பெப்பர் சிக்கன் செய்யும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 PM | Best Blogger Tips

தேவையான பொருட்கள்

சிக்கன் - அரைக் கிலோ
மிளகு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பட்ட மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து தயாராக வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும். பின்னர் பட்ட மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு பொரிய விடவும்.

மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும் (அம்மியில் தட்டியது போல)

அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

பின்னர் கோழியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து குக்கரை மூடி விடவும். (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)

2 விசில் வந்ததும் இறக்கி மிளகை சேர்த்து (அதில் இருக்கும் தண்ணீர் வற்ற) கிளறி இறக்கவும்.

ரசம், சாம்பார் ஆகியவற்றிற்கு அருமையாக இருக்கும்.


தயாரிப்பு : ஆமினா

நன்றி :
சமையல் செய்வது எப்படி