புரட்சிக்கவி பாரதிதாசன்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:48 | Best Blogger Tips
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.

இவர் ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி கற்றார். இவர் முதுபெரும் புலவர் பு . அ . பெரியசாமியிடமும் பின்னர், புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றார்.

இவர் மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார்.இவர் இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
இவர் வ.உ.சி-யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த பாவேந்தர் பாரதியார், வ.வே.சு, டாக்டர் வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். பாரதியாரின் 'இந்தியா' ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

பாரதியாருடன் நெருங்கிய பழக்கத்தால் சாதி, மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துக்களால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் கவிதைகள் எழுதினார். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் இவர் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

இவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தினார்.