தமிழகம் தன் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:54 | Best Blogger Tips

 


திருச்சி காவலர் கொல்லபட்ட வழக்கில் சிறுவர்கள் கைது செய்யபட்டிருப்பது அதிர்ச்சி, முதலில் இதெல்லாம் காவல்துறையின் வியூகம், விசாரணையினை இப்படி திருப்பிவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்காணித்து தூக்குவார்கள் என்றுதான் சில ஊகங்கள் இருந்தன‌

 


ஆனால் டிஜிபி சைலேந்திரபாபுவே சிறுவர்கள்தான் கொலையாளிகள் என வழக்கு முடிந்துவிட்டதை போல் அறிவித்திருப்பதுதான் பெரும் அதிர்ச்சி

 

முன்பெல்லாம் இம்மாதிரி கொலைகள் வட இந்தியாவில்தான் நடக்கும், அங்குதான் சிறார்கள் கடும் குற்றங்களை புரிந்து கொண்டிருந்தார்கள்

 

ஆச்சரியமாக இப்பொழுது அவர்கள் மாறுகின்றார்கள், உத்திரபிரதேசம் பீகார் ஓடிசா மத்திய பிரதேச மாணவர்களெல்லாம் கடுமையாக படித்து அரசு வேலைகளை நாடு முழுக்க கைபற்றுகின்றார்கள்

 

படிக்காதவர்கள் நாடெல்லாம் ஓடி ஓடி உழைக்கின்றார்கள், தமிழகத்தில் கூட இனி வடமாநில தொழிலாளர் இல்லாமல் வேலைகள் இல்லை எனும் அளவு அவர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது

 

ஆனால் 50 வருடத்துக்கு முன்பு கல்வி, நாகரீகம் என பல துறைகளில் கோலோச்சிய தமிழகம் இப்பொழுது முன்னாள் வட இந்திய ஆப்கன் கோலத்துக்கு மாறிவிட்டது, காட்டுமிராண்டிதனமும் இன்னும் பலவும் அதிகரித்துவிட்டன‌

 

முன்பெல்லாம் தமிழக சிறுவர்கள் இளைஞர்களை பார்த்தாலே ஒரு பக்தியான‌ முகமும் நல்ல உழைக்கும் தன்மையும் தெரியும், உலகெல்லாம் தமிழர்கள் முத்திரையிடவும் வளரவும் அவர்களின் ஒழுக்கமும் கடும் உழைப்பும் பக்தியுமே அடிதளமாயின‌

 

தமிழன் எங்கு சென்றாலும் உழைப்பான், விசுவாசமாயிருப்பான் எனும் அந்த அடையாளமேதான் அவனை உலகெல்லாம் பரவ செய்தன‌

 

இன்று எல்லாம் தலைகீழாயிற்று

 

இதற்கு ஒரே ஒரு காரணம்தான் சொல்லமுடியும் தமிழக சிறுவர்கள் பழைய காலம் போல பக்தியில் வளர்வதில்லை, தான் தோன்றிதனமாக வளர்க்கபடுகின்றார்கள்

 

பக்தியோ, உழைப்பின் அருமையோ அவர்களுக்கு தெரியவில்லை, நல்லவரின் வழிகாட்டலையும் ஏற்றுகொள்ள அவர்கள் முன்வருவதில்லை

 

நுகரும் கலாச்சாரமும் பணபுழக்கமும் பெருகிவிட்ட இக்காலத்தில் அவர்களிடம் சிறிய வயதிலே ஒரு பேராசை குடிகொள்கின்றது , ஆனால் ஆசைக்கேற்ற உழைப்போ படிப்போ கொட்ட அவர்கள் தயாரில்லை

 

எல்லாம் அனுபவிக்க ஆசை ஆனால் வேலையே செய்யகூடாது எனும் கொள்கையில் ஆசை மயக்கத்தில் தகாத காரியங்களில் இறங்குகின்றார்கள்

 

இவர்கள் தறிகெட்டு செல்ல சினிமா, டாஸ்மாக், டிவி, சாதி அரசியல் இன்னும் பலவும் உதவுகின்றன, கையில் இருக்கும் போனும் அது கொடுக்கும் மாயையும் அவர்களை சிந்திக்கவிடுவதில்லை

 

தவறி செல்லும் இவர்களை கையில் எடுத்து தங்களுக்கு வேண்டியன செய்ய சமூக விரோத கும்பல்கள் அவர்களை இன்னும் பாழாக்குகின்றன‌

 

இதற்கு இரண்டாம் காரணம் பெற்றோரின் அஜாக்கிரதை இரண்டாம் மூன்றாம் காரணம் கல்வி முறை மூன்றாம் காரணம் மாறிவிட்ட வாழ்க்கை சூழல் என எவ்வளவு சொன்னாலும் வட மாநிலம் திருந்தவும் தமிழகம் நாசமாகவும் ஒரே காரணம் பக்தி இல்லாமையே

 

தெய்வ பக்தி இல்லா குழந்தைகள் நல்வழி செல்வதே இல்லை, சென்றாலும் நிலைப்பதிலை

 

அக்காலத்தில் வீடுகளில் வழிபாடு இருந்தது, பள்ளிகளில் காலை மதகல்வி இருந்தது, ஒழுக்கம் இருந்தது குழந்தைகள் முறையாக வளர்க்கபட்டனர்

 

இன்று எல்லாமே பணம் பணம் கொண்டாட்டம் என மாறிவிட்ட உலகில் தெய்வமோ பக்தியோ வழிபாடோ யாருக்கும் நினைவுக்கு வருவதில்லை

 

ஆன்மீகம் கமிழ்ந்தவரை தமிழகம் சரியாக இருந்தது, அந்த ஆன்மீக கொடி இறங்கி அதில் சினிமாவும் அரசியலும் டிவியும் டாஸ்மாக்கும் இன்னும் பலவும் ஆட்சி செய்ய ஆரம்பித்தபின் இம்மாநிலம் நாசமாயிற்று

 

அதே நேரம் வடக்கே பக்தி பெருகிற்று, ராமன் உள்ளிட்ட உதாரண அவதாரங்களுக்கு பிரமாண்ட ஆலயங்கள் எழுகின்றன, அவர்கள் பக்தி பெருக பெருக அவர்கள் சிந்தனை தெளிகின்றது

 

அந்த சிந்தனையில் தெளிவாகின்றார்கள், அந்த தெளிவு அறிவினை கொடுக்கின்றது அது கல்வி உழைப்பு என அவர்களை நல்வழிபடுத்துகின்றது

 

5 சர்வதேச விமான நிலையங்களோடு உத்திர பிரதேசம் வேகமாக வளர்கின்றது, நாடெங்கும் உழைத்து பீகாரிகள் கொட்டும் பணத்தில் அம்மாநில நிலமை மேம்படுவதாக சொல்கின்றது ஆய்வு

 

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தங்கள் மதத்தில் சரியாக இருக்க தொடங்கிவிட்டார்கள், இந்து மதத்தினை சரியாக ஏற்ற ஒரு இனம் தெளியும், சிந்திக்கும், வாழும்

 

இதை வட இந்தியா சரியாக செய்ய தொடங்கிவிட்டது

 

தமிழகம் இந்து பூமியாக இருந்தவரை அது வளமாக நாகரீகமாக அறிவாக இருந்தது, ஆனால் அரைகாசு பெறாதவனையெல்லாம் அறிவாளி என்றும் அவன் சொல்வதுதான் வழி என்றும் இந்துமதத்தை குலைக்க தொடங்கி இன்று குடிகார மாநிலமாக ஒரு மழைக்கு தாங்கா மாநிலமாக சோம்பேறிகள் மாநிலமாக ஆயிற்று

 

இப்பொழுது காவலர்களையே வெட்டி கொல்லும் காட்டுமிராண்டி மாநிலமாயிற்று, இது ஆப்கானிஸ்தான் ஆப்ரிக்கா அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றது

 

எத்தனை கொலையும் செய்யலாம் எந்த மோசடியும் செய்து சம்பாதிக்கலாம், காசு மட்டும் சேர்ந்துவிட்டால் திராவிட கட்சியில் எம்பி ஆகலாம் எம்.எல்.ஏ ஆகலாம் அதன் பின் ஒரு பயல் தொடமுடியாது எனும் ஒரு விபரீத சிந்தனை இங்கு வந்து அதற்கு பலர் வழியும் காட்டிவிட்டதுதான் சிக்கலின் இன்னொரு கோணம்

 

நல்லவனை அடையாளம் கண்டு ஒரு நல்லவன் உருவாவது கடினம், ஆனால் ஒரு கெட்டவனுக்கு விளம்பரமும் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் பெரும்பான்மை சமூகமே அவன் வழியில் நாசமாவது சுலபம்

 

மானிட பலகீனம் இது

 

அவ்வகையில் யார் யாரோ மோசமான வழிகாட்ட அதன் பின் இதுதான் சரியான வழி என மக்கள் திரள இன்று எல்லாம் நாசமாகி தமிழகம் மக்கள் வாழ தகுதியில்லா மாநிலமாக சென்று கொண்டிருக்கின்றது

 

இது இன்னும் மோசமாகும், நிலமை இன்னும் நாசமாகும்

 

இதனிலிருந்து சமூகம் மேல் எழ ஒரே வழி இந்து தர்மத்தை மீட்டெடுத்து அதன் வழி மக்களை தெளியவைத்து பழைய ஆன்மீக தமிழகமாக இதை மாற்றுவதே அன்றி வேறொன்றுமல்ல‌

 

பாரம்பரிய கலாச்சாரமும் தமிழனின் பெரும் நாகரீகமும் அம்மதத்தில்தான் இருக்கின்றது, தமிழன் சுத்தமான இந்துவாக இருந்தவரை புகழின் உச்சியில் இருந்தான், அதற்கு ஆபத்து வந்தபின்பே அவன் குப்புற விழுந்தான்

 

அவன் இந்துவாக இருந்தவரை இங்கே பெரும் ஊழல் இல்லை, குடி இல்லை, மோசடி இல்லை, கோவில் நிலம் முதல் விவசாய குளம் வரை சரியாக இருந்தது, எந்த வெள்ளமும் தானே வடிந்தது

 

ஆனால் என்று தமிழன் தன்னை இந்து இல்லை என சொன்னானோ அல்லது நல்ல இந்துவாக தன்னை மறந்து 'மதசார்பற்ற நடுநிலை" என சொன்னானோ அன்று தொடங்கிற்று அந்த நாகரீகமிக்க சமூகத்தின் வீழ்ச்சி

 

இந்துமதம் எதையெல்லாம் தடுத்து மக்களை காத்ததோ அதெல்லாம் ஒவ்வொன்றாக வளர்ந்து இந்த சமூகமே நாசமாயிற்று

 

இங்கு கலாச்சார வேர்களை மீட்டெடுத்து அதற்கு இந்து தர்ம நீர்பாய்ச்சித்தான் இனி நாகரீகமான சமூகத்தை மறுபடி தளைக்க வைக்க வேண்டும்

 

அந்த பரம்பொருள் அதற்கு உரிய வழியும் தெளிவும் தமிழ் மக்களுக்கு கொடுக்கட்டும்

 

முதலில் இந்த மாற்றம் வீடுகளில் வரட்டும், அங்கு முதலில் பக்தி செழிக்கட்டும் பின் குழந்தைகளின் இரண்டாம் வீடான பள்ளி, கல்லூரிகளில் வரட்டும்

 

இந்த இரு இடங்களிலும் பக்தியும் வழிபாடும் இறை உணர்வும் வளர தொடங்கினால் இந்து ஆலயங்கள் தானே துலங்கும்,

 

அவை துலங்க துலங்க தமிழகம் தெளியும்

 

 சில வருடங்களிலே தமிழகம் தன் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்கும்

 நன்றி இணையம்

"எதிரி சொத்து"

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:51 | Best Blogger Tips

 



காஷ்மீர் இணைப்பு, ராமர் கோவில் என மிகபெரும் அதிசயங்களை செய்த மோடி அரசு தன் மூன்றாம் சாதனைக்கு தயாராகின்றது

 

இதுவும் 70 ஆண்டுகளாக இழுத்து கொண்டிருக்கும் பிரச்சினை, காங்கிரஸ் தொட மறுத்து தேசத்தை ஒரு அச்சுறுத்தலில்  வைத்திருக்கும் பிரச்சினை

 

இது "எதிரி சொத்து" எனும் மகா முக்கிய சிக்கல்

 

இந்தியா இரண்டாக பிரிக்கபட்டபொழுது இங்கிருந்து எதிரி நாட்டுக்கு அதாவது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் வீடு, நிலம் உள்ளிட்டவை இங்கு உண்டு

 

நியாயமாக அப்படி சென்றவர்களின் சொத்து இந்திய அரசின் சொத்தாகத்தான் கருதபட வேண்டும் ஆனால் காங்கிரஸ் அரசு அதை பொன்போல் பாதுகாத்தது அதற்கு முழு காரணம் பிரிட்டன் காட்டிய வழி

 

இந்தியா நிம்மதியாக இருக்க கூடாது அதை ஒரு குட்டிசாத்தான் எப்பொழுதும் சீண்டிகொண்டே இருக்க வேண்டும் என பிரிட்டிஷ்காரன் உருவாக்கிய நாடு பாகிஸ்தான்

 

இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல் தீர கூடாது என்பது பிரிட்டனின் ஆசை, அதனால் அதுவே காங்கிரஸின் ஆசையும் ஆகிவிட்டது

 

இந்த எதிரி நாட்டுக்கு சென்றவர்கள் சொத்துக்களை இந்தியா பாதுகாத்தால் நாளை இது எங்கள் சொத்து என பாகிஸ்தானியர் வந்து செல்லவோ இல்லை பெரும் பணம் இந்தியாவிடம் கோரவும் முடியும், இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகும்

 

இதனால் இந்த சிக்கலை காங்கிரஸ் தொடாமலே வந்தது

 

மோடி அரசு இப்பொழுது பகிரங்கமாக இந்தியாவில் இருக்கும் எதிரி சொத்துக்கள் விற்கபடும் என அறிவித்துவிட்டது, இது நிச்சயம் மிகபெரும் விஷயம்

 

காரணம் இந்த சொத்துக்களின் அரச மதிப்பே 1 லட்சம் கோடி எனும்பொழுது சந்தை மதிப்பு என்னவென நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்

 

இது ஒரு புதையல் போன்ற சொத்து ஆனால் பாகிஸ்தானுக்கு அஞ்சி காங்கிரஸ் அரசு தொடவில்லை ஆனால் மோடி அரசு இதை விடுவதாக இல்லை நாட்டுக்கு எடுக்க தொடங்கிவிட்டது

 

இதில் வில்லங்கமான சொத்துக்களும் உண்டு, அது சீனபோரின் பொழுது அஞ்சி சீனாவுக்கு ஓடியவர்கள் சொத்த்தும் உண்டு, சீனா அந்த சொத்துக்கள் எங்களுக்கு என சொல்வதும் உண்டு

 

அதைவிட முக்கியமானது மும்பையில் இருக்கும் ஜின்னாவின் பங்களா, பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் பங்களா

 

ஜின்னா அங்குதான் பிரிவினைக்கு முன் வசித்தார், பின் அந்த பங்களா இந்திய சொத்தானது, ஆனால் பாகிஸ்தானோ அது எங்கள் தேசதந்தையின் அடையாளம் அதை தொடகூடாது என மிரட்டியதில் காங்கிரஸும் "ஆகட்டும் சாமி" என பின்வாங்கிற்று

 

(ஜின்னா பாகிஸ்தான் சென்றாலும் அவரின் மகள் டினா இங்கேதான் இருந்தார் ஆனால் வாடியாவினை திருமணம் செய்து வேறு பங்களாவில் இருந்தார்

 

ஜின்னாவின் மகள்தான் வாடியாக்களின் பாம்பே டையிங் எனும் மிகபெரிய நிறுவணத்தை நடத்தினார், பாகிஸ்தானுக்கும் அக்கம்பெனிக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்தாலும் டினா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை

 

இந்திய தொழில்துறையினை இந்த பாம்பே டையிங் ஆட்டிவைத்த காலம் இருந்தது, ஜின்னாவின் மகளாக இருநாட்டிலும் சலுகைகள் இருந்தன

 

அம்பானி எழுந்துதான் பாம்பே டையிங் நிறுவணத்தின் ஏகபோகத்தை ஒழித்து கட்டினார்)

 

இப்பொழுது ஜின்னாவின் பங்களா உள்ளிட்டவற்றை ஏலம் விட இந்திய அரசு முடிவு செய்துவிட்டது, இனி எதிரி சொத்து என இங்கே சும்மா இருந்த இடங்களை, அதாவது பாகிஸ்தான் உரிமை கொண்டாடிய சொத்துக்களை கையகபடுத்தி இந்திய அரசுக்கு பயன்படுத்த போகின்றது மோடி அரசு

 

மிக துணிச்சலான காரியத்தை மோடி முன்னெடுத்திருகின்றார், நடக்க முடியா அதிசயமெல்லாம் அவர் ஆட்சியில்தான் நடக்கும் என்பதால் இதுவும் நடக்க போகின்றது

 

பலலட்சம் கோடி, ஏன் கோடான கோடி செல்வம் நாட்டுக்கு கிடைக்க போகின்றது, இனி இந்தியாவின் மும்பையில் ஜின்னாவின் அடையாளம் இருக்காது என்பதால் இப்பொழுதே கண்ணீரை துடைக்க கையில் துணியுடன் அமர்ந்திருகின்றது பாகிஸ்தான்🚩

 

Courtesy ~ Stanley Rajan Ji 

ModiFor2024