சூப்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முடக்கத்தான் கீரை சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips
Photo: முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை

முடக்கத்தான் கீரை 
தேவையான உப்பு
தேவையான மிளகுத்தூள்

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்
தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு 

பரங்கிக்காய் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips
பரங்கிக்காய் சூப் 

மருத்துவ குணங்கள்:

பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.
பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

தேவையான பொருள்கள்:

பரங்கிக்காய் = 1 துண்டு
தக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3 பல்
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
பால் =  அரை கப்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி = சிறிதளவு
செய்முறை:

பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.

பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

சூடான ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.

செட்டிநாடு வெள்ளரிக்காய் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:15 PM | Best Blogger Tips
Photo: செட்டிநாடு வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய்	 -	1 கப்
பெரிய வெங்காயம்	 -	1
கார்ன் ப்ளார்	 -	1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர்	 -	300 மி.லி.
கிரீம்	 -	2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்	 -	தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும், பிறகு துருவிய வெள்ளரிக்காயையும் 2 நிமிடம் வதக்கவும். பின்பு கார்ன் ப்ளாரையும் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதன் பின்பு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், கிரீமைச் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.

மற்றொரு முறை:

வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1
மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி
பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

வெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

பேரிச்சம்பழத்தில் சூப்பர் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:15 PM | Best Blogger Tips
Photo: பேரிச்சம்பழத்தில் சூப்பர் சூப்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

இரும்புசத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பேரிச்சம் பழ சூப் செய்ய தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம் – 5
வெள்ளரிக்காய் – 1
கேரட் – 2
தேங்காய் – 2 கீற்று
புதினா இலை – 5
மிளகு – 2
பச்சை மிளகாய் -1
மல்லி இலை – சிறிது

செய்முறை:
பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், புதினா இலை ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இந்த கலவை அரைந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வடிகட்டவும். பின்னர் விழுதுடன் மேலும் தண்ணீர் விட்டு இரண்டாவது சாறு எடுத்துகொள்ளலாம்.

பிழிந்த சாறை கொதிக்க விடவும்.கடைசியில் அரைத்து வடித்து எடுத்த விழுதை அதில் சேர்த்து கலக்கலாம். பின்னர் மல்லி இலை, உடன் இரண்டு முழு பேரிச்சை தூவி இறக்கவும்.

சோயா பால் தயாரிக்கும் முறை !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:07 PM | Best Blogger Tips

Via FB ஆரோக்கியமான வாழ்வு

கொள்ளுப்பால்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:02 PM | Best Blogger Tips

பூண்டு சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:01 PM | Best Blogger Tips

Via FB ஆரோக்கியமான வாழ்வு

உடல் கொழுப்பு கரைக்கும் முட்டைகோஸ் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:59 PM | Best Blogger Tips

Via FB ஆரோக்கியமான வாழ்வு

கெட்டக் கொழுப்பைக் குறைக்கும் வாழைத்தண்டு சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:58 PM | Best Blogger Tips
Via FB ஆரோக்கியமான வாழ்வு

நெல்லிக்காய் மோர் (எனர்ஜி டிரிங்)

மணக்கால் அய்யம்பேட்டை | 3:58 PM | Best Blogger Tips
Via FB ஆரோக்கியமான வாழ்வு

ஆரோக்கியத்தை தரும் கேரட் சூப்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:57 PM | Best Blogger Tips
Via FB ஆரோக்கியமான வாழ்வு

உடல் கொழுப்பு கரைக்கும் முட்டைகோஸ் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips
Photo: உடல் கொழுப்பு கரைக்கும்
முட்டைகோஸ் சூப்

தேவையானவை: 

முட்டைகோஸ் - கால் கிலோ 
மிளகு - அரை டீஸ்பூன் 
சீரகம் - ஒரு டீஸ்பூன்  
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு. 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 
மிளகு தூள் - 1/2 ஸ்பூன் 

செய்முறை: 

* முட்டைகோஸை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம் போட்டு தாளித்து பின் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். 

* பிறகு, 1 கப் தண்ணீர் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். 

* வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து மிதமான சூட்டில் பரிமாறவும். 

குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.

கேபேஜ் டயட் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:12 PM | Best Blogger Tips
Photo: கேபேஜ் டயட் சூப்

தேவையான பொருட்கள்.....  

கோஸ் - 100 கிராம்  
காலிஃப்ளவர் - கால் பாகம்  
ப்ரோகொலி - கால் பாகம்  
கேரட் - ஒன்று  
தக்காளி - ஒன்று  
காளான் - 10  
குடை மிளகாய் - பாதி  
செலரி - ஒன்று  
ஸ்ப்ரிங் ஆனியன் - 4  
கொத்தமல்லித் தழை - சிறிதளவு  
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி  
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி  
உப்பு - தேவையான அளவு 

செய்முறை......   

•  கோஸ், காலிஃப்ளவர்,  ப்ரோகொலி, கேரட், தக்காளி, காளான், குடை மிளகாய், செலரி, ஸ்ப்ரிங் ஆனியனை வேண்டிய அளவில் நறுக்கிக் கொள்ளவும். 

• பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி 2 நிமிடம் கழித்து, ஸ்ப்ரிங் ஆனியனையும், குடைமிளகாயையும் போட்டு வதக்கவும். 

• அடுத்து ஐந்து நிமிடம் கழித்து காளான் மற்றும் கோஸை சேர்த்து வதக்கவும். 

• பின்னர் ப்ரோகொலி மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விடவும். 

• மேலும் செலரி மற்றும் கேரட்டை சேர்த்து 15 கப் தண்ணீர் ஊற்றி ஸிம்மில் 45 நிமிடம் வரை நன்கு மூடி வைக்கவும்.     

• காய்கறிகள் நன்கு வெந்து, அதில் உள்ள சத்து நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். 

• டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத் தூளும் கம்மியாக போடவும்.

Via  ஆரோக்கியமான வாழ்வு

முளைக் கொள்ளு சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:52 PM | Best Blogger Tips

Photo: முளைக் கொள்ளு சூப்

தேவையான பொருட்கள்
முளைக் கொள்ளு பால்  - 100 மி.லி
தண்ணீர்  - 200 மி.லி
காரட், தக்காளி, வெங்காயம்,
பீன்ஸ், மல்லி, கருப்பிலை, புதினா
இஞ்சி, பூண்டு எல்லாம் கலந்த - 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள், அல்லது
தேன், வெல்லம்  - 25 கிராம்

முளைக் கொள்ளுப் பால் செய்முறை

எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து எட்டு முதல் பதினாறு மணி நேரம் ஈரத்துணியில் வைத்துக் கட்டினால் நல்ல வெள்ளை முளை வரும். இதை எடுத்து நீர் கலந்து அரைத்தால் முளைப்பால் ஆகும்.

செய்முறை

எல்லாக்காய்கறி, கீரைகளைக் கழுவி தோல் சீவி காரட் திருகல் போல் செய்து நீரில் கலந்து சூடுசெய்யவும். கொதி நிலையில் மெதுவாக முளைக் கொள்ளுப்பாலை மெதுவாகக்கலக்கிய படி வேகவிடவும். இனிப்பு அல்லது மிளகுசீரகத்தூள் கலந்து சூடு ஆறும் முன் வடிகட்டியும் வடிகட்டாமலும் சாப்பிடலாம். 

(காரம் தேவையென்றால் மிளகு, சீரகத் தூள் சேர்க்கலாம். இனிப்பு தேவையென்றால் தேன், வெல்லம் சேர்க்கலாம்)

நன்றி ஆரோக்கியமான வாழ்வு
 
உடலுக்கு வலிவு தரும் சூப்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:21 PM | Best Blogger Tips

Photo: உடலுக்கு வலிவு தரும் சூப்கள்

நெல்லிக்காய்

விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

நெல்லிக்காய் சூப்

தேவை

நெல்லிக்காயை வேகவைத்த
தண்ணீர் – 4 கப்
கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

வில்வம்

இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.

வில்வ சூப்

தேவை

வில்வ இலை – 1 கப்
(அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
இஞ்சி, பூண்டு – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கம்பு மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

ஆவாரம் பூ

அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

ஆவாரம் பூ சூப்

தேவை

ஈர ஆவாரம்பூ – 1 கப்
(அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 250 மி.லி
கேரட் – 1
பீன்ஸ் – 5
தக்காளி – 1
வெங்காயம் – சிறிது
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
கொத்தமல்லி, புதினா – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை

கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

முடக்கற்றான்

இதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.

முடக்கற்றான் சூப்

தேவை

முடக்கத்தான் கீரை – 1 கப்
துவரம் பருப்பு  - 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
புளி – எலுமிச்சை அளவு
பெருங்காயம் – சிறிதளவு
பூண்டு – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
நெல்லிக்காய்

விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

1. நெல்லிக்காய் சூப்

தேவை

நெல்லிக்காயை வேகவைத்த
தண்ணீர் – 4 கப்
கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

வில்வம்

இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.

2. வில்வ சூப்

தேவை

வில்வ இலை – 1 கப்
(அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
இஞ்சி, பூண்டு – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கம்பு மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

ஆவாரம் பூ

அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

3. ஆவாரம் பூ சூப்

தேவை

ஈர ஆவாரம்பூ – 1 கப்
(அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 250 மி.லி
கேரட் – 1
பீன்ஸ் – 5
தக்காளி – 1
வெங்காயம் – சிறிது
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
கொத்தமல்லி, புதினா – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை

கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

4. முடக்கற்றான்