"எதிரி சொத்து"

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 9:51 | Best Blogger Tips

 காஷ்மீர் இணைப்பு, ராமர் கோவில் என மிகபெரும் அதிசயங்களை செய்த மோடி அரசு தன் மூன்றாம் சாதனைக்கு தயாராகின்றது

 

இதுவும் 70 ஆண்டுகளாக இழுத்து கொண்டிருக்கும் பிரச்சினை, காங்கிரஸ் தொட மறுத்து தேசத்தை ஒரு அச்சுறுத்தலில்  வைத்திருக்கும் பிரச்சினை

 

இது "எதிரி சொத்து" எனும் மகா முக்கிய சிக்கல்

 

இந்தியா இரண்டாக பிரிக்கபட்டபொழுது இங்கிருந்து எதிரி நாட்டுக்கு அதாவது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் வீடு, நிலம் உள்ளிட்டவை இங்கு உண்டு

 

நியாயமாக அப்படி சென்றவர்களின் சொத்து இந்திய அரசின் சொத்தாகத்தான் கருதபட வேண்டும் ஆனால் காங்கிரஸ் அரசு அதை பொன்போல் பாதுகாத்தது அதற்கு முழு காரணம் பிரிட்டன் காட்டிய வழி

 

இந்தியா நிம்மதியாக இருக்க கூடாது அதை ஒரு குட்டிசாத்தான் எப்பொழுதும் சீண்டிகொண்டே இருக்க வேண்டும் என பிரிட்டிஷ்காரன் உருவாக்கிய நாடு பாகிஸ்தான்

 

இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல் தீர கூடாது என்பது பிரிட்டனின் ஆசை, அதனால் அதுவே காங்கிரஸின் ஆசையும் ஆகிவிட்டது

 

இந்த எதிரி நாட்டுக்கு சென்றவர்கள் சொத்துக்களை இந்தியா பாதுகாத்தால் நாளை இது எங்கள் சொத்து என பாகிஸ்தானியர் வந்து செல்லவோ இல்லை பெரும் பணம் இந்தியாவிடம் கோரவும் முடியும், இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகும்

 

இதனால் இந்த சிக்கலை காங்கிரஸ் தொடாமலே வந்தது

 

மோடி அரசு இப்பொழுது பகிரங்கமாக இந்தியாவில் இருக்கும் எதிரி சொத்துக்கள் விற்கபடும் என அறிவித்துவிட்டது, இது நிச்சயம் மிகபெரும் விஷயம்

 

காரணம் இந்த சொத்துக்களின் அரச மதிப்பே 1 லட்சம் கோடி எனும்பொழுது சந்தை மதிப்பு என்னவென நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்

 

இது ஒரு புதையல் போன்ற சொத்து ஆனால் பாகிஸ்தானுக்கு அஞ்சி காங்கிரஸ் அரசு தொடவில்லை ஆனால் மோடி அரசு இதை விடுவதாக இல்லை நாட்டுக்கு எடுக்க தொடங்கிவிட்டது

 

இதில் வில்லங்கமான சொத்துக்களும் உண்டு, அது சீனபோரின் பொழுது அஞ்சி சீனாவுக்கு ஓடியவர்கள் சொத்த்தும் உண்டு, சீனா அந்த சொத்துக்கள் எங்களுக்கு என சொல்வதும் உண்டு

 

அதைவிட முக்கியமானது மும்பையில் இருக்கும் ஜின்னாவின் பங்களா, பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் பங்களா

 

ஜின்னா அங்குதான் பிரிவினைக்கு முன் வசித்தார், பின் அந்த பங்களா இந்திய சொத்தானது, ஆனால் பாகிஸ்தானோ அது எங்கள் தேசதந்தையின் அடையாளம் அதை தொடகூடாது என மிரட்டியதில் காங்கிரஸும் "ஆகட்டும் சாமி" என பின்வாங்கிற்று

 

(ஜின்னா பாகிஸ்தான் சென்றாலும் அவரின் மகள் டினா இங்கேதான் இருந்தார் ஆனால் வாடியாவினை திருமணம் செய்து வேறு பங்களாவில் இருந்தார்

 

ஜின்னாவின் மகள்தான் வாடியாக்களின் பாம்பே டையிங் எனும் மிகபெரிய நிறுவணத்தை நடத்தினார், பாகிஸ்தானுக்கும் அக்கம்பெனிக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்தாலும் டினா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை

 

இந்திய தொழில்துறையினை இந்த பாம்பே டையிங் ஆட்டிவைத்த காலம் இருந்தது, ஜின்னாவின் மகளாக இருநாட்டிலும் சலுகைகள் இருந்தன

 

அம்பானி எழுந்துதான் பாம்பே டையிங் நிறுவணத்தின் ஏகபோகத்தை ஒழித்து கட்டினார்)

 

இப்பொழுது ஜின்னாவின் பங்களா உள்ளிட்டவற்றை ஏலம் விட இந்திய அரசு முடிவு செய்துவிட்டது, இனி எதிரி சொத்து என இங்கே சும்மா இருந்த இடங்களை, அதாவது பாகிஸ்தான் உரிமை கொண்டாடிய சொத்துக்களை கையகபடுத்தி இந்திய அரசுக்கு பயன்படுத்த போகின்றது மோடி அரசு

 

மிக துணிச்சலான காரியத்தை மோடி முன்னெடுத்திருகின்றார், நடக்க முடியா அதிசயமெல்லாம் அவர் ஆட்சியில்தான் நடக்கும் என்பதால் இதுவும் நடக்க போகின்றது

 

பலலட்சம் கோடி, ஏன் கோடான கோடி செல்வம் நாட்டுக்கு கிடைக்க போகின்றது, இனி இந்தியாவின் மும்பையில் ஜின்னாவின் அடையாளம் இருக்காது என்பதால் இப்பொழுதே கண்ணீரை துடைக்க கையில் துணியுடன் அமர்ந்திருகின்றது பாகிஸ்தான்🚩

 

Courtesy ~ Stanley Rajan Ji 

ModiFor2024