பேஸ்புக் ஹக் செய்யபட்ட கணக்கை மீட்பது எப்படி பேஸ்புக் கணக்கு ஹக் செய்ய பட்டுள்ளதா .கவலை படாதிங்க ஈசியாக மீட்கலாம் அதற்கு முதலில் இந்த முகவரிக்கு https://www.facebook.com/hacked செல்லவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை போல வரும் (என்னிடம் ஓரு சகோ எப்படி ஹக் செய்ய பட்ட கணக்கை மீட்க முடியுமா என்று கேட்ட கேள்விக்கு இந்த பதிவை எழுதிகிறேன் ) பிறகு my account is compromised கிளிக் செய்யவும் பிறகு வரும் விண்டோவில் உங்களது ஈமெயில் முகவரி அல்லது பேஸ்புக் usar name அல்லது குடுத்து search செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் பிறகு கிழே உள்ள படத்தை போல இருக்கும் உங்களது பேஸ்புக் கணக்கின் கடவுச்சொல் குடுத்து continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் பிறகு வரும் விண்டோவில் பேஸ்புக் கடவுச்சொல் புதிதாக குடுக்கவும் (பழைய கடவுச்சொல் மீண்டும் குடுக்க கூடாது பிறகு continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் பிறகு வரும் விண்டோவில் log in குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் அவ்வளவு தான் உங்களுடைய பேஸ்புக் சென்று இருக்கும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:21 | | Best Blogger Tips

பேஸ்புக் ஹக் செய்யபட்ட கணக்கை மீட்பது எப்படி

பேஸ்புக் கணக்கு ஹக் செய்ய பட்டுள்ளதா .கவலை படாதிங்க ஈசியாக

மீட்கலாம் அதற்கு முதலில் இந்த முகவரிக்கு https://www.facebook.com/hacked

செல்லவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை போல வரும் (என்னிடம் ஓரு

சகோ எப்படி ஹக் செய்ய பட்ட கணக்கை மீட்க முடியுமா என்று கேட்ட

கேள்விக்கு இந்த பதிவை எழுதிகிறேன் )
பிறகு my account is compromised கிளிக் செய்யவும் பிறகு வரும் விண்டோவில்

உங்களது ஈமெயில் முகவரி அல்லது பேஸ்புக் usar name அல்லது குடுத்து

search செய்யவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு கிழே உள்ள படத்தை போல இருக்கும் உங்களது பேஸ்புக் கணக்கின்

கடவுச்சொல் குடுத்து continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம்

பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் 


பிறகு வரும் விண்டோவில் பேஸ்புக் கடவுச்சொல் புதிதாக குடுக்கவும் 

(பழைய கடவுச்சொல் மீண்டும் குடுக்க கூடாது பிறகு continue குடுக்கவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் 

பிறகு வரும் விண்டோவில் continue குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம்
 
பிறகு வரும் விண்டோவில் log in குடுக்கவும் உதவிக்கு கிழே உள்ள படம் 

அவ்வளவு தான் உங்களுடைய பேஸ்புக் சென்று இருக்கும் 
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 
குழந்தை இன்மை பிரச்சனையா??

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:46 | Best Blogger Tips

எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம். பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும். கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும். ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கல்பனா சம்பத்.

பாதுகாப்பு முறை: குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது , போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். பாலியல் ரீதி யான குறைபாடுகளை மறைக்காமல் முன்கூட்டியே சிகிச்சை செய்து கொள்வது அவசியம். ஆண், பெண் இருவருமே தாமதமான திருமணம் மற்றும் 35 வயது வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது மற்றும் ஆணும் பெண்ணும் மகிழ்வான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது குழந்தையின்மைப் பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.
-ஸ்ரீதேவி

அவல் தோசை: அவல் மற்றும் 1 கப் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். 1 கப் பச்சரிசி மற்றும் 1 கப் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

ரெசிபி

ஓட்ஸ் வெஜ் அடை: கேரட் துருவியது அரை கப், கோஸ் அரை கப் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை கப் கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அடையாகவும் சுடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

கருவேப்பிலைக் குழம்பு: வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், 5 வறமிளகாய், 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும். 50 கிராம் புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி புளிக்கரைசல் மற்றும் தேவை யான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது.

டயட்

பரம்பரைக் காரணங்கள், தாமத மான திருமணம், அதிக எடை, தைராய்டு பிரச்னை, ஆண், பெண் வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி இன்றி இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் புட், கொழுப்பு உணவுகள் அதிகம் எடுப்பதைத் தவிர்க் கவும். முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள், நல்ல கொழுப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து, கால்சியம், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்கவும். எண்ணெய்யின் பயன்பாட்டை குறைக்கவும், சோயா பருப்பு, கீரை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு ஈரல் மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பில் போட்டு சாப்பிடலாம். உப்பு அதிகம் உள்ள உணவு, ரீபைண்டு செய்யப்பட்ட மைதா, சேமியா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

* ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
* அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.
* அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.
* அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
* ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
* ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.
* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.

ரொம்ப போர் அடிக்கும் போது என்னலாம் பண்ணலாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:07 | Best Blogger Tipsநிறைய நேரம் போர் அடிப்பது போலவே தோன்றும். அப்படி போர் அடித்தால், பெரும்பாலும் தூங்கத் தான் செய்வார்கள். ஆனால் அவ்வாறு எப்போது பார்த்தாலும் போர் அடிக்கும் போது தூங்குவதை தவிர்த்து, வேறு ஏதாவது ஒரு காரியத்தில் சிந்தனையை செலுத்தலாம். மேலும் போர் எதற்கு அடிக்கிறது என்று தெரியுமா? ஏதேனும் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்து, அதில் முழு கவனத்தையும் செலுத்துவதால், மனம் சோர்வடைந்து போர் அடிக்க ஆரம்பிக்கிறது. ஆகவே அந்த நேரத்தில் என்ன செய்தால், உற்சாகம் வரும் என்பதை படித்து தெரிந்துகொண்டு, செய்து பாருங்களேன்...

* எப்போது போர் அடித்தாலும் சாப்பிட்டு தூங்குவது என்று மட்டும் இருப்பார்கள். ஆனால் அவ்வாறு போர் அடிக்கும் போது செய்வதால் என்ன பயன். ஆகவே அப்போது வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து, சற்று வெளியே சென்று பிடித்த ஏதேனும் ஒரு ஐட்டமான சிக்கன் ரைஸ் அல்லது ஐஸ் கிரீம் என்று சாப்பிட்டு வந்தால், போர் அடிக்காது. மனமும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.
...

* எங்கேயாவது பிடித்த இடத்திற்கு போவதைப் பற்றி ப்ளான் போடலாம். ஏனெனில் அவ்வாறு அநத் நேரத்தில் போட்டால், மனம் சந்தோஷத்தோடு இருக்கும். போர் அடிப்பதும் போய்விடும்.

* மொபைலில் இருக்கும் ஏதேனும் ஒரு நம்பரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மெசேஜ், மிஸ்டு கால் அல்லது போன் செய்து சிறிது நேரம் விளையாடலாம். அதிலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது சற்று அவர்களை வம்புக்கு இழுப்பது போல் அனுப்பு வரலாம். அது சற்று விளையாட்டுத்தனமாக தான இருக்கும். இருப்பினும் இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

* போர் அடிக்கும் போது, நண்பர்கள் தமக்கு எழுதிய டைரிகள் அல்லது நோட் புத்தகங்களை எடுத்து படித்துப் பார்க்கலாம். இதனால் பழைய கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்களுடன் செய்த அட்டகாசங்கள் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்து, போர் அடிப்பது போய்விடும்.

* வீட்டில் ஏதேனும் விருந்து அல்லது திருமணத்தின் போது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்க்கலாம். ஏனெனில் இதை நாம் வேலையாக இருக்கும் போது பொறுமையாக பார்க்க முடியாது. ஆனால் போர் அடிக்கும் போது, இதைச் செய்தால், குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சென்று வந்த ட்ரிப் ஞாபகத்திற்கு வந்து, இனிமையாகவும், மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

* வீட்டை எப்போது தான் சுத்தம் செய்வோமோ தெரியாது. ஆனால் அதை போர் அடிக்கும் போது செய்தால், நிச்சயம் மற்ற நேரத்தில் செய்யும் சுத்தத்தை விட, இந்த நேரத்தில் மிகவும் சுத்தமாக செய்வோம். மேலும் வீட்டை சுத்தம் செய்வதால், உடலுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும்.

* இல்லையெனில் அப்போது தனக்கு பிடித்த விளையாட்டை விளையாடலாம் அல்லது ஏதேனும் ஒரு பாட்டை போட்டு டான்ஸ் ஆடலாம். வேண்டுமென்றால் பிடித்த படங்களைப் பார்க்கலாம். கார் அல்லது பைக் ரைடிங் போகலாம்.

மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கண்டிப்பாக போர் அடிப்பது போய்விடும். அந்த நேரமும் ஒரு பயனுள்ளதாக இருக்கும். என்ன நண்பர்களே! நீங்க போர் அடிச்சா என்ன செய்வீங்க...கிராம்பின் மருத்துவக் குண‌ங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:05 | Best Blogger Tips


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
...

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது

தூக்க மாத்திரை போடுறீங்களா? புற்றுநோய் வரும்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:03 | Best Blogger Tips
தூக்கம் வராமல் தூக்கமாத்திரை போட்டுக்கொண்டு தூங்குபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தூக்கமின்மை என்பது ஒரு நோய். இந்த பிரச்சினைக்கு தீர்வு தருவதற்காகவே வெளிநாடுகளில் ஸ்பெசலிஸ்டுகள் இருக்கின்றனர். ஆனால் நம்நாட்டில் இதனை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை. தலைவலி, காய்ச்சல் போல ஒரு மாத்திரையை வாங்கிப்போட்டு முடித்திக் கொள்கின்றனர்.
...

தூக்கமாத்திரைகளை போடுவதனால் வாய் உலர்தல், தலை சுற்றல், வயிற்றுப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இரண்டு நாட்களில் மாத்திரையை நிறுத்துவிடாமல் மாதக்கணக்கில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்வோருக்கு நாளடைவில் ரத்த அழுத்தம் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு வரை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

மருத்துவர்களின் அறிவுரை இன்றி மாதக்கணக்கில் தூக்கமாத்திரை எடுத்துக்கொண்டவர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்தான் அதிக அளவில் தூக்கமாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு கேன்சர் வரும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கின்றனர்.
முன்பெல்லாம் வயதானவர்கள்தான் தூக்கம் வராமல் தவித்தனர். ஆனால் இன்றைக்கு இருக்கும் பணிப் பளுவினால் இளம் வயதினாரும் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். அவர்கள் மருத்துவரிடம் சென்று தூக்கமாத்திரை கேட்டு வாங்கி சாப்பிடத் தொடங்கியுள்ளனர் அவர்களை எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த முதற்கட்ட ஆய்வு முடிவு.

உடம்புக்கு தேவையான தூக்கம் கிடைக்காத போது மன அழுத்தத்துடன் கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம் என்று கூறும் மருத்துவர்கள்

‘‘மாத்திரைகளைத் தாண்டி, சில சிகிச்சைகள், உடற்பயிற்சிகள் மூலமாவும் தூக்கமின்மை பிரச்னையில இருந்து விடுபட முடியும் என்று ஆறுதல் அளித்துள்ளனர்.

பெண்களுக்கு மாரடைப்பு நோய் அறிகுறிகள் பற்றி தகவல் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:01 | Best Blogger Tips
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

அறிகுறிகள் என்னென்ன?

இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.

புகைப்பிடிக்கும் பெண்கள்

இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.

புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.

உடல் எடையை கவனியுங்கள்

மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துணவுகள்

ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.

பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

டூக்கான் பறவை பற்றிய அறிய தகவல் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips


"டூக்கான்" அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச் (Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால் (Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ (Ramphastos Toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அ...
லகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பை அமெரிக்க அறிவியல் ஆய்விதழ் சயன்சு என்பதில் வெளியிட்டுள்ளார்.

இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால் வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொறுத்தும் பறவையின் நடவடிக்கையையும் பொறுத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.

இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற் போல தலையின் அலகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.

மரக்கிளைகளிலும் மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இரைச்சல் எழுப்புகின்றன. உறங்கும் பொழுது தன் தலையை முதுகுப்புறம் திருப்பி தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டிற்கு ஒரு முறை தான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும் பொழுது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்கு கொள்ளுகின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக வாழ்கின்றன.

பேரீச்சம்பழம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:56 | Best Blogger Tips
இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.
வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, விட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் விட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய
பொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மெலிந்த குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பாடசாலைக்குச் சென்று வந்தவுடன் கால் மூட்டுக்களில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் குணமாகாமல் இருப்பார்கள்.இதை ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்றால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் ஆயுள் வேத மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பெண்களுக்கு
பொதுவாக பெண்களுக்கு அதிக கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது.
இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால் தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.

ஓட்ஸ். . .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:49 | Best Blogger Tips


ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது.

இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது.
...

அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது

ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.