கர்ப்பமாக இருக்கும் போது, பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்திற்கு
பின்னும் என்ன செய்ய வேண்டுமென்று நிறைய திட்டங்களை தீட்டுவோம். ஆனால்
பிரசவம் நடைபெறப் போகிற இறுதி மாதத்தில் இருந்து, ஒருசில கவலை மற்றும்
பயத்தைப் பற்றிய எண்ணம் அதிகம் இருக்கும். எனவே பிரசவத்தின் போது, தைரியமாக
இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான்
ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம். ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக
இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரசவத்தைப் பற்றிய புத்தகத்திலும் விரிவாகவும்,
தெளிவாகவும் பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னும் என்னவெல்லாம்
நடைபெறும், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஒருசில விஷயங்களை மருத்துவர்கள்
சொல்லமாட்டார்கள். ஆனால் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று
பட்டியலிடுவார்கள். சிலர் அதனை எதற்கென்று தெரியாமலே பின்பற்றுவார்கள்.
அத்தகைய விஷயங்களை முன்பே தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அதைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள்
வெளிவருதல். ஏனெனில் குழந்தை பிறக்கும் நேரம் அதிகப்படியான அழுத்தம்
வயிற்றில் கொடுப்பதால், அப்போது சில பெண்களுக்கு உடலில் உள்ள கழிவுகளும்
வெளிவரும். ஆகவே தான் மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்படுவதற்கு ஒரு மாதத்தில்
இருந்தே அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே
இந்த நேரத்தில் திடமான உணவுகளை அதிகம் சாப்பிடாமல், தண்ணீரையும்,
பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் பிரசவத்தின் போது கழிவுகள்
வெளியேறுவதை தவிர்க்கலாம்.
* சிலருக்கு பிரசவத்தின் போது வாந்தி,
வயிற்றுப் போக்கு மற்றும் பிரசவம் ஆகிய மூன்று ஒரே நேரத்தில் நடைபெறும்.
ஏனெனில் பிரசவத்தின் போது வயிறு மிகுந்த உப்புசத்துடன் இருப்பதால், அது
இறுதியில் வாந்தியை வரவழைப்பதோடு, அத்துடன் இயற்கையாக நடைபெறும்
வயிற்றுப்போக்கும் நடைபெறும். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை யாரும்
சொல்லவே மாட்டார்கள்.
* பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும்
பிரச்சனைகளில் மிகவும் கொடியது இரத்த அழுத்தமானது அதிகரிப்பது தான்.
ஏனெனில் குழந்தை வெளிவருவதற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தத்தினால்,
இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். இந்த பிரச்சனை சிலருக்கு வாழ்நாள்
முழுவதும் தொடரலாம் அல்லது சிலருக்கு சில நாட்களில் குணமாகலாம். எனவே
குழந்தையை வெளியேற்றும் போது மிகவும் டென்சன் இல்லாமல் அமைதியாக அழுத்தத்தை
கொடுக்க வேண்டும்.
* கர்ப்பமாக இருக்கும் போது மாதவிடாய்
சுழற்சியானது தடைபடும். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சிலருக்கு
தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் மாதவிடாய் சுழற்சியானது நடைபெறும்.
சிலருக்கு குழந்தை பிறந்த பின்னர் ஒரு வருடத்திற்கு மேல் கூட மாதவிடாய்
சுழற்சியானது நடைபெறாமல் இருக்கும்.
* பிரசவ வலி பிரசவத்தின்
போது மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அந்த வலியானது பிரசவம் முடிந்த
பின்னர் சில நாட்களோ அல்லது வாரமோ இருக்கும். எனவே இந்த வலியை தவிர்க்க
சரியான ஓய்வு மிகவும் அவசியமானது. இவையே பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு
பின்னரும் நடைபெறும் விஷயங்கள். ஆகவே 9 ஆவது மாதம் வந்துவிட்டால், மிகவும்
கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது, பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்திற்கு பின்னும் என்ன செய்ய வேண்டுமென்று நிறைய திட்டங்களை தீட்டுவோம். ஆனால் பிரசவம் நடைபெறப் போகிற இறுதி மாதத்தில் இருந்து, ஒருசில கவலை மற்றும் பயத்தைப் பற்றிய எண்ணம் அதிகம் இருக்கும். எனவே பிரசவத்தின் போது, தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம். ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரசவத்தைப் பற்றிய புத்தகத்திலும் விரிவாகவும், தெளிவாகவும் பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னும் என்னவெல்லாம் நடைபெறும், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஒருசில விஷயங்களை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று பட்டியலிடுவார்கள். சிலர் அதனை எதற்கென்று தெரியாமலே பின்பற்றுவார்கள். அத்தகைய விஷயங்களை முன்பே தெரிந்து கொள்ள வேண்டுமெனில், அதைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள் வெளிவருதல். ஏனெனில் குழந்தை பிறக்கும் நேரம் அதிகப்படியான அழுத்தம் வயிற்றில் கொடுப்பதால், அப்போது சில பெண்களுக்கு உடலில் உள்ள கழிவுகளும் வெளிவரும். ஆகவே தான் மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்படுவதற்கு ஒரு மாதத்தில் இருந்தே அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே இந்த நேரத்தில் திடமான உணவுகளை அதிகம் சாப்பிடாமல், தண்ணீரையும், பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் பிரசவத்தின் போது கழிவுகள் வெளியேறுவதை தவிர்க்கலாம்.
* சிலருக்கு பிரசவத்தின் போது வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிரசவம் ஆகிய மூன்று ஒரே நேரத்தில் நடைபெறும். ஏனெனில் பிரசவத்தின் போது வயிறு மிகுந்த உப்புசத்துடன் இருப்பதால், அது இறுதியில் வாந்தியை வரவழைப்பதோடு, அத்துடன் இயற்கையாக நடைபெறும் வயிற்றுப்போக்கும் நடைபெறும். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை யாரும் சொல்லவே மாட்டார்கள்.
* பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் கொடியது இரத்த அழுத்தமானது அதிகரிப்பது தான். ஏனெனில் குழந்தை வெளிவருவதற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தத்தினால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். இந்த பிரச்சனை சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரலாம் அல்லது சிலருக்கு சில நாட்களில் குணமாகலாம். எனவே குழந்தையை வெளியேற்றும் போது மிகவும் டென்சன் இல்லாமல் அமைதியாக அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
* கர்ப்பமாக இருக்கும் போது மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சிலருக்கு தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் மாதவிடாய் சுழற்சியானது நடைபெறும். சிலருக்கு குழந்தை பிறந்த பின்னர் ஒரு வருடத்திற்கு மேல் கூட மாதவிடாய் சுழற்சியானது நடைபெறாமல் இருக்கும்.
* பிரசவ வலி பிரசவத்தின் போது மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அந்த வலியானது பிரசவம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது வாரமோ இருக்கும். எனவே இந்த வலியை தவிர்க்க சரியான ஓய்வு மிகவும் அவசியமானது. இவையே பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னரும் நடைபெறும் விஷயங்கள். ஆகவே 9 ஆவது மாதம் வந்துவிட்டால், மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.