காய்கறி" குறள்.*

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips

செஞ்சுரி' அடித்த காய்கறிகள்: இல்லத்தரசிகள் கவலை
*தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.*
 
*எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே*
 
*வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.*
 
*பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை.*
 
*தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்*.
 
*வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண.*
 
*வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு*.
 
*கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்.*
 
*பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்* .
 
*காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.*
 
*முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தா மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்*
 
*காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.*
 
*இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை*
 
*உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.*
 
*பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்*
 
*பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்*.
 
*வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை*
 
*வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேனெவே எண்ணு பவர்.*
 
*கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை*
 
*பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை*.
 
*கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்*
 
*கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.*
 
*பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்*
 
*கண் இருந்தும் குருடரே காசினியில் காய்கறியை உண்ணாதவர்.* அனைவருக்கும் பகிருங்கள்
 

பர்வதமலை சிவன் கோவில்..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:19 PM | Best Blogger Tips

 பர்வதமலை மல்லிகார்ஜுனசாமி திருக்கோவில் | Parvathamalai Hill Parvathamalai  Mallikarjuna Swamy temple

பர்வதமலை சிவன் கோவில்
*******************************
*******************************
20975 படிகள் 3500 அடி உயரம் புகழ்பெற்ற #பர்வதமலை சிவன் கோவில்
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
பர்வதமலை கோயில் (Parvathamalai Temple) - Kalasapakkam
 
பர்வதம் என்றால் மலை என்று பொருள். 
 
பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது.
இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு - Agnimurasu
 
தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர். மலைஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர்.
இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு.
 
 இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். 
 
மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. 
 
மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மற்றும் மலை பாதையில் வழி துணையாக நாய்கள் (பைரவர்) வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
 பர்வதமலை பயணம் ❗4560 அடி உயரம் | parvathamalai hills temple tiruvannamalai  history - YouTube
இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.✍🏼


முன்னோர்களின் கணக்கு முறையான

மணக்கால் அய்யம்பேட்டை | 10:39 AM | Best Blogger Tips

 கடவுள் நம்பிக்கை - Siddharbhoomi

 

. 👌👌👌முன்னோர்களின் கணக்கு முறையான கணக்கு அறிந்து கொள்வோம் ....👌👌👌👌

🙏200 #கோடி_ஆண்டுகளில் விஞ்ஞானிகளின் கூற்று இந்துக்களின் காலக்கணக்குடன் பொருந்தும்
 
👍🏻#உலகம்_தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று.....
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

🔥#இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...
கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!
குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
உண்மை இதுதான்

காண்டீபதாரி அர்ஜுனன்
 
🐎#ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..

Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

🔥🕉️ #சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

A.R.SHREE BASHYAM (@ARSHREEBASHYAM) / X

இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிடக்கலை..... தொியாமல் கட்ட முடியாது.!
வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரை- சென்னையில் கடுமையான கடல் சீற்றம் |  Tamil News Mandous Cyclone Echo Furious Sea in Marina Beach

Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

Chemical Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

Aero Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

Explosive Engineering தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

தமிழ் Engineering படித்தது உண்டா..?என்ன கண்ணு வேர்க்குதா...?அத்தனைத்  துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள்..! -

Metal Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

Bachelor/ Master of Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

Chartered Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

Anomaly Scan / Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..

இன்னும் சொல்ல வேண்டுமானால்,

ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.

லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு
கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது.

இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..

ஆனால், இதை நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,

திருமூலா் பெருமகனார் அற்புதமாக தன் ஞானத்தினால்,

லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி
நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்

என்று சொல்லியிருக்கிறார்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.

🙏🏻#இதைப் பகிர பெருமை கொள்கிறேன்.
அறிவோம் முன்னோர் மகிமை.!!!🙏🏻🌹🙏🏻 






நன்றி இணையம்