உடல் வலிகளும் அதன் காரணங்களும். . .

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips
உடல் வலிகளும் அதன் காரணங்களும். . .

எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம், வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.

1. மிகமோசமான தலைவலி. . .


தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்
பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம்.

அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.

3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி
அனேகமாக இது arthritis ஆக இருக்கலாம்.

4. கடுமையான வயிற்று வலி. . .

வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.

5. கெண்டைக்கால் வலி. . .

கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி
கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.
7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி
சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் " கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது "என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போது நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாம்ல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.

8. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி
வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து கடினமடைகின்றது.மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது. இதனால் முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால் மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம் மரத்தும் போகிறது.
இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவே நியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு.காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அவஸ்தைகள் அதிகரிக்கும்.இது தங்களது சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு. (அப்படி எண்ணி சில மருத்துவர்களும் தவறான சிகிச்சை அளித்திருக்கிறார்கள்!).

நம் உடலில் மூளை தொடங்கி கால் நுனி வரை ஒவ்வொரு பாகத்துக்கும் குறிப்பிட்ட நரம்புகள் செல்கின்றன. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறது என்று அர்த்தம்.இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாக உணர்கிறீர்கள். காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின்மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. களிம்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குத்தான் லாபம்.

9. காரணம் அறிதல். . .

பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும் போது மூட்டுப்பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால் வந்த வலியா என்பதைப் பெரும்பாலும் கண்டு பிடித்துவிட முடியும்.
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின்உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோவலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம
ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை 'சுரீர்"என்று இழுக்கும் உணர்வுஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோஇது அதிகமாகும்.

ஸியாடிகா எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டுஎழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும். காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்தது போல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்க முடியும்.வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்றஅளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகிவிடும்.

10. சிறப்பு சிகிட்சை. . .

மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான் செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. நல்லவேளையாக இப்போது எம்.ர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது.முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும்தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும்.

நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.
ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டு வடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும்.

ஆனால் தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய ஆப்பரேஷன் செய்வது அவசியமாகிறது.நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்து குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டியிருக்கும்.