*நேருவின் மருமுகம்...*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:03 | Best Blogger Tips

 


*தயவுசெய்து முழுதும் படியுங்கள்*

📌லண்டனில் வாழ்ந்த தன்னுடைய (கள்ள?) காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனை தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?

📌தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த 'தேசபக்தர்' யார்?

📌பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37244 சதுர கிலோமீட்டர்களையும் தாரைவார்த்த இந்தியாவின் 'தேசபக்த பிரதமர்' யார்?

📌ஹைதராபாத்தை கட்டுப்பாட்டில் வைத்துதிருந்த பாகிஸ்த்தான் ஆதரவு ரசாக்கார் படைகள் மீது துணிச்சலாக ராணுவ நடவடிக்கை எடுக்காமல் பிரச்னையை ஐநா- விற்கு கொண்டு போய், அதை இன்னொரு காஷ்மீர் ஆக்க முயற்சி செய்த தேசபக்த பிரதமர் யார்?

📌ஸ்வதந்திரய வீர சவர்க்கர் முதலிய தேசபக்தர்கள் 13 ஆண்டுகள் காலாபானி என்ற வெஞ்சிறையில் சிறையில் கொடுமையை அனுபவித்து வந்தபோது, பைவ் ஸ்டார் வசதியுடன் 3 வருடம் சொகுசாக பாட்மிட்டன், தோட்டம் வளர்ப்பு மற்றும் சமையல் என்று சிறப்பு கவனிப்பு யாருக்கு கிடைத்தது?

📌கல்வியால் நான் ஆங்கிலேயன், எண்ணத்தால் நான் சர்வதேசன், பண்பாட்டால் நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் நான் ஒரு இந்துவாக தவறிப் பிறந்துவிட்டேன். அது ஒரு விபத்து என்று கூறிய தலைவர் யார்?

📌சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு அவர்களுடன் மேய்ந்து குலாவிவிட்டுப் பின்னர் அந்தப்பெண்மணியை மேற்கு வங்கத்தின் ஆளுனராக நியமனம் செய்தது எந்த பிரதமர்?

📌பாபாசாகேப் அம்பேத்கர் இங்கே அரசியலமைப்பு சட்டத்தை எழுதித் தொகுத்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய காதலி ப்ரான்ஸுவா குந்தர்ருக்கு - உன்னுடைய கடிதத்தை தொடும்போது உன்னுடைய கைகளை தொடுவது போல் உணர்கிறேன் என்று சொன்னது யார்?

📌15க்கு 13 மாகாணங்களின் காங்கிரஸ் தலைவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அபரிமிதமான ஆதரவு கொடுத்தும், தானே பிரதமர் ஆகவேண்டும் என்று அடம்பிடித்து பிரதமர் ஆனது யார்?

📌சுதந்திரம் பெற்றவுடன் நேபாளம், பலுசிஸ்தான் முதலிய நாடுகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தபோது அதனை வேண்டாமென நிராகரித்த கூறு கெட்ட பிரதமர் யார்?

📌சொன்னதைச் செய்யாவிட்டால் நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிட்டுவிடுவோம் என்று ரஷ்ய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நிலையில் இருந்த பதவி வெறிபிடித்த பிரதமர் யார்?

📌நேதாஜியின் புகழைக் கண்டு பயந்துபோய் அவரை அச்சு நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் போர்க்குற்றவாளி என்று வர்ணித்து நேசநாடுகளுடன் சேர்ந்து உறவாடிய அரசியல்வாதி யார்?

📌1950ல் சர்தார் பட்டேல் இறந்தபோது அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என்று அனைத்து மந்திரிகள் மற்றும் அரசுச் செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது எந்த பிரதமர்?

📌மேற்கு வங்கத்தையும் பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்பட வேண்டும் என்று சொன்ன எந்த அரசியல் பெரும்புள்ளியின் கோரிக்கையை ஸ்யாமா ப்ரஸாத் முக்கர்ஜீ முறியடித்தார்?

📌ஸ்ரீநகரில் தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவின் உதவியுடன் திரு ஸ்யாமா ப்ரசாத் முக்கர்ஜீயை கொன்றதாக சந்தேகிக்கப்பட்டு, பின்பு அன்னாரின் விபரீத மரணத்தைக் குறித்து விசாரணை ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டது யார்?

📌மிக உயர்ந்த கல்விமானாக விளங்கிய டாக்டர் அம்பேத்கரைப் பார்த்து பொறாமை கொண்டு, அவரை லோக்சபா தேர்தலில் தோற்கடிக்க யுக்திகள் வகுத்து அவரை பாராளுமன்றம் புகாமல் பார்த்துக்கொண்டது யார்?

📌டாக்டர் அம்பேத்கர் அவர்களது பரிந்துரையான பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியப் பிரதமர் யார்?

📌இந்திய இறையாண்மைக்கு எதிரானதால் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் புறக்கணித்த ஷரத்து 370யை கோப்பால் ஐயங்கார் என்பவரை நியமித்து, காஷ்மீருக்கு தனிநிலை, தனி அரசியலைப்பு, தனிக் கொடி ஏற்படுத்திக் கொடுத்தது யார்?

📌படையெடுப்பில் இடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டமைக்க எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மதச்சார்பின்மையை காரணம் காட்டி ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தையும் போகக்கூடாது என தடுத்தது யார்?

📌இந்தியாவிலேயே யார் மிகுந்த இஸ்லாமிய தேசியவாதி என்று சர்தார் பட்டேல் அவர்களை வினவியபோது அவர் யாரைக் குறிப்பிட்டார்?

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை - ஜவகர்லால் நேரு. அன்னாரின் தாந்தோன்றிதனத்தாலும் எதேச்சாதிகார முடிவுகளாலும் அதற்கான விலையை இந்தியா இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது...

 

நன்றி இணையம்