கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:32 PM | Best Blogger Tips
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.


நன்றி
பரமக்குடி சுமதி

ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:16 AM | Best Blogger Tips
ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல் !!!!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர்.அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர்.அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது.


பெண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் அன்பே உருவான உயிர் -புதுக்குறள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:09 AM | Best Blogger Tips
பெண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
அன்பே உருவான உயிர் -புதுக்குறள்.

ஆண்,பெண் இருவரும் சமமானவர்கள்தான் ஆனால் வெவ்வேறு வகைகளில்...!!!.. -இது பல அறிஞர்களின் கூற்று.

நம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி நான் பார்த்ததை,சொல்ல நினைப்பதை அப்படியே எழுதுகிறேன்.

பெண்களின் நிலைகள்:
பேதை (07 வயதுக்குக் கீழ்)
பெதும்பை(07 - 11 வயது)
மங்கை(11 - 13 வயது)
மடந்தை(13 - 19 வயது)
அரிவை(19 - 25 வயது)
தெரிவை(25 - 31 வயது)
பேரிளம்பெண்(31 - 40வயது)

நம்ம நேரா அரிவை-க்கு வந்துவிடலாம் .இந்த வயதில்தான் பெண்ணிற்கு காதல் முளைக்கும்,காமம் முளைக்கும்......!!! ஏன் இதெல்லாம் ஆண்களுக்கு முளைக்காதா?ன்னு யாரும் கேட்கப்படாது:)

பெண்கள் என்றாலே பொதுவா கற்பனைகளின் எல்லைகள் என்றே சொல்லலாம்.அதுவும் இந்த வயதில் அதி மிகுதியாக இருக்கும்.

நன்றாக படிக்கும் பெண்கள் சுலபமாக காதல் வலையில் சிக்கிவிடுவதாகவே தோன்றுகிறது.மன அழுத்தம், நம் கல்வி சூழல் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பாடத்தில் இருப்பதை புரிந்து படிக்காமல் அப்ப்டியே மனப்பாடம் செய்வதுபோல், வெளி உலகையும் புரிந்து கொள்ளாமல் அப்படியே நம்பி ஏமாறுகிறார்களோ???

பெண்கள் மறைத்து காட்டும் மாயக்கண்ணாடி அல்ல...
நிஜத்தை காட்டும் அன்பு கண்ணாடி..!

துளி அளவு அன்பை கொடுத்தால், கடலளவு அன்பை பெறலாம்...

உலகம் அன்பிற்காகத்தான் ஏங்குகிறது.அன்பின் உருவமே பெண் தான்.
பெண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
அன்பே உருவான உயிர் -புதுக்குறள்.

ஆண்,பெண் இருவரும் சமமானவர்கள்தான் ஆனால் வெவ்வேறு வகைகளில்...!!!..  -இது பல அறிஞர்களின் கூற்று.

நம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி நான் பார்த்ததை,சொல்ல நினைப்பதை  அப்படியே எழுதுகிறேன்.

பெண்களின் நிலைகள்:
பேதை (07 வயதுக்குக் கீழ்)
பெதும்பை(07 - 11 வயது)
மங்கை(11 - 13 வயது)
மடந்தை(13 - 19 வயது)
அரிவை(19 - 25 வயது)
தெரிவை(25 - 31 வயது)
பேரிளம்பெண்(31 - 40வயது)

நம்ம நேரா அரிவை-க்கு வந்துவிடலாம் .இந்த வயதில்தான் பெண்ணிற்கு காதல் முளைக்கும்,காமம் முளைக்கும்......!!!   ஏன் இதெல்லாம் ஆண்களுக்கு முளைக்காதா?ன்னு யாரும் கேட்கப்படாது:) 

பெண்கள் என்றாலே பொதுவா கற்பனைகளின் எல்லைகள் என்றே சொல்லலாம்.அதுவும் இந்த வயதில் அதி மிகுதியாக இருக்கும்.

நன்றாக படிக்கும் பெண்கள் சுலபமாக காதல் வலையில் சிக்கிவிடுவதாகவே தோன்றுகிறது.மன அழுத்தம், நம் கல்வி சூழல் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பாடத்தில் இருப்பதை புரிந்து படிக்காமல் அப்ப்டியே மனப்பாடம் செய்வதுபோல், வெளி உலகையும் புரிந்து கொள்ளாமல் அப்படியே நம்பி ஏமாறுகிறார்களோ???

பெண்கள் மறைத்து காட்டும் மாயக்கண்ணாடி அல்ல...
நிஜத்தை காட்டும் அன்பு கண்ணாடி..!

துளி அளவு அன்பை கொடுத்தால், கடலளவு அன்பை பெறலாம்...

உலகம் அன்பிற்காகத்தான் ஏங்குகிறது.அன்பின் உருவமே பெண் தான்.

வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips
வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்

இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும்.
வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து
1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.

உணவே மருந்து