#என்_மனவானில்
#geopolitics
#Modi_Magical_geopolitics
உலக அரசியலை புரட்டி போடும், மோடியின் மந்திரம் என்ன?
பலர் இந்த கேள்விக்கு விடை தேடி அலைகின்றனர். குறிப்பாக சீன வகாபி இடதுசாரி ஆட்கள், 24 மணி நேரமும், தலையை பிய்த்து கொண்டு, 75 வருட தங்கள் ஆதிக்கம், 10 வருடங்களில், கண்முன்னால் சிதைவதை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். பல மோடி ஆதரவாளர்களுக்கும் கூட இது புரியாத புதிர். அப்படி என்னதான் செய்கிறார் மோடி? வாருங்கள் விடையை தேடுவோம்.
எங்கள் ஜியோபாலிடிக்ஸ் குரூப்பில் நடந்த விவாதத்தில், பலர் பல கருத்துகளை வைத்தனர். அதில் சில உங்கள் புரிதலுக்காக.
முதலாவதாக பாரதம் சுதந்திரம் அடைந்த முதல், யாரையும் சாராத கொள்கை என்று சொன்னாலும், ரஷ்யா, அரபு தேசங்கள், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தேசங்களுடன் மறைமுகமாக உறவுகளை மேம்படுத்த முயன்று கொண்டே இருந்தது.
ஆனால் உறவு கொஞ்சம் கொஞ்சமாக மோசமானதுடன், நாட்டின் மதிப்பும், இறையாண்மையும் அதல பாதாளத்தை நோக்கி, சென்றுக் கொண்டிருந்ததை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். உள்ளிருந்து நாட்டை கொல்லும் விஷக் கிருமிகளும் இந்த வெளிநாட்டு கும்பல்கள் இட்ட உத்தரவை சிரமேற்கொண்டு செய்துக் கொண்டு இருந்தனர், இன்றும் இருக்கின்றனர்.
2014க்கு முன்பு, பாரதம் அமெரிக்க பிரச்சினைகளுக்காக, மறைமுக பேச்சுவார்த்தை நடத்த, ரஷ்யாவை நம்பிக் கொண்டிருந்தது. சீனப் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவிடமும், அமெரிக்க பிரச்சினைகளுக்கு ஐரோப்பிய நாடுகளும், பாகிஸ்தான் பிரச்சினைகளுக்கு ஈரான் மற்றும் கத்தார் மூலமாகவும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நாடுகள் தம் வசதிக்கேற்ப, பாரதத்தை ஆட்டுவித்துக் கொண்டிருந்தன.
மோடி செய்த முதல் வேலை, இந்த விபரீத விளையாட்டை நிறுத்த, எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்து, அவர்களுடன் நேரடி உறவை, பேச்சுவார்த்தையை, ஆரம்பித்து வைத்தார். ஆனால் ஜியோபாலிடிக்ஸின் முதல் சூத்திரம் ஜியோ எகானமிக்ஸ். அதனை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகித்து, அவர்களை தன் வசம் திருப்ப முனைந்தார்.
அப்படி முடியாத பட்சத்தில், உதாரணமாக சீனப் பிரச்சினையில், ரஷ்யாவை கோர்த்து விட்டார். சீன ரஷ்ய உறவு, ஒரு புரிந்து கொள்ள முடியாத ஒன்று, ஆனால் சீனாவை அடக்க ரஷ்யா எப்போதும் முன்னிற்கும். இதனை கணித்து, ரஷ்யா மூலமாக பேச ஆரம்பித்தார். ரஷ்யா சாதகமாக பேச வியாபாரம் மூலம் பணியவைத்தார். S400 ஆர்டரி கொடுத்தும், பணியவில்லையா, ஃப்ரென்ச் ரஃபேலை வாங்க முடிவு. ரஷ்யா சீனா இரண்டும் பாரத எதிர்ப்பில் இருந்து பின் வாங்கிக் கொண்டு உள்ளன.
அதே போல பாகிஸ்தானை பணிய வைக்க, சவுதி மற்றும் யுனைடட் அரபு நாடுகளுடன் பேசினார். அவர்கள் பாகிஸ்தான் எனும் பாம்புக்கு பால் ஊற்றுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தினார். ஈராணும் கத்தாரும் பாகிஸ்தானுக்கு அதிகம் நிதி அளிப்பதில்லை. பாகிஸ்தானோ நிதி வராமல், அமெரிக்காவின் வேலையை கூட செய்யாது. அத்துடன் பணமதிப்பிழப்பு, 370 நீக்கம், ஆப்கானிஸ்தானுடன் நெருக்கம் என தொடர்ந்து அடிமேல் அடி. சீனாவின் நிதி உதவியை அமெரிக்க, சவுதி, உதவியுடன் தடுத்தது.
அண்ணன் அமெரிக்கவை பணியவைக்க, இஸ்ரேல் மூலம் காய்கள் நகர்த்தப் பட்டன. உள்நாட்டு சிறுபாண்மை மிரட்டலால், இஸ்ரேலுடன் உறவை வைக்காததால், நாம் பாதிக்கப் பட்டதே அதிகம். ஏனெனில் அமெரிக்காவின் தொழில்துறை, பத்திரிகைகள், இடதுசாரி ஆட்கள் யூதர்களின் கண்ணசைவில் இருந்தது. சமீபகாலங்களில் இந்திய எதிர்ப்பு எதுவும் அமெரிக்காவில் வெற்றி அடையாமல் இருப்பதை பார்த்திருக்கலாம்.
அதே போல உலக நாடுகள் அனைத்திலும் நம் நாட்டு தலைவர்கள் மற்றும் மக்களின் திறமைக்கு, பெரும் வரவேற்பு பெற்று வருவதையும் கவனித்திருக்கலாம். பல புதிய தொழில்நுட்பங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா வருவதற்கான சூழ்நிலையும் உருவாக்கப் பட்டு வருகிறது.
மோடியின் முதல் 5 ஆண்டுகள், விமர்சனங்களையும் மீறி, வெளியுறவு துறையை முழுமையாக தன் கட்டுபாட்டில் வைத்திருந்தார். சுஷ்மா சுவராஜ் மீது எனக்கு மரியாதை இருந்தாலும், உலக அரசியலை புரிந்து கொள்ளும் திறமை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அவருக்கு தேவையான மரியாதைகள் கொடுக்கப் பட்டுவிட்டன. மற்றபடி அனைத்து தலைவர்களுடன் மோடி நெருக்கமாகிக் கொண்டு போனது, இந்த காரணத்தால் என்பது என் எண்ணம். அதுவும் சரியான திசையிலேயே போனது.
திரு ஜெய்சங்கரை வெளியுறவு அமைச்சராக நியமித்தது மோடியின் நடவடிக்கையில் முக்கியமான செயல். அவர் அதிகாரியாக இருந்தவர் என்பதால், முதல் இரண்டு வருடங்கள் கட்டுபடுத்தப்பட்டு இருந்தாலும், அவர் ஆலோசனையின் படியே செயல்பட்டு வந்தார்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருவதை காணலாம். அவருடைய சரியான பேச்சு உலக தலைவர்களை அதிர வைத்துள்ளது. தற்போது ஐநா, 2+2, G20, Brics, Global South, U2I2, Quad என பல அமைப்புகளில், மோடியின் பிரதிநிதியாக, ஜெய்சங்கர் நேரடியாக செயல்படுவதை கவனித்தீர்களா?
கடைசியாக, இந்தியாவை சுற்றியுள்ள நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர், பூடான் போன்ற நாடுகளை, 2014க்கு முன் சரிவர கையாளாமல், சீனாவிடம் அவை தஞ்சம் புக ஆரம்பித்தன. தற்போது இவையும் குறிப்பாக சீனாவின் கடன் தொல்லையில், உண்மை உணரும் நேரத்தில், பாரதம் கைகொடுத்து உதவுவதன் மூலம், நெருக்கமாக வழி செய்து கொண்டுள்ளார்.
மேலும் எல்லோரும் சுரண்டிய ஆப்பிரிக்க தேசங்களுக்கு, அவர்கள் உணர்வை வெளிப்படுத்த, சந்தர்ப்பம் அமைத்து கொடுத்து, அவர்கள் கடன் தொல்லை மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டுவதை தடுக்கும் வேலையிலும் பாரதம் ஈடுபட்டுள்ளது. முதல் குளோபல் சவுத் சம்மிட்டில் 120 நாடுகள் கலந்து கொண்டன.
அதில் பாரதம் கொடுத்த வாக்குறுதிகள், டிஜிடல் மயமாக்க உதவி, விண்கலங்கள் குறைந்த விலையில் செலுத்தல், உள்கட்டமைப்பில் உதவிகள், அனைத்தும் கடந்த 2-3 வருடங்களில் மிகச்சரியாக செயல்படுத்தி, நன்மதிப்பை பெற்றுள்ளார்.
4 நாட்கள் முன் நடந்த குளோபல் சவுத் சம்மிட்டில் தானாக 10 நாடுகள் முன்வந்து இணைந்து, 130 நாடுகளாகி உள்ளன. உலகில் மொத்தம் எத்தணை நாடுகள் உள்ளன என கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள். இன்று இவர்களூடைய நம்பிக்கை பெற்றதால், சீனா திகைத்து நிற்கிறது. இன்னமும் பல விஷயங்கள் நடந்துள்ளன. பதிவு பெரிதாவதால், இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
உங்களுக்காக ஒரு விஷயம் சொல்கிறேன் காதை கொடுங்கள், 2024 தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் போவது, வெறும் இந்திய பிரதமரை அல்ல, ஒரு உலகத் தலைவரை. உங்கள் வாக்கை அளிக்கும் போது இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Inputs from Deff Talks, Ankit Shah, Adi Achint, Many others.
ஜெய் ஹிந்த்!
https://www.drishtiias.com/daily-updates/daily-news-analysis/second-voice-of-the-global-south-summit
https://www.aidiaasia.org/research-article/the-changing-nature-of-india-s-foreign-policy
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8556799/
Thanks & Copy from Web