அமாவாசை நல்ல நாளா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips


தமிழத்தில் மட்டும் அமாவாசை நாள், நிறைந்த நாள், நல்ல நாள் என தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சுப காரியங்கள் செய்யப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் அமாவாசை நாட்களில் சுப காரியங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என பார்ப்போம்...

திதிகளை நந்தா, பத்ரா, ஜெயா, ரிக்தா, பூர்ணா என ஐந்து வகையாக பிரித்திருக்கிறார்கள். அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி - நந்தா...

துவித்தியை, சப்தமி, துவாதசி - பத்ரா...

திருத்தியை, அஷ்டமி, திரயோதசி - ஜெயா...

சதுர்த்தி, நவமி, சதுர்தசி - ரிக்தா...

பஞ்சமி, தசமி, பௌர்ணமி, அமாவாசை - பூர்ணா...

அமாவாசை ஒரு பூர்ண திதி என்பதால் அதை நல்ல நாள் என எடுத்துக்கொண்டு சுப காரியங்கள் செய்யலாம் என சிலர் கூறி வருகின்றனர்.



திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15தான் என்றாலும், வளர் பிறைக்கு 15 திதிகள், தேய் பிறைக்கு 15 திதிகள் என ஒரு மாதத்தில் மொத்தம் 30 திதிகள் வரும். திதியில் பாதி கரணம் என்பர். அப்படி என்றால் ஒரு நாளில் 2 கரணங்கள் வரும். ஒரு மாதத்தில் 60 கரணங்கள் வரும்.

கரணங்களின் எண்ணிக்கை மொத்தம் 11 மட்டுமே. அவை சர கரணம், ஸ்திர கரணம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 11 கரணங்களில் 7 கரணங்கள் ஒரு மாதத்தில் 8 முறை திரும்ப, திரும்ப வருபவை , எனவே அவைகளுக்கு சர கரணங்கள் என்று பெயர். மிச்சமுள்ள 4 கரணங்கள் ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே வருபவை, அவைகளுக்கு ஸ்திர கரணங்கள் என்று பெயர்.

பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை, வனசை, பத்திரை இவை ஏழும் சர கரணங்களாகும்.

கிம்ஸ்துக்னம், சுகுனி, சதுஸ்பாதம், நாகவம் இவை நான்கும் ஸ்திர கரணங்களாகும்.

கிம்ஸ்துக்னம் என்றால் புழு என்றும், சகுனி என்றால் காகம் என்றும், சதுஸ்பாதம் என்றால் நாய் என்றும், நாகவம் என்றால் பாம்பு என்றும் பொருள்படும். எனவே இந்த 4 ஸ்திர கரணங்களும் அசுப கரணங்களாக கருத்தப்படுகின்றன. தேய் பிறை சதுர்தசியின் பின் பகுதியில் சகுனியும், அமாவாசையன்று சதுஸ்பாதமும், நாகவமும், வளர் பிறை பிரதமையின் முன் பகுதியில் கிம்ஸ்துக்னமும் வருகின்றன. எனவே வளர்பிறை பிரதமையின் முன் பகுதியும், அமாவாசை நாள் முழுவதும், தேய் பிறை சதுர்தசியின் பின் பாகமும் சுப காரியங்களுக்கு உகந்த நாட்கள் அல்ல...என்றும் 


நன்றி   ஆச்சார்யா பாபாஜி வாட்சப் 8678915314, 9840848127.

  

நன்றி இணையம்