பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 PM | Best Blogger Tips1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:42 PM | Best Blogger Tips

சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா?

2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா?

3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா?

4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா?

5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா?

6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா?

பதில்:

எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.

ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும்.

இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

நீங்கள் இன்னும் சரியாக உங்களுக்குத் தேவையான நீரின் அளவைக் கணித்துக் கொள்ள விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள கணிப்பானில் உங்கள் தரவுகளைக் கொடுப்பதன் மூலம் கணித்துக் கொள்ள முடியும்.

உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.

அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)

ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.

மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.

பிரசவத்தைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:40 AM | Best Blogger Tips

கர்ப்பமாக இருக்கும் போது, பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்திற்கு பின்னும் என்ன செய்ய வேண்டுமென்று நிறைய திட்டங்களை தீட்டுவோம். ஆனால் பிரசவம் நடைபெறப் போகிற இறுதி மாதத்தில் இருந்து, ஒருசில கவலை மற்றும் பயத்தைப் பற்றிய எண்ணம் அதிகம் இருக்கும். எனவே பிரசவத்தின் போது, தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம். ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரசவத்தைப் பற்றிய புத்தகத்திலும் விரிவாகவும், தெளிவாகவும் பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னும் என்னவெல்லாம் நடைபெறும், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஒருசில விஷயங்களை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று பட்டியலிடுவார்கள். சிலர் அதனை எதற்கென்று தெரியாமலே பின்பற்றுவார்கள். அத்தகைய விஷயங்களை முன்பே தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அதைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள் வெளிவருதல். ஏனெனில் குழந்தை பிறக்கும் நேரம் அதிகப்படியான அழுத்தம் வயிற்றில் கொடுப்பதால், அப்போது சில பெண்களுக்கு உடலில் உள்ள கழிவுகளும் வெளிவரும். ஆகவே தான் மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்படுவதற்கு ஒரு மாதத்தில் இருந்தே அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே இந்த நேரத்தில் திடமான உணவுகளை அதிகம் சாப்பிடாமல், தண்ணீரையும், பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் பிரசவத்தின் போது கழிவுகள் வெளியேறுவதை தவிர்க்கலாம்.

* சிலருக்கு பிரசவத்தின் போது வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிரசவம் ஆகிய மூன்று ஒரே நேரத்தில் நடைபெறும். ஏனெனில் பிரசவத்தின் போது வயிறு மிகுந்த உப்புசத்துடன் இருப்பதால், அது இறுதியில் வாந்தியை வரவழைப்பதோடு, அத்துடன் இயற்கையாக நடைபெறும் வயிற்றுப்போக்கும் நடைபெறும். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை யாரும் சொல்லவே மாட்டார்கள்.

* பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் கொடியது இரத்த அழுத்தமானது அதிகரிப்பது தான். ஏனெனில் குழந்தை வெளிவருவதற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தத்தினால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். இந்த பிரச்சனை சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரலாம் அல்லது சிலருக்கு சில நாட்களில் குணமாகலாம். எனவே குழந்தையை வெளியேற்றும் போது மிகவும் டென்சன் இல்லாமல் அமைதியாக அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
* கர்ப்பமாக இருக்கும் போது மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சிலருக்கு தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் மாதவிடாய் சுழற்சியானது நடைபெறும். சிலருக்கு குழந்தை பிறந்த பின்னர் ஒரு வருடத்திற்கு மேல் கூட மாதவிடாய் சுழற்சியானது நடைபெறாமல் இருக்கும்.

* பிரசவ வலி பிரசவத்தின் போது மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அந்த வலியானது பிரசவம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது வாரமோ இருக்கும். எனவே இந்த வலியை தவிர்க்க சரியான ஓய்வு மிகவும் அவசியமானது. இவையே பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னரும் நடைபெறும் விஷயங்கள். ஆகவே 9 ஆவது மாதம் வந்துவிட்டால், மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

எலித் தொல்லையா? முதல்ல இத படிங்கப்பா...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips

நிறைய பேருக்கு செல்லப் பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அந்த செல்லப் பிராணிகள் பல்வேறு சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கும். அத்தகைய செல்லப் பிராணிகளில் நாய், பூனை, கிளி போன்றவற்றை தான் பெரும்பாலானோர் வளர்ப்பார்கள். சிலர் எலிகளில் வெள்ளை நிற எலியை வளர்ப்பார்கள். ஆனால் அந்த வகைகளில் ஒன்றான கருப்பு நிற எலியைக் கண்டால் பலரும் எரிச்சல் அடைவார்கள். ஏனெனில் கருப்பு நிற எலியின் அட்டகாசத்தை தாங்கவே முடியாது

குறிப்பாக பெருச்சாளி என்றால் அனைவரும் அது மட்டும் கையில் கிடைத்தால், அதனை அடித்தே சாவடிப்பேன் என்ற அளவில் கோபப்படுவார்கள். ஏனென்றால், அவை வீட்டில் உள்ள மரத்தாலான நாற்காலி, உடைகள் போன்றவற்றை கிழித்து வைத்துவிடும். பொதுவாக இந்த மாதிரியான எலிகளின் இருப்பிடம் வீட்டின் தோட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு நாம் குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர குப்பைகளை போடுவதால், அதன் வாசனைக்கு அது பொந்து போட்டு, தங்கி, வீட்டின் உள்ளே வந்து வீட்டையே அசிங்கமாக்கிவிடுகிறது. எனவே வீட்டையும், தோட்டத்தையும் எலிப் பிரச்சனையின்றி வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

* முதலில் குப்பைத் தொட்டியை வீட்டின் வெளியே தோட்டத்தில் வைத்தால், அவற்றை நன்கு மூடி வைக்க வேண்டும். குறிப்பாக ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும். ஏனெனில் குப்பையின் வாசனைக்கு எலிகள் எளிதில் வந்துவிடும். எனவே குப்பைத் தொட்டியை நன்கு மூடி வைக்க வேண்டும். மேலும் குப்பையை வெளியே எறிந்த பின்னர், அதனை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.

* மரத்தூள் குவியல் மற்றும் தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அதன் வாசனையால் எளிதில் எலியானது வந்துவிடும். * வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை களிமண் அல்லது கம் வைத்து நன்கு அடைத்துவிட வேண்டும். இதனால் எலிகள் வீட்டில் வந்து விளையாடுவதை தடுக்கலாம்.

* வீட்டில் ஆங்காங்கு எலிப் பெட்டியை வைக்க வேண்டும். அதிலும் அந்த பெட்டியில் நல்ல வாசனை உணவுப் பொருட்களை வைத்து, எலி அடிக்கடி வரும் இடம் மற்றும் தங்கியிருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இதனால் உணவுப் பொருட்களின் வாசனைக்கு எலியானது பெட்டிக்குள் சென்று மாட்டிக் கொள்ளும். பின் அதனை வீட்டிற்கு மிகவும் தொலைவில் விட்டுவிட வேண்டும்.

* எலிகளுக்கு புதினாவின் வாசனை என்றால் அறவே பிடிக்காது. எனவே வீட்டைச் சுற்றி புதினாவால் செய்யப்பட்ட எண்ணெய் அல்லது வாசனை திரவியத்தை எலி தங்கியிருக்கும் இடத்தில் தெளித்தால், அதனை வீட்டிற்குள் வராமல் விரட்டலாம்.

* அதுமட்டுமின்றி எலிகளுக்கு அந்துருண்டையின் வாசனை பிடிக்காது. ஆகவே வீட்டில் ஆங்காங்கு அந்துருண்டையை வைத்து விட்டால், எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இவையே எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழி. வேறு ஏதாவது எளிதான வழிகள், உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.