திருமலை சென்று வந்தால் பக்தரின் வாழ்வில் அதிசய நிகழ்வுகள் நடக்கும் என்பது பலர் வாழ்வில் உண்மை
திருப்பதி என்ற கீழ்த்திருப்பதி ஊர் நிர்மாணித்ததே கோவிந்தராஜப்பெருமாளுக்காக இராமானுஜர். இதற்கு சோழன் குலோத்துங்கன் சைவ-வைணவ கலவரங்களின் பின்னணி காரணம். இராமானுஜர் கிபி 10, 11ம் நூற்றாண்டுகளை சேர்ந்தவர்.
ஆச்சரியம் ஒன்று:-
திருமலா துருவபேரா என்று பக்தியோடு அழைப்பது நம்ம LORD BALAJI நிற்கும் இடத்தை தான்!
அசையாமல் நிற்கும் வடிவம்!
இந்த அதிசய சிலையை வடிவமைத்த சிற்பி யார் என்பது மர்மம்!
சுயம்பு என்கிறது வரலாறு!
ஆச்சரியம் இரண்டு:-
பெருமாளின் உயரம் சுமார் 10 அடி!
1.5 அடி உயர மேடை மீது கம்பீரமாக நிற்கிறார்!
இந்த நடைமேடையில் தாமரை வடிவம் அமைந்திருக்கும்!
இதன் பொருள் என்ன என்பது "சிலர்" மட்டும் அறிந்த ரகசியம்!
ஆச்சரியம் மூன்று:-
தீர்க்கமான முகம்!
அருள் வீசும் கண்களுக்கு நடுவில் கூர்மையான நாசி!
மார்பின் அளவு : - 36" முதல் 40" !
இடுப்பு அளவு:- 24" முதல் 27"
எல்லாம் குத்து மதிப்பான அளவுதான்!
இதிலே என்ன ஆச்சரியம்!
இருக்கே!
ஆச்சரியம் 4:-
இங்கிருந்து நேரே சிலாதோரணத்துக்கு செல்வோம்!
SILA THORANAM என்பது சந்நிதியிலிருந்து சுமார் 3 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் இயற்கையான பாறை தோரணம்!
26.2 அடி (அ) 8 மீட்டர் அகலம்!
9.8 அடி அல்லது 3 மீட்டர் உயரம்!
இங்கே உயரத்தை கவனியுங்கள் ! இதே உயரம்தான் பெருமாளின் உயரம்!
இந்த கல் தோரணத்தின் காலம் , பூமி வடிவமாக அமையப் பெற்ற PRE CAMBRIAN காலம்!
அதாவது
பூமியின் GEOLOGICAL HISTORY யும் இந்த தோரணத்தின் தோன்றலும் அருகருகே அமைந்த அதிசயம்!
ஆச்சரியம் 5:-
முதல் முதலாக திருமலையில் கால் வைத்த இடம் SREE VARIPADALU! இன்று கூட நீங்கள் போய் பார்க்க முடியும்!
அடுத்த காலடி 'சிலாதோரணம்'!
மூன்றாவதாக அவர் நின்ற இடம் . இப்போது அருள் பாலிக்கும் இடம் .
இந்த 3500 கோடி வருட தோரணத்திற்கு என்ன சிறப்பு?
ENERGY!
VIBRATION!
பெருமாள் சிலை கல் தான்!
ஆனால் முதுகில் ஈரம் கசியும்! 110° வெப்பம்! கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில், கடும் குளிரிலும் வியர்வை!
மர்மம் 6:-
கற்பூரம் கலந்த எதை கலந்தாலும் சாதாரணமான கல் சிலைகள் விரிசல் அடையும்! பெருமாளின் சிலை சகலவிதமான CHEMICAL REACTION னையும் அசால்ட்டாக ஏற்றுக் கொள்ளும்!
அவருக்கு சூட்டப்படும் மாலைகள்/பூக்கள் அகற்றப்பட்டு சிலை அருகில் இருக்கும் நீரோடையில் விட்டு விடுவார்கள்.
இது 20 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் YERPEDU என்னும் ஊரில் மிதப்பதை காணலாம்!
இந்த நீரோடை காரணமாக சிலையின் பின் பக்க சுவற்றில் காது வைத்து கேட்டால் அலையோசை கேட்கமுடியும்!
7வது மர்மம்:-
பெருமாளின் திருமேனி நடுவாக இருப்பது போல தெரிந்தாலும், அவர் வலபுறத்திலிருந்துதான் நம்மை நோக்கி வருவது போல நிற்கிறார்!( அவரது கால்கள் லேசாக மடங்கி முன்னுக்கு வருவது போல இருக்கும்)
8வது மர்மம்:-
அவரது திருமேனி முன்பு எரியும் விளக்கு யாரால் எப்போது ஏற்றபட்டதென்று யாருக்கும் தெரியாது.
ஆனால் எரிந்து கொண்டேயிருக்கும்!
அனந்தாழ்வாரின் கடப்பாறை:-
சன்னதிக்குள் நுழைந்ததும் வலது பக்க வாசல் சுவற்றில் ஒரு கடப்பாரை இருக்கும்.
இந்த இரும்பு கடப்பாரைக்கு சுமார் ஆயிரம் வயது ஆகியிருக்கும்!
கி.பி.1053 ல் பிறந்த ஆனந்தாழ்வார் காலத்தில் நடந்த சம்பவம்! (வருடம் குறித்த பிழையை சுட்டிக்காட்டிய வாசுதேவனுக்கு நன்றி)
ஸ்ரீ ஆனந்தாழ்வாரின் இந்த கடப்பாரைக்கும் பெருமாளின் கீழ் உதட்டில் வைக்கப்பட்டிருக்கும் கற்பூரத்திற்கும் தொடர்பை நீங்கள் பக்தி படங்களில் பார்த்திருக்கலாம்.
திருமலையில் பூந்தோட்டத்தை பராமரிக்கும் பொறுப்பை ஆனந்தாழ்வார் ஏற்று, மனைவியுடன் அங்கேயே தங்கியிருக்கிறார்.
செடிகளுக்கு நீர் ஊற்றும்போது ஒரு சிறுவன் உதவுகிறான். அவனை விலகி போக சொல்லியும் , பிடிவாதம் பிடிக்கிறான் பையன்.
அவனை பயமுறுத்த ,அவன் மீது கடப்பாரையை வீசும் போது உதட்டுக்குக் கீழ் அடி பட்டு இரத்தம் வருவதை கண்டு திடுக்கிட்டு நிற்கும்__
Yeah!
உங்களுக்கு அடுத்த சீன் ஞாபகத்திற்கு வந்திருக்கும்.
பெருமாளின் சிலையிலிருந்தும் இரத்தம்!
அதை நிறுத்துவதற்காக கற்பூரம் வைத்து முயலுகிறார்கள். சிறுவனாக வந்து அடி வாங்கியது பெருமாளைதான்!
அந்த நினைவாக அந்த கடப்பாரை!
"மொட்டை" சீக்ரெட் :-
மொட்டை போடுவதால் மருத்துவரீதியாக பயன் ஏதாவது உண்டா?
ஒன்றும் இல்லை என்கிறார்கள் DERMATOLOGIST கள்!
அப்புறம் எதுக்கு BOSS மொட்டை!
இவங்கதான் நீளாத்ரி மலையின் இளவரசி நீளா!
பெருமாள் சயனித்திருக்கும் சமயம் நீளா தரிசனம் செய்ய, அவரது சிகை காற்றில் கலைய, கேசமின்றி சிறு பகுதி தெரிய….
நீளா தன் கூந்தலை பிடுங்கி அங்கே வைக்கிறாள். மன்னிக்கவும், வைக்கிறார் இளவரசி!
மெய் சிலிர்த்த பெருமாள்," எதாவது வரம் கேள்"
"கலியுகம் முடியும் வரை உங்களை தரிசிக்க பக்தர்கள் வந்து ,முடியை காணிக்கையாக தருவார்கள். அவர்கள் கேட்கும் வரத்தை தந்து அருள வேண்டும்"
தனக்காக எதையும் கேட்காத நீளாவுக்கு பெருமாள் கொடுத்த இடம்___
திருமலை கோயில் தொண்டைமான் அப்பகுதியை அரசர்களாகவோ, தளபதிகளாகவோ ஆண்ட காலங்களில் கட்டிய காடு காடு, வனம் மலைக்கோயில். அதாவது காலம் கிமு 100-கிபி100.
சிலப்பதிகாரத்தில் (கிபி 350 ) குறிப்பு "செங்கண் நெடியோன் " என இருக்கின்றன. இராமானுஜர் 1120-30 காலங்களில் இங்கு சில மாற்றங்களை செய்தார்.
முதலில் ஒரு சிறிய கோபுரம் கூட இல்லாத மலை வாழ் மக்கள் வழிபாட்டுக் கோயிலாக இருந்தது. தொண்டைமான் அரசர்கள் கிமு 350 காலங்களிலிருந்தே தொண்டை நாட்டை ஆண்ட சங்க கால மன்னர்கள் இளந்திரையன், அதியமான் போன்றோர்.
2500 வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பெரிய பேரரசராக இருந்தார்கள். மௌரியர்களை கூட கூட்டாக எதிர்த்து தமிழகத்தை கிமு 300களில் காத்தவர்கள். பிற்காலங்களில் பல்லவர்கள், சோழர்களின் கீழ் ஆட்சி செலுத்தினர். புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயர்களுக்கு கீழ் இருந்தும் ஆண்டு தொடர்ந்தனர்.
வலவு தளம், விக்கிசோர்ஸ் தளங்களில் "செங்கண் நெடியோன்" விளக்கம் இருக்கின்றன. வேங்கட ஈஸ்வரன் மாலனா , வேலனா என விவரங்கள் இருக்கின்றன.
Thanks & Copy from Web