மார்கழி சிறப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips


"மாதத்தில் நான் மார்கழி " என்றான் கிருஷ்ணன்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும் திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த
மாதம் என்றும் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும்
மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாக
கொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றை
வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்
மார்கழி இல்லை , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்றும் சிலரும் கூறுகின்றனர்.
போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''

ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.
அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்.

"கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்ற
பெயர் ஏற்பட்டதாக புராணம் கூறும். திருமாலின் திருவாயிரப்பேர்
தொடுப்பிலும் (சகஸ்ரநாமாவளி) "கேசி" என்னும் பெயர் இருக்கும்.
இந்தத் திருவாயிரத்திற்கு ஆதி ஆண்டும். கேசமுடையவன் "கேசி".
அதுபோலத்தான் "மது கைடபர்"களை அழித்தலால்
"மாதவன்" என்ற பெயர் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட புராணம் கூறும்.

சங்கத் தொகைநூலானதும் இந்தியாவிலேயே தமிழிசையில் (கருநாடகவிசை) அமைக்கப்பட்ட இசைப்பாடல்களில் மிகத்தொன்மையானதுமான பரிபாடலின் பாடல்

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரிசினம் கொன்றோய்நின் புகழுரு வினகை
நகையச் சாக நல்லமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயமில் ஒருகை!
இருகை மாஅல்!
முக்கை முனிவ! நாற்கை யண்ணல்!
ஐங்கைம் மைந்த! அறுகை நெடுவேள்! எழுகை யாள! எண்கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள!
பதிற்றுக்கை மதவலி! நூற்றுக்கை யாற்றல்!
ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள!
பதினா யிரங்கை முதுமொழி முதல்வ!
நூறா யிரங்கை ஆறறி கடவுள்!
அனைத்தும் அல்லபல அடுக்கிய ஆம்பல்
இனைத்தென எண்வரம் பறியா யாக்கையை!
நின்னைப் புரைநினைக்கின் நீயல(து) உணர்தியோ!"
என்னும் மிக அழகிய பகுதியில் வருவதைக் காண்க.

["கூந்தல் என்னும் பெயர்கொண்ட கூந்தல் செறிந்த தலையையுடைய
அவுணனின் வெஞ்சினத்தை யொழித்த நின் கைகள் புகழுடையன"]

அ·து வடமொழியிற் கூந்தல் = முடி = கேசம் என்பட கேசவன் என்றாயது.

மேற்கண்டாவாறு மிக அழகான துதிப்பாடல்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
நம்முன்னோர் இயற்றியுள்ளார்கள். அவற்றைப் படித்து நடைமுறையில் இறைவழிபாட்டிற்குப்
பயன்படுத்த வேண்டியது நம் கடமை. அப்பொழுதுதான் தமிழ்ப்பண்பாடு உண்மையாகவே வாழ வகைசெய்ய வியலும்; அவை உயர்ந்த மந்திரங்களும் ஆகும்;
பார்ப்பதற்கு முதலில் கடினமாகத் தோன்றிடினும் பழகியவுடன் அவற்றின் இனிமை தெரியும்;
தமிழின் இனிமையும் அவற்றிலுள்ள உணர்ச்சிகரமான பண்பும் விளங்கும்; மேற்காட்டியது
திருப்பெயர்மாலைக்கு நல்ல சான்று. பெயருருட்டிற்கு (நாம்ஜபம்) மிகவும் பொருந்தும்]

கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்று பொருள். மார்கழி மாதத்திற்கு
இப் பெயர் இட்டிருக்கும் காரணம் , இம்மாதம் மனிதனுக்கு அறிவை தருகிறது என்ற
நம்பிக்கையே ஆகும்.

அத்தோடு மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்
'ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.


சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காக
செய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் வருகிறது.

மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.

இத்துணை காரணங்களால் மார்கழி சிறப்பு மாதம் சிறப்பு பெறுகிறது.