திருநீற் பட்டையில் மூன்று கோடுகள் உள்ளன... அவற்றுள்.. மேலே உள்ள கோடு... சூரியகலை... கீழே உள்ள கோடு சந்திரகலை... நடுவில் உள்ள கோடு... சுழுமுனை... நடுவில் வைக்கப்படும் குங்குமம் அக்னி அல்லது ஜோதி வடிவாக இங்கே இறைவன் இருப்பதைக் குறிக்கும்..
இதேபோல் தான் திருநாமத்திலும்.. இடம், வலம் உள்ள கோடுகள் முறையே இடகலை மற்றும் பிங்கலையை குறிக்கும்.. இவ்விரு கோடுகளையும் இணைக்கும் மத்திய கோடு சுழுமுனையைக் குறிக்கும்... நடுவில் உள்ள சிகப்புக்கோடு... இறைவனின் ஜோதி வடிவினைக் குறிக்கும்...
எனவே சைவமும்.. வைணவமும்.. இன்ன பிற மதங்களும்.. குறிக்க வந்த பொருள் ஒன்றே தான்... இந்த குழப்பங்களைக் களைவதர்க்கே... வள்ளல் பிரான் இராமலிங்க அடிகள்.. உருவ வழிபாட்டைத் தவிர்த்து
அருட்பெரும்ஜோதி... அருட்பெரும்ஜோதி...
தனிப்பெரும்கருணை.. அருட்பெரும்ஜோதி...
என்று எல்லாம் வல்ல பரம்பொருளை ஜோதி வடிவாகவே வணங்கச் சொன்னார்...
Via FB Sundarapandiyan Vijayan