தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய பாஸ் செய்து வைக்கிறார்கள் என்பதை ஒரு கல்வியாளர் மிகவும் குறைபட்டு கூறிக் கொண்டிருந்தார்.
என்றைக்கு பெயில் ஆக்க முடியாது என்ற நிலை வந்ததோ அன்றைக்கு அவன் புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்து விட்டான் என்று கூறினார். எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு வரை சரியாக படிக்க முடியாத ஒரு மாணவன் எப்படி திடீரென்று 9, 10 என்று வரும்போது கணக்கு விஞ்ஞானம் ஆங்கிலம் தமிழ் என்று படிக்க முடியும்? அவனே தனிப்பட்ட முறையில் திண்டாடிப் போவான் என்று கூறினார்.
அத்தோடு கூட புதிதாக ஒரு தகவல் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. தமிழகத்தில் கல்வித்துறை மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று காட்டுவதற்காக மதிப்பெண்களை வாரி குவித்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். காரணம் அந்த மாணவன் பெயிலாகிவிட்டால் மீண்டும் அவனை அழைத்து வந்து விசேஷ வகுப்புகள் நடத்தி அவனை பாஸ் செய்து வைக்க வேண்டும் என்ற பாரம் ஆசிரியர் தலையில் வந்து விழுகிறது. அவர்களுடைய விடுமுறை நாட்கள் இதனால் குறைந்து போகிறது. மீறி பாஸ் செய்யாமல் விட்டாலோ தற்கொலை, விசாரணை, பிரமோஷன் தடை என்று தேவையில்லாத சிக்கல்கள். இதற்கு ஒரே தீர்வு மதிப்பெண்களை அள்ளித் தூக்கிப் போட்டு எல்லோரையும் பாஸ் செய்து விட்டு விட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. எவன் வந்து எப்படி இத்தனை மதிப்பெண் வந்தது என்று கேட்பான்? மதிப்பெண் குறைந்தால் revaluation போடுவார்கள். கூடினால் யார் போடுவார்கள்?
இதே வேலையைத்தான் 10 12 இரண்டு வகுப்புகளிலும் செய்கிறார்கள் என்று கூறினார்.
அதன் பின்னர் எப்படியோ இட ஒதுக்கீடு அது இது என்று கூறி ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்து ரூட் தல, ரவுடித்தனம் என்று மூன்றாண்டுகளை 30 அரியர்களை வைத்துக்கொண்டு முடித்து விடுவான். எப்போது கேட்டாலும் பையன் பி காம் படிக்கிறான் பி ஏ படிக்கிறான் என்று மிதப்பாக கூறிக் கொள்வார்கள்.
இவர்கள் எல்லோரும் மூன்றாண்டுகள் கல்லூரியில் சேர்வார்களே தவிர படிப்பை முடிக்கவே மாட்டார்கள். படித்து முடிக்காமல் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியே வந்த பின்னர் மிகவும் சாமானிய வேலைகளில் சேர்ந்து விடுவார்கள். ஆனால் கேட்டால் பிகாம் படித்தேன், பி எஸ் சி படித்தேன் என்று கூற வேண்டியது.
இருக்கிற சாமானிய தொழில்களை செய்ய வேண்டும் என்றால் தேவையில்லாமல் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகளை வீணாக்கி, பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும்போது சரியாக எழுதப்படிக்க கூட தெரியாத அளவில் படித்து முடித்துவிட்டு வருகிறார்கள்.
இதில் இவர்களை நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ துறையில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் இது போல மோசமான கல்வி நிலையில் வைத்து இட ஒதுக்கீடு மேனேஜ்மென்ட் கோட்டா என்றெல்லாம் சொல்லி பணத்தை பிடுங்கி கல்லூரிகளில் சேர்த்துக்கொண்டு பாடத்திட்ட முறைகளை கல்வியை அழித்து ஒழித்துக் கட்டி வருகிறார்கள்.
இதன் பின்னால் ஒரு மாபெரும் கூட்டம் துல்லியமாகத் திட்டமிட்டு அழிவை நோக்கி மொத்த தமிழகத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக வேலை செய்து வருகிறது.
இவர்களே இவர்கள் வீட்டுப் பிள்ளைகளை இவர்களுக்கு இவர்களிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்க மாட்டார்கள். தாங்கள் நிறுவனம் நடத்தினால் அதில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு கூட வேலை கொடுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான கல்வித் தரம் பெற்றவர்கள் இவர்கள்.
மற்ற எல்லா பயங்கரவாத செயல்பாடுகளை பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள் இது கல்வி பயங்கரவாதம் என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இப்படி ஒரு பார்வை ஒரு கல்வியாளரிடமிருந்து அதுவும் பிராமண சமுதாயத்தை சேராத ஒரு கல்வியாளரிடமிருந்து வந்தது அதிர்ச்சியாக இருந்தது.🍀 Veera Muni
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
கல்வி பயங்கரவாதம்
வாழ்க்கையின் சிறந்த பாடங்களை எங்கு கற்றுக் கொள்ளலாம்.......?
தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு வாகனத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார்.
அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பழங்களை சைக்கிளில் கொண்டு வந்தும் விற்பார் .
வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.
ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.
என்னதான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை.
ஸ்கூட்டர் அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார்.
இது நேற்று நடந்தது.
இன்று அதே நேரத்தில், அங்கு எனக்கு இருக்க வேண்டிய சூழ்நிலை. அவரிடம் பழங்களை வாங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு பழங்களை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட, தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு.
அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், ஒரு நிமிஷம் சார், என்று என்னிடம் கூறிவிட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.
அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு, நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, என்ன? என்று கோபமாக கேட்டாள்.
நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.
தாயி, நேற்று போன அவசரத்தில் இதை தவற விட்டு விட்டு போய் விட்டாய்" என்று விலையுயர்ந்த செல்போனை தன் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
அந்த இளம்பெண்ணுக்கு பேச்சே வரவில்லை.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை. நான் பேங்கில் பணிபுரிபவள். முக்கியமான நம்பர் எல்லாம் இதில்தான் இருக்கிறது. மிக்க நன்றி என்று கூறிவிட்டு கண் கலங்கினார்.
நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது. கொஞ்சம் டென்சன், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விட்டேன்" என்று கைகூப்பினாள்.
அட விடு தாயி. எல்லாருக்கும் கோபம் வர்றதுதான். இதை போய் பெரிசு படுத்திக்கிட்டு, ஜாக்கிரதையாக போ தாயி என்று அன்போடு அனுப்பி வைத்தார்.
நேற்று அப்படி திட்டிய பெண்ணை, நாலு வார்த்தை கேட்டிருக்கலாமே என்றேன்.
சின்ன பொண்ணு சார். இன்னும் கல்யாணம், காட்சி, குழந்தைன்னு ஆல விருட்சமா வாழ வேண்டிய பொண்ணு சார். வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். எனக்கு பேத்தி வயசு. என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா? நல்லா இருக்கட்டும் சார். நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்கதான் சார். இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே என்றார்.
என்னால் பேசவே முடியவில்லை.
அசந்து விட்டேன்.
நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்.
வாழ்வின் அருமையான பாடங்களை எளிமையான மனிதர்களிடத்தில் கற்றுக் கற்றுக் கொள்ளலாம்..!!