'' நாக்கை அடக்கினால்''..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips

கரு நாக்கின் பலன்கள் | Karu nakku palan in Tamil

💐💐🌹🌹🙏🏻🌹🌹💐💐

ஒரு உறுப்பை வைத்து ஒருவரின் பண்பை எடை போட முடியுமென்றால் அது நாக்கு தான்.

நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு. வீழ்ந்தோரும் உண்டு.

எனவே நாக்கை நமது கட்டுப்பாட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

தேவையற்ற பேச்சை எப்போதும், யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது.. பேசும் போது நன்றாக சிந்தனை செய்து பேசினால் நன்மையே விளையும்.

யாரிடமும், அவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. அவ்வாறு பேசினால், அதற்கான துன்பம் வந்து சேரும்.நாக்கை அடக்கி ஆளக்கற்றுக் கொண்டால், உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

"
பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும்.

அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்.

ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது.
ஆத்திரத்தில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய பெண்.. இந்த வெறிச்செயலின்  பின்னணி என்ன?
அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்து இருந்த துதிக்கையை நீட்டியது யானை.

இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான்..

அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன்,
'
அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்து இருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்.

அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்' என்று சொல்லி விட்டார்.விவசாயியின் நாக்கை கடித்த பாம்பு.. நாகசாந்தி பூஜையில் நடந்த விபரீதம்! –  News18 தமிழ்

மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும்.

தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியம் இல்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்..

ஆம்.,நண்பர்களே....

நாக்கின் நீளம் மூன்று அங்குலம் தான்., ஆனால் அது ஆறடி மனிதனையும் கொன்று விடும

வெறுப்பிலும் கோபத்திலும் மகிழ்ச்சியில் கூட வார்த்தைகளை அளந்துபேசுங்கள்!
காளிதேவி நாக்கை வெளியே நீட்டியிருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா...?
அது நமக்குத் திரும்பி வரும் போது எல்லாமே மாறி விடும்........

🌹🌹🌹🌹🙏🏻💐💐💐💐


நன்றி இணையம்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹   தமிழ் நாடு வாழ்க!  🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹