அருமையான தகவல்#விளையாட்டு போட்டிகளில் தேசிய கீதம் பாடும் போது குழந்தைகளை
அழைத்து செல்வது ஏன்?
இந்த குழந்தைகள் "எஸ்கார்ட் அல்லது மஸ்காட் குழந்தைகள்" என்று
அழைக்கப்படுகிறார்கள்...இந்த குழந்தைகள் பெரும்பாலும் பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வருகிறார்கள்...அவர்கள் பல்வேறு வசதிகளிலிருந்து
விலகியவர்கள்...பெரும்பாலும் ஆதரவற்றவர்களாகவும், ஏழைகளாகவும் இருப்பார்கள்...தங்கள் விருப்பமான நட்சத்திரங்களின் அருகில் வந்து வாழ்க்கையில் இவர்களைப்போல மாற வேண்டும் என்று ஊக்கமடைகிறார்கள்..
அதே நேரத்தில், அவர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்....
மேலும், குழந்தைகளின் மனம் தூய்மையானது..எந்தவித பொறாமையும் இல்லாதது..எளிதில் நண்பர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.. எனவே, அமைதியை வெளிப்படுத்த, வீரர்கள் தூய்மையாக கிரிக்கெட் விளையாட,
எதிராளிகளை நண்பர்களாக நினைப்பதற்கு, இந்த குழந்தைகள் இருக்கிறார்கள் என்று பலர் நம்புகிறார்கள்...
விளையாட்டு மைதானத்தில் இரு அணிகளின் வீரர்களுக்கு இடையே நல்ல உறவைப் பேணுவதற்கு, தேசிய கீதம் பாடும் போது வீரர்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள்.