இந்து சமயம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:47 | Best Blogger Tips


இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1] [2]. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.

பொருளடக்கம்

ஒரு சுருக்கமான மேலோட்டம்


இந்து சமய
கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
நிர்வாணம்
மோட்சம், வீடு
அவதாரக் கோட்பாடு
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தந்திரம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்

பா    தொ
இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.

சனாதன தர்மம்

"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.

யோக தர்மம்

இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாழ்வின் நான்கு இலக்குகள்

இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.

இறைத்தொண்டு / சமூக சேவை

இறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.

இந்து மதம் குறித்தனான விமர்சங்கள்

சாதிநிலைகளை கடவுளே ஏற்றுக் கொண்டது குறித்தான விமர்சங்கள்., ஒரு பிரிவினர் மட்டுமே கடவுளை வழிபாடு செய்யவும், கருவரை செல்லவும் அனுமதி்க்கப்படுவது குறித்தான விமர்சங்கள். பழம், பூ என பலவும் கடவுளுக்கு சென்ற படைப்பதனால் அது மக்கள் உபயோகத்திற்கு மறுக்கப்படுகிறது என்பது குறித்தான விமர்சனங்கள்.

படங்கள்










Thanks to tamil wikipedia

http://ta.wikipedia.org/s/7ny

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.