💕💕💕💕💕புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை....💞💞💞💞💞💞💞

மணக்கால் அய்யம்பேட்டை | 3:04 PM | Best Blogger Tips

 மனசு: கிராமத்து நினைவுகள்: தண்ணீர்... தண்ணீர்...

கணவன் - மனைவி
 

 COUPLE 4K IMAGE

தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி...
"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........
கணவன் மனைவி சண்டை - தீர்வு என்ன? (Kanavan Manaivi Sandai)
"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"
வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.
சசியின் தென்றல்: குடம் கொண்டு போற பெண்ணே...!
அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

"
தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?
படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !
கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள்
'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........
கணவன் மனைவி கவிதைகள் - Husband Wife Quotes in Tamil
அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள்.
தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.
Relationship : உறங்கச் செல்லும் முன் கணவன் – மனைவி இதையெல்லாம் கட்டாயம்  செய்ய வேண்டும்!
இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய என்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.
Cheating In Marriage Life,Relationship cheating: மனைவி கணவனையோ, கணவன்  மனைவியையோ ஏமாற்றுவதற்கான 5 காரணங்கள் - reasons of cheating in relationship  - Samayam Tamil
உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).
vastu for marriage life : கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருதா? இந்த  எளிய டிப்ஸ் உங்களுக்கு கைகொடுக்கும்
அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.





நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை
200+] Romantic Couple Wallpapers | Wallpapers.com
வாழ்க வளமுடன்......

 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷



 
🙏✍🏼🌹


 
🌷 🌷🌷 🌷


 

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 No photo description available.

1.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
 
2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து "நமசிவாய" சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
 
3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
 
4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
 
5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை!
6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, "தீப மங்கள ஜோதி நமோ, நம" என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
 
7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
 
8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை கலந்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை
தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
 
9. திருவண்ணாமலை மலை சுமார்
2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
 
10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.
 திருவண்ணாமலையில் கார்த்திக்கை தீபம் ஏற்றப்படுவது எப்படி? | Karthigai Deepam  Thiruvannamalai Arunachaleswarar Temple why
11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
 
12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
 
13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
 
14. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்படும் மகா தீபம்... நேரலை காட்சி - மனிதன்
15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.
 
16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.
 
17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
 திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கார்ல போறீங்களா?.. இந்த தகவலை நோட்  பண்ணிக்கோங்க | Police important announcement Thiruvannamalai Karthigai  Deepam festival - Tamil Oneindia
19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.
 
20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.
 
21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை #நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நிறைவு: மகா தீப கொப்பரை கோவிலுக்கு  கொண்டுவரப்பட்டது | Tiruvannamalai Temple Karthigai Deepam complete
22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
 
23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.
 
24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
 🔴LIVE | நேரலை | 2021 |Tiruvannamalai Karthigai Deepam live 2021 |  திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2021 - YouTube
25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
 
26. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
27. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.
 
28. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “#அண்ணாமலையாருக்கு #அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்"- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
 
29. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.