மணக்கால் அய்யம்பேட்டை
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.

தியானத்தின் தன்மை

ஐயோ என்னால ஒரு நிமிஷம் கூட கண்ண மூட முடியலயே, என் மனம் என் கட்டுப்பாட்டுலேயே இல்லை, எனக்கு போய் தியானம் வருமா? இதுபோன்ற கேள்விகள் இல்லாமல் தியானம் கற்றுக் கொள்ள வந்தவர்கள் வெகு குறைவு. ஆனால் அனைவருக்கும் தியானம் சாத்தியமே என்கிறார் சத்குரு... பதில் உள்ளே...
கேள்வியாளர் தியானம் என்றால் ஆசையற்ற நிலையா, எண்ணங்கள் அற்ற நிலையா?
சத்குரு:
கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முடியும், ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன.
‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத் தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா?
இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்?
மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாக சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். எனவே ‘மனம்‘ என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள் தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான்.
எனவே தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களை தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல. எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல் தான்.
எந்தவிதமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பம், பெற்றோர், சென்று வந்த பள்ளி, செய்யும் வேலை என்பவற்றைப் பொறுத்தே உங்கள் மனம் இருக்கிறது. இது உங்கள் மனமல்ல. இது நீங்கள் சமூகச்சூழலின் மூலம் சேகரித்த ஒன்று. எனவே நீங்கள் மனமல்ல என்ற தெளிவான இடைவெளியைக் காண்கிறீர்கள்.
எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல, நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு.
வெளியிலிருந்து சேகரித்த உடல், மனம் இவற்றுக்கும் உங்களுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உணர்ந்து நீங்கள் தியானத்தன்மையில் இருந்தால், அவை இரண்டையும் எப்படி உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வீர்கள், அவ்வளவுதான். ஆனால் அதுவே நீங்களல்ல. உங்கள் அனுபவத்தில் இந்த இரண்டோடும் அடையாளம் கொள்ளாமல் இருந்தால், துன்பம் என்பதே இருக்காது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். ஒருவர் விருப்பத்தோடு இருந்தால் நிச்சயம் இது சாத்தியம்.
இந்த சூழ்நிலையை நமக்குள் எப்படி உருவாக்குவது என்பதற்கு ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது. எனவே இதை நாம் எல்லாவகையான மக்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். குற்றவாளிகள், கிராமமக்கள், படிக்காதவர்கள், மெத்தப் படித்தவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் என பலருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
வெளிச்சூழ்நிலை என்று வரும்போது நமது திறமை என்பது வித்தியாசப்படுகிறது. நான் செய்வதை நீங்கள் செய்ய முடியாது. நீங்கள் செய்வதை நான் செய்ய முடியாது. வெளிச்சூழல் திறன் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது. ஆனால் உள்நிலையைப் பொறுத்தவரை, எல்லோரும் ஒரேவிதமான திறனுடன் இருக்கிறோம். நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது.
தியானம் எனும் போது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதற்கான விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? யார் அதை வேண்டாமென சொல்லப் போகிறார்கள்? எல்லோருக்கும் அதுதான் தேவை. ஆனால் பலருக்கும் இதைப்பற்றி தெரியவில்லை என்பதுதான் விஷயம்.
எனவே நமது வேலை, தியானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான். இது ஏதோ மலைக் குகைகளுக்கு செல்வதைப் பற்றியல்ல; இமயமலைக்குச் சென்று அமர்வதைப் பற்றியல்ல; இது, துன்பங்களில் இருந்து முற்றிலுமாய் விடுபட்டு வாழக் கற்றுக் கொள்வது. நீங்கள் விரும்பும் விதமாக வாழ்வோடு விளையாட முடியும். ஆனால் வாழ்க்கை உங்கள் மீது ஒரு சிறு தழும்பைக் கூட ஏற்படுத்தாது.
தற்போது வாழ்வின் போக்கில் மக்கள் காயம்பட்டுக் கிடக்கிறார்கள். அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும், ஒரு நாள் இறந்து போகவும் எவ்வளவு வலியையும் வேதனையையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? ஏனென்றால், இன்னமும் உயிர்த்தன்மையோடு எப்படி தொடர்பு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் தியானநிலையில் இருந்தால் அந்த மனிதனுக்கு துன்பம் என்பதே இருக்காது. தியானநிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் போக்குகள் அவரைத் தொடாமல் அவரது வாழ்வில் அவர் விரும்பியதைச் செய்யலாம்.
கேள்வியாளர் தியானத்தின் பலன்கள் என்ன?
சத்குரு:
பொதுவாக ஒவ்வொரு மனிதரும் விரும்புவது ஆரோக்கியத்தையும் அமைதியையும் சந்தோஷத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ளமுடியும். தியானம் என்ற தன்மை நமக்குள் வந்துவிட்டால், அமைதியும் சந்தோஷமும் இயல்பானவை ஆகிவிடும்.
தியானம் என்பது செயல் அல்ல, அது ஒரு நிலை. வாழ்க்கையே தியானநிலையில் இருக்கவேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏதோ பத்து நிமிடங்களுக்கு கண்ணை மூடி அமர்வதைப் பற்றி நாம் பேசவில்லை. எதைச் செய்தாலும் தியான நிலையில் செய்வதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தன்மையையே நமது வாழ்வில் கொண்டுவர விரும்புகிறோம். அப்படி நடந்தால் ஆரோக்கியமாக இருப்பது, அமைதியாக இருப்பது, ஆனந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கும்.
தியானத்தின் தன்மை அப்படிப்பட்டது. ஒரு மனிதன் இப்படி இருந்தால் அவனது உடல், மன செயல்பாடுகள் ஒருமுகப்பட்டும் கூர்மையுடனும் இருக்கும். ஒரு மனிதர் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் போது மட்டுமே அவரது புத்திசாலித்தனம் சிறந்த முறையில் செயல்படும்.
நன்றி இணையம்
மணைவி ..... ஓரு அற்புதம்

பள்ளியறையில் மட்டுமல்ல
சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு...
மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு
தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..
இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு...
இயலாத நிலையில் அவள் இருந்திடக்
கண்டாலே , உறவுதனைத்
தவிர்த்திடு..
சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும்
போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்...
அவள் கர்ப்பம் சுமைக்கையில்
நீ அவளைச்
சுமந்திடு...
விடுமுறை நாட்களில் காலைவரை அவள்
அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..
உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு
தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே...
தாமதித்து வீடு வந்தால் தகுந்த
காரணம் சொல்...
தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு
கேள்...
வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த
பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..
சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை
கூட்டிச்செல்....
எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி
நீயும் நின்று கொள்..
நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு...
நோவொன்று அவள் கண்டால் தாயாகி
விடு....
உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..
வேளை வரும்போதெல்லாம் வெளியே
அழைத்து செல்..
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்தி கொள்..
அவளொரு குற்றம் செய்தால் அணைத்து
புரிய வை...அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை...
அவளின் நட்புக்களை அவள் தொடற
அனுமதி..
தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே
உறங்கிடு...
சாகப்போற நேரத்திலும் அவள்கை
பிடித்து விடு.....
நன்றி இணையம்
பெண் பிறந்துவிட்டாள்...

கல்யாணம் ஆன
கணவன் மனைவி இடையே ஓரு ஓப்பந்தம்...
இன்று யார்
வந்தாலும் கதவைத் திறக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்...
அன்றே கணவனுடைய அம்மா, அப்பா வந்தனர் இருவரும் அவர்கள் வருவதைப் பார்த்தனர்... இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்துக் கொண்டனர்.. கணவனுக்கு கதவைத் திறக்க வேண்டும் என்ற ஆசை... ஆனால் ,
அக்ரிமெண்ட்
போட்டது நினைவுக்கு வந்தது... அதனால் கதவைத் திறக்கவில்லை அவன்.. அவர்கள் யாரும்
இல்லை என்று நினைத்துப் போய் விட்டனர்.. கொஞ்ச நேரம் கழித்து மனைவியின் அம்மா
அப்பா வந்தனர் கதவைத் தட்டினார்கள் இருவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது. என்னால் கதவைத் திறக்காமல் இருக்க
முடியாது என்று சொல்லிக் கதவைத் திறந்தாள் ஆனால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை..
வருஷங்கள் உருண்டோடின...
அவர்களுக்கு
இரண்டு ஆண் குழந்தைப் பிறந்தது.. மூன்றாவதாகப் பெண் குழந்தைப் பிறந்தது கணவன் பெண்
குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பெரிய அளவில் செலவு செய்து அனைவருக்கும் பார்ட்டி
கொடுத்துக் கொண்டாடினான்.. அதற்கு மனைவி நமக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தப் போது
நீங்கள் இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடவில்லையே ஏன் பெண் குழந்தைப் பிறந்தவுடன்
இவ்வளவு பெரியப் பார்ட்டி கொடுக்கிறீங்க என்றுக் கேட்டாள்...
அதற்குக் கணவன்
ரொம்ப நிதானமாக ஏனெனில் பிற்காலத்தில் எனக்காக கதவைத் திறக்க ஓரு பெண்
பிறந்துவிட்டாள்...
என்றான்
கர்வத்துடன்...
நான் படித்ததில்
பிடித்தது √
மாவீரன் நெப்போலியன்

ஆயுதங்களை
எல்லாம் அகற்றிவிட்டு,நிராயுதபாணியாக
தன் குதிரையிலிருந்து இறங்கி,அமைதியாக
அந்தப் படைகளை நோக்கி நடந்து வருகிறார் அவர்.
முதல்
வரிசை வீரனின் துப்பாக்கி முன் வந்து நின்று,
"இதோ
உங்கள் முன் உங்கள் அரசனாகிய நான் நிற்கிறேன்...சுடுங்கள்...தாராளமாகச்
சுடுங்கள்" என்று அந்த படை வீரனின் கண்ணுக்கு கண் நோக்கி உரத்த குரலில்
கூறுகிறார்.
அடுத்த
நொடி,மொத்தப் படையும் ஆயுதங்களை கீழேப் போட்டுவிட்டு,பேரரசர் வாழ்க என்ற விண்ணைப் பிளக்கும்
முழக்கமிட்டபடி,அவருடன் மீண்டும் சேர்ந்து
கொள்கிறது.
தன்னை
உயிருடனோ,பிணமாகவோ கொண்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட
அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்கி மீண்டும் தன் நாட்டின் தலைநகருக்குள் நுழைகிறார் அவர்.
மன்னர்
வாழ்க என்ற கோஷத்தில் தலைநகரம் அதிர்கிறது.
"அவர்
ஒருவர் போதும்.நாற்பதாயிரம் படைவீரர்களுக்குச் சமம் அவர்."--இது அவருடனான
இறுதிப் போரில்-அவரை வென்ற தளபதி வெலிங்கடன் தன் கைப்பட எழுதி வைத்த கூற்று.
"அவரைக்
கைது செய்து 2000 கி.மீ தொலைவில்,ஒரு
தனித்தீவில் அடைத்த பின்பும்,எங்கே
தப்பி வந்து,மீண்டும் படை திரட்டி
விடுவாரோ" என்ற பதட்டம் அவருடைய எதிரிகளுக்கும்,எப்படியும் நம் மன்னர் தப்பிவிடுவார்,தப்பிவந்து மீண்டும் நம் நாட்டை ஆள்வார் என்ற
நம்பிக்கை அவருடைய சொந்த நாட்டு மக்களுக்கும் அவரது மரணம் வரை இருந்தது.
"அவருடன்
பேச்சுவார்த்தை மட்டும் நடத்தாதீர்கள்.ஐந்தே ஐந்து நிமிடம் அவர் பேசினாலே
போதும்.ஆயதங்களே தேவையில்லை,எப்பேற்பட்ட
நெஞ்சுரம் கொண்ட தலைவரையும் வீழ்த்தி விடுவார்" என்று அவரை எதிர்த்துப்
போரிட்ட மற்றொரு நாட்டு தளபதி தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி தன் நட்பு நாடுகளுக்கு
அனுப்பி வைத்ததாக ஒரு செய்தி உண்டு.
இந்திய
தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து,அன்றைய
இந்தியாவின் கிழக்கு வாயிலான பர்மா வரையிலும் வந்து-இனி அடுத்து டெல்லி தான் என்ற
நிலையில் மர்மமாக முடிந்து போன நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையைப் போன்றது
தான் "அவருடைய" வாழ்க்கையும்.
யார்
அந்த அவர்?
அவர்
தான்,ஐரோப்பாவின் எங்கோ ஒரு மூலையில்,ஒரு சிறு தீவில்,சாதாரண குடும்பத்தில் பிறந்து,அடிப்படை சிப்பாயாக பிரான்ஸ் இராணுவத்தில்
சேர்ந்து-தன் சுய திறமையால் முன்னேறி,இறுதியில்
அந்நாடிற்கே பேரரசனாக மாறி-ஒட்டு மொத்த உலகையே கிடுகிடுக்க வைத்த
ஆட்சியாளர்-இராணுவத் தளபதி,
"நெப்போலியன்
போனப்பார்ட்"
பிரான்ஸின்
நாட்டின் தலையெழுத்தை மட்டுமல்ல,சூரியன்
எங்கள் நாட்டில் மறைவதேயில்லை என்று இறுமாப்புடன் திரிந்த இங்கிலாந்துப் பேரரசின்
இடுப்பில் ஓங்கிக் குத்திய மாவீரன்.
தன்
இறுதி யுத்தமான வாட்டர்லூ போரில் மட்டும் நெப்போலியன் வென்றிருந்தால்,இன்று ஐரோப்பாவின் தலைமையகமாக பிரான்ஸ்
இருந்திருக்கும்.இந்தியாவில் இருந்து நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னமே
இங்கிலாந்து வெளியேற்றப்பட்டு,இந்தியா
பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகயிருக்கும்.இங்கிலீஷ் என்ற மொழிக்கு இவ்வளவு
முக்கியத்துவம் இருந்திருக்காது.இங்கிலாந்து என்ற நாடும் இருந்திருக்காது.ஒருவேளை
ஐரோப்பா என்ற ஒரு கூட்டமைப்பே கூட உருவாகாது கூட போயிருக்கும்.
இப்படி
எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.......
அத்தனையையும்
நடக்க விடாமல்,உலக வரலாற்றை வேறு பாதைக்குத்
திருப்பிய,
மாவீரன் நெப்போலியன் போனபார்ட் மறைந்த தினம்
நன்றி இணையம்