* யாரையும் சிறியவன், கீழானவன் என்று அவமதிக்காதீர்கள். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள்.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால் அனைவருமே நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.
* உணவருந்தும் போது தேவையற்ற அவசரமோ, மிகவும் நிதானமோ கூடாது.
* தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். இதனால், தீமையில் இருந்து விலகி நம்மைத் திருத்தி கொள்ள முடியும்.
* கரையான் போல மற்றவர்களின் செல்வத்தையும், புகழையும் கெடுத்து வாழ்வது கூடாது.
* நரை தோன்றிய பிறகாவது பிறவியை ஈடேற்றும் நல்ல அறவழிகளில் செல்ல முயற்சி செய்யுங்கள்.
* எல்லா உயிர்களிடமும் தூய அன்பு செலுத்தினால் மட்டுமே, கடவுளின் அருளைப் பெற முடியும்.
- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.