ம‌னித உட‌ல்க‌ள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:21 PM | Best Blogger Tips
நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...

க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]

வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips
வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் உணவுகள்...

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள்.

மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்ப தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம்.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம் எந்த ஒரு செயலுக்கு தீர்வு இல்லாமல் இருக்காது. அதுப்போல் தான் வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், கொழுப்புகள் கரைந்து, அழகான ஸ்லிம்மான தோற்றத்தைப் பெறலாம். சரி, அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா....

கருப்பு பீன்ஸ் :
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேரிக்காய் :
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாப்கார்ன் :
ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும் சிறந்தது. ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட, அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பையும் வராமல் தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு :
அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

வேர்க்கடலை:
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதைகள்:

கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

வெள்ளை டீ (White Tea) :

நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

ஆப்பிள் :

சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது. இந்த ஆசிட் உடலில் சென்றால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும். ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.

குசம்பப்பூ :

எண்ணெய் (Safflower Oil) உடலில் தொப்பை ஏற்படுவதற்கு காரணமே உண்ணும் உணவுகள் தான். ஆனால் அதே உணவுகளில் சில உணவுப் பொருட்கள் உடல் எடையை குறைத்து, தொப்பை ஏற்படாமல் தடுக்கும். அதிலும் சாலட்டில் சேர்க்கப்படும் குசம்பப்பூ எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஓர் ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் குசம்பப்பூ எண்ணெயை உடலில் சேர்த்தால், நிச்சயம் தொப்பையைத் தடுக்கலாம் என்று சொல்கிறது.

கொசு விரட்டிகளால் ஏற்படும் ஆபத்து !! Dangerous Mosquito Coils

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips
வெயில் காலம் முடிந்து மழைக் காலம் ஆரம்பித்துவிட்டது. கூடவே கொசுக்களின் தொல்லையும் தொடங்கிவிட்டது. பகல், இரவென்று பாராமல் எப்போதும், எங்கேயும் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடி, பல அபாயங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதால், கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்விட், கிரீம் என்று பலதையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கொசுக்களுக்கு எதிரான அரணாக விளங்க
ும் இவற்றில் பல, ஆபத்துகளையும் அள்ளி வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்களும், ஆய்வாளர்களும். கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்கள், லிக்விட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரசாயனங் களின் அடர்த்தி, இவற்றை நாம் சுவாசிக்கும் அளவு, அறைக்குள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இவற்றால் ஏற்படும் தீங்குகளின் அளவு அமையும். கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆண் குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.
கொசு விரட்டிகளால் ஏற்படும் ஆபத்து !! 
Dangerous Mosquito Coils

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips
5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்-புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

...
பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.
றீ பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்-கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி????

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips
வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen s...
ulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.

கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.

பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.

சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்

உலக மனிதஉரிமைகள் தினம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips
ஓவ்வொருவரும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிடவேண்டும் என்பதனை வலியுறுத்தும்விதமாக ஓவ்வொரு ஆண்டும் டிச.10-ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

...
1948-ம் ஆண்டுடிசம்பர் 10-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில், உலக மனித உரிமைகள்தினம் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைபடுத்துவித்தில் 1950-ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

உலகில்வாழும் அனைவரும் சமம். ஓருவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாமும் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது.எதுமனித உரிமை :ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமை வந்துவிடுகின்றன. உயிர்வாழ்வதற்கானஉரிமை, கருத்துசுதந்திரம், கல்வி,மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம்.

தொடரும் மீறல்கள்:இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் 1991-ம் ஆண்டு அக்.13-ல்இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளிலும்,இந்தியாவிலும் அடிமைத்தனம், இனவெறி,பாலியல் குற்றங்கள் என மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.இதைமுற்றிலும் தடுப்பதற்கு அரசுடன் இணைந்து மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவிக்கிறது...!
See More
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
இன்று உலக மனிதஉரிமைகள் தினம்...

சீரகத்தின் மருத்துவக் குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:32 AM | Best Blogger Tips
சீரகத்தின் மருத்துவக் குணங்கள்

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
...

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.