தக்காளி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:46 PM | Best Blogger Tips
தக்காளியில் ஏராளமான உயிர்ச்சத்துக்களும், கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே தக்காளியானது ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதை விலை மலிவாக இருப்பதால்தான் எண்ணற்றோர் இதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதில் உள்ள சத்துக்களையும் தெரிந்து கொள்வதில்லை. தக்காளிப் பழத்தில், நாட்டுத்தக்காளி, ஆப்பிள் தக்காளி என்று பல வகைகள் இருந்தாலும் மருத்துவ குணத்திலும், சத்துக்களிலும் எல்லாம் ஒன்றுதான்! மற்ற பழங்களைப்போல தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட வேண்டும். இருப்பினும் தக்காளியை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும். உடலுக்கு பலம் தக்காளியில் வைட்டமின் ஏ,பி, பி2 மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர சுண்ணாம்புச்சத்தும் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு நல்ல பலம் அதிகரிக்கும், ரத்தம் விருத்தியடையும். உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. தக்காளிப்பழத்தை ஒரு டானிக் போல அன்றாடம் சாப்பிட்டு வந்தால் நோய் தொற்று ஏற்படாது. கண் நோய்களை தடுக்கும் நரம்புத்தளர்ச்சியைப் போக்கி பலப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனால் மூளை பலம் பெருவதோடு கண்பார்வையில் தெளிவு ஏற்படும். கண் தொடர்பான பல நோய்களை கண்டிக்கும் குணம் இதற்கு உண்டு. சருமவியாதிகளான சொறி, சிரங்கு, புண் போன்றவற்றை ஆற்றவல்லது. பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலத்தை அளிக்க வல்லது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு. சருமம் மென்மையாகும் உடல்வளர்ச்சியை அளிப்பதோடு தோலையும் மிருதுப்படுத்தும். மேல் தோலுக்கு மினுமினுப்பை அளிக்க வல்லது. தக்காளிப் பழத்தைச் சூப்பாக வைத்துக் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவிதப் பொலிவுடனும் இருக்கும். இதற்குக் காரணம் தக்காளியில் உள்ள பொட்டாசியம் சத்துதான். மேலும், களைத்துப் போன உடலுக்குப் புத்துணர்வை ஊட்டுவதில் தக்காளி முதலிடம் பெறுகிறது. கருவுற்ற பெண்கள் கருவுற்ற பெண்கள் தக்காளிப்பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. புதிய ரத்தம் உற்பத்தியாகும். தக்காளி ரசம், உடலுக்கு உரமூட்டும். தக்காளி சட்னி, தக்காளி சூப், தக்காளி என்று எப்படிச் சாப்பிட்டாலும் அதனுடைய சத்துக்கள் மாறுவதில்லை. யார் சாப்பிடக்கூடாது? பித்த உடல்வாகு கொண்டவர்களும், வாதநோய், நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகளும் தக்காளிப்பழத்தை அளவுடன் சாப்பிடலாம். அதிகம் சாப்பிட்டால் நோயின் தொல்லை அதிகரிக்கும்.

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:43 PM | Best Blogger Tips

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.

8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

அடால்ஃப் ஹிட்லர்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:42 PM | Best Blogger Tips
ஏப்ரல் 20: அடால்ஃப் ஹிட்லர் பிறந்த தினம் இன்று..

ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார். முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker"s Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார். ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை "முநீனக் பீர் மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார். 1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார். ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன. எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார். அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது. ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று. 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.

1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது. ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார். பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்வரை பெயர் பெற்றிருப்பார் என்று ஊகிக்கலாம். உலகின் மிகப் பெரிய போராகிய இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்ற முறையிலும் ஹிட்லரின் பெயர் நிலை பெற்றிருக்கும். இன்று அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு வருவதால் எதிர்காலத்தில் இரண்டாம் உலகப் போரைப் போன்ற பேரளவுப் போர்கள் மூள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து ஈராயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாம் உலகப் போர்தான் கருதப்படும். ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக் காரணத்தினாலும், ஹிட்லரின் புகழ் நீடிக்கும். ஹிட்லர் ஓர் அயல்நாட்டினர் (அவர் பிறந்தது ஆஸ்திரியாவில், ஜெர்மனியில் அன்று). அவருக்கு அரசியல் அனுபவமோ, பணபலமோ, அரசியல் தொடர்புகளோ இருக்கவில்லை. அப்படியிருந்தும், பதினான்கே ஆண்டுகளுக்குள் அவர் ஒரு பெரிய உலக வல்லரசின் தலைவராக ஆனார் என்றால் அது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. ஹிட்லர் வியக்கத் தக்க நாவன்மை பெற்றிருந்தார். உலக வரலாற்றிலே மிகச் சிறந்த நாவன்மை வாய்ந்தவராக ஹிட்லரைக் கருதலாம். அந்த நாவன்மையின் துணையால்தான் அவர் தம் வழியில் மக்களைச் செயல்படத் தூண்டினார். இறுதியாக அதிகாரத்தைப் பிடித்ததுமூ அந்த கதிகாரத்தை அவர் கொடூரமான வழிகளுக்குப் பயன்படுத்தினார். இதனை அத்துணை விரைவில் மறந்துவிட முடியாது.

உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. அவரது தூண்டுதலினால் ஏற்பட்ட உலகப் போரிலும் நாஜி மரண முகாம்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பலியானது ஒருபுறமிருக்க, போரின் விளைவாக பலகோடி மக்கள் வீடிழந்தார்கள் அல்லது அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று. ஹிட்லரின் செல்வாக்கு பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் வேறு இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஹிட்லருடைய தலைமையின் கீழ் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர் தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே செய்யாது. (இந்த வகையில், சார்லஸ் டார்வின், சைமன் பொலீவார் ஆகியோரிடமிருந்து அவர் முற்றிலும் வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் நிலவிய நிலைமை ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக, அவரது இராணுவ வெறியூட்டும் முழுக்கங்களும், யூதர் எதிர்ப்பு உரைகளும் கேட்போரைப் பிணித்தன. எனினும், ஹிட்லர் செயற்படுத்திய தீவிரமான கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றியிருக்க வேண்டுமென 1920களிலோ, 1930களிலோ பெரும்பாலான ஜெர்மானியர்கள் விரும்பினார்கள் என்று கருதுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை. ஹிட்லர் செய்ததை மற்ற ஜெர்மன் தலைவர்களும் செய்திருப்பார்கள் என்று கருதுவதற்கும் இடமில்லை. ஹிட்லர் காலத்து நிகழ்ச்சிகளை, புற நோக்கர்கள் எவரும் ஏறத்தாழக்கூட ஊகித்துக் கூறியதில்லை. இரண்டாவதாக நாசி இயக்கம் முழுவதிலுமே தனியொரு மனிதரே ஆதிக்கம் செலுத்தினார். பொதுவுடைமையின் எழுச்சியில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரும் வேறு பல தலைவர்களும் பெரும் பங்கு கொண்டார்கள். ஆனால், ஹிட்லருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் நாஜி சமதருமத்தற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த தலைவர் எவரும் கிடைக்கவில்லை. ஹிட்லர்தான் நாஜிகளை அதிகார பீடத்தில் ஏற்றி வைத்தார். நாஜிகள் ஆட்சியில் நீடித்த காலம் முழுவதிலும் தலைமைப் பதவியைத் தாமே வைத்துக் கொண்டிருந்தார். ஹிட்லர் இறந்ததும், அவருடைய நாஜிக் கட்சியும் அது தலைமை ஏற்றிருந்த அரசும் மாண்டு மடிந்தன. ஆனால், ஹிட்லருடைய செல்வாக்கு அவரது தலைமுறையின் மீது மிகப் பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்காலத்தின் போது அவரது செயல்களின் விளைவுகள் மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. ஹிட்லர் தமது குறிக்கோள்களில் ஒன்றைக் கூட அடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீது அவரது செயல்களின் விளைவு ஏதேனும் இருக்குமானால், அது அவர் கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும் நிலப்பரப்பையும் விரிவுப்படுத்த ஹிட்லர் விரும்பினார். அவர் பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றி கண்ட போதிலும், அந்த வெற்றிகள் அனைத்தையும் அற்ப ஆயுளில் முடிந்தன. இன்று கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒருங்கிணைந்தால் கூட, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான நிலப்பகுதியே அடங்கியிருக்கும். உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் வெறிகொண்டு அலைந்தார். ஆயினும் அவர் பதவி ஏற்ற பின்பு 15 ஆண்டுகளிலேயே 2,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முதலாகச் சுதந்திரமான யூத நாடு அமைந்தது. பொதுவுடைமையையும், ரஷியாவையும் ஹிட்லர் கடுமையாக வெறுத்தார். எனினும், அவர் இறந்தபோது ஓரளவுக்கு அவர் தொடங்கிய உலகப் போரின் விளைவாக, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மீது ரஷியர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தினார்கள். உலகெங்கும் பொதுவுடமையின் செல்வாக்கு பெருமளவுக்குப் பெருகிறது. ஹிட்லர் மக்களாட்சியை இழிவாகக் கருதினார். ஜெர்மனியில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் மக்களாட்சியை அடியோடு ஒழித்துவிட எண்ணினார். ஆனால், இன்று மேற்கு ஜெர்மனியில் மக்களாட்சி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. ஹிட்லர் காலத்துத் தலைமுறையைச் சார்ந்த ஜெர்மானியர்களைவிட இன்றைய ஜெர்மானியர்கள் சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக வெறுக்கிறார்கள். ஹிட்லர் தாம் வாழ்ந்த காலத்தில் அளவற்ற செல்வாக்கினைச் செலுத்தியதாலும், வருங்காலத் தலைமுறையின் மீது அவருக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாமற் போனதாலும் ஏற்பட்ட விசித்திரமான கூட்டிணைவின் காரணமாக விளைந்ததென்ன? ஹிட்லர் தம் காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார். அதற்காக, இந்தப் பட்டியலில் அவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஷி-ஹூவாங்-தை, அகஸ்டஸ் சீசர், ஜெங்கிஸ்கான் போன்றோரின் செல்வாக்கு அவர்களுக்குப் பின் பல நூற்றாண்டுகள் நீடித்தமையால், ஹிட்லருக்கு நிச்சயமாக அவர்களுக்கு பின்னரே இடமளிக்க வேண்டும். ஹிட்லருக்கு நெருக்கமானவர்களாக நெப்போலியனையும், மகா அலெக்சாந்தரையும் கூறலாம். ஒரு குறுகிய காலத்தில் இவ்விருவரையும் விட மிகப் பெருமளவில் ஹிட்லர் உலக அமைதியைச் சீர்குலைத்தார். அந்த இருவரின் செல்வாக்கு நீண்டகாலம் நீடித்ததன் காரணமாக, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் ஹிட்லருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

லக்ஷ்மி கடாட்சம் பெருக..!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:40 PM | Best Blogger Tips
லக்ஷ்மி கடாட்சம் பெருக..!

அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும்.இப்படி சிவது ஆரோக்கியம்,நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள் .அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவது 
முதலில் பார்த்து விட வேண்டும்.

செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள் 
கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி,செண்பக மலர் இவைகளால் 
அர்ச்சித்து ,பால்,பாயசம்,கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரிய இரவு உணவு உன்ன வேண்டும்.

வைரம்,வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக 
அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும்கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில.....

ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்க கூடாது.கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

வாசற்படி,அம்மி,ஆட்டுக்கல் ,உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

இரவு நேரங்களில் பால்,மோர்,தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

வெற்றிலை வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது . வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.

துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ¬ trademark symbol
Alt + 0176 ...°......degre ¬e symbol
Alt + 0177 ...±....plus-or ¬-minus sign
Alt + 0182 ...¶.....paragr ¬aph mark
Alt + 0190 ...¾....fractio ¬n, three-fourths
Alt + 0215 ....×.....multi ¬plication sign
Alt + 0162...¢....the ¬ cent sign
Alt + 0161.....¡..... ¬.upside down exclamation point
Alt + 0191.....¿..... ¬upside down question mark
Alt + 1.......☺....sm ¬iley face
Alt + 2 ......☻.....bla ¬ck smiley face
Alt + 15.....☼.....su ¬n
Alt + 12......♀.....f ¬emale sign
Alt + 11.....♂......m ¬ale sign
Alt + 6.......♠.....s ¬pade
Alt + 5.......♣...... ¬Club
Alt + 3.......♥...... ¬Heart
Alt + 4.......♦...... ¬Diamond
Alt + 13......♪.....e ¬ighth note
Alt + 14......♫...... ¬beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s ¬quare root check mark
Alt + 8236.....∞..... ¬infinity
Alt + 24.......↑..... ¬up arrow
Alt + 25......↓...... ¬down arrow
Alt + 26.....→.....ri ¬ght arrow
Alt + 27......←.....l ¬eft arrow
Alt + 18.....↕......u ¬p/down arrow
Alt + 29......↔...lef ¬t right arrow
very use full..........

அறிந்து கொள்வோம்..! 3

மணக்கால் அய்யம்பேட்டை | 1:59 PM | Best Blogger Tips

பால்வீதியில் (the Milky Way Galaxy) நம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் ஏறத்தாழ 100,000 மில்லியன் இருக்கின்றன.

நம் சூரியக் குடும்பத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து அதன் ஒளி நம்மை வந்தடையும் நேரம் – 4 வருடங்கள்.

சூரியனில் இருந்து பூமிக்கு அதன் ஒளி வந்தடையும் நேரம் – 8 நிமிடங்கள்.

நிலவில் இருந்து அதன் ஒளி நம் பூமிக்கு வந்தடையும் நேரம் எவ்வளவு தெரியுமா? ஒரே ஒரு வினாடி.

சூரியனின் வெளிப்புற வெப்பநிலை - 6000° C. அதன் உட்புறத்தின் வெப்பநிலை – 20 மில்லியன்° C.

சூரியன் பூமியை விட 300,000 மடங்கு பெரியது.

பூமியிலிருந்து 2,38,900 மைல்கள் தொலைவில் இருக்கும் நிலா, பூமியை முழுதாக ஒரு சுற்று சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் – 27 நாட்கள்.

யுரேனஸ் கிரகத்தைத் தவிர பூமி உட்பட மற்ற 8 கிரகங்களும் சூரியனை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன.

பூமிக்கு மத்தியில் இருக்கும் பூமத்திய ரேகையில் அளந்தால் அதன் சுற்றளவு ஏறத்தாழ 45,000 மைல்கள். துருவங்களில் சுற்றழவு 83 மைல்கள். (துருவங்கள் sharp ஆக முடிவதில்லை. ஆரஞ்சு பழத்தைப் போலத் தட்டையாக முடிகின்றன)

அதே போல் பூமத்திய ரேகையில் சூரியனின் விட்டம் (diameter) ஏறத்தாழ 8,000 மைல்கள். துருவங்களில் 26 மைல்கள்.

உலகைச் சுற்றி வந்த முதல் கடல் பயணத்தை மேற்கொண்டவர் Ferdinand Magellan (1519 முதல் 1522 வரை, தம் குழுவுடன்).

சூரியனைச் சுற்றி பூமி சுழலும் வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு 18.5 மைல்கள்.

ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு டிசம்பர் 22 ஆம் தேதியும் முழு நாளும் இரவாக இருக்கும். சூரியன் தெரியாது.

அதே ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு வருடம் ஜூன் 21 ஆம் தேதியிலும் முழு நாளும் பகலாக இருக்கும். சூரியன் மறையாது (north of Arctic - Land of the Midnight Sun).

பூமிக்குக் குறுக்காக வரையப் பட்டிருக்கும் ரேகைகள் (latitudes) 1° இடைவேளைகளைக் கொண்டிருக்கின்றன.

பூமிக்கு நீள்வாக்கில் வரையப் பட்டிருக்கும் ரேகைகள் (longitudes) அனைத்தும் ஒரே நீளத்தில் இருப்பதால் லண்டனுக்கு அருகே இருக்கும் கிரீன்விச் நகரத்தில் Royal Astronomical Observatory-யை வெட்டிச் செல்லும் ரேகையை முதல் மெரீடியனாகக் கணக்கிடுகிறோம் (0° Prime Meridian).

கிழக்கு நோக்கி (பின்னர் மேற்கு நோக்கி) எண்ணிக் கொண்டே போனால் கடைசியாக 180° Meridian, Bering Strait, Fiji, Tonga வில் வரும். அதைத் தான் International Date Line ஆகக் கொள்கிறோம். அதற்கு அடுத்து முதல் ரேகையான 0° Prime Meridian வந்துவிடும்.

இதில் விசேஷம் என்னவென்றால் கிரீன்விச்சை மையமாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடும் (Greenwich Mean Time, ie. GMT) நாம் 180° Meridian-இக்கு முன்னால் இருக்கும் ஒரு ஊரிலிருந்து 180° Meridian-இக்கு அப்புறம் (அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி) இருக்கும் ஒரு ஊரைக் கடந்து போனால் நம் கடிகாரத்தை மிகச்சரியாக 24 மணி நேரங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரே நாளைத் திரும்ப கழிக்க வேண்டும்

அதே நேரம் கிழக்கிலிருந்து மேற்காக 180° மெரீடியனைக் கடந்து போனால் என்ன ஆகும் தெரியுமா? நீங்கள் கிளம்பியதில் இருந்து இடையில் ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு நாளை வாழாமலே கழிக்க வேண்டியிருக்கும்!

இந்திய அரசு 82.5° கிழக்கை தனது நிலையான மெரீடியனாகத் தேர்ந்தெடுத்துள்ளது (GMT + 5.30 hrs).

இந்தியாவிற்கு ஒரே ஒரு Time Zone தான். ஆனால் பரப்பளவில் பெரியதாக இருக்கும் USSR-இல் உள்ள நாடுகள் மட்டுமே மொத்தம் 11 Time Zones-ஐப் பின்பற்றுகின்றன. USA-விலும் கனடாவிலும் தலா 5 Time Zones இருக்கின்றன.

தகவற்சித்திரம் (Infographics) – தகைமைத் திரட்டு (Resume)

மணக்கால் அய்யம்பேட்டை | 1:57 PM | Best Blogger Tips

நீங்கள் உங்களிடமுள்ள திறமைகளை பட்டியலிட்டு நிரல்படுத்தி தகைமைத் திரட்டு (Resume)உருவாக்கி வைப்பதென்பது இன்றியமையாதது. நீங்கள் வேலைதேடும்பொழுதும், மேலும் வேலையில் பதவியுயர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நல்ல வேலைமாற்றம் பெற்றுக்கொள்வதற்கும், சமயத்தில் இரண்டாவது வேலை பெற்றுக்கொள்வதற்கும் தகைமைத் திரட்டு (Resume)உதவுகின்றது. உங்களில் பலரும் இதனை எழுத்து வடிவம் (Text) மூலம் உருவாக்கி வைத்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணப்போவது தகவற்சித்திர (Infographics) வடிவத்தினாலான ஒரு தகைமைத் திரட்டு (Resume).இதனை உருவாக்கியவர் தன்னுடைய திறமைகளை, அழகாக தன் அவயவங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள திறமைகளாக நிரல் படுத்தியுள்ளார். இனி தகவற்சித்திரத்தைப் பார்ப்போம்.

இத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click) ஓப்பன் (open) பண்ணிப் பார்க்கவும்.

இதனைப் பார்க்கும் உங்களிற்கும் இதுபோன்ற தகவற்சித்திர (Infographics) வடிவத்தினாலான ஒரு தகைமைத் திரட்டு (Resume) ஒன்றை உருவாக்கும் எண்ணம் தோன்றலாம். பின்வரும் இணைப்புக்களில் சென்று முயற்சிக்கவும்.

மிகவும் பிரபல்யமான தகவற்சித்திரம் உருவாக்கும் கருவி (Infographics Tool)
http://visual.ly/

எவ்வாறு தகவற்சித்திரத்தை உருவாக்கலாம் என்பதை இவ்விணைப்பில் படங்களுடன் இங்கு காணலாம்.
http://vector.tutsplus.com/tutorials/designing/how-to-create-outstanding-modern-infographics/

பலமாதிரி வடிவங்களிலான தகவற்சித்திர தகைமைத் திரட்டுக்களை (Sample Infographics Resumes) இங்கு காணலாம்.
http://pinterest.com/rtkrum/infographic-visual-resumes/

Summary:

This infographics article have information about how can create a resume in inforgraphics form. Also you can see a sample Infographics resume and you can see some links for Infographics tool.

Source: www.careymercier.com
நன்றி :www.careymercier.com

நன்றி:
சாதாரணன்.

வீட்டு வைத்தியம் 2

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 PM | Best Blogger Tips

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,

ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.

ஆரோக்கியத்திற்கு!

தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.

ஆண்கள் மலடு தீர!

ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.

ஆண்மை வலுப்பெற!

அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

இசைமருத்துவம்!

இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும் இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள

இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.

இரத்தம் பெருக!

இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.

இளநீர் மருத்துவம்!

இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.

Good News - To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for Rs 1 and Rs 25.

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips

நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)

Links to extract EC in English - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

Links to extract EC in Tamil - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

Links to extract Registered Documents -
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

Links to extract Marriage Certificate
http://www.tnreginet.net/english/smar.asp

Links to CHECK Registered Chit Companies - http://www.tnreginet.net/english/schit.asp

Links to CHECK Registered Society - http://www.tnreginet.net/english/society.asp

Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

சோளம்…

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips
இந்தத் தினை, வரகு, கம்பு, சோளம்… இவை எல்லாமே அடிப்படையில் அரிசிபோலத்தான். அந்தக் காலத்தில் தினையரிசி, வரகரிசி என்று அரிசியின் பெயரைச் சேர்த்துதான் சொல்வார்கள். நெல் அரிசி என்பது அப்போதெல்லாம் விசேஷ நாட்களிலோ, பண்டிகை நாட்களிலோ மட்டுமே சமைக்கப்படும் உணவாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லா நாட்களும் நெல் அரிசி சோறுக்கு நாம் மாறிவிட்ட பின்னரே அரிசி என்பது நெல் அரிசியை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. ஆகையால், தினை, வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று கேட்டால், அரிசியில் செய்யும் எல்லாமே செய்யலாம் என்பது தான் பதில்.

தினை இட்லி, சோளப் பணியாரம், வரகுப் புளியோதரை, குதிரைவாலிப் பொங்கல்… இப்படி உங்கள் விருப்பம்போலச் செய்து ருசிக்கலாம். ஒரே விஷயம்… இந்தத் தானியங்களைக்கொண்டு சமையல் செய்யும்போது அவற்றுக்கே உரிய இயல்புக்கு ஏற்ப உப பொருட்கள் சேர்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, சோள தோசை சுடுகிறீர்கள் என்றால், அரிசி அளவுக்கே சோளத்தைப் போட்டால், தோசை முறுகலாக இருக்கும். கொஞ்சம் உளுந்து கூடுதலாகச் சேர்த்துக்கொண்டால், தோசை பதமாக வரும். இந்தக் கூடக்கொறைச்சல் குறைகள் எல்லாம் முதல் இரு தடவைகள் வரலாம். அப்புறம் அப்புறம் நீங்களே நிபுணர் ஆகிவிடுவீர்கள். ஆகையால், தயக்கமின்றிக் கலக்குங்கள்.

சரி, பெருநிறுவன முதலாளிகள் உங்கள் அன்றாட உணவை மாற்றக் கண்டுபிடித்திருக்கும் ஒரு பெரிய சமாசாரத்தைப் பற்றி இந்த வாரம் அலசுவோம். உங்களுக்கு சோளத்துக்கும் மக்காச்சோளத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

சோளம் என்றால், இப்போதெல்லாம் பெரும்பாலோருக்கு நினைவில் வருவது மக்காச்சோளம்தான். ஆனால், உண்மையில் நம்முடைய பாரம்பரியச் சோளம் அதுவல்ல. சிறு வெள்ளைச்சோளம்தான் நம்முடைய சோளம். புதிய மக்காச் சோளம் உற்பத்தியில் இன்று நாம் உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், அது தென் அமெரிக்க நாட்டில் இருந்து வந்த பயிர்தான். வெள்ளைச் சோளம்தான் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும்கொண்டது. நம்ம ஊர் பாரம்பரிய சிறுசோளத்தையும் மக்காச்சோளத்தையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் புழுங்கல் அரிசியையும் கொஞ்சம் உற்றுப்பார்த்து ஒப்புநோக்கினால், பலவகையில் உப்புக்கள், உயிர்ச் சத்துக்கள், நார், கனிமங்கள் என எல்லாவற்றிலுமே சிறுசோளமே உயர்ந்து நிற்கும் (பார்க்க அட்டவணை).
அதிகம் மெனக்கெட முடியாத நம்முடைய காலைப் பொழுது அவசரத்தைப் புரிந்துவைத்திருக்கும் பெருநிறுவனங்கள், மாற்றுக் காலை உணவாகக் கொண்டுவர முனைவது மக்காசோளத்தைத்தான். ஆனால், விளம்பரங்களில் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சோள அவலின் பின்னணியும் அவ்வளவு நல்லதாக இல்லை நண்பர்களே. அதில் ஏகப்பட்ட சத்து இருப்பதாகச் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்டால்… நான் உங்களிடம் கேட்கிறேன்… அது எப்படித் தயாராகிறது என்று தெரியுமா உங்களுக்கு?

காலை உணவாக இன்று வேகமாகப் புகுத்தப்படும் சோள அவலின் உற்பத்தியை நீங்கள் நேரில் பார்த்தால், அதைச் சாப்பிடுவதே உங்களுக்குச் சங்கடமாகிவிடும். தானியத்தை வெந்நீரில் ஊறவைத்து, 40 டன் எடைகொண்ட ராட்சத இயந் திரங்களால் ஓங்கி ஓங்கி அறைந்து அடித்துத் தட்டையாக்கி, பின் 600 டிகிரி ஓவனில் 30 விநாடிகள் வேகவைத்து, உலர்த்தி எடுத்து, கடைசியாகத் தேவையான வைட்டமின்களையும் மினரல்களையும் தெளித்து, எப்போதும் உலர் வாக இருக்கவும் கெட்டுப்போகாமல் இருக் கவும் ரசாயனங்கள் சேர்த்து, அதிகபட்ச விலை யுடன் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.

ஒரு தானியம் கஷ்டப்பட்டு தன் குறைந்த வாழ்நாளில் சேமித்த உணவுக்கூறுகளை எல்லாம் இப்படி அடித்து, துவைத்து, காயப்போட்டுவிட்டு, கடைசியாக, செயற்கையாகச் சேர்க்கப்படும் ஊட்டச் சத்துக் கலவையில் என்னவெல்லாம் கலக்கப்படுகின்றன தெரியுமா? யாருக்குமே தெரியாது. யாருக்கும் அதைச் சொல்ல வேண்டியது இல்லை; அது எங்கள் தொழில் ரகசியம் என்கிறார்கள். கூடவே ரசாயனம் வேறு. இதோடு, நம் ஊர் சோளத்தில் செய்யப்படும் இட்லி, தோசையையோ, பணியாரத்தையோ ஒப்பிட்டுப்பாருங்கள். அவற்றின் உன்னதம் புரியும்.
தினம் தினம் இட்லி, தோசை சாப்பிடுவோருக்குச் சோள மாவு இட்லி, தோசை கூடுதல் பயன் அளிக்கும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். எதையுமே சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைக்கு, சோள தோசையைச் சூடாக, கொஞ்சம் மெலிதாகச் சுட்டுத்தாருங்கள். அதன் மொறுமொறுப்பில், அரிசி தோசையைக் காட்டிலும் அதிகப் புரதம், அதிக இரும்பு, அதிக உயிர்ச் சத்துக்கள், அதிகக் கனிமங்கள் கிடைக்கும். இட்லி, தோசை மட்டுமா? சோளப் பணியாரம் சுவையும் குணமும் நிறைந்த பாரம்பரிய உணவு (பார்க்க: செய்முறை). உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை அதற்கு உண்டு. ‘கொஞ்சம் குண்டாக மாட்டாளா சார் என் குழந்தை?’ என வருத்தத்துடன் கேட்கும் தாய்மார்கள் இந்தச் சோளத்தில் ஒரு நாள் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லமும் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுங்கள்; ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தையின் உடல் எடை கண்டிப்பாகப் பெருகும்.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப் பவர்கள், சோளத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு எவ்வளவோ சத்துக்களைத் தருகிறது சோளம். குறிப்பாக, எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ள பெண்களுக்குச் சோளம் கொடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச் சத்துக்கு இணையே கிடையாது. இன்னும் கொஞ்ச நாட்களில் மதிய உணவுத் திட்ட சத்துணவு, உண்மையிலேயே சத்தான உணவாகிவிடும். என்ன வார்த்தை விளை யாட்டு இது என்கிறீர்களா? ஆமாம். மத்திய வேளாண் துறை, அனைத்து மாநில அரசு களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி இனி, எல்லா மாநிலங்களும் தங்களுடைய மதிய உணவுத் திட்டத்தில், சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், நிச்சயம் ஓர் அமைதிப் புரட்சிதான்.

உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49 சதவிகிதத்தினர்; ஊட்டச் சத்துக் குறைவால் வளர்ச்சி தடைபட்டுள்ள குழந்தைகளில் 34 சதவிகிதத்தினர் இந்தியக் குழந்தை கள்தாம். இத்தகைய பின்னணியில், உலகின் மிகப் பெரிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியா, சிறுதானிய உணவுகளுக்கு மாறினால், அது எதிர்கால இளைய இந்தியாவை எவ்வளவு ஆரோக்கியமானதாக மாற்றும்? முயற்சி வெற்றி அடையட்டும்!

நம் கதைக்கு வருவோம். ‘ஆறாம் திணை’யைப் படித்துவிட்டு என்னைத் தொடர்புகொள்ளும் வாசகர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி… ”டாக்டர், இந்தத் தினை, வரகு, கம்பு, சோளம்… இதை எல்லாம் கஞ்சி வைத்தோ, உருண்டை உருட்டியோதான் சாப்பிட முடியுமா?”

- மருத்துவர் கு.சிவராமன்

உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips

மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனையான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மனிதனுக்கு மருத்துவம் கொடுத்த வரப்பிரசாதமாகும். ஆனால், இந்த சிகிச்சை முறை உரிய முறையில் பயனளிக்க வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் மனிதனின் மனநிலை மாற்றமும் உதவ வேண்டும்.

தற்போது வரை இந்தியாவில் 20,000 பேர் மாற்று கல்லீரல் கோரி பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை வெறும் 500 பேருக்கு மட்டுமே கல்லீரல் கிடைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.

மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் மாற்று உடல் உறுப்புகளுக்கு தட்டுப்பாடு என்று சொல்வது எவ்வளவு கேலிக்குறியதாக உள்ளது.

மேலை நாடுகளில் ஏற்பட்ட அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படாததும், சில மத ரீதியான பழக்க வழக்கங்களும், உடல் உறுப்பு தானங்கள் வளர்ச்சி பெறாததற்குக் காரணமாகும். விபத்துக்களில் மூளைச் சாவு அடையும் நபர்களின் உறவினர்களில் ஒரு சிலரே உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வருகின்றனர்.

மூளைச் சாவடைந்த ஒருவரது உடலில் இருந்து இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா), எலும்பு, எலும்பின் மஞ்ஞை, ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள் என மொத்தம் 25 வகையான உறுப்புக்களை தானமாக அளிக்க முடியும், ஒருவர் தன் உடலை தானமாக தருவதால் சுமார் 10 பேர் உயிர் பெற வாய்ப்புள்ளது.

இதில், கண், எலும்புகள், திசுக்கள் ஆகியவை மரணத்திற்குப் பிறகும் தானமாகத் தரலாம். இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை மூளை செயல் இழந்து உயிர் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து மட்டுமே பெற்று பயன்படுத்த முடியும்.

எனவே, இளைஞர்களும், சமூக அமைப்புகளும், உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தாமும் உடல் உறுப்பை தானம் செய்ய பதிவு செய்வது பலரது உயிரைக் காப்பாற்றும் செயலாகும்.

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 PM | Best Blogger Tips

துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

அரச இலை:- ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது. எல்லா விநாயகர் கோவில்களிலும் அரசமரம் இருக்கலாம்.

பூவரசு:- நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.

கல்யாண முருங்கை (முள் முருங்கை):- அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:- சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எ¡¢ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:- நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

கற்பூர வல்லி (ஓமவல்லி):- மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் பு¡¢யும்.

வல்லாரை:- நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

கண்டங்கத்திரி :- காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:- நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.

மஞ்சள் கரிசாலங்கண்ணி:- காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.

செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

மணத்தக்காளி கீரை:- இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.

தும்பை:- பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.

வெங்காயமும் பூண்டும்:- கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.

குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.

சுக்கு மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

தலைவலி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips
தலைவலி..!

நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியைத் தலைவலி என்கிறோம். தலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய் என்றாலும். அது வரப்போகும் நோய்களுக்கு அறிகுறி என்பதே சரி. பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.

நம் முகத்தில் தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்.

25 வருடங்களாக தலைவலியை ஆராய்ச்சி செய்த டாக்டர் ஹென்றி ஆக்டென் என்பவர், டென்ஷன் தலைவலியைப் பற்றி சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார். டாக்டர்கள், எஞ்சினியர்கள், ஐ.டி பணியாளர்கள் போன்றவர்களுக்கு 80 சதவீதமும், வியாபாரிகளுக்கு 77 சதவீதமும், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 70 சதவீதமும், உடல் உழைப்பை அளிக்கும் தொழிலாளர்களிடம் 55 சதவீதமும் டென்ஷன் தலைவலி காணப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தலையின் ஒருபுறம் மட்டுமே ஏற்படும் மைக்ரைன் ஒற்றைத் தலைவலி, மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. இது இரவு நேரத்தில்தான் அதிகரிக்கும். மூளையின் ரத்த நாளங்களில் ஏற்படும் ஒருவித மாற்றமே இதற்குக் காரணம்.

எல்லா தலைவலிகளுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், சில டார்ச்சர் பார்ட்டிகளால் வரும் தலைவலிக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கவில்லை ;-)

தகவல் - தினகரன்

Via Fb பெண்கள் Women

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு(history of petrol). . . .

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 PM | Best Blogger Tips
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு(history of petrol). . . . 

 ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.

 அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.

 இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).

 கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

 எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.

 இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.

 இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

 பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

 இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..

 கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

 உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.

 உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.