்துக்குள் 400 ரூபாய் சம்பாதிக்கிறான் ...
 
எந்த ஊர் என்று கேட்டேன்!! உத்திரபிரதேசம் என்றான் ..
 
உத்திரபிரதேசத்தில் இருந்து இங்கே வந்து அரைகுறை தமிழை கற்றுக்கொண்டு
பாணி பூரி விற்பவன் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான் ,
 
வேலைக்கு வருபவர்கள் எல்லோரும்
பொதுவாக வட இந்தியர்கள் என்று சொல்லி விடுகிறோம்....
 
பாதிக்கும் மேற்பட்டவர்கள் தொழில் செய்கிறார்கள்...
 
அதே அளவு நம்ம மக்கள் எங்கேயோ தினக்கூலிக்கு சென்றுகொண்டு , கடன் வாங்கிக் கொண்டு...
 
டாஸ்மாக் ல கண்ட நேரத்தில் சரக்கு வாங்கி குடித்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள்
நான் இதுவரை மூன்று அலுவலகம் சென்னை கோவையில் உருவாக்கி இருக்கிறேன் ,
 
அதற்கு தேவையான மரம், இரும்பு , எலெட்ரிக்கல் லைட்டு , பல்பு , சாமானம் மொத்தமும் சேட்டுக்கடை கடை ..
 
பல லட்சம் வாங்கி இருப்பேன்..
 
மொத்தமும் வட இந்தியர்கள்.....
 
எனது பணம் முழுசும் வடநாட்டுக்கு போய்விட்டது ...
நான் ஒரு சின்ன பிசினெஸ் மேன்,
 
எனக்கே இவ்வளவு என்றால் பல நூறு கோடியில் கட்டிடம் கட்டும் பில்டர் நினைத்து பார்த்தால் ...
 
மொத்தம் அங்கே போகுது ...
 Surat Street Vendors Ragda Pani Puri Goes Viral, Sparks Hygiene Debate -  NDTV Food
அதேபோல விவசாய பொருட்கள் அரிசி , பருப்பு , வெங்காயம் , உருளைக்கிழங்கு , கோதுமை மொத்தமும் வடநாடு
வீட்டுக்கு தேவையான மளிகை உட்பட மொத்த பொருட்களும் வடநாடு
ஜவுளி மொத்தமும் வடநாடு .....
 
இன்றைய நிலையில்
தமிழ்நாடு மொத்தமாக வட இந்தியர்கள் பிடியில் சிக்குகிறது ....
 
இதை பொறாமை குணத்தோடு சொல்ல வில்லை....
 
அவர்கள் திருடி பிழைக்க வில்லை, ஏமாற்று செய்து பிழைக்க வில்லை..
 
உழைத்து தொழில் செய்து பிழைக்கிறார்கள்...
அவர்களால் நமக்கு எதுவும் பாதிப்பு இல்லைதானே ?
 
அவர்களை விடுவோம்....
 
தமிழர்கள் என்பவர்கள் #டாஸ்மாக் என்ற ஆயுதத்தால் வீழ்ந்து விட்டோம் ....என்பது மிகப்பெரிய உண்மை
 
குடிகாரர்கள் உலகம் முழுவதும் இருகிறார்கள்..
கூத்தாடி ரசிகர்கள் உலகம் முழுவதும் இருகிறார்கள்
 
நம்மவர்கள் #குடியை_எல்லைமீறி குடும்பம் கெடும் அளவு குடிக்கிறார்கள் ..
 
அதுமட்டுமல்ல .. #கூத்தாடி_மோகம் எல்லை மீறி கூத்தாடி மீது உயிரே வைக்கிறார்கள் , பைத்தியம் ஆகிறார்கள்
 
பண்டிகை , இலவு இடைஞ்சல் , திருவிழா என்று பாதி நாள் #விடுமுறையில் ஓடிவிடுகிறது ....
போதா குறைக்கு
 
அரசியல் வாதிகள் தமிழ்நாடு , தமிழன் என்று சொல்லி அரசியல் வாதிகள், கூத்தாடிகள் மக்களை கேனையர்கள் ஆக்கி தெருவில் அலைய விட்டுவிட்டார்கள் ...
 
மொத்தத்தில் நம் பெரும்பாலான தமிழர்கள் இன்றைய வயிறு நிரம்பினால் போதும் என்று..... வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனம்......
 
Note:
 
என்னோட கேள்வி... 5000 , 10000 என்று சம்பளத்துக்கு வேலை தேடி அலையும் தமிழர்கள் ஏன் சொந்த தொழில் தொடங்க கூடாது ?
 
படிப்பறிவு இல்லாத வடக்கன் செய்யும் தொழிலை
மெத்த படித்தேன் ,
 
MBA படித்தேன், MCA படித்தேன் 
PhD படித்தேன் என்று சொல்லிக் கொண்டு திரியும் நீங்க ஏன் செய்ய கூடாது ?
 
வேலை கொடு,
 
வேலை கொடு என்று ரெஸ்யூம் என்கிற 
 
திருவோட்டை தூக்கி கொண்டு அடுத்தவன் கிட்ட போய் ஏன் கையேந்த வேண்டும்.?
 
நீங்களே ஏதாவது ஒரு சொந்த தொழில் தொடங்கலாம். தானே ?
 
முகநூல் பதிவு.
பொட்டில் அறைந்த மாதிரி உண்மை.
....
🎈🧸🎈
Thanks & copy from FB  

அபிதா அபி


கக்கனை தொட்ட அந்த நொடியில் கடவுளை.....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:04 AM | Best Blogger Tips

 May be an image of 4 people, people studying and hospital

கக்கனை தொட்ட அந்த நொடியில் கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.
 
அது 1980. மதுரை அரசு பொது மருத்துவமனை.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் மதுரை முத்து, சிகிச்சைக்காக அங்கே 
 
அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காகத்தான் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் எம்ஜிஆர்.
 நாடு போற்றும் மாமனிதர் தியாகி கக்கன் - தேசிய முரசு - Desiya Murasu
பார்த்து முடித்து விட்டார். இனி புறப்பட வேண்டியதுதான்.
 
நேரம் ஆக ஆக எம்ஜிஆரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
 
எம்ஜிஆர் தன்னை சுற்றிலும்
பார்த்தார். சற்று தள்ளி நின்ற காளிமுத்து எம்ஜிஆருக்கு அருகே ஓடோடி வந்தார்.
 
"போகலாமா ?" என்றார் எம்ஜிஆர்.
 
அப்போதுதான் எம்ஜிஆரின் காதுகளில் ஏதோ சொன்னார் காளிமுத்து. ஒரு கணம் திகைத்துப் போனார் எம்ஜிஆர். "நிஜமாகவா ?"
 மாமனிதர் கக்கன் ஐயாவின் நினைவுதினம் இன்று ... 🇬🇳🙏 #kakkan #கக்கன்  #Sampavar
"ஆமாம்."
 
"இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ?"
 
சட்டென்று மருத்துவமனைக்குள் மீண்டும் நுழைந்தார் எம்ஜிஆர்.
 
"எங்கே இருக்கிறார் அவர் ?"
 
விறுவிறுவென்று நடந்து வந்த எம்ஜிஆரை அந்த சாதாரண வார்டுக்குள் அழைத்து சென்றார்கள் மருத்துவ அதிகாரிகள். உள்ளே நுழைந்த எம்ஜிஆர் கண் கலங்கி நின்றார்.
 கக்கன் எப்படி வாழ்ந்தார் தெரியுமா? | Kakkan biography in Tamil – பாமரன்  கருத்து
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத அந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் கக்கன்.
 
இடுப்பில் ஒரு சாதாரண துண்டோடு எளிமையான தோற்றத்தில் இருந்தார் அவர்.
 
காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர்.
 
"அவருக்கே இந்த கதியா ?" குமுறலுடன் அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளை அழைத்தார் எம்ஜிஆர்.
 
"இங்கே வாங்க. இவர் யார் எனத் தெரியுமா ? இவர் வகித்த பதவிகள் என்னென்ன தெரியுமா ?
 
இவர் போன்றவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தால்தான் நாம் இன்று நிம்மதியாகவும் சுகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
 
உடனடியாக இவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவ சிகிச்சையும்
அளியுங்கள்." 
 நாடார் - காமராஜரும் கக்கனும். கக்கனும், காமராஜரும் ஏழையாக வந்தார்கள்.  ஏழையாகவே இருந்தார்கள். ஏழையாகவே இறந்தார்கள். பதவியையும் ...
இப்படி சொல்லி விட்டு கக்கனிடம் பணிவாக கேட்டார் எம்ஜிஆர். "ஐயா, உங்களுக்கு நான் என்ன செய்து தரணும் சொல்லுங்க. உடனே செய்து கொடுக்கிறேன். தயவு செய்து சொல்லுங்க ஐயா."
 
கக்கன் புன்னகையுடன் எம்ஜிஆர் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். 
 
பின் கை கூப்பி வணங்கினார். "நீங்க நேர்ல வந்து பார்த்ததே போதும். எனக்கு வேறு எந்த விதமான தேவையும் இல்லை."
 
கூப்பிய அவர் கைகளை சிலிர்ப்போடு இறுகப் பற்றிக் கொண்டார் எம்ஜிஆர். இப்படி ஒரு தேவையற்ற மனிதனை எம்ஜிஆர் தன் வாழ்நாளில் அதுவரை கண்டது இல்லை.
 
ஆம். தேவைகள் அற்ற மனிதன் தெய்வத்துக்கு சமமானவன்.
 
கக்கனை தொட்ட அந்த நொடியில் கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்ஜிஆர்.
 
இதை புரட்சித் தலைவர் அவர்களே சொல்லியிருக்கிறார்.

 

விளையாட்டு போட்டிகளில் தேசிய கீதம் பாடும் போது குழந்தைகளை அழைத்து செல்வது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:14 AM | Best Blogger Tips

 Anurag Bansal on LinkedIn: Who are these kids accompanying cricketers for  the national anthem at the… | 26 comments

அருமையான தகவல்❤️#விளையாட்டு போட்டிகளில் தேசிய கீதம் பாடும் போது குழந்தைகளை
அழைத்து செல்வது ஏன்?
 
இந்த குழந்தைகள் "எஸ்கார்ட் அல்லது மஸ்காட் குழந்தைகள்" என்று 
 
அழைக்கப்படுகிறார்கள்...இந்த குழந்தைகள் பெரும்பாலும் பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வருகிறார்கள்...அவர்கள் பல்வேறு வசதிகளிலிருந்து 
 Knowledge Story: জাতীয় সঙ্গীতের সময় কেন প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে?  তাদের কী বলা হয়? বলুন তো দেখি Viral Knowledge Story Why Players stand with  Kids during National Anthem in ...
விலகியவர்கள்...பெரும்பாலும் ஆதரவற்றவர்களாகவும், ஏழைகளாகவும் இருப்பார்கள்...தங்கள் விருப்பமான நட்சத்திரங்களின் அருகில் வந்து வாழ்க்கையில் இவர்களைப்போல மாற வேண்டும் என்று ஊக்கமடைகிறார்கள்..
 
அதே நேரத்தில், அவர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்....
 
மேலும், குழந்தைகளின் மனம் தூய்மையானது..எந்தவித பொறாமையும் இல்லாதது.‌.எளிதில் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.. எனவே, அமைதியை வெளிப்படுத்த, வீரர்கள் தூய்மையாக கிரிக்கெட் விளையாட, 
 
எதிராளிகளை நண்பர்களாக நினைப்பதற்கு, இந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்று பலர் நம்புகிறார்கள்...
 
விளையாட்டு மைதானத்தில் இரு அணிகளின் வீரர்களுக்கு இடையே நல்ல உறவைப் பேணுவதற்கு, தேசிய கீதம் பாடும் போது வீரர்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள்.  
 May be an image of 1 person, smiling and body of water
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌹🌹🌹🌹🌹நேர்மையா வாழணும்னு - அடிமையா வாழணும்னு 🌹🌹🌹🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips


 

எழுத்தாளர் சுஜாதா வீடு.
 
தயங்கி தயங்கி தன் கணவரிடம் கேட்டார் திருமதி சுஜாதா.
 
"என்னங்க...
 
நான் ஒண்ணு கேட்டா...
 
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."
 
மனைவியை திரும்பிப் பார்க்காமலே,
 
"என்ன கேக்கப் போறே ?"
 


 
May be an image of 2 people


"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"
 
"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."
திருமதி மௌனம்.
 
"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."
"ஆமா."
 
"சீக்கிரம் கேளு."
 
"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது 
 
ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்..."
 
"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."
 
சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.
 
"அதுதாங்க, அந்த வீடு விஷயம்..."
 
"எந்த வீடு ?"
 
"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."
 
"ம்..."
 
"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு..."
 
"நம்ம வீட்டுக்கு வந்த என்னோட நண்பர் சொல்லிட்டு போனார், அதானே?"
 
"ஆமா."
 
"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"
 
"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."
 
"சரி. இப்போ நாம இருக்கறது..?"
 
"இது நாம சொந்தமா வாங்கின வீடு."
 
"எத்தனை பெட்ரூம் ?"
 
"மூணு பெட்ரூம் வீடு."
 
"இது வசதியா இல்லையா ?"
 
"இருக்கு...ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா..."
 
"ம்..."
 
"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.
 
உங்க நண்பர்தானே பணம் கொடுக்க ..."
சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.
 
"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.
 
புரியுதா ?"
 
"ம்"
 
"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை. ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா, அந்த நிமிஷத்தில இருந்து
நாம அவருக்கு அடிமை."
 
"ம்."
 
"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,
 
அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"
 
"நேர்மையாத்தான்..."
 
"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"
 
(திருமதி சுஜாதா
அனுபவங்களிலிருந்து)
 

இந்த பணத்துக்குத் தான் எவ்வளவு ......?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips
What is the cost of printing 200,500 and 2000 rupees notes in India?Indian Currency Vector Art, Icons, and Graphics for Free Download

 

LEVIATHAN Dummy Indian Currency Notes 60 Units, of 200,500,Rupee Notes for  kids Playing Fake Note Gag Toy Price in India - Buy LEVIATHAN Dummy Indian  Currency Notes 60 Units, of 200,500,Rupee Notes

இந்த #பணத்தை  கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...
அடேங்கப்பா இந்த பணத்துக்குத் தான் எவ்வளவு #பெயர்கள்...?
Indian rupee - Wikipedia
கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்...
கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினால் கிடைக்கும் பலன்கள் | tamil news  temple hundi
யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்...
பிச்சை | எழுத்தாளர் ஜெயமோகன்
அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்...
 
Pasupatheeswarar Temple at Kottathur, Trichy, Tamilnadu
கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்...

திருமணத்தில் #
வரதட்சணை என்றும்...

திருமண விலக்கில் #
ஜீவனாம்சம் என்றும்...

விபத்துகளில் இறந்தால் #
நஷ்டஈடு என்றும்...

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
#
தர்மம் என்றும்...

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #
தானம் என்றும்...

திருமண வீடுகளில் பரிசாக #
மொய் என்றும்...
     
திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #
கடன் என்றும்...

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #
அன்பளிப்பு என்றும்...

விரும்பிக் கொடுத்தால் #
நன்கொடை என்றும்...
     
நீதிமன்றத்தில் செலுத்தினால் #
அபராதம் என்றும்...
      
அரசுக்குச் செலுத்தினால் #
வரி என்றும்...

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #
நிதி என்றும்...
      
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #
சம்பளம் என்றும்...
India's New Currency Design: An Analysis of the New Currency in India
தினமும் கிடைப்பது #கூலி என்றும்...
    
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #
ஓய்வூதியம் என்றும்...

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #
லஞ்சம் என்றும்...
     
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#
அசல் என்றும்...

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது #
வட்டி என்றும்...

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு #
முதலீடு என்றும்...

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #
இலாபம் என்றும்...
     
குருவிற்குக் கொடுக்கும் போது #
குருதட்சணை என்றும்...

ஹோட்டலில் நல்குவது #
டிப்ஸ் என்றும்...

இவ்வாறு பல பெயர்களில்
கைமாறும் இந்தப் #பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
தங்கம் ஏன் மதிப்பு வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது? - Quora
இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...

சிலர்
அன்பை இழக்கின்றனர்...

சிலர்
பண்பை இழக்கின்றனர்...

சிலர்
நட்புகளை இழக்கின்றனர்...

சிலர்
உறவுகளை இழக்கின்றனர்...

சிலர்
கற்பை இழக்கின்றனர்...

சிலர்
கண்ணியத்தை இழக்கின்றனர்...

சிலர்
மார்க்கத்தை இழக்கின்றனர்...

சிலர்
மனித நேயத்தை இழக்கின்றனர்...

சிலர்
வாலிபத்தை இழக்கின்றனர்...

சிலர்
வாழ்க்கையையே இழக்கின்றனர்...🙏🙏🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹