நாம் செல்லும் இடம் எல்லாம் அன்பை விதைப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:12 PM | Best Blogger Tips

Image result for அன்பை விதைப்போம்

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான் ...
ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து" எந்த பொம்மை வேண்டும் என்றான் ..அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான் ...
அதற்கு சிரித்துகொண்டே அந்த முதலாளி உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார் ...
அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான் ....
இது போதுமா என்று கவலையுடன் கேட்டான் ..
அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே " எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார் ...
சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான் ...
இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம் "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டிர்களே அய்யா ", என்றான் அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை ...
நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும்..அதை தடுத்து விட்டேன் மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன் ...
என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும் ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் ....
உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும் என்றார் ....
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "
வாருங்கள் நாம் செல்லும் இடம் எல்லாம் அன்பை விதைப்போம் .....

 நன்றி இணையம்

எவ்வளவு முயன்றாலும் மனைவியிடம் ...........?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:07 PM | Best Blogger Tips
Image result for எவ்வளவு முயன்றாலும் மனைவியிடம்


பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில்
ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு
சம்பவம் நடந்த்து.....
தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்
அனைவரும் தப்பித்தனர்....
ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...
ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....
காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!
(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும் என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....
ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய்
பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)
எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய
முடிவெடுத்தனர்
எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....
அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....
கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......
அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....
அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்
ஏற்பாடு செய்தது
விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது
உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...
உங்களுக்கு என்ன வேண்டும்
கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....
பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...
அவர் மறுத்துவிட்டார்...
எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...
அதை கேட்டு அங்கிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்....
சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....
ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....
அதற்க்கு அவர்...சொன்னார்....
இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....
அவள் சொல்வாள்....
"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...
இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...
அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்
அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
Image result for எவ்வளவு முயன்றாலும் மனைவியிடம்
ஹாஹாஹாஹா......

 நன்றி இணையம்