இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:34 PM | Best Blogger Tips

இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.

சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.

சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

2)கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.

3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

4)வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.

6)ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

7)அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

8)கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.

9)எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.

10)முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.

யசுர் வேதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:05 PM | Best Blogger Tips

யசுர் வேதம் (சமற்கிருதம் यजुर्वेदः yajurveda, yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

பொருளடக்கம்

பிரிவுகள்

யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.

கிருஷ்ண யசுர்வேதம்

கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது [1] ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.

சுக்கில யசுர்வேதம்

சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும்[2] தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.

பிராமணம்

மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.

நன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது.

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மணக்கால் அய்யம்பேட்டை | 5:00 PM | Best Blogger Tips

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....

வேதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:59 PM | Best Blogger Tips

வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:
என்பனவாகும்.
இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசயநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:
  1. சம்ஃகிதா - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
  2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
  3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
  4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.
கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராம்மணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.

நன்றி தமிழ்வீக்கிபிடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது.

http://ta.wikipedia.org/s/80l

ஓம் என்னும் ஒலியும் பெருவெடிப்பு கொள்கையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:58 PM | Best Blogger Tips

உலகில் இதுவரை நடந்த பெரும் விஞ்ஞான ஆராய்வுகளில் பெருவெடிப்பு கொள்கையே முக்கியமானது..அதாவது உலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது.அதன் போது என்ன நிகழ்வு இடம்பெற்றது என்பது பற்றிய ஆராய்வே இது..இதை என்று BIG BANG THEORY ஆங்கிலத்தில் அழைப்பர்.

அந்த பரிசோதனையின் போது ஓம் என்ற ஒலியே தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்ரனர் விஞ்ஞானிகள்..அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றும் போது ஓம் என்ற ஒலியுடனேயே தோற்றம் பெற்றது என்கின்றனர்..அதாவது இந்துமக்கள் ஓம் என்னும் ஒலியை பரப்பிரம்மம் என்று அழைப்பர்...பரம் என்றால் உலகம்..பிரம்மம் என்றால் உருவாக்கம்...(அதனால்தான் படைப்பவர் பிரம்மா ) எனவே உலக உருவாக்கம் என்பதே ஓம் என்பதன் உட்பொருள்....

இதன் போது இன்னொரு கதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் தர்மத்தின் பாதை கடமைப்பட்டு உள்ளது...

படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு பிரணவ மந்திரம்(ஓம் என்பதே பிரணவ மந்திரம்) தெரியாத படியால் முருகப்பெருமான் தலையில் குட்டியதாகவும் அதன் பின்பு உபதேசம் செய்ததாகவும் கதை உண்டு....ஆக உலகம் தோற்றம் பற்றிய விளக்கமே அந்தக்கதை...அதாவது படைக்கும் பிரம்மாவுக்கு ஓம் என்னும் ஒலியின் விளக்கம் புரியவில்லை ஆக அந்த ஒலியின் விளக்கத்தை முருகபெருமான் சொல்லிகொடுத்தார்........இதையே விஞ்ஞானம் கூறுகினாறது...அதாவது உலகம் தோற்றம்பெற்ற போது(படைத்தல் ) ஓம் என்னும் பிரணவ மந்திரமே ஒலித்து என்கிறது விஞ்ஞானம்.....

சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ராபர்ட் வில்சன் என்கிற விஞ்ஞானியும் டாக்டர் பெஞ்சியாஸ் என்கிற விஞ்ஞானியும் மைக்ரோவேவ் ரேடியேசன் எ
ன்கிற நுண்கதி இயக்கம் பிரபஞ்சத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்.அவர்களின் சோதனையின் போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள் தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள்.

http://mysticcross.blogspot.com/2010/10/aum-reverberation-of-big-bang.html

http://creative.sulekha.com/gayatri-the-big-bang_36079_blog

http://www.montrealultimate.ca/en/node/15932

http://maya-gaia.angelfire.com/big_bang_involution.html

Cosmology: A Research Briefing, National Research Council, National Academy Press, 1995. என்னும் நூலிலும் இது பற்றிய குறிப்புக்கள் உண்டு...

இந்த அதிர்வுகள் அவர்களுக்கு புரியவில்லை..தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றிய போது உருவான அதிர்வுகலே அவை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டர்கள்.அதாவது பிரபஞ்ச சிருஸ்டி தோன்றிய போது ஏற்பட்ட ஓம் என்கிற ஓசைதான் அது என்பது தெளிவாகியது.இதை நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்பது ஆழ்ந்து ஆராயபடவேண்டிய விடயமாகும்...

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?..

மணக்கால் அய்யம்பேட்டை | 4:54 PM | Best Blogger Tips

எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும். வைட்டமின் “ஈ” உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர். போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள், முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத் தடுப்பதில் அமிலச் சத்தான “ஒமேகா 3″ வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன் நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில் அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல், “ஒமேகா 3″ தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள் வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53 சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும் அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், “பாலி பெனோல்ஸ்” என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், “ஆன்டி ஆக்ஸிடென்ட்” அதிகமாக இருக்கிறதாம்.

டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.

அதிக உப்புத்திறன் கொண்ட “அஜினமோட்டோ”, சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கொண்டு உணவு தயாரிக்கவும்.

எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.

தெரிந்துக்கொள்வோம் 2

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips

♥* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.
* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள்உள்ளன.
* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.
* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.
* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.
* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில்உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.
* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில்காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறத ு.
* யானையின்துதிக்க ை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.
* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.
* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.
* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.
* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.
* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.
* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும் .
* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.
* ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.
* கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில ் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும்அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.
* வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை
* பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றைய ும் விட மிகவும்வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும ் இந்த அமைப்பு கிடையாது.
* ஆஸ்திரேலியாவிற் கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும்அரசா ங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச ் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும்ஏற் று குடிமக்களை அனுப்பி வைக்கிறது.
* மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறா ர்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
* சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்துவருகின் றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிற து.
* 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் (tie) டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும ் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர் களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந ்ததால் அதை இரவில் கூட பலர் கழற்றாமல் அணிந்து கொண்டே தூங்கினார்கள்.. ..

via - சுபா ஆனந்தி

இந்து சமய விரதங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:50 PM | Best Blogger Tips

இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

பொருளடக்கம்

வரைவிலக்கணம்

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தெனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.
- ஆறுமுகநாவலர்.

விரதங்களின் வகைப்பாடுகள்

இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,
  1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
  2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
  6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
  18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
  21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
  22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
  25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
  26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.
- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.[1]

விரத வகைகள்

இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

இந்து சமயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:47 PM | Best Blogger Tips

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1] [2]. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.

பொருளடக்கம்

ஒரு சுருக்கமான மேலோட்டம்

இந்து சமய
கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
நிர்வாணம்
மோட்சம், வீடு
அவதாரக் கோட்பாடு
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தந்திரம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்

பா    தொ
இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.

சனாதன தர்மம்

"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.

யோக தர்மம்

இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாழ்வின் நான்கு இலக்குகள்

இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.

இறைத்தொண்டு / சமூக சேவை

இறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.

இந்து மதம் குறித்தனான விமர்சங்கள்

சாதிநிலைகளை கடவுளே ஏற்றுக் கொண்டது குறித்தான விமர்சங்கள்., ஒரு பிரிவினர் மட்டுமே கடவுளை வழிபாடு செய்யவும், கருவரை செல்லவும் அனுமதி்க்கப்படுவது குறித்தான விமர்சங்கள். பழம், பூ என பலவும் கடவுளுக்கு சென்ற படைப்பதனால் அது மக்கள் உபயோகத்திற்கு மறுக்கப்படுகிறது என்பது குறித்தான விமர்சனங்கள்.

படங்கள்

Thanks to tamil wikipedia

http://ta.wikipedia.org/s/7ny

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:45 PM | Best Blogger Tips

பிரதமர்,  இந்தியா
Emblem of India.svg
இந்தியாவின் சின்னம்
தற்போது
மன்மோகன் சிங்

19 மே 2004 முதல்
அதிகாரப்பூர்வ பட்டம் Mr. Prime Minister
(Informal)
The Honourable
(Formal)
வாழுமிடம் பஞ்சவடி, புது தில்லி
நியமிப்பவர் இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம் 5 ஆண்டுகள்
முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு
15 ஆகத்து 1947 (65 ஆண்டுகளுக்கு முன்னர்)
உருவாக்கப்பட்ட வருடம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்
15 ஆகத்து 1947 (65 ஆண்டுகளுக்கு முன்னர்)
ஊதியம் Indian Rupee symbol.svg 1.35 லட்சம் (US$3,100)
இணைய தளம் இந்தியப் பிரதமரின் அலுவளகம்
இந்தியப் பிரதமர்: (ஆங்கிலம்: Prime Minister Of India) இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார்[1].
பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் [2].

பொருளடக்கம்

பிரதமர் நியமனம்

முதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947
பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[3].

அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
  • பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
  • அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கினைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
  • அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
  • பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[4].
  • பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • முக்கிய இராணுவ விடயங்கள்.
  • பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
  • மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
  • முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றதில் பதிலளித்தல்.
  • பிரதமரின் தேசிய நிவரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:[5].

பிரதமர் அலுவலகம்

பிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி
பிரதமர் அலுவலக முகவரி:
சவுத் பிளக், ராய்சினா ஹில்,
புது டில்லி, இந்தியா - 110 011,
தொலைபேசி: 91-11-23012312.
இந்தியாவின் இரு முக்கிய செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு பொன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[5].

பிரதமரின் தேசிய நிதிகள்

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].

பிரதமரின் தேசிய இராணுவ நிதி

இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.
இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].

பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்

இந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்க்கள்.
இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.
இவர் 582 நாட்க்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளி நாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.
முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்க்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.
41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவராவார்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.
இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியை சேராத தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.
இவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:[7].

இந்தியப் பிரதமர்களின் பட்டியல்

எண் பெயர் படம் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு கட்சி பிறந்த ஊர்/மாநிலம்
01 ஜவஹர்லால் நேரு
ஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் அலகாபாத், உத்தரப் பிரதேசம்
02* குல்சாரிலால் நந்தா
மே 27, 1964 ஜூன் 9, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)
03 லால் பகதூர் சாஸ்திரி
ஜூன் 9, 1964 ஜனவரி 11, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் முகல்சாரி, உத்தரப் பிரதேசம்
04* குல்சாரிலால் நந்தா
ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)
05 இந்திரா காந்தி Indira2.jpg ஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்
06 மொரார்ஜி தேசாய் Desai1937.jpg மார்ச் 24, 1977 ஜூலை 15, 1979 ஜனதா கட்சி பாதிலி, மும்பை
07 சரண் சிங்
ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980 ஜனதா கட்சி நூர்பூர், உத்தரப் பிரதேசம்
08 இந்திரா காந்தி Indira2.jpg ஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்
09 ராஜீவ் காந்தி
அக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989 காங்கிரஸ் (I) மும்பை
10 வி. பி. சிங்
டிசம்பர் 2, 1989 நவம்பர் 10, 1990 ஜனதா தளம் அலகாபாத், உத்தரப் பிரதேசம்
11 சந்திரசேகர்
நவம்பர் 10, 1990 ஜூன் 21, 1991 ஜனதா கட்சி பலியா, உத்தரப் பிரதேசம்
12 பி. வி. நரசிம்ம ராவ்
ஜூன் 21, 1991 மே 16, 1996 காங்கிரஸ் (I) கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம்
13 அடல் பிஹாரி வாஜ்பாய் Atal Bihari Vajpayee.jpg மே 16, 1996 ஜூன் 1, 1996 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்
14 தேவகவுடா
ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997 ஜனதா தளம் ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம்
15 ஐ. கே. குஜரால் Gujral.jpg ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998 ஜனதா தளம் ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
16 அடல் பிஹாரி வாஜ்பாய் Atal Bihari Vajpayee.jpg மார்ச் 19, 1998 மே 22, 2004 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்
17 மன்மோகன் சிங் Prime Minister Manmohan Singh in WEF ,2009.jpg மே 22, 2004 மே 21, 2009 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
18 மன்மோகன் சிங் Prime Minister Manmohan Singh in WEF ,2009.jpg மே 22, 2009 -- இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
  • Copy from & thanks to கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் .