பற்று

மணக்கால் அய்யம்பேட்டை | 3:03 PM | Best Blogger Tips

 

  

 

நாம் ஒன்றின் மேல் பற்றை விட்டுவிட்டால் அது நாளடைவில் நம்மை விட்டுப் போய் விடும்.

 

சின்ன சின்ன உதாரணங்கள் பார்ப்போம்..

 

வயதாகி விட்டது. சர்க்கரை மேல் உள்ள ஆசையை விட்டு விடுகிறோம்.

 River side Houses in a Scenery Art with Pencil || Easy Pencil Art

இனிப்பு பண்டங்கள் வேண்டாம் என்று தள்ளி வைக்கிறோம்.

 

அப்படி நினைத்தால் என்ன ஆகும்?

 

சர்க்கரை வாங்க மாட்டோம். ஐஸ் கிரீம் கடைகளுக்கு போக மாட்டோம். இனிப்பு பண்டங்களை வாங்க மாட்டோம்.

 தந்தையு மானவள்..- Dinamani

கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள் நம் வாழ்வில் குறைந்து கொண்டே வந்து ஒரு நிலையில் முற்றும் இல்லாமல் போய் விடும்.

 

அது இயற்கைதானே. எது வேண்டாம் என்கிறோமோ, அதை ஏன் வைத்துக் கொண்டு இருக்கப் போகிறோம். அது நம்மை விட்டு போய்விடும்.

 தாயின் பிரார்த்தனை - சிறுகதைகள்

பிள்ளைகள் மேல் அன்பாக் இல்லாவிட்டால் அவர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்கள்.

 

கணவன் மற்ற பெண்களை பார்க்கிறான் என்று மனைவி வருந்தினால், காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். நாம் எதன் மேல் ஆசையை விடுகிறோமோ, அது நம்மை விட்டுப் போய் விடும்.

 

அது ஒருபுறம் இருக்கட்டும்.

 

ஆசையை விட்டாச்சு, விடயங்கள் நம்மை விட்டுப் போய் விட்டன. எல்லாம் சரிதான். இருந்தாலும், எப்போதாவது அந்த விடயங்கள் நம்மிடம் வரும் என்றால், பழைய ஆசை காரணமாக நம் மனம் அதை மீண்டும் பற்றிக் கொள்ளும்.

 Sage of Kanchi | எனது பையன் மகேஷ் வரைந்த மஹாபெரியவாளின் ஓவியம் | Facebook

இனிப்பே வேண்டாம் என்று கூறி கடுமையான விரதம் இருப்பவர்கள் முன்னால், ஒரு இலட்டு, ஜிலேபியை வைத்துப் பாருங்கள். நாக்கில் எச்சில் ஊறும். ஒரு நாள்தானே. ஒரு துண்டுதானே என்று உண்டு விடுவார்கள்.

 

மது அருந்துவதில்லை என்று கடுமையான விரதம் இருப்பார்கள். அலுவலகத்தில் ஏதோ விழா.  நண்பர் ஒரு glaas கொடுக்கிறார். சரி, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று குடித்து விடுவார்கள்.

 Pencil sketch scenery | Easy sketches | Sketch of nature | Pencil sketch...  | Nature sketch, Nature drawing, Pencil sketch

இதற்கு வாசனை என்று பெயர்.  ஒரு பாண்டத்தில் பெருங்காயம் போட்டு வைத்து இருப்போம். பின் ஒரு நாள் அது முற்றும் தீர்ந்து விடும். அந்தப் பாண்டத்தை முகர்ந்து பார்த்தால் பெருங்காய வாசனை அடிக்கும். அதில் இப்போது பெருங்காயம் இல்லை. ஆனால், அதன் வாசனை மட்டும் தங்கி இருக்கிறது.

 

அது போல, ஆசை விட்டுப் போய் விட்டாலும், முன்பு அனுபவித்த அனுபவம் காரணமாக அவை மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

 

எல்லாவற்றையும் துறந்து கானகம் போய் தவம் செய்த முனிவர்களை அழகிய பெண்கள் மயக்கியதாக பல கதைகள் படித்து இருக்கிறோம்.

 

வாசனை விடாது.

 

அசை, வாசனை போகவில்லை. அதை அடக்கி வைத்து இருக்கிறோம். என்றேனும் ஒரு நாள் அது மீண்டும் வெளி வரும்.

 Pencil Sketch paintings HD wallpaper | Pxfuel

அது வராமலேயே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

 

அதை விட உயர்ந்த ஒன்றில் ஆசை வந்து விட்டால், அந்த ஆசைகள் போய் விடும். பின் அவை மீண்டும் வந்தாலும், நமக்கு அதன் மேல் ஆசை வராது.

 

ஏன் ஒவ்வொன்றாகப் போக வேண்டும்? உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றின் மேல் பற்று வந்து விட்டால், பின் உலகில் உள்ள அனைத்தின் மேலும் உள்ள பற்றுகள் தானே மறைந்து விடும்.

 

அதைப் பற்றி விட்டால் பின் உலக விடயங்களில் உள்ள பற்று விட்டுப் போய் விடும்.

 Mahaperiavah | From Amridha Varshini | Facebook

அது என்னவோ துறவி, சாமியார் மாதிரி ஆகி விடாதா என்றால் இல்லை.

 Pencil Drawing Wallpapers - Top Free Pencil Drawing Backgrounds -  WallpaperAccess

நூறு ரூபாய் பெறுவதற்காக ஐந்து ரூபாயை துறப்பவனை துறவி என்றா சொல்லுவோம்?

 

இறைவனை அடைய இந்த சில்லறை விடயங்களை துறப்பது என்பது துறவே அல்ல. சந்தோஷமான விடயம்.

 

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்க்கரையை விட்டுவிட்டால் அதனால் துன்பமா? இன்பமா?

 Pencil Art Wallpapers Group (64+)

நோயற்ற, நீண்ட, ஆரோக்கியமான வாழக்கை வேண்டும் என்று எண்ணெய் பலகாரத்தை ஒருவன் வேண்டாம் என்று தள்ளி வைத்தால் அது ஒன்றும் பெரிய தியாகமோ, துறவோ ஆகாது. அதற்காக யாராவது வருந்துவார்களா?

 Thanks & Copy from web