நட்பு மங்கும் காலம்…

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips

 9 ஒரு நட்பு அதன் போக்கை இயக்கியதற்கான அறிகுறிகள் மற்றும் இது  பின்வாங்குவதற்கான நேரம்

நட்பு மங்கும் காலம்…
(Friendship Recession)


மனித உறவுகளுக்கான ஓர் எச்சரிக்கை பதிவு

இன்று உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

தொழில்நுட்பம் வளர்கிறது…
வசதிகள் பெருகுகின்றன…
தொடர்புகள் அதிகரிக்கின்றன…

ஆனால், அமைதியாக நம்மிடமிருந்து விலகிச் செல்லும் ஒரு அரிய செல்வம் இருக்கிறது…
Dear Therapist: I've Been Dumped by My Friends - The Atlantic
அது – உண்மையான நட்பு.

சமீபத்திய ஆய்வுகள் உலகம் முழுவதும் “Friendship Recession” எனப்படும் நட்பு மங்கும் காலம் உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு காலத்தில் வாழ்க்கை நண்பர்களால் நிறைந்திருந்தது.
இன்று அது வெறும் தொடர்புப் பட்டியலாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆய்வுகள் கூறுவது…

*1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, “எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை” என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்போர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

இந்தியாவின் நகரங்களிலும் இதே நிலைதான். பழக்கமானவர்கள் அதிகம்… ஆனால் மனம் திறந்து பேசக்கூடியவர்கள் குறைந்து வருகின்றனர்.

முன்பெல்லாம் கஃபே, கிளப், பொதுநிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் புதிய நட்புகள் மலர்ந்தன. இன்று ஆயிரம் பேரின் நடுவிலும் பலர் தனிமையை உணர்கிறார்கள்.
My TikTok On Friendship Breakups Went Viral. Here's What We Can All Learn
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் தனியாக உணவருந்துபவர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.

நட்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் நட்பைப் பற்றிய சிறப்புப் பாடநெறியையே அறிமுகப்படுத்தியுள்ளது.

இது வெறும் சமூகப் பிரச்சினை அல்ல…

மனிதநேயத்தை சோதிக்கும் ஒரு கலாச்சார மாற்றம்.

நட்புக்காக நேரம் ஒதுக்குவது இனி ஒரு ஆடம்பரம் அல்ல…

அது வாழ்க்கையின் அவசியம்.

தனிமை மெதுவாக ஒரு வாழ்க்கை முறையாக மாறிக் கொண்டிருக்கிறது.

நாம் நட்பை மதிக்கத் தவறினால், புதிய நண்பர்களை மட்டுமல்ல… பல ஆண்டுகளாக நம்முடன் பயணித்த உறவுகளையும் இழந்து விடுவோம்.

ஆய்வுகள் மேலும் சொல்கின்றன…
How to Get Over a Friendship Breakup | Evolve Treatment
❤️ தனிமை இதய நோய், மறதி நோய் (Dementia), மற்றும் இளவயது மரண அபாயத்தை அதிகரிக்கிறது.

❤️ நீண்டகால தனிமையின் தாக்கம், ஒரு நாளுக்கு 15 சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

❤️ மனநலம், உடல்நலம், உணர்வுநலம் – இவை அனைத்திற்கும் நல்ல நட்பு ஒரு பாதுகாப்புக் கவசம்.

❤️ 80 ஆண்டுகளாக நடைபெற்ற ஹார்வர்டின் புகழ்பெற்ற ஆய்வு கூறுவது:

நீடித்த ஆரோக்கியத்திற்கும், உண்மையான மகிழ்ச்சிக்கும் காரணம் பணமோ புகழோ அல்லஆழமான மனித உறவுகள்தான்

பணம் மீண்டும் சம்பாதிக்கலாம்…

பதவிகள் மாறலாம்…

புகழ் வந்து போகலாம்…

ஆனால்…

நீங்கள் விழும்போது கையைப் பிடித்து எழுப்புபவர்
True Friendship (Short 2015) - IMDb
நீங்கள் வெற்றி பெறும்போது மனதார மகிழ்பவர்…
Friendship Handmade Painting
நீங்கள் பேசாமல் இருந்தாலும் உங்கள் மனதைப் புரிந்துகொள்பவர்…

அவர்தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான செல்வம்.
19 Friends ideas | village scene drawing, childhood memories art, human  figure sketches
ஒரு சிறிய வேண்டுகோள்…

நண்பர்களை வெறும் Contact List-ஆக மாற்றிவிடாதீர்கள்.

நேரம் ஒதுக்குங்கள்

தேடிப் பேசுங்கள்

சிறு தவறுகளை மன்னியுங்கள்…

சந்தித்து சிரியுங்கள்…

ஒன்றாக நினைவுகளை உருவாக்குங்கள்

ஒரு “நலமா?” என்ற தொலைபேசி அழைப்புகூட ஒரு உறவை உயிர்ப்பிக்க முடியும்.

ஏனெனில்…
Children playing Childhood Memories
வாழ்க்கையின் உண்மையான செல்வம் நாம் சேர்த்த சொத்துகளில் இல்லை…

நம் இதயத்தில் இடம்பிடித்த மனிதர்களில்தான் இருக்கிறது.

பணம் வாழ்க்கையை வசதியாக்கலாம்…

ஆனால்…

ஒரு நல்ல நண்பர்தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்.

நல்ல நண்பர்களை மதியுங்கள்

அவர்கள்தான் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமும், அழியாத செல்வமும்.

உங்கள் நண்பரை இன்றே தொடர்புகொள்ளுங்கள்…
ஒரு அழைப்பு… ஒரு சந்திப்பு… ஒரு புன்னகை…
ஒரு உறவை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.

நட்பை பேணுங்கள் 
உறவுகளை பேணுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

படித்ததில் சிந்திக்க வேண்டிய பதிவு என்றும் 
அன்புடன்
நட்பை போற்றும் நண்பர்கள் 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

அவமானம் தாங்கப் பழகு…

மணக்கால் அய்யம்பேட்டை | 11:11 AM | Best Blogger Tips

 கவிதைகள் உலகம்: அவமானம்

 

✨ இன்றைய சிந்தனை: அவமானம் தாங்கப் பழகு…



வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள, தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது.
thiravukol ...: அவமானம் தாங்கப் பழகு
வெற்றி என்றதும், பிறரால் அவமானப்படுத்தப்படுவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்குச் சொல்லிக் கொடுத்துவிடும். அடுத்தவரின் உண்மையான முகம், நாம் அவமானப்படும்போது தெரியும்.
அவமானம்: சமூக கவலையில் அடிக்கடி புறக்கணிக்கப்பட்ட மூலப்பொருள்
யார் நண்பர்,
யார் நண்பர் அல்லாதவர்,
யார் நல்லவர்,
யார் கெட்டவர்,
அவருடைய உண்மையான முகம் எது?

என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தல்களுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை மிக வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
அவமானம்.. ✨, #life #lifelessons #lifequotes #truefacts #edits #trending  #tamilwhatsappstatus #tamilstatus #truelines #truespeech #truewords #music  #viralvideos #villageboys #instagram #insta ...
நம்மை அவமானப்படுத்தச் செயல்படும் பலர், இவற்றை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி, பின்னால் நின்று இயக்குகிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வைக் கண்டு பொறாமைப்படத் தொடங்குகிறார்கள். அநேகமாக, அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப்படுத்துகிறார்கள்.

எப்போதும் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.

"என்கூட பம்பாயில் பிளாட்பாரத்துல வியாபாரம் பண்ணிட்டு, இன்னிக்கு ஒரு கடைக்கு முதலாளியாயிட்டா விட்டுருவோமா? உதைப்போம்."

"உன்னைப் போய் முதலாளின்னு கூப்பிடுறாங்களே, எனக்கு வயிறு எரியுது" என்று சண்டை போட்ட மனிதர்களை நான் அறிவேன்.
Lankavisiri - அவமானம் தாங்கப் பழகு ...
கடைக்கு முதலாளி ஆனவனுடைய உழைப்பும், கம்பீரமான காத்திருத்தலும், பிளாட்பாரத்தில் விவரம் கெட்டத்தனமாய் அலைகிறவனுக்குப் புரியவில்லை.

நன்றாக வளர்ந்த பிறகும், ஒரு வம்பு சண்டைக்காரனுடன் மல்லுக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் நாலு பேருக்குப் பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.

இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த அவமானத்திற்குப் பயந்துவிடக் கூடாது.

என்ன செய்ய வேண்டும்?

கோபப்பட வேண்டும்; நிதானமாகக் கோபப்பட வேண்டும்.

பாரதி, "ரௌத்திரம் பழகு" என்று சொல்கிறார். ரௌத்திரம் என்ற வடசொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம். வெறும் சினம் அல்ல; மிகக் கடுமையான சினம்.
thiravukol ...: அவமானம் தாங்கப் பழகு
காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு, அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.

அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும், உறவுகளால் ஏற்பட்டாலும், அந்நியர்களால் ஏற்பட்டாலும், நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.

எதனால் இது?
எங்கு தவறு?
வேண்டுமென்றே செய்யப்படுகிறதா?
அல்லது, விவரமில்லாத விஷயமா?

என்பதை யோசித்து, மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.

எதிர்க்க முடியாத சூழலில், எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில்கூட உங்களுக்குக் கடும் அவமானம் ஏற்படும். அப்போது, அவமானத்தை நன்கு அனுபவியுங்கள்.

அவமானப்படுத்துதலைப் புரிந்து கொண்டு, அதற்கு அழாது, கண்ணீர் விட்டுக் கதறாது, உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள்.

மகாகவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;
மோதி மிதித்துவிடு பாப்பா."
அவமானம்! அவமானம் தாங்கப் பழகு ...
அவருக்கு எதிரே வெற்றி பெற்று, சிரித்து, சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக் குன்றிப் போவார்.

அவருக்கு முன் ஜெயித்து, "நலமா?" என்று விசாரியுங்கள். அவர் மனம் உடனே செத்துப் போகும்.

பழி வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம், நீங்கள் திரும்பத் திரும்ப வெற்றி காண்பதே.

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில், அவமானப்படுங்கள். அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு உரம்; கடுமையான உரம், காரமான உரம்.

"அதனாலென்ன... உரம்தானே?"

தனிமனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போருக்கும் பொறுப்பாளிகள் — நமது சொந்த வாழ்க்கையின் ஆளுமைத்தன்மை, தேசியவாதக் கொள்கைகள், சுயநலம், கடவுள்கள், கருத்துச் சேகரிப்புகள், இலட்சியங்கள் காரணமாக. இவை அனைத்தும் நம்மைப் பிரிக்கின்றன.

நாம் மாறாவிட்டால், தனிமனிதர்களான நீங்களும் நானும் மாறாவிட்டால், இந்த உலகம் மாறாது. இதுதான் உண்மை — நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.

அனைவரது வாழ்விலும் காயங்கள் இருக்கும். அந்தக் காயத்துடனும் சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. காயங்களுடன் சிரிக்க, ஒரு சிலரால்தான் முடிகின்றது.

அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால், எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல.

நாம் கடந்து சென்ற அனைத்தும் வாழ்க்கைக்கான பாதைகள் அல்ல.

கடந்து வந்ததில் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் வாழ்க்கைக்கான பாதைகள்.

ஒருவர் உங்களுடன் பேச நேரம் இல்லை என்றால், நம்பாதீர்கள். அவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே அர்த்தம்.

நன்றி: கே.எஸ். ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்