அர்ச்சனை செய்வதன் சூட்சுமம்

மணக்கால் அய்யம்பேட்டை | பிற்பகல் 3:57 | Best Blogger Tipsஒருவரின் ஜென்ம நட்சத்திர வடிவத்தை, தன் கையில் கொண்டிருக்கும் தெய்வ சிலைக்கு அல்லது அந்த ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்த கடவுளுக்கு ஜென்ம நட்சத்திர அன்று அர்ச்சனை செய்வது சால சிறந்தது.

உதாரணமாக, ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரம், அன்று அர்ச்சனை செய்வது நல்லது.

01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02.
பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03.
கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04.
ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05.
மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06.
திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07.
புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08.
பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09.
ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10.
மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11.
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12.
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13.
அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14.
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15.
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16.
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17.
அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18.
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்
19.
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20.
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21.
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22.
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23.
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24.
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25.
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26.
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27.
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.
 

நன்றி 👤இணையம்✍ **

நம் முன்னொர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | பிற்பகல் 3:56 | Best Blogger Tips


Image result for நம் முன்னொர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்

நன்றி 👤இணையம்✍ **