மென்மையான அழகான கண்கள் பெறுவதற்கான மேக்-கப் டிப்ஸ்.....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:34 PM | Best Blogger Tips
இன்றைய காலத்தில் மேக்-கப் இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது. அதிலும் என்ன தான் மேக்-கப் செய்தாலும், கண்களுக்கு செய்யும் மேக்-கப் சரியில்லையெனில், அந்த மேக்-கப்பே வீணாகிவிடும். ஏனெனில் மேக்-கப்பில் கண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கண்களுக்கு செய்யும் மேக்-கப்பால் கண்கள் நன்கு மென்மையாக அழகாகக் காணப்படுவதற்கு ஒருசில டிப்ஸ்களை அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த டிப்ஸ்களை அடிப்படையாகக் கொண்டு தான், கிரிஸ்டின் ஸ்டீவர்ட் நிறைய முறை மேக்-கப் செய்துள்ளார். அது என்னவென்று படித்து, அவற்றை பின்பற்றி, கண்களை அழகாக வெளிப்படுத்துங்கள்.

* கண்களில் செய்யும் மேக்-கப்பில் மஸ்காரா தான் முக்கியமானது. அதிலும் கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

* மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.

* பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

* கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது. நீர்மமாக இருந்தால், அவை பின்பு கலைந்து அழகை கெடுத்துவிடும்.

* மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும். முக்கியமாக அவ்வாறு கீழே போடும் போது, மெல்லியதாக இருப்பது மிகுந்த அழகைத் தரும்.

* பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. இதனால் மேக்-கப்பானது சற்று அழகாக காணப்படும். முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* கிரிஸ்டின் ஸ்டீவர்ட் போன்று நல்ல கிளாமரான பார்வையில் இருக்க வேண்டுமென்றால், உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ் போட்டால், அது மாலை நேர பார்ட்டிக்கு சிறந்ததாக இருக்கும்.

* பகல் நேர பார்ட்டிக்கு செல்ல வேண்டுமென்றால், மேற்கூறிய கண்களுக்கான மேக்-கப் ஐடியா சிறந்ததாக இருக்கும். ஆனால் லிப்ஸ்டிக் லேசான ப்ரௌன் நிறத்தில் போட்டால், நன்றாக இருக்கும்.

ஆகவே மேலே சொன்ன சில மேக்-கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு, மேக்-கப் செய்து வந்தால், கவர்ச்சிகரமாக இருக்கும். மேலும் வேறு ஏதாவது மேக்-கப்பின் அடிப்படையானது தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொள்ளு பற்றிய தகவல்...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:30 PM | Best Blogger Tips
பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடே அடிப்படையான முக்கிய மருந்தாகும். பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், நேரடியாக சர்க்கரையை தவிர்ப்பார்கள். இது மிகவும் அவசியம்தான். மேலும் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. இதற்கு உணவில் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரும்.

குறிப்பாக, கொள்ளுப்பருப்பு நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற உணவு. இதில் எதிர் உயிர்ச் சத்துக்கள், நொதித்தலைத் தடுத்தல், புரதத்தில் உள்ள பைட்டேன், டேனின் போன்றவை உணவின் தன்மையைச் சீர்படுத்துதல் போன்ற காரணங்களால் கொள்ளு மிகவும் ஏற்ற உணவாகும். பல்வேறு செயல்முறை ஆய்வுகள் மூலம் கொள்ளுவில் மிகக் குறைந்த சர்க்கரையே உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பருப்பிலுள்ள நார்ச்சத்துக்கள் அதிகமான பாகுத்தன்மையுடன் இருப்பதால் உணவு செரித்தலைத் தாமதப்படுத்துகிறது. ஆய்வின் மூலம் ரத்தத்தில் கிளைசிமிக்கின் அளவு கொள்ளுப் பருப்புக்கு 63 ஆகவும், சோயா மொச்சைக்கு 74 அளவாகவும் உள்ளது.

உணவு உண்டவுடன் செரிக்கும்போது சர்க்கரையின் அளவை வெளிப்படுத்துவதில் பயறு வகைகள் மூன்று நிலைகளாக செயல்படுகின்றன. முளைகட்டிய பயறு வகைகளை உண்டால், அவை குறைந்த அளவு சர்க்கரையையே நீண்ட நேரம் வெளியிடும். எனவே, இந்த வகையில் பயறுகளை உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் ரத்தக் கலப்புக் கட்டுப்பாட்டுக்குப் பாதுகாப்பானதாக அமைகிறது. கொள்ளுப் பருப்பில் சர்க்கரையின் அளவு குறைந்தே காணப்படுவதால், இதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பயறு வகைகளை வடை போன்று சமைத்து சாப்பிடும்போது முதல் நிலையை விட சற்று அதிகமாக சர்க்கரை வெளிப்படும். பயறு வகைகளை உண்பதன்மூலம் இன்னும் அதிக அளவு சர்க்கரை, குறைந்த நேரத்தில் வெளியாகும். எப்படியாயினும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் நன்மை ஏற்படும். முளைகட்டிய பயறு வகைகளாலும் கூடுதல் பலன் உண்டு. அதனால் நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரையை குறைத்து கொள்ளுவை உணவில் சேர்ப்பது நல்லது.

நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் உப்பு சாதாரண உப்பாகும். இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு. ஆனால் நமக்கு அயோடின் சத்து தேவை என்பதால் அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும். நமது உடலில் உள்ள தைராக்சின் என்ற முக்கியமான நீர் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் தைராய்டு சுரப்பி வீங்கி முன்கழுத்துக்கழலை என்ற நோய் ஏற்படும். அயோடின் சத்து இல்லாவிட்டால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். நரம்புச் செயல்களும் குன்றிப் போகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைந்தால் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சிக் குறைவுடன் பிறக்கும். மேலும், மூளையில் உள்ள நியூரான்களின் தொடர்பு குறைவதால் மந்தப் புத்தி ஏற்படும். நமக்கு சராசரியாக 1 மி.கி. அளவுக்கு அயோடின் சத்து தினசரி தேவைப்படுகிறது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் அளவு வெறும் 400 மைக்ரோ கிராம் மட்டுமே. இன்றைய நிலையில் அயோடின் உப்பு அனைவருக்கும் அவசியமாகும்.
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
இன்று சர்க்கரையை கட்டுப்படுத்தும் கொள்ளு பற்றிய தகவல்...

நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:29 PM | Best Blogger Tips
நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான நோயாகும். இதனால் கண்பார்வை பறிபோகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காதுகளையும் செவிடாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐப்பானை சேர்ந்த சிகாகோரிகவா தலைமையிலான குழுவினர் காது கேளாதோரிடம் ஆய்வு நடத்தினர்.

அவர்களில் நோய் மற்றும் அதிக சத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காதுகள் செவிடானவர்களை விட நீரிழிவு நோயினால் காதுகள் கேட்கும் திறனை இழந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். ரத்தத்தில் உள்ள குளூக்கோசின் அளவு அதிகரிப்பதன் மூலம் அவை காதுகளுக்கு செல்லும் நரம்புகளை செயல் இழக்க செய்து கேட்கும் திறமை அழிக்கிறது.

இதனால் செவிட்டு தன்மை உருவாகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும், நீரிழிவு நோயினால் காது செவிடாகும் தன்மை கடந்த 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை இரு மடங்கு அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:27 PM | Best Blogger Tips
முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்....

* எலுமிச்சை சாற்றை முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.

* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.

* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.

* பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.

* கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.

* பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.

* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.

* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.

ஆகவே மேற்கூறிய சிலவற்றையெல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வெள்ளையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது டிப்ஸ் உங்களுக்குத் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.