பவானிசாகர் அணைக்கட்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான் இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. டணாய்க்கன் கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தக் கோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது. 1958-66ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது இந்த பவானிசாகர் அணை. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்னால் அங்கு வடவள்ளி, பீர்க்கடவு, குய்யனூர், பட்டரமங்கலம், ராஜன் நகர் ஆகிய ஆறு கிராமங்கள் கூடுவாய் என்னும் வருவாய் கிராமத்திற்குட்பட்டிருந்தன.

இந்த ஆறுகிராம மக்களின் தியாகத்தால் உருவானதுதான் இந்த அணை. ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் நிற்கும் இந்தக்கோட்டையைப் பார்க்கும் போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும்.

தற்போது பவானி சாகர் அணையில் தண்ணீர் குறைந்திருப்பதால் இந்த கோட்டையை சென்று பார்க்கலாம்!

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

Via  தமிழால் இணைவோம்