கமலாம்பிகையும் அக்க்ஷர பீடமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:41 PM | Best Blogger Tips


Image result for கமலாம்பிகையும் அக்ஷர பீடம்

*கமலாம்பிகையும் அக்க்ஷர பீடமும். ஒரு பார்வை. வாருங்கள் அவளை தரிசித்து அருள் பெறலாம்.*

கமலாம்பிகை தனிக் கோவிலில் தவக்கோலத்தில், கால் மேல்கால் போட்டுக்கொண்டு யோகாசனமாக வீற்றிக்கிறாள். இந்த அம்பிகை அழகே உருவானவள்.

சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம்.
Related image  Related image
கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு அவள் நின்ற கோலத்தில் வலது திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஒன்றை ஏந்திய வண்ணம் காட்சி தருகின்றாள்.

அம்பிகையின் அருகிலே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனைச் சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலைத் தனது இடது கரத்தால் பற்றி நிற்கின்றாள்.பிற எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி இது.

நீலோத்பலாம்பிகை, தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளித் திகழும் காட்சியானது, இல்லற வாழ்வின் மாண்பினை உயர்த்துவதாகும். இந்த அன்னை இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இன்னருள் சுரப்பவளாக திகழ்கின்றாள்.

இந்த அன்னையை போன்றே, துறவற வாழ்வை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு அன்னை கமலாம்பிகையும் ஒரு தனிகோவிலில் எழுந்தருளித் அருளுகின்றாள்.

கமலாம்பிகை தனிக் கோவிலில் தவக்கோலத்தில், கால் மேல்கால் போட்டுக்கொண்டு யோகாசனமாக வீற்றிக்கிறாள். அதோடு அவள் பாசம், உருத்திராக்கம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி அருளுகின்றாள். இந்த அம்பிகை அழகே உருவானவள்.

யோக நிலையில் பிறப்பதே சுத்த சித்தி நிலை. இந் நிலையை அடைய இந்த அன்னையை தியாகம் புரிதல் வேண்டும். இதனை உணர்த்தவே அன்னை கமலாம்பிகை தவக்கோலத்து யோக நிலையில் எழுந்தருளி விளங்குகின்றாள்.

இந்தத் திருத்தலத்திலே அன்னை பராசக்தி இருவித தோற்றம் கொண்டு காணப்படுவதற்கு சிறப்பான பொருள் உண்டு. குழந்தை பால முருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பிகை இம்மை வாழ்க்கையின்தத்துவ விளக்கமாகும்.

கமலாம்பிகை தவத் திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவ விளக்கமாகும். இம்மைக்கும் மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தி திகழ்கின்றாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை திருவாரூரில் இருவிதத் தோற்றங்களுடன் எழுந்தருளி இருக்கிறாள்.

கமலாம்பிக்கையை உளத்தூய்மையோடு தியானம் செய்தல் வேண்டும். அவ்வாறு அன்னையை தியானித்தால் மாயையான மனங்களில் இருந்து மனமானது விடுபட்டு விடும்.

எந்நேரமும் ஓயாது தியானம் செய்தால் கட்டுப்பாடில்லாமல் ஓடும் மனமானது உள்முகமாகிடும். அப்படி ஒருமுகப்படும் மனதில் ஓர் உணர்வு பிறந்திடும். உணர்வினிலே தெளிவான காட்சி தோன்றும். அத்தெளிவான காட்சியே முக்தியான வீடுபேற்றினை அருளும்.

*நமோ தேவ்யை மேலும் அவளை சிந்திப்போம்.*


நன்றி இணையம்

திருவாரூர் ரகசியம்.?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:37 PM | Best Blogger Tips
Image result for திருவாரூர் ரகசியம்

நீங்களும் வர்றீங்கதானே.... திருவாரூர் ரகசியம் தெரிஞ்சிக்க....
சிதம்பர ரகசியம்னா என்னன்னு நமக்குத் தெரியும்....
அது என்ன திருவாரூர் ரகசியம்.?
வாங்க பாக்கலாம்....

*****
திருவாரூர் தியாகராஜப் பெருமானோட திருமேனிதாங்க திருவாரூர் ரகசியம்.

இத சோமகுல ரகசியம்ன்னும் சொல்றாங்க பெரியவங்க....
ஸ்ரீசக்ரம் தியாகராஜப் பெருமானோட திருமார்பை அலங்கரிக்கிறதால கூடுதலான தனிச் சிறப்பையும் கொண்டதுங்க இந்தத் திருமேனி.....

அதனால தியாகராஜப் பெருமானோட முழுத் திருமேனியும் வருஷத்துல ரெண்டு நாள் தவிர மத்த எல்லா நாள்லயும் மலர்களாலதாங்க மூடப்பட்டு இருக்கும்.

வருஷத்துல இரண்டு தடவை மட்டுந்தாங்க நம்ம தியாகராஜப் பெருமானோட திருப்பாத தரிசனம் தன்னை நாடிவர்ற இந்த உலக மக்களுக்கு கிடைக்கும்..

ஒவ்வொரு வருஷமும் பங்குனி உத்திரம் அன்னிக்கு இடது திருப்பாதத்தையும்,
Image result for திருவாரூர் ரகசியம்
மார்கழி திருவாதிரை அன்னிக்கு வலது திருப்பாதத்தையும் நம்மளப் போல உள்ள எல்லாரும் தரிசனம் செய்யலாங்க...

தியாகராஜப் பெருமான் தன்னோட இடது திருப்பாத தரிசனத்தை பங்குனி உத்திரத்து அன்னிக்கு, பதஞ்சலி முனிவர்க்கு கொடுத்தாருங்க...

தன்னோட வலது திருப்பாத தரிசனத்தை மார்கழி திருவாதிரை அன்னிக்கு வியாக்ரபாத முனிவருக்கு அருளியதாக புராண வரலாறுகள் சொல்லுதுங்க...

இப்பேர்பட்ட சிறப்பான திருப்பாத தரிசனத் திருவிழாவை, நீங்களும்தான் அன்னிக்குப் போயி தரிசிச்சிட்டு வாங்களேன்.....
என்னிக்குன்னு தானே கேக்குறீங்க...??

தியாகராஜப் பெருமானோட திருப்பாத தரிசனம் - நாளை மறுநாள் 21.03.2019 வியாழக்கிழமை அன்னிக்கு காலை 6.00 மணியில இருந்து மதியம் 3.30 வரைக்கும்ங்க...

ஆரூரா !! தியாகேசா !!!!

நன்றி இணையம்