தமிழர்_தெய்வம் #மூதேவிவழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:01 PM | Best Blogger Tips



#தமிழர்_தெய்வம் #மூதேவிவழிபாடு

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் #வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் #பிரதானதெய்வம் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். மூதேவி தான் #செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு '#கந்தழி' என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு.

பழையோள், காடுகிழாள், கானமாசெல்வி என்று சங்க இலக்கியங்கள் ஏற்றிப் போற்றும் #கொற்றவை, மிகப் பழைமையான தமிழர் பெண்தெய்வமாக இனங்காணப்பட்டவள். கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "#தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.சைவ - வைணவப் புராணங்களில், மூதேவியானவள், பாற்கடலைக் கடைந்தபோது திருமகளுக்கு முதலில் தோன்றியவளாக வருணிக்கப்படுகிறாள். முதலில் தோன்றிய தேவி என்பதால் அவள் 'மூதேவி' என்று ஆனாள். நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் #மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது.தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். மேலும் தமிழர் தெய்வமான மூதேவி மழைக் கடவுளான வருண பகவானின் மனைவியாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன.பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது.பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து 'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், #உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர். #சோழர்காலம் வரை தமிழகத்தில் தவ்வை வழிபாடு சிறப்புற விளங்கியிருக்கிறது என்பதற்கு பல #தொல்லியல்சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தெழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தவ்வைக்கு ஒரு திருமுன் (சன்னதி) உண்டு. திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் #பராந்தகநெடுஞ்சடையனின் படைத்தளபதி மனைவியான நக்கன் கொற்றியால் தவ்வைக்கு ஒரு #குடைவரைக்கோயில் உருவாக்கப் பட்டுள்ளது

  


நன்றி இணையம்

படைத்தவன் பானைதேடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 


இந்த_பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பானையைக் கொடுத்து அனுப்புகிறார்

அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்!

உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை, அமைதி, நிம்மதி, சந்தோஷம், நல்லெண்ணம், அன்பு, ஆரோக்கியம், பக்தி, தியாகம் இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அதில் இருக்கும்,

ஆனால் எந்த பொக்கிஷத்தையும் நாம் முழுமையாக அனுபவிப்பது இல்லை,

காரணம் நம் பார்வையெல்லாம் அடுத்தவன் பானைமீது தான் இருக்கிறது!

ஒரு சிலர் செம்பு பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்!

ஒரு சிலர் வெள்ளிப்பானையுடன் செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம்,

ஒரு சிலர் தங்கப்பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்தும் ஏங்குவோம்!


எப்படியாவது அந்த ஆடம்பரமான பானையை அடைந்துவிடவேண்டும் என்று போராடுவார்கள், ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை மண்பானையில் இருக்கும் எந்த பொக்கிஷமும் அதில் முழுமையாய் இல்லையென்று!

அருகில் சென்று உங்களுக்கு மட்டும் எப்படி தங்கப்பானை கிடைத்தது என்று கேட்க,

எனக்கும் மண்பானை தான் கொடுத்தார்,

நான் தான் நிறைய சம்பாதித்து இந்த பானையை வாங்கினேன் என்றதும்,

ஓடி ஓடி சம்பாதித்து தங்கப்பானை வாங்கிவிடுவார்கள்,

ஆனால் உள்ளே எதையும் வைக்கமுடியாது, வெளியுலகுக்கு மட்டும் தங்கப்பானை கவுரவமாகவும் பெருமையாக இருக்கும்!

இந்த பானை கிடைத்த சந்தோஷத்தில் மண்பானையை தூக்கி எறிந்துவிட்டு அதில் இருந்த பொக்கிஷங்களை எடுத்து தங்கப்பானையில் திணிப்பார்கள்

சில பொருத்துக்கொள்ளும்

சில சிதறிவிடும்,

சிதறியவற்றை பற்றி கவலைப்படாமல் தங்கப்பானையோடு வாழ்வதே சந்தோஷம் என்று வாழ்வார்கள்

காலம் மாற மாற

அடைத்து வைத்த பொக்கிஷங்கள் எல்லாம்

தங்களது இயல்பு நிலையை இழந்து அங்கே இருக்க முடியாமல் பானையை சிதைத்துக்கொண்டு வெளியேறிவிடும்!

இறுதிகாலத்தில் சிதைந்த பானையில் இருக்கவும் முடியாமல், பொக்கிஷங்களையும் இழந்துவிட்டு, தெருத்தெருவாக அலைவோம்,

நம்மை தாக்குவதற்காக விதவிதமான எதிரிகள் நோய்கள் என்ற பெயரில் கொடூரமாக தெருக்களில் உட்கார்ந்து இருப்பார்கள்!

தெருவை கடப்பதற்குள் ஆளுக்கொரு பக்கம்

கடித்து குதற ரத்தகாயங்களோடு தப்பித்து ஓடிவருவோம்,

ஆரோக்கியம் என்ற பொக்கிஷத்தின் அருமை அப்போதுதான் தெரியும்!

தங்கப்பானைக்குள் அடங்காததால் வெளியே வீசியெறிந்தது அப்போதுதான் நினைவுக்கு வரும்!

ரத்த காயங்களுக்கு மருந்துபோட உறவுகளையும் நட்பையும் தேடுவோம்!

பானையில் இடமில்லை என்று பொய்யாக விரட்டியடித்தது தவறு என்று இப்போது புரியவரும்,

யாருமற்ற நிலையில் நோய்களிடமிருந்து காத்துக்கொள்ள அந்த மண்பானையாவது கிடைக்காதா என்று தேடி அலைவோம் ...

ஏதோ ஒரு தெருவோரத்தில் உடைந்த நிலையில் சாய்ந்தபடி அந்த மண்பானை கண்ணில் தெரியும்,

ஆசை ஆசையாய் ஓடிச்சென்று பார்ப்போம்,

அம்மா அப்பா என்ற பொக்கிஷங்கள் இறந்துபோயிருக்கும்,

மனைவி குழந்தைகள் உறவுகள் நட்புகள் அமைதி நிம்மதி சந்தோஷம் என்ற பொக்கிஷங்கள் எல்லாம் சிதைந்துபோயிருக்கும்!

ஆரோக்கியம் எனும் பொக்கிஷம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்!

அன்பு கருணை தியாகம் பக்தி என்ற பொக்கிஷங்கள் மட்டும் எந்தவித சேதமும் இன்றி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி

காயம் பட்டவர்களுக்கு மருந்து தடவிக்கொண்டு இருக்கும்!

மண்பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நல்லமுறையில்

வாழவேண்டும் என்று நினைக்கும் போது

#Excuse_me...

உங்களுக்கு கொடுத்த time முடிஞ்சிடுச்சி,

அந்த பானையையும் பொக்கிஷங்களையும் திருப்பி தரமுடியுமா !?

என்று கேட்டபடி ஒருவர் நிற்பார்!

யார் நீங்க?? என்றால்

கடவுள் என்று சொல்லியபடி உடைந்த பானையையும் சிதைந்த பொக்கிஷங்களையும் தூக்கிச்செல்வார்!

ஏக்கத்தோடு அவரையே பார்த்து நிற்க, பின்புறத்தில் ஏதோ கரடுமுரடான சத்தங்கள் கேட்டு திரும்பி பார்த்தால் நம்மை தேடியலைந்த நோய்களெல்லாம

கொடூரமான முகத்தோடு

ரத்தவெறியுடன் ஓடிவரும்!

அப்புறமென்ன கண்ணிமைக்கும் நேரத்தில் கதம் கதம்!!

கடவுள் தந்த அந்த பானையையும் பொக்கிஷங்களையும் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

#படைத்தவன் பானைதேடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்..

 

நன்றி இணையம்


இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 




*திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்..*_

அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்..

அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான்.

இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்...

அந்த வயதானவரோ

தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்..

இளைஞன்...

நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன்...தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்...

நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சி யில் ஈடுபடலாமே என்றான்..

பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்தும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர்..விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது..

அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார்? என்றான்..

அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய்...

பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் என்றார்...

அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன..அத்தனைக்கும் தலைவர் இவரே..

இப்பொழுது அதிர்ந்து போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்...

சாராபாய் சிரித்து கொண்டே கூறினார்...

தம்பி.. ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான்..

அது மகாபாரத காலமாக இருந்தாலும் சரி..இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி...கடவுளை மறக்காதே.

இன்று நாத்திகர்கள் அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம்..

ஆனால் வரலாறு சொல்லும்..

அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான்..என்று

இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை....

பரந்தாமனின் மொழிகள் (கீதை) உண்மையானவை..

அதை வணங்கி பாருங்கள்..துன்பம் தொலைந்தோடுவதை காண்பீர்கள் என்றார்..

*God is Eternal Truth. God's speech (Bhagavad Gita) is true; it cannot be falsified at all. Just by worshipping it, troubles will surely get resolved.*

_*உண்மையான ஹிந்துவாக வாழ்ந்து மறைந்தவர் விக்ரம் சாராபாய்....*_

_*நமது படிப்போ ...*_

_*பட்டமோ ...*_

_*பதவியோ ...*_

_*நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை என உணர்வோமாக.....*_

 


நன்றி இணையம்


மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 



"நான் உங்களை நோக்கி சகோதர சகோதரிகளே என சொன்னதும் கைதட்டுகின்றீர்கள்

எங்கம் மதம் எங்களுக்கு இதைத்தான் போதிக்கின்றது, பெற்றோரும். குருவும் மனைவியும் தவிர ஒருவனுக்கு எல்லா உறவும் சகோதர உறவே

அதுவும் இந்து சன்னியாசிக்கு எல்லோரும் சகோதரர்களே எனும் சொல்லும் தர்மத்தின் வழியில் இருந்து வந்திருக்கின்றேன்

உங்கள் நாட்டில் பெண்களை அம்மா என அழைத்தேன் என்னை கோபமாக பார்த்தார்கள், எனக்கு வயதாயிற்றா? என சீறினார்கள்.

அம்மா என அழைத்தால் மூதாட்டி என நினைத்தாயோ என திரும்ப கேட்கின்றார்கள்

நான் பொறுமையாக சொன்னேன், உங்கள் நாட்டில் இந்த கிறிஸ்தவ சன்னியாசிகள் உண்டல்லவா? அப்படி இந்து சன்னியாசி நான்

எங்கள் நாட்டில் சன்னியாசிகள் எல்லா பெண்களையும் தாயே என்றுதான் அழைப்போம், அது வயதான பெண் என்றாலும் சரி, சின்னஞ்சிறிய மகவு என்றாலும் சரி

எல்லா பெண்களும் எங்களுக்கு தாயே..


பெண்களை அம்மா எனவும் தாயே எனவும் அழைக்கும் மிகபெரிய தர்மம் எங்கள் தர்மம், அந்த மாபெரும் சிறப்புமிக்க பூமியில் இருந்து வந்திருக்கின்றேன்

துறவு என்பது விஞ்ஞானமல்ல அதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் விஞ்ஞானியும் துறவி அல்ல, ஆன்மீகம் என்பது அனுபவித்து உணரவேண்டியது, தெய்வத்தை உணர வைப்பவனே துறவி என சொல்லும் அந்த மதத்தில் இருந்து வந்திருக்கின்றேன்

கண் தெரியாதவனுக்கு உலகை காணமுடியாது, அகங்காரம் கொண்டவனுக்கு ஆண்டவனை காண முடியாது

எங்கள் நாட்டு சன்னியாசிகள் அழுக்கானவர்கள் என்பார்கள், கந்தலாடை அணிந்தவர்கள் என்றெல்லாம் சொல்வார்கள், ஆம் அழியபோகும் உடலுக்கு ஏன் அழகு என குறிப்பால் சொல்வது எம் தர்மம்

எங்கள் தர்மம் உலகில் எந்த மதமும் சொல்லா தியானத்தை போதிக்கின்றது, தன்னை வெல்வதே மாபெரும் வெற்றி என்பதை சொல்கின்றது

குளத்து ஆமை கடல் குளத்தைவிட பெரிதாக இருக்கமுடியாது என மடதனமாக நம்புவதை போல் அது நம்ப சொல்லவில்லை, விரிந்து பரந்த கடவுளை மனதின் மிகபெரிய இடத்தில் இருந்து நோக்கி அதன் பிரமாண்டத்தை உணர சொல்கின்றது

கடவுள் என்பவருக்கு கைகாட்டும் தர்மம் அல்ல இது, மனதால் தியானித்து அககண்ணால் அவனை தன்னுள்ளே காண செய்யும் அற்புதமான தர்மம் இது

அம்மதம் யாரையும் வெறுக்கவுமில்லை, மிரட்டி பணியவைக்கவுமில்லை. அந்த ஜோதி தன்னை உணர்ந்தவனை ஏற்றுகொள்கின்றது, தன்னை உணராமல் செல்பவனை நோக்கி பரிதாபபடுகின்றது

அது சுதந்திரமானது, யார்மேலும் அதிகாரத்தையோ கட்டுபாட்டையோ திணிக்காதது, அதற்கு ஒரே தலைவன் என்றோ மிகபெரிய கட்டுபாடு என்றோ எதுவுமில்லை

கடலில் மீன்கள் சுதந்திரமாக உலாவது போல், வானத்து பறவைகள் பறப்பது போல் ஒரு இந்து தன் சமூகத்தில் சுதந்திரமாக‌ உலாவ முடியும், அவர்களை ஆடு மாடுகளை போல் ஒருவன் கண்காணிக்கும் அவசியமே இல்லை

அது ஆயிரமாயிரம் வழியினை தன் பக்தர்களுக்கு சொல்கின்றது, பல பிரிவுகள் அதில் உண்டு ஆனால் எல்லா நதியும் கடலுக்கு செல்வது போல் அதன் எல்லா கிளையும் இறைவனை நோக்கியே பக்தனை இழுத்து செல்கின்றது

இந்த உலகம் போர்களால் நிறைந்துள்ளது, இந்த போர்களுக்கு பின்னால் பேராசை நிறைந்துள்ளது, அந்த பேராசைக்கு காரணம் அவரவர் மதங்கள் அரசியலாகிவிட்டன, மானிட மனங்களை அவற்றால் செம்மைபடுத்தமுடியவில்லை

எங்கள் தர்மம் மனதோடு பேசுகின்றது, அது மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கொடுக்கின்றது, மனம் செம்மையானால் அன்பும் சகோதரத்துவமும் அமைதியும் செழிக்கும், அங்கே போருக்கும் சண்டைக்கும் வழி இல்லை

எம்மதம் எம்தேசத்தில் அந்த அற்புதத்தை செய்கின்றது, சில கண்டங்கள் இனம் மதம் மொழி என அடித்து கொண்டிருக்கும் நிலையில் எம் துணைகண்டம் இனம், மொழி என பிரிந்திருந்தாலும் ஒரே நாடாய் அமைதியாய் நிற்கின்றது

சாத்வீர்கமான இந்துமதத்தின் பெருமை அதுதான், அதுதான் மொழி இனம் என பிரிந்த மக்களை பாரத மக்களாக நிறுத்தி வைத்திருக்கின்றது, அதிகார வர்க்கங்கள் அஞ்சுவதும் ஆச்சரியமாக பார்ப்பதையும் அதைத்தான்

உலகுக்கே ஒற்றுமையும் அன்பையும் உண்மையான ஆன்மீக தத்துவங்களையும் மானிடரை மானிடராக வாழவைக்கும் அற்புத ஞான களஞ்சியங்களையும் கொண்டிருக்கும் மகா உயர்ந்த ஹிந்து தர்மத்தின் சாட்சியாக உங்கள் முன் நிற்கின்றேன்

இந்துவாக இருந்த ஒரே காரணத்தால் இந்த வாய்ப்பினை கொடுத்த இந்துமதத்தை மனதார வணங்கி உரையினை தொடங்குகின்றேன்"

: 1893ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதி சிகாகோ உரையில் சுவாமி விவேகானந்தர்

 


நன்றி இணையம்