தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:03 AM | Best Blogger Tips
தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம் க்கான பட முடிவு

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்....
அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...
செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.
அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....
அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.
தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.
ஆச்சரியமாக இருக்கிறதா.
இது உண்மை.
இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
find my device
find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.
முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..
பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.
உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.
அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.
ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.
play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.
lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.
erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.
இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.
அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
By K.VisvaKaviarasan-Police Department, Chennai.
காப்பிபதிவு
கா.செல்வராஜ்.
Image may contain: 1 person, tree, outdoor, nature and water


சுட்ட நாக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips
சுட்ட நாக்கு க்கான பட முடிவு
குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இன்னிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறிஈடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்றகள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார்
சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கோபமாக கேட்டார்/
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.


*நாவு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான்*👅👅👅👅👅😀😃😃😄
👌👌👌👍👀👍👌👌👌

உங்களுக்கு தெரியுமா
உங்க விழிகள் இரண்டிற்கும் இடையிலுள்ள ஒற்றுமையை.. பாருங்கள். 👀

👀 *ஒன்றாக சிமிட்டும்*

👀 *ஒன்றாக நகரும்*

👀 *ஒன்றாக அழும்*

👀 *பொருட்களை ஒன்றாக பார்க்கும்*

*இவ்வளவிற்கும் அவை ஒன்றை ஒன்று பார்த்தது கூட இல்லை.*

*நட்பு* என்பதும் இது போன்றே...

*நட்பு* இல்லையெனில் வாழ்க்கை வெறுமை ஆகிவிடும்.

இது உலகத்தின் நெருக்கமான நண்பர்களின் வாரமாகும்.

உங்களுடைய நல்ல நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள்..

நானும் உங்கள் நல்ல நண்பன் எனில் எனக்கும் அனுப்புங்கள் ...

👉 *எவ்வளவு திரும்பி உங்களுக்கு கிடைக்கிறது என்று பாருங்கள்..*

*நீங்கள் 7க்கு மேல் திரும்ப பெற்றால் நீங்கள் ஒரு அன்பானவராவார்..

Image may contain: 1 person, sunglasses and outdoor



நன்றி இணையம்