"மனதைத் தொட்ட வரிகள்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:06 | Best Blogger Tips

"மனதைத் தொட்ட வரிகள்"

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். 


ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் @[297395707031915:274:Relaxplzz]


Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.


Via  ரிலாக்ஸ் ப்ளீஸ் 

ருது ஜாதகம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:02 | Best Blogger Tips


ருது என்பதற்கு பூப்பு எய்தல்' என்றும் ' சமைதல் ' என்றும் 'திரட்சி' என்றும் கூறுவர்.ருது ஜாதகம் என்பது கர்ப்ப பைக்குள் நவ கிரக நட்சத்திர சக்திகள் வியபிப்பது ஆகும்.பெண்ணின் ஜெனன ஜாதகத்திலேயே கணவன், குழந்தை, விதவைதனம், மலட்டுத்தனம், சோரத்தனம் முடிவாகிவிடும்.

ஆண்,பெண் ஜெனன ஜாதகமே முக்கியம் ஆகும்.ருது ஜாதகம் பெண்ணின் உடலை பற்றியதே ஆகும்.பெண் ஜெனன ஜாதகத்தில் புத்திரம், கணவன் ஸ்தானம் கேட்டு பொய் இருந்தால் ருது ஜாதகத்தில் அதேனும் மாற்றம் இருக்கிறதா என் காணலாம்.

ஒரு பெண்ணின் ருது ஆகப்போகும் நேரத்தை ஜெனன ராசியின் அடிப்படையில்,கோசாரத்தில் சந்திரன்,செவ்வாய் இதன் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டு அறியலாம்.

ஜெனன ஜாதகம் இல்லாத பெண்கள் ருது ஜாதகத்தை திருமண பொருத்தத்திற்கு பயன்படுத்தலாம்.பெரும்பாலன பெண்களுக்கு ருதுவான சரியான நேரத்தை சொல்லதெரிவதில்லை.இதனால்தான் ருது ஜாதகங்கள் சரியாக கணிக்கப்படுவதில்லை.

பொதுவாகவே ருதுவாகும் பெண்கள் பயங்கரமான குழப்பநிலையுடனும்,அச்சத்துடனும
் இருப்பார்கள் அவர்களின் அச்சத்தையும்,குழப்பத்தையும் போக்கவே பூப்புனித நீராட்டுவிழா செய்கின்றனர்.‘இளம்பெண்ணே! பயப்படாதே! உனது உடலில் நிகழ்ந்துள்ள மாற்றம் மகிழ்ச்சிக்குரியது’ என்பதை உணர்த்தவே இந்த விழா நடத்தப்படுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

தீராத வியாதிகளையும் தீர்க்கலாம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:09 | Best Blogger Tips

நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


சோரியாசிஸ் குணமாகும்!


சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்.

நெஞ்சு வலியா?

அடிக்கடி நெஞ்சு வலியா? ஆனால் பரிசோதனையில் இதயம் நன்றாக இருக்கிறதா? இந்த நிலையில் மாதுளம்பழம், திராட்சைப்பழம் முதலியவற்றை வீட்டிலேயே சாறாக்கி அருந்தி வரவும். கொலாஸ்ட்ராலை மாதுளம் பழமும், நெஞ்சு வலியை திராட்சை சாறும் நீக்கிவிடும். 35 வயதுக்கு மேல் ஃபாஸ்ட் புட் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் இதயநோய் அதிகரித்து வருவதற்கு துரித உணவு வகைகளும் காரணமாக இருக்கினறனவாம்.

பெண்களுக்கு வாழைப் பூ!

மாதவிலக்குக் கோளாறுகள் உள்ளவர்கள் அவிக்கப்பட்ட வாழைப் பூவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தப் போக்குக் கட்டுப்படும். ஒழுங்கற்ற மாதவிலக்கை அறுபது கிராம் பீட்ரூட் குணமாக்கும். அறுபது கிராம் பீட்ரூட்டைச் சாறாக்கித் தினமும் அருந்தவும். மாதவிலக்கு நேரத்தில் இதைப் போல் மூன்று முறை தினமும் அருந்தவும். இல்லையெனில் சுக்குக்காபி அருந்திவரவும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கப் பசும்பால் அருந்துவதும் நல்லது.

எலுமிச்சம் பழச்சாறும் அதில் சேர்க்கப்படும் ஒரு தேக்கரண்டித் தேனும் உடல் பருமனை மிக வேகமாகக் குறைக்கவல்லவை. இதனால் உடலுக்கும் சக்தி கிடைக்கும். ஆனால், இதனுடன் பசிக்கிறதே என்ற கண்டதையும் தின்றால் பலன் ஏதும் இராது.

தயிரைக் குறைக்கலாமா?
உடலில் விஷத்தன்மை ஏறாமல் இருக்க தயிர் உதவுகிறது. தினமும் தயிர் சேர்த்து வந்தால் குடல் பாதை ஆரோக்கியமாக இருக்கும். இது மற்ற உணவு வகைகளிலிருந்து உடலில் சேரும் தாது உப்புக்களை உடல் நன்று உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. மேலும் எல்லா உறுப்புகளும் தயிர் மூலம் விஷத்தன்மை சேராமல் தடுக்கப்படுவதால் இளமையும் தொடர்கிறது. இதனால் வயோதிகத்தையும் தள்ளிப்போடலாம். இந்த உண்மைகளை நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி மெச்சினி கோஃப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேகவேகமாக எப்போதும் நடக்கப் பழகி கொண்டால் மூட்டுவலி, தசைவலி குறையும். எலும்பு மெலியும் ஆஸ்டியோ போரோசிஸ் நோயும் முன் கூட்டியே இதனால் தடுக்கப்படும்.

வள்ளிக்கிழங்கு நல்லதா?


தினமும் நமக்குத் தேவையான அதிமுக்கியமான வைட்டமின், அஸ்கார்பிக் அமிலம் எனற் வைட்டமின்தான். இதை எல்லோரும் ஆரஞ்சு, நெல்லிக்காய் மூலம் பெறலாம். ஆனால் இவ்விரண்டையும் எப்போதாவது சாப்பிடுகிறவர்கள் என்ன செய்வது? சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறிதளவு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்வதுதான் நல்லது. இரண்டிலிருந்தும் ஒரு நாளுக்குத் தேவையான அளவான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. வள்ளிக்கிழங்கில், ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் உள்ளது. வள்ளிக்கிழங்கு சாப்பிடாத நாளில் உருளைக்கிழங்கு சாப்பிடவும். வெளியில் சுற்றுபவர்களுக்கு சிகரெட் புகை, பெட்ரோல் கார்களின் புகை, கதிர்வீச்சுகள் முதலியவற்றால் புற்றுநோய் முதல் கண்நோய் வரை வர வாய்ப்புள்ளது. எனவே, வைட்டமின் சி-யை எல்லா வயதுக்காரர்களும் பெற இந்த இரு கிழங்குகளையும் அடிக்கடி சாப்பிடவும்.

மூளை வளர்ச்சிக்கு அரிய கீரை!

நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, மூளை வளர்ச்சி, சொறிசிரங்கு, வயிற்றுப்புண், வறட்டு இருமல் முதலியவற்றை வல்லாரைக்கீரை விரைந்து குணமாக்கும். வாரம் ஒரே ஒரு நாள் மட்டும் பருப்புடன் சேர்த்த இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அடிக்கடி இக்கீரையைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படலாம். உடலில் வலி வரும். பள்ளிக்குழந்தைகள், இரத்த சோகை நோயாளிகள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், ஆஸ்டியே, போரொசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயால் அவதிப்படும் பெண்கள், கொலாஸ்டிரல் பிரச்சனை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையைச் சாப்பிட்டால் (கொஞ்சம் கசக்கும்) வளமுடன் வாழ நல்ல உடல் நலம் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.


Via  ஆரோக்கியமான வாழ்வு

உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ் கேள்வரகு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:42 | Best Blogger Tips
 
ராகி களி
 
தேவையானப் பொருட்கள் :

இரண்டு பேருக்கு

4 டம்ளர்* தண்ணீர்
2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு

* 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்).


செய்முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.)

பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.களி சூடாக உண்டால் ருசி அதிகம்.

சாப்பிடும் முறை:

களியை சிறு உருண்டையாக உருட்டி தொட்டுக் கொள்ள இருப்பதை தொட்டு அப்படியே விழுங்க வேண்டும் – மென்று சாப்பிட்டால் ருசி இருக்காது.களியில் ஒட்டியிருக்கும் காய் / கறியை வாயில் தனியே பிரித்து மென்று சாப்பிடுதல் தனி சாமர்த்தியம்.

ஆறிய களியில் தயிர் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.சிறு உருண்டையாக பியத்து போட்டு தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கூழ் போல பிசைந்து சாப்பிடுங்கள்.

சாப்பிட்டாச்சா?! என்னது களி கிண்டிய பாத்திரத்தை கழுவ போறீங்களா?! இருங்க பாத்திரத்தில இன்னும் களி ஒட்டி இருக்கு பாருங்க , அதுக்கு என்னவா?! அகா என்ன இப்படி கேட்டுடீங்க.அதுல தண்ணீர் ஊற்றி வைங்க காலைல தயிர் ஊற்றி கூழ் செயது சின்ன வெங்காயம் கடிச்சு குடிச்சு பாருங்க.அதன் ருசியே தனி.

தொட்டுக் கொள்ள :

கீரை கடைசல் , பாசி பயிறு கடைசல் , கோழி / ஆட்டுக் கறி / மீன் குழம்பு என எல்லாமே – எதுவுமே களிக்கு நல்ல கூட்டணிதான்.

குறிப்பு :

1.) பாத்திரம் – குண்டா(வாய் சிறிதான பாத்திரம்) வகையாக இருந்தால் கிளறுதல் எளிது

2.) களி கிண்ட தட்டையான நீளமான மர கரண்டி கடையில் கிடைக்கும் இல்லாவிட்டால் தோசை திருப்பியை உபயோகிக்கலாம்.

3.) உருண்டை / மொத்தை பிடக்க தனி உபகரணம் உண்டு. ஆனால் கரண்டியில் எடுத்து பறிமாறலாம்.

4.) கேள்வரகு – ராகிக்கு பதில் கம்பு / சோள / கோதுமை மாவு சேர்த்தும் களி கிண்டலாம்.

5.) மாவு கட்டி கட்டாமல் கிளற தெரியாதென்றால் , மாவு போட்டு கிளறும் முன் கொஞ்சம் பழைய சாதம் அல்லது சம்பா ரவையை சேர்த்துக் கொள்ளலாம் – மாவு கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.(மாவு அளவை ஏற்றாட்போல் குறைத்துக் கொள்ளவும்.)

6.) சர்க்கரை உள்ளவர்களுக்கு நல்ல உணவு.

ராகி இட்லி

தேவை

புழுங்கலரிசி-2கப்
ராகி-1கப்
வெந்தயம்-10கிராம்
உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)
உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்.
உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.


ராகி உளுந்து தோசை


தேவை

ராகி மாவு-4கப்
வெள்ளை உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப
புளித்த தயிர்-மாவு ஊறவைக்கத் தேவையான அளவு


செய்முறை
உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ராகி மாவை லேசாகப் புளித்த கட்டித் தயிரில் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நுரைக்க அரைத்து கடைசியில் ஊற வைத்த மாவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எடுத்து, மாவு பொங்கி வருவதற்காக மறுநாள் காலை வரை மூடி வைக்கவும்.
மறுநாள் நன்றாகக் கலந்து விட்டு மசால் தோசை போல மத்தியில் சட்டினி பூசி, ஏதாவது மசாலா வைத்து பரிமாறலாம்.
வெங்காயம் தூவி ஊத்தப்பம் போலவும் ஊற்றலாம்.

ராகி அடை

தேவை

ராகி மாவு-2கப்
சோயா மாவு-1/4கப்
தண்ணீர்-21/2கப்
எண்ணெய்-சுடுவதற்கு
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-11/2 டீஸ்பூன்
உருவிய முருங்கை இலை-1/2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2கப்


செய்முறை
தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி உப்பு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
நன்றாகக் கொதிக்கும் போது, தணலைக் குறைத்து மாவைக் கொட்டி கிளறி உடனே அடுப்பில் இருந்து கீழே இறக்கவும்.
கை பொறுக்கும் சூடு வரும் போது தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும்.
அதோடு இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, முருங்கை கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எலுமிச்சையளவு மாவை எடுத்து ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி அடை போல் தட்டி கல்லிலே போட்டு இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ராகி பயத்தம் பருப்பு காரப் புட்டு


தேவை
ராகி மாவு-1கப்
பயத்தம் பருப்பு-2டே.ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-2டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்-2
கடுகு-1/2டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி-1டே.ஸ்பூன

செய்முறை

ராகி மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொஞ்சமாகத் தெளித்து பிசறவும்.
இதை பெரிய கண் உடைய சல்லடையில் சலிக்கவும்.
குக்கரின் உள்ளே ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு மேலே மெல்லிய துணியை கட்டி அதில் மாவை பரவலாகப் பரப்பி வைக்கவும். (இட்லி கொப்பரையில் நேரடியாக துணியைக் கட்டியும் வைக்கலாம்)
ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் கைகளால் நன்றாக உதிர்த்து விடவும்.
பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்து வடித்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, சிகப்பு மிளகாய் தாளித்து வேக வைத்த பருப்பு, ராகி மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுக்கவும். கொத்தமல்லி தழையை மேலே பரவலாகத் தூவி பரிமாறவும்.

ராகி இடியாப்பம்

தேவை

ராகி மாவு-1கப்
கோதுமை மாவு-1கப் (ஆவியில் வேக வைத்தது)
கடலை மாவு-1/4 கப்
உப்பு-தேவைக்கேற்ப
சுடுதண்ணீர்-மாவு பிசைய

செய்முறை

கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.
வறுத்த மாவுகளோடு கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். (3 நிமிடங்கள்)
காய்கறி மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.

ராகி ரொட்டி

தேவை


ராகி மாவு-2கப்
நீர்த்த புளிக்கரைசல்-2கப்
பச்சை மிளகாய்-4
உப்பு-தேவைக்கேற்ப
முருங்கைக் கீரை உருவியது-1/2கப்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய்-2டீஸ்பூன்
எண்ணெய்-சுடுவதற்கு

செய்முறை

ஒரு வாணலியில் புளிக் கரைசலை அளந்து ஊற்றி அதில் உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறவும்.

மறுபடியும் அடுப்பின் மேல் வைத்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும்.
முருங்கைக் கீரையை உருவி சேர்க்கவும்.
ஒரு எலுமிச்சையளவு பிசைந்த மாவை எடுத்துக் கொண்டு எண்ணெய் தடவிய வாழையிலையில் தட்டி சூடான தோசைக்கல்லின் மேல் போடவும்.
கைகளால் லேசாகத் தூக்கிவிட்டு இலையை எடுத்து விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடியால் மூடி சுடவும்.
இரண்டாவது பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

ராகியில் உள்ள சத்துக்கள்


புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.
அரிசியில் உள்ள சத்துக்கள்
புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

உடலுக்கு வலிமை தரும்

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவா எடுக்கும்.

உஷ்ணத்தை குறைக்கும்

ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.
நன்றி ஆரோக்கியமான வாழ்வு
 

கருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:11 | Best Blogger Tips

பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.

கருப்பையில் ரணம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும். கருப்பை ரணத்தை ஆற்றவும், வலிகளைப் போக்கவும் பிரசவித்த பெண்களுக்கு நாட்டு மருந்துகளை கசாயம் செய்தும், லேகியம் போல செய்தும் சாப்பிடக் கொடுப்பார்கள்.

பிரசவ லேகியம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.

வில்வ இலைச் சாறு

குழந்தை பிறந்த பின்னர் கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். மஞ்சள் தூளுடன் இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து பால் அல்லது காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து பருக வலி குறையும்.

கடுகுப் பொடி

சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கடுகு பிரசவித்த பெண்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வாணலியில் கடுகை போட்டு லேசாக வறுத்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும் போது சோறுடன் கடுகுப்பொடி, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கருப்பை புண்கள் ஆறும், வலி குறையும்.

கொடாம்புளி ரசம்

குழந்தை பேற்றுக்குப்பின்னர் புளி, காரம் அதிகம் சாப்பிடுவது தாய்மார்களுக்கு ஏற்றதல்ல. எனவே வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்த பத்திய உணவும், கொடாம்புளி, மிளகு சேர்த்த ரசமும் உணவில் சேர்த்து கொடுப்பார்கள். இது வயிற்று வலிக்கு இதம் தரும்.
நன்றி ஆரோக்கியமான வாழ்வு
 


ஆண்மை அதிகரிக்கும் லேகியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:03 | Best Blogger Tips


திப்பிலி, ஜாதிக்காய், பூனைக்காலி விதை, நிலப்பனைக்கிழங்கை மற்றும் கசகசாவை ஆகியவற்றை முறைப்படி நிழலில் உலர்த்தி சலித்து பசும்பாலை ஊற்றி இளஞ்சூட்டில் தேனை ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்றி இளகல் பதத்தில் எடுத்து ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருள்கள்:


திப்பிலி = 200 கிராம்
ஜாதிக்காய் = 50 கிராம்
பூனைக்காலி விதை = 100 கிராம்
நிலப்பனைக்கிழங்கு = 100 கிராம்
கசகசா = 50 கிராம்
தேன் = 500 கிராம்
நெய் = 500 கிராம்
பசும்பால்.
இளநீர்.

செய்முறை:

திப்பிலியை சுத்தம் செய்து கொள்ளவும். ஜாதிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.

பூனைக்காலி விதைகளை குறிப்பிட்டுள்ள எடைக்கு மூன்று மடங்கு கூடுதலாக எடுத்து ஓடுகளை நீக்கி விதைகளை ஒன்றிரண்டாக உடைத்து பாத்திரத்தில் போட்டு 300 மி.லி பசும்பாலையும், 150 மி.லி இளநீரையும் ஊற்றி 6 மணி நேரம் மூடி வைத்திருந்து எடுத்து நிழலில் உலர்த்தவும்.

நிலப்பனைக்கிழங்கை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு முதன் முறை களைந்த பச்சரிசி கழுநீரை 500 மி.லி ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.

கசகசாவை மண் பாத்திரத்தில் போட்டு 200 மி.லி இளநீரை ஊற்றி 6 மணி நேரம் மூடி வைத்திருந்து கசகசாவை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும். ஒரு மண் பானையை அடுப்பில் வைத்து 100 மி.லி பசும்பாலை ஊற்றி இளஞ்சூட்டில் தேனை ஊற்றி சிறிது சூடேற்றி இடித்து சலித்து வைத்த மூலிகைகளையும் போட்டு கிளறி இளகல் நிலையில் நெய்யை ஊற்றி கிண்டி இளகல் பதத்தில் எடுத்து ஆற விட்டு பாத்திரத்தின் வாயை சலவை துணியால் கட்டி மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

உபயோகிக்கும் முறை:

இந்த இளகலை காலை உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு 1 தேக்கரண்டி அளவும், இரவு உணவு சாப்பிட்டு முடிந்த பிறகு 1 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு சிறிது பால் அல்லது வெந்நீர் குடித்து வரவும். இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறையும்.
நன்றி ஆரோக்கியமான வாழ்வு
 

30 வகை ஆரோக்கிய பொடி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:47 | Best Blogger Tips

மருந்துப்பொடி

தேவையானவை:
சுக்கு - கால் கிலோ,
திப்பிலி - 5 கிராம்,
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஓமம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் - சிறிய துண்டு, ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் - தலா சிறிதளவு,
பனைவெல்லம் - 50 கிராம்.

செய்முறை:
மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது இந்தப் பொடியில் சிறிது எடுத்து, பனைவெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கத்தை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காயையும் பொடித்துப் போடவும்.

இந்தப்பொடி ஜீரணத்தைத் தூண்டும். குழந்தை பெற்றவர்களுக்கு சிறந்த மருந்து.

கலத்துப்பொடி

தேவையானவை:

சுக்கு - பெரிய கொம்பு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
வேப்பம் பூ - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: மேலே கூறிய பொருட்களை தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து சலித்துக்கொள்ளவும்.

குறிப்பு:
குழந்தை பிறந்த பெண்கள் இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் சுடுசாதத்தில் போட்டு நெய் விட்டு, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் வாயு அண்டாது, பால்குடிக்கும் குழந்தையும் கக்காது.

ஜீரண சீரகப்பொடி

தேவையானவை:

சீரகம் - அரை கப்,
எலுமிச்சம்பழம் - 10,
இஞ்சி - 50 கிராம்,
ஏலக்காய் - சிறிதளவு, சீனா கல்கண்டு - 100 கிராம்.

செய்முறை:
இஞ்சியை மண் போகக் கழுவி, தோலை நீக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி சாறை ஊற்ற வேண்டும்.
தொடர்ந்து எலுமிச்சம்பழ சாறையும் ஊற்ற வேண்டும். இஞ்சி மற்றும் எலுமிச்சம்பழ சாறில், சீரகம் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். இதை அப்படியே 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு சீரகத்தை தனியே வடித்தெடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும். மாலையில், இதை எடுத்து மீதமுள்ள எலுமிச்சை, இஞ்சி சாறில் மீண்டும் ஊற வைக்க வேண்டும். அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாட்கள் இப்படியே ஊறவைத்து, உலர்த்த வேண்டும்.

நன்கு உலர்ந்த சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இப்போது சீரகப்பொடி தயார். இந்தப் பொடியை தயாரித்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். உலர்த்திய சீரகத்துடன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

இந்த சீரக பருப்புப்பொடியை சுடச் சுடச் சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் தேவலோக அமிர்தம் போல இருக்கும். ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும், சீரகப்பொடி நல்லதொரு மருந்தாகும். மேலும் பித்தம், ஏப்பம், தலைச்சுற்றல் போன்றவற்றையும் சரிப்படுத்துகிறது.

ரசப்பொடி

தேவையானவை:

காய்ந்த மிளகாய் - ஒரு கப், தனியா - கால் கப்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு,
விரலி மஞ்சள் (சிறியது) - 1, எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
காய்ந்த மிளகாயை தவிர மற்ற பொருட்களை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். மிளகாயை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு பக்குவமாக வறுத்து எடுக்கவும். மிஷினில் அல்லது மிக்ஸியில் மிளகாயைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். மற்ற பொருள்களையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் நன்றாகக் கலந்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். ரசம் வைக்கும் பொழுது தேவையான அளவு பொடியைப் போட்டு ரசம் வைத்தால், ரசத்தின் ருசியும், மணமும் நன்றாக இருக்கும்.

எள்மிளகாய்ப்பொடி

தேவையானவை:

காய்ந்த மிளகாய் - 10,
கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பெருங்காயம் - சிறிதளவு,
எள் - கால் கப்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். எள்ளை ஊற வைத்து, தோல் போக தேய்த்து வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

பருப்புப்பொடி

தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 10,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். சாதத்தில் தேவையான அளவு போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். பத்தியத்திற்கு ஏற்ற பருப்புப் பொடி இது.

கொள்ளுப்பொடி

தேவையானவை:
கொள்ளு - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறிய பிறகு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டும். சளித்தொல்லை அகல, உடல் மெலிய ஏற்றது இந்தக் கொள்ளுப் பொடி.

இட்லிமிளகாய்ப்பொடி

தேவையானவை:
உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பெருங்காயம் - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 6,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
வாணலியை அடுப்பிலேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஆறிய பிறகு, உப்புசேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எடுப்பான காம்பினேஷன்.

காரக்குழம்புப்பொடி

தேவையானவை:
காய்ந்த மிளகாய் - 1 கிலோ, தனியா - 750 கிராம்,
சீரகம் - ஒரு கப்,
மிளகு - கைநிறைய,
வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - நெல்லிக்காய் அளவு.

செய்முறை:
தனியா, சீரகம் ஆகியவற்றை தனித்தனியே நன்றாக வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையையும் வறுக்கவும். மற்ற சரக்குகளை இலேசாக வறுத்துக்கொள்ளவும். பிறகு எல்லா சரக்குகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காரக்குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு இந்தப் பொடியைச் சேர்த்துக்கொண்டால் குழம்பு மணக்கும்.

பஜ்ஜிபொடி

தேவையானவை:
அரிசி - ஒன்றேகால் கப்,
வறுத்த உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:
மேலே கூறப்பட்டிருக்கும் பொருட்களை நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது, இந்தப் பொடியை பஜ்ஜி சுடுவதற்கு ஏற்ற பதத்தில் கரைத்து, விருப்பப்பட்டால் சிறிது சமையல் சோடா சேர்த்து, சீவிய காய்களை மாவில் நனைத்து காயும் எண்ணெயில் போட்டு பஜ்ஜி சுடலாம்.

இலைப்பொடி

தேவையானவை:
நரம்பு நீக்கிய எலுமிச்சை இலை, நாரத்தை இலை, புளியங்கொழுந்து, விளாங்கொழுந்து - (நான்கும்) தலா இரண்டு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
புளி - சிறிதளவு.

செய்முறை:
வெறும் வாணலியில் புளியை சிறுதுண்டுகளாக்கிப் போட்டு வறுத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், உப்பு, புளி ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். இலை வகைகளை நன்கு இடித்துக் கொள்ளவும் (இடிக்கும் வசதி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்). பிறகு அத்துடன் மிளகாய் பொடித்ததையும் சேர்த்து நன்கு இடித்து, ஜாடியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நாக்குக்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.

வல்லாரைப்பொடி

தேவையானவை:
வல்லாரை கீரை - 3 கப், கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8,
புளி - சிறு உருண்டை,
பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போகக் காயவைக்கவும். பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பருப்புகளை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். வல்லாரை கீரையை வெறும் வாணலியில் சிறு தீயில் வறுத்தெடுக்கவும். புளியையும் வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியவுடன், முதலில் பருப்பு, மிளகாய், உப்பு, புளி.. ஆகியவற்றை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக வல்லாரை இலைகளையும் போட்டு பொடித்தெடுக்கவும்.

குறிப்பு:
வல்லாரை, தூதுவளை போன்ற கீரைகளை வதக்காமல் வெயிலில் காயவைத்தும் உபயோகப்படுத்தலாம்.

கறிவேப்பிலைப்பொடி

தேவையானவை:
நன்றாக காய்ந்த கறிவேப்பிலை இலை - ஒரு கைப்பிடியளவு, உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுக்கவும். முதலில் கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வறுத்த பொருட்களை உப்பு சேர்த்து சிறிது நறநறப்பாக அரைத்து, கறிவேப்பிலை பொடியுடன் கலந்து எடுத்து வைக்கவும்.

கதம்பப்பொடி

தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவைகளை சிவக்க வறுத்துக்கொண்டு, காய்ந்த மிளகாய், மிளகு இவைகளையும் வறுத்து கலந்து சேர்த்து அரைக்கவும். அவசரத் தேவைக்கு சாதத்தோடு பிசைந்து உண்ண உபயோகப்படும். நாள்பட கெடாமலும் இருக்கும்.

தூதுவளைப்பொடி

தேவையானவை:
தூதுவளை இலை - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு,
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலரவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து பருப்புகளை ஒவ்வொன்றாக வறுத்தெடுக்கவும். மிளகாயையும் அதே வாணலியில் வறுத்து, காய்ந்த தூதுவளை இலைகளை நன்றாக வதக்கியெடுக்கவும். ஆறியதும், பருப்பு, மிளகாய், எள், உப்பு எல்லாவற்றையும் அரைத்து, தூதுவளை இலைகளையும் போட்டுப் பொடித்தெடுக்கவும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சளியை அறுக்கும் சக்தி கொண்டது தூதுவளை.

சம்பாப்பொடி

தேவையானவை:
சீரகம் - 2 டேபிள்- ஸ்பூன்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்-கொள்ளவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட மணமாகவும், ருசியாகவும் இருக்கும். பசியைத் தூண்டும்.

தேங்காய்ப்பொடி

தேவையானவை:
தேங்காய் - ஒரு மூடி, உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயம் - பட்டாணி அளவு, நல்லெண்ணெய் - முக்கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தேங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மீதி எண்ணெயில் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, மிளகாயையும், பெருங்காயத்தையும் வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் முதலில் மிளகாயையும், உப்பையும் போட்டு அரைத்துக்கொள்ளவும். வறுத்த தேங்காய்த்துருவல், உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு நறநறப்பாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:
தேங்காய்ப்பொடியை நாள்பட உபயோகிக்கக் கூடாது. சிக்கு வாடை வரும். எனவே, தேவையான அளவு கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

புதினாப்பொடி

தேவையானவை:
புதினா தழை - ஒரு கைப்பிடியளவு, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5,
உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
புதினா தழையை நிழல் காய்ச்சலாக நன்றாக காய வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த புதினா இலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து அதோடு வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு சற்று நறநறப்பாக அரைத்தெடுக்கவும். விருப்பப்-பட்டால் சிறிது பெருங்காயம் சேர்க்கலாம்.

மாங்காய்ப்பொடி

தேவையானவை:
முற்றிய மாங்காய் - 2, உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
மாங்காயைத் தோல்சீவி, துருவி வெயிலில் காய வைக்கவும். நன்றாக மொறுமொறுப்பாக காய வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பிலேற்றி மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். காய்ந்த மாங்காய் துருவலுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். அதோடு வறுத்த பொருட்களையும் போட்டு நறநறப்பாக அரைத்தெடுக்கவும்.

குழம்புப்பொடி

தேவையானவை:
காய்ந்த மிளகாய் - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், தனியா - 2 கப்,
மிளகு - கால் கப்,
விரலி மஞ்சள் - ஒரு துண்டு, எண்ணெய் - வறுக்க.

செய்முறை:
மிளகாயை மட்டும் வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு இதரப் பொருட்களையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். தனித்தனியே மிளகாய் வற்றலையும், இதரப் பொருள்களையும் அரைத்து கலந்து வைக்கவும்.

கறிப்பொடி

தேவையானவை:
மிளகு - அரை கப்,
சீரகம் - கால் கப்,
தனியா - அரை கப்,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு கட்டி, கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 9.

செய்முறை:
காய்ந்த மிளகாயைத் தவிர மற்ற பொருட்களை தனித்தனியே வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வெயிலில் காய வைத்து, பின் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். காலை நேர அவசரத்தில், பொரியல் போன்றவற்றுக்குப் போட மிகவும் உதவும்.

வற்றல்குழம்புப்பொடி

தேவையானவை:
தனியா - கால் கிலோ,
காய்ந்த மிளகாய் - அரை கிலோ, கடலைப்-பருப்பு - கால் கப், உளுத்தம்-பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு - கால் கப்,
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டேபிள்-ஸ்பூன்.

செய்முறை:
ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும். பிறகு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து உப-யோகிக்கவும். வற்றல்குழம்பு, கெட்டிக் குழம்புக்கு போட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். குழம்பு கொதிக்கும் சமயம் வேர்க்-கடலையை வறுத்துப் போட்டாலும் தனி ருசி தரும்.

கரம்மசாலாப்பொடி

தேவையானவை:
தனியா - அரை கப்,
பட்டை - 2 துண்டு,
கிராம்பு - 10,
ஏலக்காய் - 10,
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன்,
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10,
மராட்டி மொக்கு - 2 அல்லது 3, சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - 2.

செய்முறை:
மேற்கூறிய பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து, பொடிக்கண் உள்ள சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும். இத்தூளை வாசனை போகாதபடி உடனடியாக பத்திரப்படுத்த வேண்டும்.

தனியாப்பொடி

தேவையானவை:
தனியா - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, மிளகு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். தனியாப் பொடியை சாதத்தோடு கலந்து உண்ண சுவையாகவும், மணமாகவும் இருக்கும். பித்தத்துக்கு மிகவும் நல்லது.

ஓமம் உப்புப் பொடி

தேவையானவை:
ஓமம் - அரை கப்,
எருமை தயிர் - ஒரு கப்,
கல் உப்பு - அரை கப்.

செய்முறை:
ஓமத்தை சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி, சுத்தம் செய்த ஓமம், கல் உப்பு சேர்த்து கலந்து 24 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஓமத்தை வடிகட்டி எடுத்து உலர்த்தவும். நன்றாக உலர்ந்த பின்னர் எடுத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக பவுடர் போல அரைக்கவும். பாட்டிலில் போட்டு இறுக மூடி வைக்கவும். சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் வாயுக் கோளாறு ஏற்பட்டு விடும். இதற்கு சரியான மருத்துவம் ஓமம் உப்புப் பொடி. தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் ஓமம் உப்புப் பொடியை சாப்பிட்டு விட்டு, இளஞ்சூட்டில் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிக்கவும். அப்புறம் பாருங்கள். வாயுக் கோளாறு இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும்.

கொத்துமல்லிப்பொடி

தேவையானவை:
கொத்துமல்லித் தழை (பெரிய கட்டு) - 1,
கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயம் - சிறிதளவு,
புளி - சிறிதளவு, உப்பு -
தேவையானது.

செய்முறை:

கொத்துமல்லி தழையை ஆய்ந்து, நீரில் கழுவி வடிய விடவும். பிறகு ஒரு பேப்பரை விரித்து தழையைப் பரப்பி நிழலில் வைக்கவும். 2, 3 நாட்களில் நன்றாக காய்ந்து விடும். மூன்றாவது நாள், வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சூடான வாணலியில் காய்ந்த கொத்துமல்லித் தழையைப்போட்டு ஒரு புரட்டு புரட்டவும். புளியை நன்றாக மொரமொரப்பாக எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். முதலில் கொத்துமல்லித் தழை, புளியைப் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். அதை எடுத்துக்கொண்டு பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கொத்துமல்லி அரைத்ததையும் பொடியையும் அதில் போட்டு ஒரு சுற்று ஓடவிட்டு எடுக்கவும். சாதம், இட்லி, தோசை என எதற்கு வேண்டுமானாலும் ஈடு கொடுக்கும் இந்த கொத்துமல்லிப் பொடி.

ஐங்காயப்பொடி

தேவையானவை:
வேப்பம் பூ - ஒரு டேபிள்ஸ்பூன், திப்பிலி - 6,
சுண்டைக்காய் வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மணத்தக்காளி வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கல் உப்பு - தேவையான அளவு,
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு,
தனியா - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வெறும் வாணலியில் மேலே சொன்ன பொருட்களைப்போட்டு நன்கு வறுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். சுடு சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் ஐங்காயப் பொடியைப் போட்டு கலந்து சாப்பிடுங்கள். அமிர்தமாய் இருக்கும். வயிற்றுப் பொருமலை நீக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

பிரண்டைப்பொடி

தேவையானவை:
நார் இல்லாத பிஞ்சு பிரண்டை தண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய் - ஒரு மூடி,
காய்ந்த மிளகாய் - 10,
தனியா - ஒரு டீஸ்பூன்,
புளி - சிறு எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
எள் - ஒரு டீஸ்பூன்,
வெல்லம் - சிறிது.

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பிரண்டைத் துண்டுகளை நன்கு வறுக்க வேண்டும். தேங்காயைத் துருவி, பொன்னிறமாக வறுக்கவும். வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியாவை தனித்தனியே வறுத்து, புளி சேர்த்து பிரண்டைத் துண்டுகளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பாதி அரைத்துக் கொண்டிருக்கும்போது தேங்காய் துருவல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இதை சாதத்தில் போட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மூல நோய்க்கு உற்ற மருந்து. ஜீரண சக்திக்கும் சிறந்த உணவு.

முடக்கத்தான்பொடி

தேவையானவை:
முடக்கத்தான் இலை - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப்,
கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு, காய்ந்த மிளகாய் - 6,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முடக்கத்தான் இலைகளை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போக காயவைக்கவும். வாணலியில் தலா கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்புகளை தனியே வறுத்தெடுக்கவும். முடக்கத்தான் இலைகளையும் வெறும் வாணலியில் சிறிய தீயில் வைத்து நன்றாக வதக்கவும். ஆறியவுடன், முதலில் பருப்பு, உப்பு, மிளகாய் வகைகளை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக முடக்கத்தான் இலைகளையும் போட்டுப் பொடித்து எடுக்கவும். வாயுக் கோளாறுக்கு மிகச் சிறந்த நிவாரணி இந்தப் பொடி. சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.

வேர்க்கடலைப்பொடி

தேவையானவை:
வேர்க்கடலை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயம் - ஒரு கட்டி,
உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
முதலில் வெறும் வாணலியில் வேர்க்கடலையை வறுக்கவும். பிறகு எண்ணெயை ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை உப்பு கலந்து மிக்ஸியில் பொடிசெய்யவும். கடைசியாக, அதோடு வேர்க்கடலையையும் சேர்த்துப் பொடிக்கவும். காய்கறிகளைப் பொரியல் செய்யும்போது, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டால் வித்தியாசமான டேஸ்ட்டில் ருசியாக இருக்கும்.நன்றி ஆரோக்கியமான வாழ்வு