உயர்வுக்கு வேண்டியது உழைப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:04 PM | Best Blogger Tips

கடின உழைப்பும் கனிவான ஓய்வும்! | Hard work and gentle rest!

உயர்வுக்கு
வேண்டியது உழைப்பு. 

சார்லஸ் ஸ்வாப் என்பவர்
பல இரும்பாலைகளுக்குச் சொந்தக்காரர். 
ஒருமுறை பகல் உணவு இடைவேளையின் போது ஆலைகளைப் பார்வையிடச் சென்றார். 
அப்போது பல தொழிலாளர்கள் இயந்திரங்களுக்கு அருகிலேயே நின்று புகைபிடிப்பதைக் கண்டார். அவர்கள் தலைக்கு மேலேயே
புகை பிடிக்காதீர்கள் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.
உழைத்து வாழ வேண்டும்.. #உழைப்பேஉயர்வு #வெற்றி #உண்மை
இருப்பினும் சார்லஸ்
'மேலே போர்டு இருக்கிறதே புகை பிடிக்கக்கூடாது என்று? உங்களுக்கு அறிவில்லையா? படிக்கத் தெரியாதா? என்றெல்லாம் கத்தவில்லை. மாறாக தன் பையிலிருந்த விலையுயர்ந்த சுருட்டுப் பெட்டியை எடுத்துப் பிரித்து 

How Charles Schwab Got His Workers To Produce More Steelஅங்கிருந்தவர்களுக்கு ஒவ்வொன்று எடுத்துக் கொடுத்து 'ரொம்ப அருமையான சுருட்டு இது. பிடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், ஆனால் இதை நீங்கள் இங்கேயே புகைக்காமல் வெளியே சென்று பிடியுங்கள்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
PartingLINE Blog Posts tagged with iron-casting | Waupaca FoundrySustainable resolve - Recycling Today
தொழிலாளிகளுக்கு ஒரே வெட்கம். அன்றைய தினத்திலிருந்து ஆலைக்குள் எவரும் புகைப்பிடிக்கவேயில்லை. சார்லஸின் சாதுர்யம் எதிர்பார்த்த பலனைத் தந்து விட்டது.
உழைப்பு என்றும் வீணாவதில்லை - TAMIL ENTREPRENEUR
ஜான் வானகர் என்பவருடைய சாதுரியத்தைப் பாருங்கள், பிலடெல்பியாவில் பல பெரும் அங்காடிகளுக்குச் சொந்தக்காரர். தினந்தோறும் எல்லா அங்காடிகளையும் பார்வையிடுவார். அப்படி ஒருமுறை வந்தபோது, ஒருபெண்மணி ஒரு கடையில் கவனிப்பாரற்று நிற்பதைக் கண்டார். அந்தக் கடையைக் கவனிக்க வேண்டிய ஆசாமியோ கொஞ்ச தூரத்தில் மற்ற தொழிலாளர்களுடன் நின்று கொண்டு அரட்டையடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
Top Supermarkets in John Nagar Koramangala - Best Grocery Stores near me -  Justdial
ஜான் டக்கென்று அந்தக் கடையில் நுழைந்து, 'மன்னியுங்கள். நான் சற்று வேலையாய் இருந்து விட்டேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறி அந்தப் பெண்மணி வாங்கிய பொருள்களுக்கு ரசீது போட்டு பணம் வாங்கிக் கொண்டார். இதைக்கண்ட சிப்பந்தி அன்றைய தினத்திலிருந்து அனாவசிய அரட்டை அடிப்பது கிடையாது.
நம் குறைகளை பிறர் சுட்டிக்காட்டும்போது ஏற்படுமுணர்வு
பிறர் செய்யும் தவறுகளை நேரிடையாய்ச் சுட்டிக் காட்டினால் தானே மன வருத்தம். அதை அவர்
உணரும் வண்ணம் மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டுவதும் ஒரு சாதுர்யம் தான். 

"கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"

 _*
மின்மினிப்பூச்சி
பறக்கும்போதுதான் பளபளக்கிறது.*_
மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

 _*செய்யும் செயலில்
முழுக் கவனம் செலுத்தினால்.*_
_*அடுத்தவரை குறை சொல்ல
நேரமும் இருக்காது..மனமும் இருக்காது.*_

 அழிவைத் தருவது ஆணவம் ஆபத்தைத் தருவது கோபம்
_*இருக்க வேண்டியது பணிவு
இருக்கக் கூடாதது பொறாமை*_
_*செய்ய வேண்டியது உதவி
செய்யக் கூடாதது துரோகம்*_
உயர்வுக்கு வேண்டியது உழைப்பு
*நழுவ விடக் கூடாதது வாய்ப்பு. *

தடம்புரண்டு போனாலும் தன் பாதையை மறப்பதில்லை தண்டவாளங்கள்.

கடமைக்குத் தான் பேசுகிறார்கள்
என்று தெரிந்த பிறகு
உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு.

தனிமைக்கு அஞ்சாதீர்கள்.
யாரிடமும் கெஞ்சி காத்திருக்காதீர்கள். நிலையான உறவு இல்லை உலகில். உங்கள் நிழலும்
உங்களை விட்டு நீங்கும் இருளில்.

வாக்கு சுத்தமாக இருந்தால் வாழும் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசாதே.

எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக்கொண்டால்
உங்கள் வாழ்க்கை 
ஏமாற்றம் இல்லாமல் நகரும். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and mountain🌷 🌷🌷 🌷