தர்பூஸ் மசாலா மோர் ஜூஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:57 PM | Best Blogger Tips

Photo: தர்பூஸ் மசாலா மோர் ஜூஸ.
கோடை காலத்தில் தர்பூஸ் சாப்பிட்டாலே ஜம்மென்று இருக்கும். அதுவே தர்பூஸ் மசாலா மோர் என்று புதிதாக தயார் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?

தேவையான பொருட்கள்

தர்பூசணி பழம் _ அரை அளவு,
இஞ்சி _ 25 கிராம்,
புதினா _ கைப்பிடி அளவு,
எலுமிச்சம்பழம் _ பாதியளவு,
பெருங்காயம் _ கால் டீஸ்பூன்,
ரெகுலர் மிளகு _ கால் டீஸ்பூன்,
பனங்கற்கண்டு 100 கிராம்,
உப்பு _ 1 சிட்டிகை.

செய்முறை

முதலில் இஞ்சி, புதினாவையும் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள் அடியில் தங்கி விடும்.

அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி ஜூஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள்.

தர்பூஸ் மசாலா மோரின் ஆரோக்கிய சுவை தெரியும். ஆனால், இதைப் பதப்படுத்தியெல்லாம் வைக்க முயற்சி செய்யாதீர்கள். 24 மணி நேரம்தான். தர்பூசணி மசாலா மோரின் வேலிடிட்டி.

டயட்

தர்பூசணி (வாட்டர் மெலன்) பழத்துல தண்ணீர்ச் சத்து நெறைய அடங்கியிருக்கு. விட்டமின் ஏ சத்தும் இருக்கு.

இந்தப் பழத்துல இருக்குற ஃபோலிக் ஆஸிட் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். சுகப்பிரசவம் ஆகவும் துணைபுரிகிறது. கருப்பட்டியில் அயர்ன். பெருங்காயம் ஜீரண சக்திக்கு ஏற்றது.கோடை காலத்தில் தர்பூஸ் சாப்பிட்டாலே ஜம்மென்று இருக்கும். அதுவே தர்பூஸ் மசாலா மோர் என்று புதிதாக தயார் செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?

தேவையான பொருட்கள்

தர்பூசணி பழம் _ அரை அளவு,
இஞ்சி _ 25 கிராம்,
புதினா _ கைப்பிடி அளவு,
எலுமிச்சம்பழம் _ பாதியளவு,
பெருங்காயம் _ கால் டீஸ்பூன்,
ரெகுலர் மிளகு _ கால் டீஸ்பூன்,
பனங்கற்கண்டு 100 கிராம்,
உப்பு _ 1 சிட்டிகை.

செய்முறை

முதலில் இஞ்சி, புதினாவையும் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள் அடியில் தங்கி விடும்.

அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி ஜூஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள்.

தர்பூஸ் மசாலா மோரின் ஆரோக்கிய சுவை தெரியும். ஆனால், இதைப் பதப்படுத்தியெல்லாம் வைக்க முயற்சி செய்யாதீர்கள். 24 மணி நேரம்தான். தர்பூசணி மசாலா மோரின் வேலிடிட்டி.

டயட்

தர்பூசணி (வாட்டர் மெலன்) பழத்துல தண்ணீர்ச் சத்து நெறைய அடங்கியிருக்கு. விட்டமின் ஏ சத்தும் இருக்கு.

இந்தப் பழத்துல இருக்குற ஃபோலிக் ஆஸிட் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். சுகப்பிரசவம் ஆகவும் துணைபுரிகிறது. கருப்பட்டியில் அயர்ன். பெருங்காயம் ஜீரண சக்திக்கு ஏற்றது.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

பச்சை பூமி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips

Photo: பச்சை பூமி

சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி. சோழ நாடு சோறுடைத்து. இங்கே மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலை. காவிரிப் பெண்ணிற்கு கர்நாடகம் பிறந்த வீடு என்றாலும், தமிழகம் புகுந்த வீடு. புகுந்த வீட்டிற்கு வந்து வளம் சேர்த்த காவிரிப் பெண்ணை, இப்போதெல்லாம் புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே சோழ வளநாட்டின் விவசாயம் இருந்த காலம் பொற்காலம்.

இந்த பூமியும் வானம் பார்த்த பூமியாகி பல காலம் ஆகிவிட்டது. மனிதர்கள் தராத தண்ணீரை மகேசன் தருகிறார் மழையாக. மூன்று புறமும் கடல் நீரால் சூழப்பட்ட நாம் ஒருபக்கம் சுயநல நெருப்பால் சூழப்பட்டுள்ளோம். இவர்கள் தண்ணீருக்கு மட்டும் அணை கட்டவில்லை. மனித நேயத்திற்கும் சேர்த்து அணை கட்டுகிறார்கள். இங்கே நம்மில் இரும்பிலே இதயம் முளைக்கின்ற காலத்தில் அங்கே இதயங்கள் இரும்பாகிப் போயினவே. குதிரை பேரத்தில் மூழ்கி காணாமல் போனவர்கள் தண்ணீர் என்றதும் ஒன்று கூடும் மனிதர்கள் வாழும் பூமியில் இருந்து தண்ணீருக்கு நாம் கையேந்தி நிற்க அவசியம் ஏற்படாதவாறு இந்த ஆண்டு நல்ல மழை, காலத்தே பொழிய இறைவனை பிரார்த்தித்து வருண பகவானை துணைக்கு அழைப்போம். வடமேற்கிலிருந்து வராத தண்ணீர் வடகிழக்கினால் கொட்டட்டும்.

பொதுவாக காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, பூம்புகார் போன்ற ஊர்களில் சாலை மார்கமாகவோ, புகைவண்டி மார்கமாகவோ பயணம் செய்வது ஒரு அலாதியான, இனிமையான சந்தோஷத்தைக் கொடுக்கும் பயணம் தான். இப்பகுதியில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வதில் எந்த வித உடல் சோர்வோ, பயணக் களைப்போ தெரியாது. இதற்கு முக்கிய காரணம், பசுமையான வயல்வெளிகள், அடர்த்தியான மரங்கள், ஆற்றுப் படுகைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், வயல்வெளிகளின் உட்புறத்திலே காணப்படும் பெரிய கிணறுகள், தண்ணீர் அருவி போல் கொட்டும் ஆழ் குழாய் கிணறுகள், இவற்றின் உதவியால் வருடம் முழுவதும் பசுமை வண்ணமே இங்கு படர்ந்திருக்கும்.

பேருந்திலே பயணம் செய்யும் போது எஸ்.ஏ. ராஜ்குமாரின் புண்ணியத்தில் பிரபலமான லா லா லா பாடல்கள் ஒலித்த காலம் அது. இது போன்ற வளமான பகுதிகளைக் கடந்து செல்லும் வேளையில் இந்தப் பாடல்கள் செவிக்கு உணவாகவும், பயிர்கள் கண்ணிற்கு உணவாகவும் ஒன்றிணைந்த பயணம், ஆஹா, சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் பகுதிகளில் பயணம் செய்வது போல் வருமா. அநேகமாக இப்படி நாங்கள் பேருந்து பயணத்தில் கேட்டுத்தான் லா லா லா மிகவும் பிரபலமானதோ என்னவோ. நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் இப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டு அந்த சுகானுபவத்தை பெறலாம்.

உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இப்பகுதி விளை நிலங்களில் காணும் அழகு பச்சை வண்ணத்தை வேறு எங்கும் காணமுடியாது. இந்த மண்ணின் தன்மை அப்படிப்பட்டது. நாங்கள் சொந்த ஊர்ப் பக்கம் செல்லும்போது எங்களைத் தலையாட்டி முதலில் வரவேற்பது அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள்தான். காவிரித் தாய் கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து , தனது நெடுந்தூரப் பயணத்தை பல ஊர்கள் வழியாக வந்து கடைசியில் கடலில் கலப்பது எங்கள் ஊர் பகுதியான பூம்புகாரில் தான்.

இங்கே வாழும் மக்களை மதங்கள் கூட பிரித்துப் பார்த்ததில்லை. எங்கள் குடும்பங்களில் வேண்டுதல்கள் கோயில்களோடு நின்று விடுவதில்லை. மன்னார்குடியில் உப்புக்காரத்தெருவில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கே இஸ்லாமியர்கள் வந்து உடல் பிரச்சினைகள் தீர மந்திரம் போட்டுச் செல்வார்கள். நாகூர் தர்காவிலும் நேர்த்திக்கடனை செலுத்துவோம், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் மரக்கண் வாங்கி நட்டு வேண்டுதல் நிறைவேற்றுவோம். சிக்கல் சிங்கார வேலன் கோயிலிலும் நிறைவேற்றுவோம். நாகை பகுதிக்கு தெய்வீகச் சுற்றுலா சென்றால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா, சிக்கல் சிங்கார வேலன் மூவரையும் தரிசித்த பின்னரே எங்கள் பயணம் நிறைவுபெறும். இது ஏதோ வினோதமான அதிசயமான விஷயமாக நாங்கள் கருதுவதில்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட புனிதமான விஷயம் இது. இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.

மன்னை, இன்றும் திண்ணை வைத்த வீடுகளைப் பார்க்கலாம். பழமை மாறாத ஊர்.

மயிலாடுதுறை, பழமையை வெளியேற்றாமல் புதுமை புகுந்து விளையாடும் ஊர்.

கும்பகோணம், குட்டி மும்பை என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரத்தில், வியாபாரத்தில் செழித்தோங்கும் ஊர்.

தஞ்சை, தமிழ் மாநாடு நடத்திய பெருமை கொண்ட ஊர். கலையழகு கொஞ்சும் தரணி போற்றும் ஊர்.

நாகை, சுனாமி சுழற்றி அடித்தாலும் சுயம்பாய் எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையின் இருப்பிடமாய் விளங்கும் ஊர்.

திருவாரூர், இந்த ஊரைப் பற்றி நான் சொல்வதை விட இவ்வூரின் பெருமை என்னவென்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அழகான ஆழித் தேர் கொண்ட ஊர் என்பது தனி கதை.

திருவையாறு இசை ஆசான்களின் இருப்பிடம். இசைப் பிரியர்களின் கொள்ளிடம்.

நாகூர், மெக்காவிற்கு அடுத்து அதிகம் பேர் வரவிரும்பும் ஊர்.

வேளாங்கண்ணி, வாடிகன் சிட்டிக்கு அடுத்து அதிகம் மக்கள் வர பிரியப் படும் ஊர்.

வேதாரண்யம், முத்துப்பேட்டை கடல் மாதாவின் முத்துக்கள்.

பூம்புகார், தமிழன் கடல் மார்கமாகவும் தன் வாணிபங்களை விரிவு படுத்தியுள்ளான் என்பதை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள உதவும் ஊர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சோழவளநாட்டின் பெருமைகளை. இந்த காவிரிப் படுகை சார்ந்த ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் செல்லும்போதும் சொந்த ஊருக்குச் சென்ற நினைப்புதான் வருமே தவிர வேறு ஊருக்குச் சென்ற எண்ணம் தோன்றாது. ஆனால் விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் இங்கும் நிகழ்கிறது. விவசாயத்தை படித்தவர்களும் ஒரு தொழிலாக எடுத்து செய்யும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டிற்கே படியளக்கும் வண்ணம் எங்கள் தஞ்சை மண் நெற்களஞ்சியமாக விளங்கியது ஒரு காலத்தில். மீண்டும் அதே போன்றதொரு நல்ல நிலை வர வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் அவா.

ஒரு ஊரில் பிறந்து வளர்ந்து அங்கேயே தங்கள் காலத்தைக் கழிக்க வாய்ப்பில்லாமல் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு , நாடுகளுக்கு சென்று வாழ்பவர்களின் மனநிலையைத்தான் நான் பிரதிபலித்துள்ளேன். இன்னும் சொல்லப் போனால் இப்போது நாங்கள் வாழும் பூமிதான் இன்றைய பொழுதிற்கு எங்களுக்கு சோறு போடும் ஊர். இந்த சொந்த ஊர் பாசமெல்லாம் வருடத்தில் எப்போதாவது வரும் பண்டிகைகளின் சந்தோஷங்களைப் போல கனவில் வந்து போகும் கடவுள் முகம் போல.

மரம் தன் கிளைகளை எங்கு பரவி வளர்ந்தாலும் வேர்தான் அடிப்படை. ஊர் பாசம் உள்ளவர்களுக்கு சொந்த மண் தான் அடிப்படை. இப்படி நான் குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களின் சிறப்புக்களைப் பற்றி தனித்தனி பதிவுகள் எழுத ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன்

சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி. சோழ நாடு சோறுடைத்து. இங்கே மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலை. க
ாவிரிப் பெண்ணிற்கு கர்நாடகம் பிறந்த வீடு என்றாலும், தமிழகம் புகுந்த வீடு. புகுந்த வீட்டிற்கு வந்து வளம் சேர்த்த காவிரிப் பெண்ணை, இப்போதெல்லாம் புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே சோழ வளநாட்டின் விவசாயம் இருந்த காலம் பொற்காலம்.

எக்ஸ்பைரி....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:52 PM | Best Blogger Tips
Photo: எக்ஸ்பைரி....

மற்றதைப் பற்றித் தெரியுமோ, இல்லையோ, மருந்துகளுக்கு ‘காலாவதி’ உண்டு என்பது பலரும் அறிந்ததே! மருந்து வாங்கும் போதும், ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கிற போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியைக் கவனிக்க வேண்டியது மிக மிக
முக்கியம். 

காலாவதி தேதி முடிந்த பிறகும் 3 மாதங்களுக்கு அந்த மருந்தை உபயோகிக்கலாம் என்கிற பரவலான மூட நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது!
காலாவதி தேதி என்றால் என்ன? அது எப்படிக் கணக்கிடப்படுகிறது? காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் என்னாகும்? இப்படி சகல கேள்விகளுக்குமான விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...

‘‘மருந்துகளோட காலாவதி தேதி என்பது மருந்தியல் விஞ்ஞான முறைப்படி நிர்ணயிக்கப்படுது. அதாவது ஒரு மருந்தோட வீரியத் தன்மையைப் பாதுகாக்க, அந்த மருந்துக்கு ஸ்திரத் தன்மையைக் கொடுக்கக் கூடிய, கிரியை உண்டாக்காத சில பொருள்களை அதில்
சேர்த்துத் தயாரிப்பாங்க. வெப்பத்தன்மையால பாதிக்கப்படற மருந்துகளை ‘தெர்மோலயபிள்’ (Thermolabile) னும், வெப்பத்தைத் தாங்கக் கூடிய மருந்துகளை ‘தெர்மோஸ்டேபிள்’ (Thermostable) னும் சொல்றோம். முதல் வகை மருந்துகளை வெளிச்சம் இல்லாத இருட்டான இடங்கள்லதான் வைக்கணும். அடுத்ததை வெளிச்சத்துலயும் வைக்கலாம். இதை அளவுகோல்களா வச்சுதான், ஒவ்வொரு மருந்தும் எத்தனை காலம் பாதுகாப்பாக இருக்கும்னு கணக்கிட்டு, அதுக்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுது’’ என்கிறார் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளியின் இயக்குனரும், தலைவருமான பேராசிரியர் ரவிச்சந்திரன்.

‘‘காலாவதி தேதி முடிஞ்ச பிறகு, மருந்துகள், தன்னோட வீரியத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிக்கும். அதுக்குக் காரணம், அந்த மருந்துகள்ல உள்ள மூலக் கூறுகள்ல ஏற்படற மாற்றம்! அதுக்குப் பிறகு, அந்த மருந்துகள், நாம எதிர்பார்க்கிற பலன்களைக் கொடுக்கறதில்லை. உதாரணத்துக்கு காலாவதி ஆகாத ஒரு மாத்திரை, நூறு சதவிகிதம் பலன் தரும்னா, காலாவதியான மாத்திரை, முழுப்பலனைத் தராது. காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால, நாம எதிர்பார்க்காத பக்க விளைவுகளும் வரலாம். இதுக்காகத்தான் ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் - 1940/1945’ காலாவதியான மருந்துகளைப் பத்தின விதிகளை வரையறுத்துச் சொல்லியிருக்கு. காலாவதியான மருந்துகளை, காலாவதி தேதிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம். காலாவதியான மருந்துகளை, விற்பனைக்காக வச்சிருக்கிற மற்ற மருந்துகளிடமிருந்து பிரிச்சு, ஒரு அட்டைப்பெட்டிக்குள்ள போட்டு, ‘காலாவதியானவை - விற்பனைக்கல்ல’ என்ற குறிப்போட வைக்கணும்னு அந்தச் சட்டம் சொல்லுது.

காலாவதியான மருந்துகளை உபயோகிக்கக்கூடாதுன்னு சொல்ற சட்டம், இதுவரை அந்த மருந்துகளை எப்படி அப்புறப்படுத்தறதுங்கிறதுக்கான எந்த வழிமுறைகளையும் வரையறுக்காததுதான் வருத்தமான விஷயம்...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.‘‘காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாப்பிடறது எவ்வளவு தவறான விஷயமோ, அதைவிட மோசமானது, அந்த மருந்துகளை வீட்ல வச்சிருக்கிறது. தேவையில்லாத மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தறதுதான் பாதுகாப்பானது’’ என்கிற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மார்பு நோய் நிபுணர் வி.எஸ்.அனந்தன்.

‘‘மாத்திரை, பவுடர் வகைகள், திரவம் மற்றும் இன்ஜெக்ஷன் வகையறாக்கள்னு ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு விதமா அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மாத்திரைகளை, வாங்கின கடைக்காரங்கக் கிட்டயே திருப்பிக் கொடுத்துடலாம். அப்படிக் கொடுக்கிறதுல சிக்கல் இருக்கிறதா நினைக்கிறவங்க, அதையெல்லாம் ஒரு பாலிதீன் கவருக்குள்ள போட்டுக் கட்டி, குப்பைத்தொட்டியில போட்டுடலாம். சிரப் மற்றும் திரவ வடிவ மருந்துகளை கழிவறையில கொட்டிடலாம். இன்ஜெக்ஷனா இருந்தா, அதை உடைச்சு, அப்புறப்படுத்தணும்’’ என்கிற டாக்டர், காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் அக்கறைஅவசியம் என்கிறார்.

‘‘உங்க குழந்தைக்கு இருமல்னு டாக்டரை பார்க்கறீங்க. சிரப் எழுதிக் கொடுக்கறார். ரெண்டு நாளோ, மூணு நாளோ கொடுத்ததுமே, குழந்தைக்கு நல்லாயிடுது. சிரப்பை எடுத்து அலமாரியில வச்சிடறீங்க. அந்த மருந்து எக்ஸ்பைரி ஆக இன்னும் ஒரு வருஷம் இருக்குன்னு வச்சுப்போம். மறுபடி 6 மாசம் கழிச்சு, உங்க குழந்தைக்கு இருமல் வரும்போது, அதான் எக்ஸ்பைரி ஆகலையேன்னு அதே மருந்தை எடுத்துக் கொடுப்பீங்க. அது ரொம்பத் தப்பு. சில மருந்துகளை திறந்துட்டா, அதோட எக்ஸ்பைரி தேதி மாறிடும். அதுலயும் சில பவுடர் வகை மருந்துகள், குறிப்பா குழந்தைகளுக்கான ஆன்டிபயாடிக் பவுடர்களை தண்ணீர்ல கலந்து கொடுக்கச் சொல்வாங்க. அப்படி தண்ணீர் கலந்துட்டாலே, அதை 1 வாரத்துக்குள்ள உபயோகிச்சிடணும். திரவ வடிவ மருந்துகள் வாங்கும்போது ஒரு கலர்ல இருந்து, பிறகு நிறம் மாறினா, எக்ஸ்பைரி ஆக நிறைய காலம் இருந்தாலுமே அதை உபயோகிக்கக் கூடாது. சில மாத்திரைகள் ஃபாயில் பேப்பர்ல சுத்தி வரும். ஒரு சில மாத்திரையை திறக்கும்போதே உடைஞ்சு, பவுடர் மாதிரி கொட்டும். அப்படி இருந்தா, அதை உபயோகிக்கக் கூடாது.

எந்த மருந்தா இருந்தாலும், அதை சூரியவெளிச்சம் படற மாதிரியான இடத்துல வைக்கவே கூடாது. ஏசி ரூம் சிறந்தது. அந்த வசதியில்லாதவங்க, நிழலான இடத்துல வைக்கலாம். ஃப்ரிட்ஜ்ல (ஃப்ரீசர்ல வைக்கக் கூடாது) 4 டிகிரியில வைக்கலாம். வெயில் படற இடத்துல வைக்கிற போது, மருந்துகள் இன்னும் சீக்கிரமே காலாவதியாகும்...’’ - மருந்துகளை அலட்சியமாகக் கையாள்பவர்களை ‘அலர்ட்’ செய்கிறது டாக்டரின்
அட்வைஸ். கைவசம் இருக்கட்டுமே என்கிற நினைப்பில், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிகளுக்கான மாத்திரைகளை டஜன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைப்பது பலரது வழக்கம். மாத்திரைப் பட்டியின் ஒரு ஓரத்தில் அது காலாவதியாகும் தேதி அச்சிடப் பட்டிருக்கும். அதைக் கவனிக்காமல், அந்த இடத்தைக் கிழித்து, மாத்திரையை எடுத்திருப்பார்கள். அடுத்த முறை உபயோகிக்கும் போது, காலாவதி தேதி கண்ணில் தெரியாது. ‘இப்பதானே வாங்கினோம்... அதுக்குள்ளயா எக்ஸ்பையரி ஆகியிருக்கும்’ என்கிற நினைப்பில் அதைத் தீரும் வரை உபயோகிப்பார்கள், பல நேரங்களில் அது காலாவதியானதே தெரியாமல்!மற்றதைப் பற்றித் தெரியுமோ, இல்லையோ, மருந்துகளுக்கு ‘காலாவதி’ உண்டு என்பது பலரும் அறிந்ததே! மருந்து வாங்கும் போதும், ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கிற போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியைக் கவனிக்க வேண்டியது மிக மிக
முக
்கியம்.

காலாவதி தேதி முடிந்த பிறகும் 3 மாதங்களுக்கு அந்த மருந்தை உபயோகிக்கலாம் என்கிற பரவலான மூட நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது!
காலாவதி தேதி என்றால் என்ன? அது எப்படிக் கணக்கிடப்படுகிறது? காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்வதால் என்னாகும்? இப்படி சகல கேள்விகளுக்குமான விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...

‘‘மருந்துகளோட காலாவதி தேதி என்பது மருந்தியல் விஞ்ஞான முறைப்படி நிர்ணயிக்கப்படுது. அதாவது ஒரு மருந்தோட வீரியத் தன்மையைப் பாதுகாக்க, அந்த மருந்துக்கு ஸ்திரத் தன்மையைக் கொடுக்கக் கூடிய, கிரியை உண்டாக்காத சில பொருள்களை அதில்
சேர்த்துத் தயாரிப்பாங்க. வெப்பத்தன்மையால பாதிக்கப்படற மருந்துகளை ‘தெர்மோலயபிள்’ (Thermolabile) னும், வெப்பத்தைத் தாங்கக் கூடிய மருந்துகளை ‘தெர்மோஸ்டேபிள்’ (Thermostable) னும் சொல்றோம். முதல் வகை மருந்துகளை வெளிச்சம் இல்லாத இருட்டான இடங்கள்லதான் வைக்கணும். அடுத்ததை வெளிச்சத்துலயும் வைக்கலாம். இதை அளவுகோல்களா வச்சுதான், ஒவ்வொரு மருந்தும் எத்தனை காலம் பாதுகாப்பாக இருக்கும்னு கணக்கிட்டு, அதுக்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுது’’ என்கிறார் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளியின் இயக்குனரும், தலைவருமான பேராசிரியர் ரவிச்சந்திரன்.

‘‘காலாவதி தேதி முடிஞ்ச பிறகு, மருந்துகள், தன்னோட வீரியத்தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிக்கும். அதுக்குக் காரணம், அந்த மருந்துகள்ல உள்ள மூலக் கூறுகள்ல ஏற்படற மாற்றம்! அதுக்குப் பிறகு, அந்த மருந்துகள், நாம எதிர்பார்க்கிற பலன்களைக் கொடுக்கறதில்லை. உதாரணத்துக்கு காலாவதி ஆகாத ஒரு மாத்திரை, நூறு சதவிகிதம் பலன் தரும்னா, காலாவதியான மாத்திரை, முழுப்பலனைத் தராது. காலாவதியான மருந்துகளை எடுத்துக்கிறதால, நாம எதிர்பார்க்காத பக்க விளைவுகளும் வரலாம். இதுக்காகத்தான் ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் - 1940/1945’ காலாவதியான மருந்துகளைப் பத்தின விதிகளை வரையறுத்துச் சொல்லியிருக்கு. காலாவதியான மருந்துகளை, காலாவதி தேதிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம். காலாவதியான மருந்துகளை, விற்பனைக்காக வச்சிருக்கிற மற்ற மருந்துகளிடமிருந்து பிரிச்சு, ஒரு அட்டைப்பெட்டிக்குள்ள போட்டு, ‘காலாவதியானவை - விற்பனைக்கல்ல’ என்ற குறிப்போட வைக்கணும்னு அந்தச் சட்டம் சொல்லுது.

காலாவதியான மருந்துகளை உபயோகிக்கக்கூடாதுன்னு சொல்ற சட்டம், இதுவரை அந்த மருந்துகளை எப்படி அப்புறப்படுத்தறதுங்கிறதுக்கான எந்த வழிமுறைகளையும் வரையறுக்காததுதான் வருத்தமான விஷயம்...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.‘‘காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாப்பிடறது எவ்வளவு தவறான விஷயமோ, அதைவிட மோசமானது, அந்த மருந்துகளை வீட்ல வச்சிருக்கிறது. தேவையில்லாத மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தறதுதான் பாதுகாப்பானது’’ என்கிற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் மார்பு நோய் நிபுணர் வி.எஸ்.அனந்தன்.

‘‘மாத்திரை, பவுடர் வகைகள், திரவம் மற்றும் இன்ஜெக்ஷன் வகையறாக்கள்னு ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு விதமா அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மாத்திரைகளை, வாங்கின கடைக்காரங்கக் கிட்டயே திருப்பிக் கொடுத்துடலாம். அப்படிக் கொடுக்கிறதுல சிக்கல் இருக்கிறதா நினைக்கிறவங்க, அதையெல்லாம் ஒரு பாலிதீன் கவருக்குள்ள போட்டுக் கட்டி, குப்பைத்தொட்டியில போட்டுடலாம். சிரப் மற்றும் திரவ வடிவ மருந்துகளை கழிவறையில கொட்டிடலாம். இன்ஜெக்ஷனா இருந்தா, அதை உடைச்சு, அப்புறப்படுத்தணும்’’ என்கிற டாக்டர், காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் அக்கறைஅவசியம் என்கிறார்.

‘‘உங்க குழந்தைக்கு இருமல்னு டாக்டரை பார்க்கறீங்க. சிரப் எழுதிக் கொடுக்கறார். ரெண்டு நாளோ, மூணு நாளோ கொடுத்ததுமே, குழந்தைக்கு நல்லாயிடுது. சிரப்பை எடுத்து அலமாரியில வச்சிடறீங்க. அந்த மருந்து எக்ஸ்பைரி ஆக இன்னும் ஒரு வருஷம் இருக்குன்னு வச்சுப்போம். மறுபடி 6 மாசம் கழிச்சு, உங்க குழந்தைக்கு இருமல் வரும்போது, அதான் எக்ஸ்பைரி ஆகலையேன்னு அதே மருந்தை எடுத்துக் கொடுப்பீங்க. அது ரொம்பத் தப்பு. சில மருந்துகளை திறந்துட்டா, அதோட எக்ஸ்பைரி தேதி மாறிடும். அதுலயும் சில பவுடர் வகை மருந்துகள், குறிப்பா குழந்தைகளுக்கான ஆன்டிபயாடிக் பவுடர்களை தண்ணீர்ல கலந்து கொடுக்கச் சொல்வாங்க. அப்படி தண்ணீர் கலந்துட்டாலே, அதை 1 வாரத்துக்குள்ள உபயோகிச்சிடணும். திரவ வடிவ மருந்துகள் வாங்கும்போது ஒரு கலர்ல இருந்து, பிறகு நிறம் மாறினா, எக்ஸ்பைரி ஆக நிறைய காலம் இருந்தாலுமே அதை உபயோகிக்கக் கூடாது. சில மாத்திரைகள் ஃபாயில் பேப்பர்ல சுத்தி வரும். ஒரு சில மாத்திரையை திறக்கும்போதே உடைஞ்சு, பவுடர் மாதிரி கொட்டும். அப்படி இருந்தா, அதை உபயோகிக்கக் கூடாது.

எந்த மருந்தா இருந்தாலும், அதை சூரியவெளிச்சம் படற மாதிரியான இடத்துல வைக்கவே கூடாது. ஏசி ரூம் சிறந்தது. அந்த வசதியில்லாதவங்க, நிழலான இடத்துல வைக்கலாம். ஃப்ரிட்ஜ்ல (ஃப்ரீசர்ல வைக்கக் கூடாது) 4 டிகிரியில வைக்கலாம். வெயில் படற இடத்துல வைக்கிற போது, மருந்துகள் இன்னும் சீக்கிரமே காலாவதியாகும்...’’ - மருந்துகளை அலட்சியமாகக் கையாள்பவர்களை ‘அலர்ட்’ செய்கிறது டாக்டரின்
அட்வைஸ். கைவசம் இருக்கட்டுமே என்கிற நினைப்பில், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிகளுக்கான மாத்திரைகளை டஜன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைப்பது பலரது வழக்கம். மாத்திரைப் பட்டியின் ஒரு ஓரத்தில் அது காலாவதியாகும் தேதி அச்சிடப் பட்டிருக்கும். அதைக் கவனிக்காமல், அந்த இடத்தைக் கிழித்து, மாத்திரையை எடுத்திருப்பார்கள். அடுத்த முறை உபயோகிக்கும் போது, காலாவதி தேதி கண்ணில் தெரியாது. ‘இப்பதானே வாங்கினோம்... அதுக்குள்ளயா எக்ஸ்பையரி ஆகியிருக்கும்’ என்கிற நினைப்பில் அதைத் தீரும் வரை உபயோகிப்பார்கள், பல நேரங்களில் அது காலாவதியானதே தெரியாமல்
!
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

இட்லி, தோசை உணவா சாவக்கேடா?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:34 PM | Best Blogger Tips
Photo: இட்லி, தோசை உணவா சாவக்கேடா?

நாம் சாப்பிட்ட உணவு சீரணமாக, உணவின் தன்மையைப் பொருத்து 3 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரத்துக்கும் மேலாக உடல்க் கருவிகள் உழைக்க வேண்டியுள்ளது. இதில் நமது அறிவுக்கான தேவை-முயற்சி எதேனும் உள்ளதா?

அனைத்து வேலைகளையும் உடல் தன்னியல்பாகச் செய்கிறது. நாம் செய்யும் – செய்ய வேண்டிய ஒரே வேலை உணவைச் சுவைத்துச் சாப்பிட வேண்டியது தான். இதை ஒழுங்காகச் செய்தால் உடல் மற்ற அனைத்துச் சீரன வேலைகளையும் சீராகச் செய்து முடித்து உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது.

உணவின் தேவையையும், நீரின் தேவையையும் பசியாக, தாகமாக மென்மையாக நம் அறிவுக்கு நம் உடல் உணர்த்துகிறது. அதுபோல ஈற்றுணவுக் கழித்தலுக்காகவும், கழிவு நீர் வெளியேற்றத்துக்காகவும் ஆன உணர்வினையும் மிக மென்மையாக நம் அறிவுக்கு உடல் உணர்த்துகிறது.

மேலும் நாம் உண்ணும் உணவை நமக்கு-நமது உடலியற்கைக்குப் பொருந்தியதா? இல்லையா? என்பதையும் சுவையின் மூலம் நமது அறிவுக்குத் தெரிவிக்கிறது நம் உடல்.

உணவினை நன்கு மென்று, சுவையறிந்து சாப்பிடும் போது தான் உமிழ்நீர் சுரக்கும் இதையே சான்றோர் அமுதம் என்கின்றனர். இந்த அமுதம் கலந்து வயிற்றுனுள் சென்றால்த் தான் உணவும், நீரும் சீரணமாகும். அவ்வாறு இல்லையேல் நஞ்சாகும்.

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்க்கும

களிபேர் இரையான்கண் நோய்.

என்றார்கள் நம் முன்னோர்கள்.

சாப்பிடும் போது உணவு உமிழ்நீருடன் கலந்து எந்த துன்பமும் இல்லாமல் தொண்டையில் இறங்க வேண்டும். – ஈற்றுணவுக் கழிப்பின் போது கழிவுகள் நம் முயற்சியில்லாமல் வெளியேற வேண்டும். இதுவே மேற்கூறிய குறளின் வழி.

தற்போது ஆங்கில மருத்துவம் படித்த மருத்துவர்கள் ஒருவேளை உணவை 5 ஆகப் பிரித்து மணிக்கொருமுறை சாப்பிடக் கூறுகிறார்கள். அதைச் சிந்தித்துப் பார்ப்பதையே மறந்து போன மனிதர்கள்! வழிகெடுகிறார்கள்.

பெரியவர்கள் ‘ஒரு வேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி’ என்பர் மூன்று வேளை உண்பவர்கள் உடலுக்கும், உயிருக்கும், பிறருக்கும் துரோகி என்பர் பல வேளை உணவெடுக்கும் இவர்களை எப்படி அழைப்பது?.

திருக்குறள் தன் மருந்து எனும் அதிகாரத்தில வரும் 6 பாடல்கள் உணவு உணபதைப் பற்றியதாகத்தான் உள்ளது. ‘வாயும், வயிறும் நன்றாயிருந்தால் நோயும், நொடியும் இல்லை’ என்பது படிக்காதவர் மொழி.

கடும் பசியில், களைப்புடன் உணவருந்துபவர்கள் இரண்டு வாய் உணவு சாப்பிட்டதுமே களைப்பு நீங்கி, உணவின் சுவையை பற்றிப் பேசுவது எவ்வாறு? மீண்டும் சத்தி பெற்று உழைக்கச் செல்வது எப்படி? உறுதியாக அப்பொது சப்பிட்ட உணவிலிருந்து சத்தியை பெற வாய்ப்பில்லை.

பசியோடு நன்கு சுவைத்துச் சாப்பிட்ட உணவு, உமிழ்நீரோடு கலந்து வயிற்றில் இறங்கும்போது- அதற்கு முன்பே நாக்கில் உள்ள சுவைச் சத்தியால் கணிக்கப்பட்டு, வயிற்றுக்கு வரும் உணவின் தரமும், அளவும், தன்மையும் மண்ணீரல் அறிகிறது உடன் வெவ்வேறு வகையான உணவினை சீரனிக்கத் தேவையான உடல்க் கருவிகள் அனைத்தையும தூண்டிச் சத்தியளிக்கிறது. இந்த சத்தியைப் பயன்படுத்தியே நாம் வேலைகளையும் செய்கிறோம்.

இந்த சீரணத்துக்கு அடிப்படையான வேலை. சுவைத்துச் சாப்பிடாதவர்களிடம் நடக்காது உமிழ்நீர் கலவாது வயிற்றினுள் செல்லும் உணவு நீண்ட நேரம் சீரணமாகாது. வயிற்றினுள் கிடப்பதால் புளிப்பேறி வயிற்றினுள் 2 நாள் மூடிவைத்த உணவு எப்படி மாறுமோ அப்படி ஆகி விடுகிறது. பலன் புளித்தேப்பம், வாயுத் தொல்லைகள்,வயிற்றில் கல்லைப் போட்டது போல துன்பம், நெஞ்சுக் கரிப்பு, …

தலைப்புக்கு வருவோம். இட்லி, தோசை மிக மென்மையானது இது சுவைப்பதற்காக வாயில் காத்திருப்பதில்லை. அது பொதுவாகச் சேரும் கடும் கார, கடும் புளிப்புச் சட்னிகளுடன் கலந்து அல்லது சட்னி, சாம்பாரில் நனைந்து, உடன் வயிற்றில் இறங்கி விடுகிறது. அது போதுமான அளவு சுவைக்கப் படாததால் சீரனிக்கப் படுவதில்லை.

வயிற்றுனுள் நீண்ட நேரம் கிடக்கிறது. அங்கு மீண்டும் தன் நொதித்தல் வேலையைத் தொடர்கிறது. மாலையில் கரைத்து வைக்கும் மாவு மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கி வருவது போல் நமக்குள்ளும் செய்கிறது, காலையில் உண்டது மாலை வரை உடல்க்கும் மனதுக்கும் மிகத் துன்பம் தருகிறது.

மருதமலை சித்தமருத்துவர் சுப்பிரமணியன். இட்லி, தோசை சாப்பிடுவோரை வயிற்றில் சாராயம் காய்ச்சுபவர் என அழைப்பார் உண்மைதான். தற்போது வேலையில் எளிமை கருதி, பல நாட்களுக்கான மாவை அரைத்துச் சவப் பெட்டியில்(பிரிஜ்) வைத்துவிடுகிறார்கள். அதைவிட புத்திசாலிகள் கடையில் விற்கும் 6 ரூபாய்ப் பொட்டலத்தை வாங்கித் தக்காளிச் சட்னி, கடைப் பொடியுடன் உணவைத் தள்ளுகிறார்கள்.

சில நாட்களில் மூன்று வேளையும் இட்லி, தோசை பொடியுடன், 2 நாட்களுக்கு முன் அரைத்து வைத்த சட்னியுடனும் பயன்படுத்தும் குடும்பங்களை பெருவாரியாகப் பார்க்கிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன் வரை இட்லி, தோசை விழாக் காலங்களில் செய்யும் உணவாக இருந்த்து. அதைப் பணக்காரர்கள் உணவு என்றும் கூறுவார்கள். சீரணக் கோளாறுகளை, நீரிழிவை (சர்கரைப் பிணியை) வாத நோய்களை பணக்கார நோயென்றே மக்கள் அழைப்பார்கள் கருத்தில் கொள்க.

இட்லி, தொசை இல்லாத அந்தக் காலத்திலேயே மாப்பண்டம் தவிர் என்றனர் பெரியோர். முன்பு நம்மிடம் இருந்தது தொட்டாலே கைமணக்கும் நம்முடைய அரிசி. இப்பொழுது நாம் பயன்படுத்துவது நஞ்சுள்ள, சொத்தையான, சக்கை அரிசி!?..

இந்த குப்பைக் கல்வியைப் படிக்கச் செல்லும் தன் பிள்ளைகளுக்கு, மதிய உணவாக இட்லி, தோசையைக் கொடுத்தனுப்பும் தாய், தந்தையர் மாலையில் அவர்கள் சரியாகச் சாப்பிடாமல் கொண்டுவரும் இட்லியை சிறிது சுவைத்துப் பார்த்தால் நல்லது. மாட்டேன், நான் அதை-மிஞ்சியதை அடுத்த நாள் உப்புமாவாக்கித் தான் தருவேன் என்றால் .................. அது உங்கள் விருப்பம்.

நோயாளிகளை –நோய் சமூகத்தை உருவாக்க யாருக்கும் உரிமை இல்லை.நாம் சாப்பிட்ட உணவு சீரணமாக, உணவின் தன்மையைப் பொருத்து 3 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரத்துக்கும் மேலாக உடல்க் கருவிகள் உழைக்க வேண்டியுள்ளது. இதில் நமது அறிவுக்கான தேவை-முயற்சி எதேனும் உள்ளதா?

நோயாளிகளை –நோய் சமூகத்தை உருவாக்க யாருக்கும் உரிமை இல்லை.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

திருநீறும்... திருநாமமும் நெற்றியில் அணிவதன் பொருள் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:32 PM | Best Blogger Tips

திருநீற் பட்டையில் மூன்று கோடுகள் உள்ளன... அவற்றுள்.. மேலே உள்ள கோடு... சூரியகலை... கீழே உள்ள கோடு சந்திரகலை... நடுவில் உள்ள கோடு... சுழுமுனை... நடுவில் வைக்கப்படும் குங்குமம் அக்னி அல்லது ஜோதி வடிவாக இங்கே இறைவன் இருப்பதைக் குறிக்கும்..

இதேபோல் தான் திருநாமத்திலும்.. இடம், வலம் உள்ள கோடுகள் முறையே இடகலை மற்றும் பிங்கலையை குறிக்கும்.. இவ்விரு கோடுகளையும் இணைக்கும் மத்திய கோடு சுழுமுனையைக் குறிக்கும்... நடுவில் உள்ள சிகப்புக்கோடு... இறைவனின் ஜோதி வடிவினைக் குறிக்கும்...

எனவே சைவமும்.. வைணவமும்.. இன்ன பிற மதங்களும்.. குறிக்க வந்த பொருள் ஒன்றே தான்... இந்த குழப்பங்களைக் களைவதர்க்கே... வள்ளல் பிரான் இராமலிங்க அடிகள்.. உருவ வழிபாட்டைத் தவிர்த்து

அருட்பெரும்ஜோதி... அருட்பெரும்ஜோதி...
தனிப்பெரும்கருணை.. அருட்பெரும்ஜோதி...

என்று எல்லாம் வல்ல பரம்பொருளை ஜோதி வடிவாகவே வணங்கச் சொன்னார்...

Via FB Sundarapandiyan Vijayan

சத்தான ராகி பானம் செய்யும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 4:23 PM | Best Blogger Tips
சத்தான ராகி பானம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பால் - முக்கால் டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - நான்கு இதழ்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.

கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.

வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.

கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.

அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.

சுவையான தெம்பான ராகி பானம் ரெடி.

குறிப்பு :

மூன்று மாத‌ குழ‌ந்தை முத‌ல் வ‌யதான‌வ‌ர்க‌ள் வரை குடிக்கும் ச‌த்தான‌ தெம்பான‌ பான‌ம் இது. பால் நிறைய‌ க‌ல‌ந்து த‌ண்ணீர் கொஞ்ச‌மாக க‌ல‌ந்தும் காய்ச்ச‌லாம். குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிறு ச‌ரியில்லாத‌ நேர‌ம் லூஸ் மோஷ‌ன் ஆகும் போது ரொம்ப‌ தெம்பில்லாம‌ல் இருப்பார்க‌ள் அந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌லாம். தின‌ம் காலை டீ காப்பிக்கு ப‌திலாக‌வும் குடிக்க‌லாம். ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு ந‌ல்ல‌ பான‌ம். நெய் தேவையில்லை என்றால் சேர்க்க‌ அவசியமில்லை. குழ‌ந்தைகளுக்கு (த‌னியா சிறிது கோதுமை மாவு, அரிசி மாவு, பாதா‌ம் ப‌வுட‌ர்) எல்லாம் சேர்த்து க‌ல‌ந்து வைத்து ராகி காய்ச்சும் போது இந்த‌ க‌ல‌வையை அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து கொள்ள‌லாம்.தேவையான பொருட்கள்

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பால் - முக்கால் டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - நான்கு இதழ்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.

கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.

வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.

கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.

அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.

சுவையான தெம்பான ராகி பானம் ரெடி.

குறிப்பு :

மூன்று மாத‌ குழ‌ந்தை முத‌ல் வ‌யதான‌வ‌ர்க‌ள் வரை குடிக்கும் ச‌த்தான‌ தெம்பான‌ பான‌ம் இது. பால் நிறைய‌ க‌ல‌ந்து த‌ண்ணீர் கொஞ்ச‌மாக க‌ல‌ந்தும் காய்ச்ச‌லாம். குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிறு ச‌ரியில்லாத‌ நேர‌ம் லூஸ் மோஷ‌ன் ஆகும் போது ரொம்ப‌ தெம்பில்லாம‌ல் இருப்பார்க‌ள் அந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌லாம். தின‌ம் காலை டீ காப்பிக்கு ப‌திலாக‌வும் குடிக்க‌லாம். ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு ந‌ல்ல‌ பான‌ம். நெய் தேவையில்லை என்றால் சேர்க்க‌ அவசியமில்லை. குழ‌ந்தைகளுக்கு (த‌னியா சிறிது கோதுமை மாவு, அரிசி மாவு, பாதா‌ம் ப‌வுட‌ர்) எல்லாம் சேர்த்து க‌ல‌ந்து வைத்து ராகி காய்ச்சும் போது இந்த‌ க‌ல‌வையை அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து கொள்ள‌லாம்.
 
Via Gentlegiant Karthikeyanposted toபிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.
 
மாரடைப்பு உண்டாக்கும் கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips
மாரடைப்பு உண்டாக்கும் கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை

கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

வயிற்றுப்போக்கு

பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர் அதில் கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.

அதிக கொழுப்பு

இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010 ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது என தெரிவித்துள்ளது. 

நீரிழிவு நோய்

கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிபடுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம். வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

Via FB Gentlegiant Karthikeyanposted toபிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.