நாடி வகைகள், பார்க்கும் விதம்....

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips
நாடி வகைகள், பார்க்கும் விதம்....

நோய் கணிப்பு முறைகள்:

ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.

நாடி எப்படி உண்டாகிறது?

நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.

நாடி பார்க்கும் முறை:

மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

நாடி நிதானம்;

மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.

எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.

ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடி பார்க்கும் மாதங்கள்:

சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு

உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.

நாடிகளின் தன்மை:

வாத நாடி

வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.

அறிகுறிகள்:

உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.

பித்த நாடி

பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

அறிகுறிகள்:

உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.

சிலேத்தும நாடி:

சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.

உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில் 15000
கண்களில் 4000
செவியில் 3300
மூக்கில் 3380
பிடரியில் 6000
கண்டத்தில் 5000
கைகளில் 3000
முண்டத்தில் 2170
இடையின் கீழ் 8000
விரல்களில் 3000
லிங்கத்தில் 7000
மூலத்தில் 5000
சந்துகளில் 2000
பாதத்தில் 5150
மொத்தம் 72000

நீங்கள் மனத்திடம், மன ஒருமைப்பாடு உள்ளவரா? சோதிக்கலாம் வாங்க

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips
நீங்கள் மனத்திடம், மன ஒருமைப்பாடு உள்ளவரா? சோதிக்கலாம் வாங்க

எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் மனதிடம் அவசியம். இல்லையென்றால் அக்காரியம் பாதியில் இருக்கும் போது மனம்மாறி வேறு எதையாவது செய்ய நினைக்கும். வேறு மாதிரி செய்திருக்கலாமோ என குழப்பம் அடையும். இது மனத்திடம் இல்லாமையால் ஏற்படுவது.

மன ஒருமைப்பாடு இல்லாவிட்டால் நீங்கள் ஒரு செயலை கவனமாக செய்ய இயலாமல் இருக்கும். அல்லது மனம் வேறு எதையாவது நினைக்கும். ஒரே சிந்தனையை தொடர்ந்து சிந்திக்க இயலாமல் ஒரே நேரத்தில் பல சிந்தனைகளும் வந்து மனக்குழப்பத்தை விளைவிக்கும். அச்சிந்தனைகள் நாம் தற்போது செய்யும் வேலையை சிறப்பாக செய்ய விடாமல் தடுத்து விடும்.

இந்த மன உறுதி, ஒருமைப்பாடு இல்லாமையே பல செயல்களை சிறப்பாக செய்ய இயலாமைக்கும் தீர்க்கமாக ஒரு முடிவை எடுக்க இயலாமல் இருப்பதற்கும் காரணம்.

தங்களின் மனஉறுதி, ஒருமைப்பாடு எவ்வாறு இருக்கிறது என எவ்வாறு அறிவது?

இதோ உங்களுக்காக ஒரு எளிய பயிற்சி

ஒரு சுவர் பக்கத்தில் சுவரை தொடாமல், வசதியான ஒரு இடத்தில் நின்று கொள்ளுங்கள்.
முட்டுகளை வளைக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்.
நின்றவாறே ஒரு காலை தூக்கி அடுத்த கால் தொடையின் மீது வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒற்றைக்காலில் நின்றவாரே கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி வணங்குவது போல சேர்த்து வையுங்கள்.
கடைசியாக கண்கள் இரண்டையும் மூடுங்கள்.
இப்படி எவ்வளவு நேரம் உங்களால் நிற்க முடிகிறது?

10 வினாடிகள்?

1 நிமிடம்?

இந்த கால அளவே உங்கள் மன உறுதியைக் காட்டிவிடும்.

நீங்கள் வெகு விரைவில் தடுமாறி வீழப்போனால் நீங்கள் அதிக மன சஞ்சலம் அடைவோர்களாக இருக்க வேண்டும். எந்த தடுமாற்றமும் இல்லை எனில் நல்ல மன உறுதி உள்ளவர் என அர்த்தம்.

நீங்கள் இதைச்செய்யும் போது முக்கியமாக கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். கண்களை திறந்து வைத்தால் எத்தனை நேரமும் நம்மால் நிற்க முடியும். கண்களை அடைத்து நின்றாலே நிஜ மன ஒருமைப்பாட்டை நீங்கள் அறிய இயலும்.

இப்போது மன உறுதி, மன ஒருமைப்பாடு அதிகம் இல்லை என அறிந்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை எவ்வாறு வளர்த்துக்கொள்வது எனப்பார்ப்பது மிக முக்கியமில்லையா? அதுவும் மிக எளிய வழியே. அது என்ன வழி என்றால் நீங்கள் சோதனை செய்த இதே வழிமுறையை தினமும் செய்வது தான்.

ஆச்சரியமாக உள்ளதா?

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பார்ப்பதற்கு இது மிக எளிய பயிற்சி போலத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம்.

இப்படிச்செய்வது யோகாசன முறைகளில் "நின்ற பாத ஆசனம்" எனப்படுகிறது.

இவ்வாசனமே மன உறுதிக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகச்சிறந்த ஆசனமாக உள்ளது.

இவ்வாசனத்தை தினம் சில நிமிடங்கள் ஒவ்வொரு காலிலும் மாற்றி மாற்றி செய்து வந்தால் நல்ல பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

முதலில் செய்யும் போது சுவர் பக்கத்தில் நின்று செய்வது அவசியம். இல்லையென்றால் நீங்கள் சிலநேரம் தடுமாறி வீழ்ந்துவிட வாய்ப்பு உள்ளது.

நின்ற பாத ஆசனம் செய்யும் முன் சிரசாசனம் 1 நிமிடம் செய்து வாருங்கள். ஏனென்றால் சிரசாசனம், நின்ற பாத ஆசனத்திற்கு மாற்று ஆசனம் ஆகும்.

சிரசாசனம் என்பது தலைகீழாக நிற்பது ஆகும். இதை 1 நிமிடம் செய்தாலே போதுமானது. முதலிலேயே அதிக நேரம் நிற்பது நல்லதல்ல.

மூளையை உபயோகித்து வேலை செய்வோர்கள் தினம் சிரசாசனம் ஒரு நிமிடம் செய்து வந்தாலே மூளை சிறப்பாக செயல்பட ஆரம்பித்து விடும். அதனால் உங்கள் தினசரி செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.

காலையில் செய்தால் அன்று முழுவதும் நல்ல உற்சாகத்தை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள இயலும்.

தங்களைத்தாங்களே பரிசீலித்துப்பார்க்கத் தயார் தானே?

நம்ம குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்கள் ? கொஞ்சம் பொறுமையா இதை படிங்க !!!!!!!!!!!!!!!!!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:13 PM | Best Blogger Tips
நம்ம குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறிர்கள் ? கொஞ்சம் பொறுமையா இதை படிங்க !!!!!!!!!!!!!!!!!!!!!

இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்! அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.

நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள்.

குடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மனகசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்:

1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும்.
அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும்.

3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.

4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.

5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.

6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.

7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம். இதை வாசிக்கும் அன்பு சகோதர சகோதரிகள் இத்தலைப்பைப் பற்றிய, மேலும் தங்களின் பொன்னாகக் கருத்துக்களையும் பதிக்கலாம்

நன்றி

நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips
நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!

ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.
அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 என்ற கொழுப்புசத்து உண்டு. இந்தக் கொழுப்புச்சத்தில் இரண்டு வகை இருப்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இவற்றுக்கு டி.எச்.ஏ, இ.பி.ஏ. என்று பெயரிட்டு உள்ளனர்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். தற்போது ஒமேகா-3ன் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அந்தந்த வியாதியோடு தொடர்புடைய சத்துக்குறைவு தெளிவாகி இருக்கிறது.
இ.பி.ஏ. என்ற வேதிப்பொருள் முளையுடன் சம்பந்தப்பட்டது. எனவே நினைவுத்திறனில் பாதிப்பு வருவதற்கு இ.பி.ஏ குறைபாடும் ஒரு காரணம்.

அதேபோல் இரு ரசாயனங்களும் நரம்புகளை சுற்றி இருக்கும் கொழுப்புபடலமாக இருப்பதால் நரம்பு மண்டல உறுதிக்கும் அவை காரணமாக இருக்கிறது.
எனவே தேவையான அளவு மீன் உணவு சாப்பிட்டு ஒமேகா-3 அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் நரம்பு மண்டலம் உறுதி பெறும்.

நரம்பு மண்டலம் பலப்பட்டால் உடலும் உறுதிபெறும் என்பது உண்மை. ஆய்வாளர் நார்மன் சலீம் கூறும் போது, கொழுப்பு கெட்டது என்ற எண்ணத்தை மாற்றக்கூடியது ஒமேகா-3. எல்லோரது உணவிலும் டி.எச்.ஏ சீராக கலந்திருப்பது உடல்நலத்துக்கு சிறந்தது

“பக்தி என்னதான் செய்யாது? எதைத்தான் சாதிக்காது

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips
“பக்தி என்னதான் செய்யாது? எதைத்தான் சாதிக்காது?
=======================================

படிப்பறிவில்லாததொரு காட்டுமிராண்டி பரம பக்தர்களுள் தன் களங்கமற்ற பக்தியினால், முதன்மையானவனாக ஆகிவிட்டானே! இத்தனைக்கும் அந்த திண்ணன் செய்ததெல்லாம் உலகியலில் செய்யத் தகாத மஹாபாபங்களல்லவா?

காட்டிலும் மேட்டிலும் நடந்து தேய்ந்த செருப்பினால் சிவலிங்கத்தின் மீதிருந்த நிர்மால்யங்களை அவன் களைந்தால், அதை வேதோக்தமாக செய்யப்பட்ட கூர்ச்சத்தினால் களையப்பட்டதாக இறைவன் ஏற்றுக் கொண்டார்.

பாத்திரம் இல்லாததால் தன் வாய் நிறைய தண்ணீரை உறிஞ்சிவந்து லிங்கத்தின் மீது அவன் எச்சில் நீரை உமிழ்ந்தால், அதை அவர் கங்காதி நதிகளிலிருந்து கொணர்ந்து ருத்ராபிஷேகம் செய்ததாக ஏற்றுக்கொண்டார்.

ருசியாக இருக்கிறதா? என தான் உண்டு பார்த்த மிச்சமான பன்றி மாமிசத்தை அவன் தந்தால், அதை சாஸ்த்ரோக்தமாக ஆசாரம் தவறாது செய்யப்பட்ட நிவேதனமாக அவர் ஏற்றுக் கொண்டார்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டு அவனை பக்தர்களுள் முதலாவதாக செய்துவிட்டாரே! என்ன அதிசயம்!” என வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். கண்ணப்ப நாயனாரைப் பற்றி தன் ‘சிவானந்தலஹரி’யில்.

மேலும் அதே நூலில் பக்தியின் இலக்கணத்தையும் கூறுகிறார் அவர்.

“ஏறு அழிஞ்சில் மரத்தின் விதை தெறித்து எங்கே விழுந்தாலும் மேல்ல நகர்ந்து தாய் மரத்தில் ஏறி ஒன்றுவது போலவும், காந்தத்தை நோக்கி இரும்பு ஊசியானது நகர்ந்து ஒட்டிக்கொள்வது போலவும், தன் நாதனிடம் விரைந்து வந்து ஒரு பத்தினிப்பெண் ஒன்றுவது போலவும், மரத்தின் மேல் அருகிலிருக்கும் ஒரு கொடியானது வந்து படர்வது போலவும் கடலில் விரைந்து வந்து ஒரு நதியானது கலப்பது போலவும், இறைவனின் பாதங்களில் மனத்தாலும் செயலாலும் சென்று இயற்கையாக கலப்பது தான் பக்தி எனப்படும்” என்கிறார்.

மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana)

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாஸிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதற்கு முந்தைய சில ஆய்வுகளிலும் வாழைப்பழங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி பக்கவாதத்தை தடுக்கக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல் நடத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டஸியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் கல்லூரியின் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாஸியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடம்பின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சரும பராமரிப்புக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் குடியுங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
சரும பராமரிப்புக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் குடியுங்கள்!!!

சருமததை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழநதுவிடும். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சுகாதாரமான வாழக்கைக்கு எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருக்கலாம்.

சூரிய ஒளிக்கதிரிலிருந்து வைட்டமன் டி கிடைக்கிறது. சருமத்தை பாதுகாக்க மாய்ஸரைஸ் தினமும் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி, காற்று, குளிர், அலர்ஜி சோப், வெப்பம் ஆகியவற்றிலிருந்து மாய்ஸரைஸ் சருமத்தை பாதுகாக்கும். குளியலுக்கு பிறகுதான் ப்ரதயேக க்ரீமையோ எண்ணையையோ தடவவேண்டும்.

கை, முகத்துக்கு கூடுதல கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலனாலும சருமம் பாதிப்படையலாம். சருமத்துக்கு பொருத்தமான டை மற்றும பெர்பீயூமை உபயோகிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். சருமம் நன்றாக இருப்பதோடு உடற்பயிற்சியினால் வயதும் தெரியாது.

உடற்பயிற்சி உடலை வலமைப்படுத்தும், சருமம் சுருக்கமடையாமல் நன்றாக இருக்கும். தட்பவெப்ப மாற்றத்தாலும் சருமம் பாதிப்படையும. சருமத்துக்கேற்ற சூடான மற்றும் குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். மேலும், வேகமாக எடை குறைப்பதை தவிர்க்க வேண்டும். வேகமாக எடை குறைப்பதால் சருமம் பாதிப்படையும்.

தேவையில்லாத டயட் மொத்த உடலையும் பாதிக்கச் செய்யும். குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதன் மூலம் சருமம் சுருக்கமடையத் தொடங்கும். சத்தான உணவை சாப்பிடவேண்டும். உணவில் புரோட்டின் சத்து கட்டாயம் இருக்க வேண்டும். நாம் உணணும் உணவுகளிலும் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலில் கொழுப்பை சேர்க்கும்.

ஆனால் உடலுக்கு தேவையான புரோட்டின், வைட்டமின் மற்ற தாதுப்பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இது தோல்செல் பெருக்கத்துக்கு உதவும். தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை என்றால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து சருமம் பாதிப்படைய ஆரம்பிக்கும்.

தண்ணீர் தான் நமக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். டயட் இருந்தாலும் உடற்பயிற்சி செய்தாலும் கூடுதலாக தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக தேனீர், இயற்கை குளிர்பானம் மற்றும் பழச்சாறு, காய்கறிகள் சூப் குடிக்கலாம். ஆனால், காபி மற்றும் மதுபானம் குடித்தால் உடலிலுள்ள தண்ணீர் சத்தை குறைத்துவிடும்.

புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த தூக்கமின்மையும் அதிக கவலையும் சருமத்தை பாதிக்கும். முதலில் முகத்தைத்தான் பாதிக்கும். உடலை விரும்பி பார்த்துக்கொண்டாலே உங்களது தோற்றம் பளபளபளப்பாக இருக்கும். முகத்தை பிரஷ் ஆக வைத்திருப்பதற்கு இப்போது நவீன பேஷ்வாஸ் நிறைய வந்துள்ளன. அதிலும் லெமன், ஆப்பிள், ஸ்ட்ராபெரி உட்பட பல்வேறு பழச்சாறு வாசனையுடன் லோசன் வந்துள்ளன. அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் முகம் எந்த நேரமும் பிரஷ்சாக இருக்கும். முகத்தில் சுருக்கங்களும் வராது.